நாட்டின் தொடர்ச்சியான கல்வி வளர்ச்சியில் ஒரு முக்கிய மைல்கல்லைக் குறிக்கும் இலங்கையில் கேம்பிரிட்ஜ் கல்வி மாநாடு
– இலங்கையில் கல்வியின் எதிர்காலத்தை வடிவமைக்க கல்வி நிபுணர்கள் மற்றும் தலைவர்கள் ஒன்றிணைவு
Cambridge University Press and Assessment நிறுவனமானது, இலங்கையில் கேம்பிரிட்ஜ் கல்வி மாநாட்டை அண்மையில் நடாத்தியிருந்தது. இது நாடு முழுவதிலும் உள்ள கல்வித் துறையைச் சேர்ந்த புகழ்பெற்ற நிபுணர்கள் மற்றும் கல்வியாளர்களை ஒன்றிணைத்ததோடு, கல்வி வளர்ச்சிப் பாதை தொடர்பான வரைபடத்தை ஆராய்வதற்கும் அதன் எதிர்காலத்தை திட்டமிடுவதற்குமான வாய்ப்பை இது ஏற்படுத்தியிருந்தது. கொழும்பில் நடைபெற்ற இந்நிகழ்வில், கல்விச் சூழல் தொகுதியில் ஏற்பட்டு வரும் வளர்ச்சி குறித்து கலந்துரையாடப்பட்டதுடன், இதில் கலந்துகொண்ட நிபுணர்களால் சிந்தனையைத் தூண்டும் முக்கிய உரைகள், கலந்துரையாடல்கள், நுண்ணறிவு கொண்ட விளக்கங்களும் இடம்பெற்றன. இந்நிகழ்வானது, இலங்கையின் கல்விச் சூழல் தொகுதியின் வளர்ச்சி மற்றும் மேம்பாட்டிற்கு பங்களிக்கும் வகையில், அது தொடர்பானவர்களுடன் ஒரு இணைப்பை ஏற்படுத்தவும், கருத்துக்களை பரிமாறிக்கொள்ளவும், ஒத்துழைப்பை உருவாக்கவும் ஒரு தளத்தை ஏற்படுத்தியிருந்தது.
‘Envisioning the Growth Map in Education’ (கல்விக்கான வளர்ச்சிப் பாதை வரைபடத்தை திட்டமிடல்) எனும் கருப்பொருளை மையமாகக் கொண்டு இடம்பெற்ற இந்நிகழ்வானது, இலங்கையின் ‘Growth Map in Education’ (கல்விக்கான வளர்ச்சிப் பாதை வரைபடத்தை) ஆராய்ந்து, அதனை வரையறை செய்வதற்காக, கேம்பிரிட்ஜ் கல்வி மாநாட்டின் கல்விச் சூழல் தொகுதி முழுவதும் உள்ள பிரபலங்களையும் நிபுணர்களையும் கவர்ந்தது. இந்த நிகழ்வானது, தொடர்ச்சியாக வளர்ந்து வரும் கல்வித் துறையை ஆழமாக ஆராய்ந்ததோடு, திறனுடனான ஆழமான கற்றல், ஆங்கில மொழிப் புலமையின் பங்கு, முழுமையான கல்வி கட்டமைப்புகள், காலநிலை தொடர்பான கல்வி, அடிப்படை கற்றல் போன்ற பல்வேறு முக்கியமான விடயங்கள் தொடர்பான விவாதங்களை கொண்டிருந்தது. கேம்பிரிட்ஜ் தகுதியானது, K12 முழுவதும் (தரம் 1 முதல் 12 வரை) மற்றும் இலங்கைக்கு அப்பால் உள்ள மாணவர்களுக்கு எதிர்கால வாய்ப்புகளை ஏற்படுத்துவதற்கு மிக முக்கியமாகும் என்பதைப் புரிந்துகொண்டு, புதிய நோக்கத்துடனான உணர்வுடன், இதில் கலந்து கொண்டவர்கள் புறப்பட்டனர்.
