இரட்டைத் திரை கொண்ட Lenovo Yoga Book 9i மற்றும் Lenovo LOQ கேமிங் மடிகணனிகளை இலங்கையில் அறிமுகப்படுத்தும் IT Gallery Computers

     கடந்த 2011 ஆம் ஆண்டு முதல் தகவல் தொழில்நுட்ப (IT) விநியோக சந்தையில் முன்னணி வகித்து வரும் IT Gallery Computers (Pvt) Ltd., இலங்கையில் Lenovo நுகர்வோருக்கும் மற்றும் கேமிங் ஆர்வலர்களுக்கும் சமீபத்திய புதிய தயாரிப்புகளை இன்று வெளியிட்டுள்ளது. மிகவும் ஈர்க்கும் வகையிலான இரட்டைத் திரை (dual-screen) கொண்ட Yoga Book 9i மற்றும் புதிய கேமிங் மடிகணனியான LOQ ஆகியன இங்கு காட்சிப்படுத்தப்பட்ட தயாரிப்புகளில் உள்ளடங்குகின்றன. இந்த அறிமுகத்தின் மூலம், இலங்கை சந்தையில் Lenovo நிறுவனத்தின் மிகவும் புத்தாக்கமான புத்தம் புதிய தயாரிப்புகளை வெளியிட்டு, தேசத்தை அதிவேக செயற்பாட்டுக்கு அழைத்துச் செல்ல IT Gallery Computers தயாராகியுள்ளது. வெளிநாட்டு சந்தைக்கு அதிநவீன தொழில்நுட்பத்தை கொண்டு சேர்க்கும் Lenovo நிறுவனத்தின் உறுதிப்பாட்டை இந்த கூட்டாண்மை கோடிட்டுக் காட்டுகிறது. Lenovo வர்த்தகநாமம், சமீபத்திய புத்தாக்க கண்டுபிடிப்புகள் மற்றும் சிறந்த செயற்றிறன் ஆகிய அம்சங்களைக் கொண்ட ஒப்பற்ற தயாரிப்புகள் மற்றும் சேவைகளை வழங்குவதற்கு அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வருகின்றது.

இந்த அறிமுக நிகழ்வின் சிறப்பம்சங்களில் ஒன்றாக மாறுபட்ட Yoga Book 9i அமைகின்றது. இது இரட்டைத் திரை அம்சம், பல்வேறு முறையிலான செயற்பாடு, சிறந்த பொழுதுபோக்கு அம்சம் ஆகியவற்றை வழங்குகிறது. ஹைபிரிட் பணியிடங்கள் மற்றும் கூட்டங்களுக்கு இது ஏற்றதாகும். பயனர்கள் Tent-Mode (கூடாரம்  அமைப்பு) முறையை பயன்படுத்தி ஒரு திரையில் தாங்கள் விளக்கக்காட்சியைப் பார்த்தவாறு, அதனை இயக்கும் அதேவேளையில் முன்னால் உள்ள திரையில் விளக்கக்காட்சியை வெளியிட்டு காண்பிக்க முடியும். இங்கு Lenovo வர்த்தகநாமத்தின் புதிய கேமிங் வர்த்தகநாமமான ‘Lenovo LOQ’ யினையும் IT Gallery Computers காட்சிப்படுத்தியது. இது புதிய மற்றும் எதிர்கால விளையாட்டு ஆர்வலர்களுக்காக வடிவமைக்கப்பட்ட சக்திவாய்ந்த மற்றும் கட்டுப்படியான விலையில் அமைந்த கேமிங் தொடர் மடிகணனிகளாகும். LOQ ஆனது உறுதியான அழகியலைக் கொண்ட, அதிகரிக்கக்கூடிய நினைவகம் மற்றும் வலுவான CPU திறன், GPU தெரிவுகளைக் கொண்டுள்ளது.

IT Gallery Computers Private Limited நிறுவனத்தின் பணிப்பாளரும் அதன் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான டிலந்த பெரேரா இங்கு கருத்துத் தெரிவிக்கையில், “நாங்கள் தகவல் தொழில்நுட்ப விநியோகத் துறையில் ஒரு தசாப்தத்திற்கும் மேலாக நம்பகமான பெயராக இருந்து வருகிறோம். இந்த நிகழ்வானது, எமது பங்காளிகள் மற்றும் இலங்கையின் தொழில்நுட்ப ஆர்வலர்களுக்கான எமது அர்ப்பணிப்புக்கான ஒரு சான்றாகும். Lenovo உடன் இணைந்திருப்பதில் நாம் பெருமிதம் கொள்வதோடு, எல்லையற்ற சாத்தியங்கள் கொண்ட புதிய சகாப்தத்திற்கான பாதையை அறிமுகப்படுத்துவதில் நாம் மகிழ்ச்சியடைகிறோம்.” என்றார்.

Lenovo நிறுவனத்தின் வர்த்தக மற்றும் டெப்லட் சந்தைக்கான வெளிநாட்டு வர்த்தக நுகர்வோர் பொது முகாமையாளர், நவீன் கெஜ்ரிவால் இங்கு குறிப்பிடுகையில், “Lenovo மற்றும் IT Gallery Computers ஆகியவற்றுக்கு இடையேயான ஒருங்கிணைப்பு, இலங்கைக்கு புத்தாக்கமான தொழில்நுட்பத்தை கொண்டு வருவதில் முக்கிய பங்காற்றியுள்ளது. எமது சமீபத்திய தயாரிப்புகளை இலங்கைச் சந்தையில் வெளியிடுவதில் நாம் மகிழ்ச்சியடைகிறோம்.” என்றார்.

IT Gallery Computers (Pvt) Ltd. ஆனது, Lenovo தயாரிப்புகளின் அங்கீகரிக்கப்பட்ட விநியோகஸ்தராகும். இலங்கை நுகர்வோருக்கு உயர்மட்ட தொழிநுட்பத்தை வழங்குவதிலான Lenovo நிறுவனத்தின் உறுதிப்பாடானது, அதன் வர்த்தக தொடர் மற்றும் நுகர்வோர் தொடர்கள் முழுவதும் காணலாம். நிறுவனங்கள் மற்றும் தனிப்பட்ட பயனர்களின் வளர்ந்து வரும் தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்ட பல்வேறு வகையான தயாரிப்புகளை இது கொண்டுள்ளது.

இலங்கையில் Lenovo வர்த்தகாநாமத்திற்கான ITG இன் வர்த்தகத்தை மேம்படுத்துவதில் பங்குதாரர்களின் சிறப்பான அர்ப்பணிப்பை பாராட்டும் வகையில், பரஸ்பர வெற்றிக்கு கணிசமான பங்களிப்பை வழங்கிய சிறந்த 10 பங்காளிகளுக்கு, IT Gallery Computers (Pvt) Ltd. இதன்போது விருதுகளையும் வழங்கியது. வலுவான, உறுதியான கூட்டாளர் வலையமைப்பை உருவாக்குவதற்கான நிறுவனத்தின் பயணத்தில் ஒரு முக்கிய தருணத்தை இந்த நிகழ்வு குறிக்கின்றது.

Share

You may also like...