ஆயுர்வேத திணைக்களத்துடன் இணைந்து AyurEx 2023 இற்கான முதன்மை அனுசரணை வழங்கி பாரம்பரிய மருத்துவத்தை வளர்க்கும் யூனிலீவர்-லீவர் ஆயுஷ்

2023 செப்டெம்பர் 08, 09, 10 ஆம் திகதிகளில் BMICH இல் நடைபெற்ற பாரம்பரிய மருத்துவத்தை ஊக்குவித்தல் மற்றும் மேம்படுத்துதல் ஆகியவற்றில் கவனம் செலுத்தும் AyurEx Colombo 2023 சர்வதேச மாநாட்டிற்கான பிரதான அனுசரணையாளராக, யூனிலீவர் ஸ்ரீலங்காவின் முதன்மை வர்த்தக நாமமான Lever Ayush பெருமையுடன் தனது ஆதரவை வழங்கியது. அத்துடன், இம்மாநாட்டுக்கு இணையாக நடைபெற்ற கண்காட்சி மற்றும் வர்த்தக கண்காட்சிக்கும் லீவர் ஆயுஷ் பிரதான அனுசரணை வழங்கியது. இது 120 இற்கும் மேற்பட்ட கண்காட்சியாளர்களின் சமீபத்திய முன்னேற்றங்கள், தயாரிப்புகள் மற்றும் சேவைகளை காட்சிப்படுத்தியது. Lever Ayush மற்றும் AyurEx Colombo 2023 ஆகியவற்றுக்கு இடையேயான மூலோபாய கூட்டாண்மையானது, பாரம்பரிய மருத்துவ அறிவை புத்தாக்கமான முறையில் நவீன சுகாதாரம் மற்றும் அழகுபடுத்தல் எண்ணக்கருக்களுக்குப் பயன்படுத்தும் அதே வேளையில், பாரம்பரிய மருத்துவத்தை மேம்படுத்துவதற்கான யூனிலீவர் நிறுவனத்தின் அர்ப்பணிப்பையும் எடுத்துக் காட்டுகிறது.

யூனிலீவர் ஸ்ரீலங்காவின் அழகுபடுத்தல், சுகவாழ்வு மற்றும் தனிநபர் பராமரிப்புக்கான சந்தைப்படுத்தல் பணிப்பாளர் ஷாமர சில்வா கருத்துத் தெரிவிக்கையில், “யூனிலீவர் ஸ்ரீலங்கா ஆகிய நாம், ஆயுர்வேத மருத்துவத்தை உயர்வாகக் கருதுகிறோம் என்பதோடு, அதன் விலைமதிப்பற்ற முக்கியத்துவத்திற்கு அங்கீகாரம் அளிக்கிறோம். AyurEx போன்ற தேசிய நிகழ்வுகள் எமது செழுமையான பாரம்பரியத்தை புத்துயிர் பெறச் செய்யவும் மேம்மபடுத்தவுமான ஆற்றலைக் கொண்டுள்ளது என நாம் உறுதியாக நம்புகிறோம். எமது வர்த்தகநாமமான லீவர் ஆயுஷ் மூலம், ஆயுர்வேதத்தின் ஞானம் மற்றும் விஞ்ஞானத்தை அனைத்து தரப்பு நுகர்வோரும் அணுகுவதை உறுதிப்படுத்த நாம் உறுதி பூண்டுள்ளோம். இந்த தொலைநோக்குப் பார்வையுடனேயே நாம் AyurEx Colombo 2023 இற்கு பிரதான அனுசரணையாளராக பெருமிதத்துடன் இணைந்துள்ளோம். ஆயுர்வேதத்தில் இலங்கையின் ஆழமான பாரம்பரியத்தைப் பாதுகாத்தல் மற்றும் அதனை முன்னேற்றுவதற்கான எமது அர்ப்பணிப்பை, பிரதான அனுசரணை வழங்கும் எமது பங்கு சுட்டிக்காட்டுகிறது. அதன் முழுமையான நடைமுறைகளுக்கு உலகளாவிய அங்கீகாரத்தைப் பெற்றிருக்கும் இந்த பண்டைய மருத்துவ முறையின் மீது, ஒரு புதிய ஆர்வத்தைத் தூண்டுவதற்கான ஒரு வாய்ப்பாக நாம் இதைப் பார்க்கிறோம். AyurEx 2023 மூலம் எதிர்கால சந்ததியினருக்காக ஆயுர்வேத ஞானத்தைப் பாதுகாப்பதற்கு பங்களிப்பதில் பெருமிதம் கொள்ளும் அதே நேரத்தில், எமது வர்த்தகநாமத்தின் மூலம் இன்றைய உலகில் அதன் அணுகல் மற்றும் இணக்கத்தை மேம்படுத்துகிறோம்.” என்றார்.