இந்த மாநாடானது, கல்விசார் புத்தாக்க கண்டுபிடிப்புகள் மற்றும் ஒத்துழைப்பிற்கான ஊக்கியாகவும் செயற்பட்டது. Cambridge University Press & Assessment ஆனது, நாட்டின் பிரகாசமான கல்விக்கான எதிர்காலத்தை வடிவமைப்பதில் காணப்படும் உறுதிப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்துகிறது. மாணவர்களுக்குள் காணப்படும் திறனை வெளிக்கொணரவும், அவர்களின் கற்பனைக்கு சிறகுகளை வழங்கவும், ஆக்கபூர்வமான முயற்சிகளில் அவர்கள் ஈடுபடவும், வழக்கமான சிந்தனைகளை தாண்டி மாற்று சிந்தனையை வளர்த்து, அனுபவங்களில் இருந்து படிப்பினைகளை பெற்று, கல்வித் தேவைகளைச் சமாளித்து, அவர்களின் ஆர்வத்தைத் தொடர இம்மாநாடு தூண்டுதலை ஏற்படுத்தியது.
தெற்காசிய Cambridge University Press & Assessment முகாமைத்துவ பணிப்பாளர் அருண் ராஜமணியின் அன்பான வரவேற்புடனான, ஆழமான முக்கிய உரையுடன் இம்மாநாடு ஆரம்பமானது. இங்கு அவரது உரையானது, ‘Education 360 degrees – Skill-intensive education’ (கல்வி 360 பாகை – திறனுடனான ஆழமான கல்வி) எனும் தலைப்பில் அவரது உரை அமைந்திருந்தது. நாட்டின் மாற்றமுறும் கல்வித் துறையில் சிந்தனையைத் தூண்டும் எண்ணங்களை ஏற்படுத்திய அவர், பல்வேறு விடயங்கள் தொடர்பான நுண்ணறிவுகளையும் வழங்கினார்.
Cambridge University Press & Assessment இன் பிரதி முகாமைத்துவ பணிப்பாளரும், ஆங்கிலம் தொடர்பான வணிக பணிப்பாளருமான Paul Colbert, ‘English and its applicability – Setting the stage for global learners’ (ஆங்கிலம் மற்றும் அதன் பொருந்தக்கூடிய தன்மை – உலகளாவிய கற்பவர்களுக்கு மேடை அமைத்தல்) எனும் தலைப்பை மேடையில் வெளிச்சம் போட்டுக் காட்டினார். போல் உடனான அடுத்தடுத்த கேள்வி-பதில் அமர்வானது, ஆங்கிலம் ஏற்படுத்தியுள்ள உலகளாவிய பொருத்தத்தைப் பற்றி விவாதிக்கவும், அதனை ஆழமாக ஆராயவும் பங்கேற்பாளர்களுக்கு வாய்ப்பளித்திருந்தது.
Paul Colbert மற்றும் இலங்கையின் பிரிட்டிஷ் கவுன்சிலின் இலங்கைக்கான பணிப்பாளர் Orlando Edwards ஆகியோருக்கு இடையேயான மாறுபட்ட ‘Fire-side chat’ உரையாடலானது, ‘Making English effective in Sri Lankan schools’ (இலங்கைப் பாடசாலைகளில் ஆங்கிலத்தை திறம்படச் செய்தல்) பற்றிய விவாதத்தை ஏற்படுத்தியது. இதன் மூலம் நவீன கல்வித் துறையில் ஆங்கிலப் புலமையின் முக்கிய பங்கு வலியுறுத்தப்பட்டது.
Cambridge University Press & Assessment இன் பொது ஆலோசகர் Catie Sheret, இங்கு ‘Climate Education in the Classroom’ (வகுப்பறையில் காலநிலைக் கல்வி) எனும் முக்கியமான கருப்பொருள் தொடர்பில் உரையாற்றினார். எதிர்கால சந்ததியினரின் உலகத்தை பெரிதும் பாதிக்கக்கூடிய, காலநிலை சார்ந்த சவால்களுக்கு அவர்களைத் தயார்படுத்த, பாடத்திட்டத்தில் சுற்றுச்சூழல் கல்வியை இணைப்பதன் முக்கியத்துவத்தை அடிக்கோடிட்டுக் காட்டும் தனது நுண்ணறிவுகளை அவர் இங்கு பகிர்ந்து கொண்டார்.
