Anton இன் Armour uPVC இற்கு சூழலுக்கு பாதிப்பற்றது எனும் மதிப்புமிக்க சான்றிதழ்

Anton Armor uPVC கூரைத் தகடுகளுக்கு, Green Building Council இனால் சூழலுக்கு பாதிப்பற்றது எனும் மதிப்புமிக்க ‘Green Label Certification’ சான்றிதழ் கிடைக்கப்பெற்றுள்ளதுடன், அது ‘ISO 9001:2015’ தரச் சான்றிதழையும் பெற்றுள்ளது.

Anton நிறுவனத்தின Armour Roofing கூரைத் தகடுகளானவை, அதன் மதிப்பு மற்றும் தரம் காரணமாக பல்வேறு சந்தர்ப்பங்களில் பாராட்டுகளைப் பெற்றுள்ளது. இதன் மூலம் ‘Anton Armour’ ஆனது, கூரைத் தகடு பிரிவில் இலங்கையில் உள்ள கிரீன் லேபிள் சான்றிதழ் பெற்ற முதலாவது வர்த்தக நாமம் எனும் பெயரை பெற்றுள்ளது. இதன் காரணமாக அதன் பெறுமதி மற்றும் வர்த்தக ரீதியான கௌரவம் மேலும் அதிகரித்துள்ளது.

St. Anthony’s Industries Group (Pvt) Ltd நிறுவனத்தின் பிரதான செயற்பாட்டு அதிகாரி லஹிரு ஜயசிங்க இது தொடர்பில் கருத்து வெளியிடுகையில், ‘Green Building Council’ யிடமிருந்து கிரீன் லேபிள் சான்றிதழைப் பெற்றுள்ளோம் என்பதை அறிவிப்பதில் நாம் பெருமிதம் கொள்கிறோம். இதன் மூலம் எமது வாடிக்கையாளர்கள் தற்போது அன்டன் நிறுவனத்திடமிருந்து சூழலுக்கு உகந்த Anton Armour uPVC கூரைத் தகடுகளை கொள்வனவு செய்ய முடியும்” என்றார்.

“எமது நிறுவனத்திற்கு ஒரு அடிப்படை மையமாக நாம் நிலைபேறான தன்மையை நம்புவதோடு மட்டுமல்லாது, மக்களின் வாழ்க்கையிலும் இப்பூமியிலும் எவ்வாறு அதிக சாதகமான விளைவுகளை ஏற்படுத்தலாம் என்பதிலும், நாம் எமது பணியையும் எமது வர்த்தகநாமத்தின் கோஷமான ‘எங்கு அவசியமோ அங்கு செல்கிறோம்’ என்பதையும் வலுவாகப் பின்பற்றுகிறோம்.” என லஹிரு ஜயசிங்க மேலும் தெரிவித்தார்

நிலைபேறான தன்மை மற்றும் புத்தாக்கங்கள் மீது எப்போதும் நம்பிக்கை கொண்டுள்ள ஒரு நிறுவனம் எனும் வகையில், சில வருடங்களுக்கு முன்பு “Armor” எனும் துணை வர்த்தகப் பெயரில் uPVC கூரைத் தகடுகளை அறிமுகப்படுத்த Anton முடிவு செய்தது.

ஒலித் தடுப்பு, தீ தடுப்பு, அரிப்படைவின் தடுப்பு, நிறம் மாறா பாதுகாப்பு, நிறுவுவதற்கான குறைந்த செலவு உள்ளிட்ட பல்வேறு நன்மைகளுடன் உருவாக்கப்பட்டுள்ள இக்கூரைத் தகடுகளுக்கு, கிரீன் லேபிள் சான்றிதழ் கௌரவம் வழங்கப்பட்டுள்ளமையானது, வீட்டுப் பாவனை uPVC உற்பத்தியாளரான அன்டன், நிலைபேறு தன்மையின் மீது கொண்டுள்ள அக்கறைக்கான ஒரு சான்றாக அமைகிறது.