ஆயுர்வேத திணைக்களத்தின் ஆணையாளர் வைத்தியர் தம்மிக அபேகுணவர்தன கருத்துத் தெரிவிக்கையில், “AyurEx 2023 ஆனது, ஒரு மாபெரும் வெற்றியாகும். அதற்கு பிரதான அனுசரணை வழங்க முன்வந்த  லீவர் ஆயுஷ் வர்த்தகநாமத்திற்கு நாம் நன்றியைத் தெரிவிக்கிறோம். ஆயுர்வேதம் மற்றும் சுதேச மருத்துவம் இலங்கையில் ஆழமான மற்றும் வளமான வரலாற்றைக் கொண்டுள்ளது. இத்துறையில் உள்ள பங்குதாரர்களுக்கு ஒரே கூரையின் கீழ் ஒன்றிணைவதற்கான சிறந்த தளத்தை AyurEx 2023 வழங்கியது. பாரம்பரிய ஆயுர்வேத நடைமுறைகளின் மதிப்பை எடுத்துரைக்கும் எமது பணியில் எம்முடன் கூட்டு சேர்ந்தமைக்காக லீவர் ஆயுஷ் வர்த்தகநாமத்திற்கு நாம் நன்றியுடையவர்களாக இருக்கிறோம்.” என்றார்.

சர்வதேச பங்குதாரர்கள், தொழில் வல்லுநர்கள் மற்றும் பயிற்சியாளர்கள் ஒன்றிணைந்து பாரம்பரிய மருத்துவத்தின் மகத்தான திறனை ஆராய்வதற்கான மதிப்புமிக்க வாய்ப்பையும் தளத்தையும் AyurEx Colombo 2023 வழங்கியது. 100 இற்கும் மேற்பட்ட உள்ளூர் மற்றும் சர்வதேச ஆயுர்வேத வர்த்தக கூடங்கள், 1,000 இற்கும் மேற்பட்ட ஆயுர்வேத ஆலோசனைகள் மற்றும் செயல்விளக்கங்களும் இங்கு இடம்பெற்றிருந்தன. அத்துடன் 50 இற்கும் மேற்பட்ட புதிய பாரம்பரிய மருந்து தயாரிப்புகள் அறிமுகப்படுத்தப்பட்டதோடு, 25 இற்கும் மேற்பட்ட கருத்தரங்குகள் மற்றும் பட்டறைகளும் இங்கு சிறப்பாக இடம்பெற்றமை  குறிப்பிடத்தக்கது.

இலங்கை நுகர்வோருக்கு 2018 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட Lever Ayush ஆனது, நுகர்வோரின் சுகவாழ்வு மற்றும் அழகைப் பாதுகாப்பதற்காக 5,000 வருட ஆயுர்வேத ஞானத்தால் ஈர்க்கப்பட்ட, ஆயுர்வேதத்தில் பதிவு செய்யப்பட்ட பிரத்தியேகமான தயாரிப்புகளை வழங்குகிறது. நவீன கால நுகர்வோரை ஈர்ப்பதன் காரணத்தால், இந்த வர்த்தகநாமம் அறிமுகப்படுத்தப்பட்டதில் இருந்து, அதன் தயாரிப்புகள் தொடர்பான நுகர்வோரிடமிருந்தான கேள்வி இரட்டிப்பாகியுள்ளது. ஆயுர்வேத வைத்தியர் ஒருவரின் வழிகாட்டலின் கீழ் ஹொரணையில் உள்ள யூனிலீவர் ஸ்ரீலங்காவின் தொழிற்சாலையில் இத்தயாரிப்புகள் உற்பத்தி செய்யப்படுகின்றன.

கடந்த 85 ஆண்டுகளாக நாட்டில் ஆழமாக வேரூன்றியுள்ள யூனிலீவர் ஸ்ரீலங்கா, உண்மையான இலங்கையரின் வாழ்க்கை முறையைப் பாதுகாத்து மேம்படுத்துகின்ற அம்சத்தை முன்னெடுத்து வருகிறது. இந்நிறுவனம் வேகமாக நுகரப்படும் நுகர்வோர் பொருட்களை வழங்கும் இலங்கையில் உள்ள முன்னணி நிறுவனங்களில் ஒன்றாகும் என்பதோடு, அதன் 96% தயாரிப்புகளை உள்நாட்டிலேயே உற்பத்தி செய்யப்படுகின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது.

Share

You may also like...