Cambridge University Press & Assessment இன், கல்வி முகாமைத்துவ பணிப்பாளர் Mandy Hill, இங்கு ‘The Role and Importance of Foundational Learning’ (அடிப்படை கற்றலின் பங்கு மற்றும் முக்கியத்துவம்) தொடர்பான தனது நிபுணத்துவத்தை பகிர்ந்து கொண்டார். மாணவர்களின் பாதையை வடிவமைப்பதில் வலுவான கல்வி அடித்தளங்களின் முக்கியத்துவத்தை அவரது விளக்கக்காட்சியுடனான உரை வலியுறுத்தியது.
இந்நிகழ்வில், ‘Building a Holistic Education Framework’ (ஒரு முழுமையான கல்விக் கட்டமைப்பை உருவாக்குதல்) எனும் தலைப்பில், ஆர்வத்தை ஏற்படுத்தும் ஒரு குழு நிலை கலந்துரையாடலும் நடைபெற்றது. ஆரம்ப வருட கல்வி மற்றும் அதன் முக்கியத்துவம் போன்ற பல்வேறு தலைப்புகளை பங்கேற்பாளர்கள் இங்கு ஆராய்ந்தனர். அத்துடன் திறமை அடிப்படையிலான பாடத்திட்டம் மற்றும் மதிப்பீடுகளை வழங்க ஆசிரியர்களுக்கு உதவும் உத்திகள் குறித்தும் இங்கு விவாதிக்கப்பட்டன. இந்த அமர்வானது, ஒரு ஈடுபாட்டுடன் கூடிய கேள்வி பதில் கொண்ட தொடர்பாடலாக இடம்பெற்றதோடு, அர்த்தமுள்ள கருத்துக்களின் பரிமாற்றத்தையும் ஊக்குவித்தது.
‘Cambridge qualifications are the passport for the future’ (கேம்பிரிட்ஜ் தகுதிகளே எதிர்காலத்திற்கான கடவுச்சீட்டு) என்பதை நினைவுபடுத்திய அருண் ராஜமணியின் முடிவுரையுடன் இம்மாநாடு நிறைவடைந்தது. கேம்பிரிட்ஜ் கல்வியானது, மாணவர்களுக்கு வழங்கும் நிலையான மதிப்பை எடுத்துக்காட்டிய அவரது வார்த்தைகள் பங்கேற்பாளர்களிடையே ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தியது.
இலங்கையில் இடம்பெற்ற கேம்பிரிட்ஜ் கல்வி மாநாடானது, கல்வித் துறையில் முக்கிய பங்குதாரர்களிடையே கலந்துரையாடலை ஏற்படுத்தி, புத்தாக்கம் மற்றும் ஒத்துழைப்பை ஊக்குவிப்பதில் பெரும் வெற்றியை ஏற்படுத்தியது. இலங்கையில் கல்வியின் எதிர்காலத்தை வடிவமைப்பதில் கேம்பிரிட்ஜின் அர்ப்பணிப்பை இந்நிகழ்வு மீண்டும் உறுதிப்படுத்தியதோடு, வேகமாக மாறிவரும் உலகிற்குள் நுழையத் தேவையான திறன்களை கற்கும் இளம் மாணவர்களுக்கு வழங்கியுள்ளது.
ENDS
Cambridge University Press & Assessment பற்றி
உலகளாவிய ரீதியில் மில்லியன் கணக்கான மக்களின் திறனுக்கு Cambridge University Press & Assessment வாய்ப்பளிக்கிறது. இது கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தின் முதற் தர கற்பித்தல் மற்றும் ஆராய்ச்சித் துறைகளின் ஆதரவுடன், உலகளாவிய ரீதியில் முன்னணி கல்வி ஆராய்ச்சி, கற்றல் மற்றும் மதிப்பீட்டை வழங்குகிறது.
இது தொடர்பில் மேலதிக விபரங்களை அறிய cambridge.org அல்லது Facebook, Instagram, LinkedIn, Twitter, YouTube இல் எம்மைப் பின்தொடரவும்.
Recent Comments