Green Label சான்றிதழ் பற்றி

உலகெங்கிலும் உள்ள ஏனைய நாடுகளைப் போலவே இலங்கையும் எதிர்காலத்திற்கான நிலைபேறான கட்டடங்களை உருவாக்குவது தொடர்பான பாரிய சவாலை எதிர்கொண்டுள்ளது. கட்டுமானத் தொழிலை நிலைபேறுதகு தன்மை கொண்ட, சூழலுக்கு ஏற்ற வகையில் மாற்றுவதில் கட்டுமானப் பொருட்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. உலகிலுள்ள ஒவ்வொரு நாடும் அதிகளவிலோ அல்லது குறைவாகவோ வெவ்வேறு வகையான வளங்களை கொண்டுள்ளதன் மூலம் அவை தனித்துவம் பெறுகின்றன. இதில் சூழலுக்கு ஏற்றது என்பதை வலியுறுத்தும் GREEN SL®Labelling System எனும் தொகுதியை மேம்படுத்துவதன் அவசியம் தற்போது வலியுறுத்தப்பட்டுள்ளது. இது உலகளாவிய அங்கீகாரத்தைப் பெற்றுள்ள அதேவேளை இலங்கையின் நிலைமைகளுக்கு ஏற்றவாறு மாற்றியமைக்கப்பட்டுள்ளது.

இலங்கையின் Green Council யினால் வழங்கப்படும் Green Labels சான்றளிப்பானது, சூழலுக்கு ஏற்றது எனும் சான்றழிப்பாகவும் அழைக்கப்படுகின்றன. அவை அரசாங்கம் அல்லது குறிப்பிட்ட சங்கம் அல்லது சான்றளிக்கும் அமைப்புகளால் வகுக்கப்பட்ட சூழல் நட்பு அளவுகோல்களை ஈடு செய்யும் தயாரிப்புகள் மீது ஒட்டப்படுகின்றன. GREENSL® Labeling System (GLS®) பெயரிடும் அமைப்பானது, Lanka Institute of Eco labeling (LIOE) இனால் ஆரம்பிக்கப்பட்டதாகும். இவ்வமைப்பானது. உலகளாவிய Global Eco labeling Network (GEN) யினது உள்ளீடுகள், ஊக்கப்படுத்தல் மற்றும் தொழில்நுட்ப உதவிகளுடன், சூழல் பாதுகாப்பு மற்றும் தொழில்முனைவோர் தொடர்பில் ஈடுபாடு கொண்டுள்ள நிபுணர்கள் குழுவாகும்.

Anton பற்றி

1958ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட அன்டன் நிறுவனம், இலங்கையின் தொழில்துறை வளர்ச்சியில் முன்னோடியாக, கண்டுபிடிப்பாளாராக, முதலீட்டாளராக சந்தையில் முன்னணியில் விளங்கும் நிறுவனமாகும். அன்டன் ஒவ்வொரு வாடிக்கையாளரின் வாழ்க்கைத் தரத்தையும் மேம்படுத்துவதை நோக்காகக் கொண்டுள்ளதுடன், உள்நாட்டிலுள்ளவர்களின் இதயத்தில் இடம்பிடித்துள்ள, உலகளாவிய தோற்றத்தைக் கொண்டுள்ள நிறுவனமாகும். இக்காரணத்தினால், அன்டன் வர்த்தகநாமத்தின் வாக்குறுதி மீது, உள்ளூர் மற்றும் சர்வதேச நுகர்வோர், தொழில் வல்லுநர்கள், நிபுணர்கள் நம்பிக்கை கொண்டுள்ளனர். Anton தயாரிப்புகள் WRAS (Water Regulations Advisory Scheme) இனால் அங்கீகரிக்கப்பட்டுள்ளதுடன், SLS & ISO சான்றளிக்கப்பட்டவையாகும்.

இது தொடர்பான மேலதிக தகவல்களை அறிய : 011 2 680600

Share

You may also like...