200 மில்லியனுக்கும் மேற்பட்ட வங்கிகளிடையே டிஜிட்டல் பரிவர்த்தனைகளைக் கையாளும் LankaPay இற்கு பாதுகாப்பான மென்பொருள் மூலமான தரவு மையத்தை மேம்படுத்தும் Softlogic நிறுவனம்
இலங்கை மத்திய வங்கியின் வழிகாட்டல் மற்றும் மேற்பார்வையின் கீழ் தேசிய கொடுப்பனவு வலையமைப்பாக LankaPay 2002 இல் நிறுவப்பட்டது. மத்திய வங்கிக்கு சொந்தமான LankaPay ஆனது, நாட்டிலுள்ள அனைத்து அனுமதிப்பத்திரம் பெற்ற வணிக வங்கிகளுக்கும் பிராந்தியத்தில் மிகவும் வெற்றிகரமான அரச, தனியார் கூட்டாண்மைகளில் ஒன்றாக (PPP) கருதப்படுகிறது.
டிஜிட்டல் கொடுப்பனவுகளுக்கான தேவை அதிகரித்து வரும் நிலையில், LankaPay தனது தற்போதைய தொழில்நுட்ப மாற்றப் பயணத்தின் ஒரு பகுதியாக அதன் உட்கட்டமைப்பை தொடர்ச்சியாக மேம்படுத்தி வருகிறது.
உயர் கட்டமைப்புக்கான மேம்படுத்தல் மற்றும் மென்பொருள் ரீதியான இடம்பெயர்வு தொடர்பில் கருத்து வெளியிட்ட LankaPay நிறுவனத்தின் IT உதவிப் பொது முகாமையாளர் (AGM) டிலந்த சமரசிங்க தெரிவிக்கையில், “அதிகரித்து வரும் தேவை மற்றும் திறன் மேம்பாட்டிற்கு ஏற்ப பொதுவான அட்டை மற்றும் கட்டண முறையை (Common Card and Payment System – CCAPS) மேம்படுத்துவதானது, எமது நிகழ்ச்சி நிரலில் உயர்ந்த இடத்தில் உள்ளது. தேசிய ரீதியிலான கட்டணம் செலுத்தும் மாற்றத்தின் செயற்பாட்டாளர் எனும் வகையில், புதிய தொழில்நுட்பங்கள் மற்றும் சமீபத்திய உட்கட்டமைப்பு நவீனமயமாக்கல் ஆகியவற்றை பின்பற்றுவதன் மூலம் இத்தொழில்துறையை நாம் வழிநடத்த விரும்புகிறோம். இங்கு தரவு மைய உட்கட்டமைப்பை, ஒரு நவீன மென்பொருள் மூலம் கட்டுப்படுத்தப்படும் தரவு மையத்திற்கு (Software Defined Data Center – SDDC) மாற்றியமைத்துள்ளோம். இதில் விரைவு, அளவிடக் கூடிய தன்மை போன்ற குறிப்பிடத்தக்க அம்சங்களாகும். இப்புதிய மென்பொருள் சூழலானது, குறிப்பாக Virtualization, Abstraction, Resource Pooling, Automation ஆகியவற்றின் மூலம் வழக்கமான தரவு மையங்கள் போல் அல்லாது சில குறிப்பிடத்தக்க விதிவிலக்கான அம்சங்களுடன் அதிக விரைவான தன்மையை வழங்குகிறது. Softlogic Information Technologies ஆனது, எமது Disaster Recovery Site இல் பாரம்பரிய மெய்நிகராக்கப்பட்ட உட்கட்டமைப்பிலிருந்து ஒரு மிகைப்படுத்தப்பட்ட உட்கட்டமைப்பிற்கு, குறைபாடுகள் அற்ற மேம்படுத்தல் மற்றும் தரவு இடம்பெயர்தலை வழங்கியுள்ளது. இது உண்மையில் பாராட்டத்தக்க ஒரு விடயமாகும். புதிய VM ware உட்கட்டமைப்பானது எமக்கு முன்னொருபோதும் இல்லாத அளவுக்கு அளவீடு மற்றும் வளர்ந்து வரும் கேள்வியைப் பூர்த்தி செய்ய மிகவும் அவசியமான வேகம் ஆகியவற்றை வழங்கியுள்ளது. அத்துடன் தங்குதடையற்ற மிருதுவான தரவு இடம்பெயர்வானது, எமது செயற்பாடுகளுக்கும் குறிப்பாக எமது சேவைகளுக்கு குறுக்கீடு ஏற்படுவதை குறைக்க உதவியது.” என்றார்.
