கிராமப்புற சமூகங்களிடையே விளையாட்டுகளை மேம்படுத்துவதிலும் இளைஞர் முன்னேற்றத்தை ஊக்குவிப்பதிலும் முன்னின்று செயற்படும் Emerald International

இலங்கையின் முன்னணி ஆடவர் ஆடை வர்த்தக நாமமான Emerald, Youth Sports Club உடன் இணைந்து, அதன் இளைஞர் விளையாட்டு மேம்பாட்டு பங்காளியாக, முதன்முதலாக ஏற்பாடு செய்யப்பட்ட இளைஞர் விளையாட்டு விழா வெற்றிகரமாக நிறைவடைந்தமையை அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறது. உயன்வத்தை நூராணியா மத்திய மகாவித்தியாலயத்தில் நடைபெற்ற இந்நிகழ்வில், உள்ளூர் சமூகத்தைச் சேர்ந்த 900 மாணவர்கள் எனும் பெருமளவிலானோர் கலந்துகொண்டமையானது, உற்சாகம் மற்றும் தோழமை நிறைந்த சூழலை உருவாக்கியிருந்தது.

இது தொடர்பில் Emerald நிறுவன சந்தைப்படுத்தல் தலைவர் அஷ்கர் ஹுஸைன் தெரிவிக்கையில், “Youth Sports Club ஏற்பாடு செய்த இந்த குறிப்பிடும்படியான நிகழ்வுக்கு, இளைஞர் விளையாட்டு மேம்பாட்டு பங்காளியாக செயற்பட்டமை தொடர்பில் நாம் பெருமிதம் கொள்கிறோம். இளம் விளையாட்டு வீரர்கள் வெளிப்படுத்திய ஆற்றலும் அவர்கள் கொண்டிருந்த ஆர்வமும் உண்மையிலேயே ஊக்கமளிக்கும் வகையில் இருந்தது. விளையாட்டை மேம்படுத்துவதற்கும், இளைஞர்களிடையே விளையாட்டுத்திறன் மற்றும் ஒற்றுமைக்கான கலாசாரத்தை வளர்ப்பதற்குமான எமது அர்ப்பணிப்பு அசைக்க முடியாததாகும். திறமையான இளைஞர்களுக்கு ஆதரவளிப்பதற்கும் அவர்களை மேம்படுத்துவதற்குமான எமது பயணத்தின் தொடக்கத்தை இந்நிகழ்வு குறிக்கிறது. இந்த போட்டியை மாபெரும் வெற்றியடையச் செய்வதற்கு அர்ப்பணிப்புடன் செயற்பட்ட உயன்வத்தை Youth Sports Club ஏற்பாட்டாளர்கள், தொண்டர்கள் மற்றும் பங்குபற்றிய அனைவருக்கும் எமது மனமார்ந்த பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்கின்றோம்.” என்றார்.

இந்த இளைஞர் விளையாட்டு விழாவானது, இளம் விளையாட்டு வீரர்களை ஒன்றிணைத்து, அவர்களின் திறமைகளையும் விளையாட்டின் மீதான ஆர்வத்தையும் வெளிப்படுத்தும் ஒரு முக்கியமான நிகழ்வாகும். SAF விளையாட்டுகள் மற்றும் ஆசிய விளையாட்டுகள் போன்ற பிரபலமான நிகழ்வுகளில், இதற்கு முன்னர் தேசிய அணிகளைப் பிரதிநிதித்துவப்படுத்திய நான்கு சிறந்த மாணவர்களுக்கு இவ்வாறான நிகழ்வுகள் ஒரு தளத்தை வழங்கியது. அவர்களின் எழுச்சியூட்டும் பயணமும் அர்ப்பணிப்பும் சமூகத்தில் பயன்படுத்தப்படாத விளையாட்டுத் திறனுக்குச் சான்றாக அமைந்தது.

இளைஞர்களின் விளையாட்டு மேம்பாட்டுக்கான Emerald நிறுவனத்தின் அர்ப்பணிப்பானது, இவ்விழாவையும் தாண்டியும் சென்றது. இந்நிகழ்வைத் தொடர்ந்து, இளைய தலைமுறையினரை மேம்படுத்துவதற்கான அவர்களது முயற்சியின் ஒரு பகுதியாக மற்றொரு நிகழ்வையும் நடாத்தியிருந்தனர். இதில் அவர்கள் ஆதரவற்ற சிறுவர்களுக்கு விளையாட்டுப் பொருட்களை வழங்கினர். விளையாட்டின் மாற்றக் கூடிய சக்தியை Emerald உறுதியாக நம்புவதோடு, இளைஞர்களின் முழுமையான வளர்ச்சிக்கு அவசியமான ஒருங்கிணைந்த தலைமைத்துவம், ஒழுக்கம், மீளெழுச்சி போன்ற திறன்களை வளர்ப்பதை அது நோக்கமாகக் கொண்டுள்ளது.

இந்த முன்முயற்சியானது, விளையாட்டு மேம்பாட்டின் மூலம் இளைஞர்களை மேம்படுத்தும் Emerald நிறுவனத்தின் தொலைநோக்குப் பார்வையுடன் ஒத்துப்போவதோடு, சிறுவர்களின் பின்னணியைப் பொருட்படுத்தாமல் அவர்கள் விளையாட்டுகளில் ஈடுபடுவதற்கான வாய்ப்புகளை உருவாக்குவதற்கு நிறுவனம் அர்ப்பணிப்புடன் உள்ளது. இளைஞர் விளையாட்டு மேம்பாட்டுக் கூட்டாளி எனும் வகையில், புதிய தலைமுறை விளையாட்டு ஆர்வலர்களை வளர்ப்பதற்கான தடகளம், ஆரோக்கியமான போட்டி, குழுப்பணி ஆகியவற்றின் கலாச்சாரத்தை ஊக்குவிக்க Emerald முயற்சிக்கிறது.

Youth Sports Club உடனான தங்களது கூட்டாண்மை மூலம், இளம் விளையாட்டு வீரர்களின் வாழ்க்கையில் சாதகமான தாக்கத்தை ஏற்படுத்தவும், சமூகத்தில் விளையாட்டின் வளர்ச்சியை மேம்படுத்தவும் Emerald உறுதிபூண்டுள்ளது.

END

Share

You may also like...