Softlogic Information Technologies நிறுவனத்தின் பணிப்பாளரும் அதன் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான ரோஷன் ரசூல் இது தொடர்பில் கருத்து வெளியிடுகையில், “மிகவும் விரைவான மற்றும் பாதுகாப்பான தரவு மையத்தை உருவாக்குதல் மற்றும் செயற்படுத்துவதானது, இலங்கையின் டிஜிட்டல் பொருளாதாரத்தை விரிவுபடுத்துவதற்கான LankaPay இன் மூலோபாயத்தின் நோக்கமாகும். LankPay மென்பொருள் மூலம் கட்டுப்படுத்தப்படும் தரவு மையத்தின் (SDDC) வெற்றிகரமான மேம்படுத்தலானது, எமது மகத்தான சாதனைகளில் ஒன்றாகும். SDDC என்பது, தரவு மையங்களில் தொழில்நுட்பத்தின் அடுத்த வளர்ச்சியாகும். இது புதிய வளங்களை வழங்குதல், விற்பனையாளரில் தங்கியிருக்காமல் பேணுதல் போன்ற நேரத்தை வியக்கத் தக்க வகையில் குறைக்கக்கூடிய முக்கிய நன்மைகளை வழங்குகிறது. இப்புதிய பௌதிக Server இனை அமைக்கவோ, செயலிக்கு அதிக சேமிப்புத் திறனை வழங்கவோ அல்லது பௌதிக வலையமைப்பை மாற்றுவதற்கோ இனிமேல் நாட்களோ அல்லது வாரங்களோ எடுக்காது. இப்புதிய தொழில்நுட்பத்தை LankaPay தழுவிக்கொண்ட விதம் தொடர்பில் நாம் உண்மையிலேயே ஆச்சரியப்படுகிறோம். மேலும் அவர்களது, டிஜிட்டல் பயணத்தின் ஒரு பங்காளராக இருப்பதற்கான வாய்ப்பை எமக்கு வழங்கியதற்காக நாம் அவர்களுக்கு இவ்வேளையில் நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்.” என்றார்.
Softlogic Information technologies Pvt Ltd (SITL) ஆனது LankaPay தரவு மையத்தை வெற்றிகரமாக மேம்படுத்தியமைக்கு, நிறுவனத்தின் 30 வருட அனுபவம் மற்றும் உள்நாட்டிலும் சர்வதேச அளவிலும் அதிக கேள்வியைக் கொண்ட தொழில்நுட்பச் சந்தைக்கு தனது சேவையை வழங்குவதில் அதன் நீடித்த வெற்றி மற்றும் இலங்கையின் ICT துறையின் வளர்ச்சிக்கான அதன் ஒப்பற்ற அர்ப்பணிப்பு ஆகியன பெரும் காரணங்களாகும். SITL ஆனது, இலங்கையில் தரவு மைய செயலாக்கங்கள் மற்றும் மெய்நிகராக்க தளங்களில் இன்று முன்னணியில் திகழ்கின்றது. பல்வேறு வங்கிகள், நிதி நிறுவனங்கள், உற்பத்தி நிறுவனங்கள் மற்றும் பாரிய/ நடுத்தர பெருநிறுவனங்கள் ஆகியன, தொழில்துறையிலுள்ள சிறந்த நடைமுறைகளை பின்பற்றி, தமது தரவு மைய தீர்வுகள் பாதுகாப்பாக செயற்படுத்தப்படுவதை உறுதி செய்ய, SITL உடன் இணைந்து பணியாற்றுகின்றன. தற்போது SITL ஆனது, Dell வர்த்தகநாமத்திற்கான Titanium கூட்டாளர் எனும் அந்தஸ்தையும், VMware இற்கான முதன்மை கூட்டாளர் அந்தஸ்தையும் கொண்டுள்ளது. இலங்கையில் இணைய பாதுகாப்பு வர்த்தகத்தில் வலுவான பங்களிப்பையும் SITL வழங்கி வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலதிக விபரங்களுக்கு www.softlogicit.lk இணையத்தளத்தை பார்வையிடவும்
Recent Comments