சிங்கர் ஓசோன் படலப் பாதுகாப்பில் முன்மாதிரியாகத் திகழ்கின்றது  

சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்காக அர்ப்பணிப்புடன் செயல்பட்டு வருகின்ற ஒரு நிறுவனமான சிங்கர் (ஸ்ரீலங்கா), இந்த ஆண்டும் வழக்கம் போலவே உலக ஓசோன் தின கொண்டாட்டங்களில் இணைந்துள்ளது. 1987 ஆம் ஆண்டு மொன்ட்ரியல் நெறிமுறை கைச்சாத்திடப்பட்ட நாளைக் குறிக்கும் வகையில் செப்டெம்பர் 16 ஆம் திகதி உலக ஓசோன் தினம் அனுட்டிக்கப்படுகிறது. இந்த ஆண்டு ஓசோன் தினம், பூமியில் உயிர்களைப் பாதுகாக்கும் உலகளாவிய ஒத்துழைப்பு என்ற தொனிப்பொருளுடன் கொண்டாடப்படுகிறது. காலநிலை சவால்களை எதிர்கொள்வதற்கும் எதிர்கால சந்ததியினருக்காக பூமியில் உயிர்களைப் பாதுகாப்பதற்கும் ஒத்துழைப்புடன் செயல்பட வேண்டியதன் அவசியத்தை மையமாகக் கொண்டு, மொன்ட்ரியல் நெறிமுறை காலநிலை மாற்றத்தில் ஏற்படுத்தும் தாக்கத்தை இனங்காணும் வகையில் இத்தொனிப்பொருள் அமைந்துள்ளது.

CFC குளிர்பதனப் பொருட்கள் தொடர்பான கரிசனைகள் நிலவிய நேரத்தில், சில்லறை விற்பனையில் பெரு நிறுவனமாகத் திகழ்ந்து வருகின்ற சிங்கர், CFC குளிர்பதனப் பொருட்களின் தீங்கு விளைவிக்கும் உமிழ்வுகளுக்கு மாற்றாக R600a குளிர்பதனப்பொருட்களைக் கொண்ட குளிர்சாதனப்பெட்டிகளை தெற்காசியாவில் அறிமுகப்படுத்திய முதல் நிறுவனமாக மாறியது. R600a குளிர்பதனப் பொருட்கள் 100% சுற்றுச்சூழலுக்கு பாதுகாப்பானவை மற்றும் ஓசோன் படலத்தில் எவ்விதமான தாக்கத்தையும் ஏற்படுத்தாமையால், இந்த முன்னோடி அறிமுகமானது, ஓசோன் படலப் பாதுகாப்பை நோக்கி பாரியதொரு நகர்வாக மாறியது. சமூகப் பொறுப்புணர்வுள்ள நிறுவனமாக சிங்கர் இருப்பதால், நமது பூமியின் ஆரோக்கியம் குறித்து ஆழ்ந்த அக்கறை கொண்டுள்ளது. அதனாலேயே 2012 ஆம் ஆண்டில், ஓசோன் படலத்தைப் பாதுகாப்பதற்கான உலகளாவிய பதில் செயல்பாடுகளின் ஒரு பகுதியாக இருக்க முயற்சி எடுத்தது. எனவே CFC உமிழ்வு இல்லாமல் 1.3 மில்லியனுக்கும் அதிகமான குளிர்சாதனப்பெட்டிகளை தயாரித்து விற்பனை செய்து வருகிறது. இதன் மூலம் 1.3 பில்லியன் கிலோவாட் மணி நேர எரிசக்தியை சூழலில் மிச்சப்படுத்தி வருகிறது.

சிங்கர் (ஸ்ரீலங்கா) பிஎல்சியின் சந்தைப்படுத்தல் பணிப்பாளரான ஷனில் பெரேரா அவர்கள் கூறுகையில், ‘சுற்றுச்சூழல் மீது அதிக அக்கறை கொண்ட நிறுவனமாக இருப்பதால், எமது நிறுவனத்தின் செயல்பாடுகளில் நிலைபேற்றியலை இணைக்க நாங்கள் எப்பொழுதும் முயற்சி செய்து வருகிறோம். சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதில் பங்களிக்கக்கூடிய பகுதிகளை நாம் அனைவரும் ஆராய வேண்டிய நேரம் இது. இல்லை என்றால், பருவநிலை மாற்ற எதிர்வுகூறல்களால் எதிர்கால சந்ததியினர் மோசமான விளைவுகளை சந்திக்கும் அபாயம் உள்ளது,” என்று குறிப்பிட்டார்.

ஆண்டுதோறும், உலகெங்கிலும் உள்ள மக்களும், நிறுவனங்களும் ஓசோன் தினக் கொண்டாட்டங்களுக்குத் தயாராகி, ஓசோன் படலப் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வைப் பரப்பி வருகின்றனர். மொன்ட்ரியல் நெறிமுறையானது ஓசோன் படலத்தைப் பாதுகாப்பதற்கும், ஓசோனைக் குறைக்கும் பொருட்களை வெளியேற்றுவதற்கும் உலகளாவிய ஒப்பந்தமாகச் செயல்படுகிறது. இதன் மூலம் அனைத்து உயிரினங்களுக்கும் சாதகமான சூழலை உருவாக்க உதவுகிறது. தீங்கு விளைவிக்கும் புற ஊதாக் கதிர்களை உறிஞ்சும் திறனுடன், ஓசோன் படலம் பூமியில் வாழ்வதற்கு மிகவும் முக்கியமானதாகக் கருதப்படுகிறது. குளோரோபுளோரோகார்பன்கள், ஹைட்ரோகுளோரோபுளோரோகார்பன்கள், கார்பன் டெட்ராகுளோரைடு போன்ற இரசாயனங்கள் வெளியிடப்படுவதால் ஓசோன் படலம் குறைகிறது. கடந்த ஆண்டு வரையில், குளோரோபுளோரோகார்பன்கள் ஓசோன் படலத்தின் அழிவுக்கு முக்கியமான காரணிகளுள் ஒன்றாக இனங்காணப்பட்டுள்ளதுடன், CFC குளிர்பதனப் பொருட்கள் கொண்ட குளிரூட்டிகள் வீடுகள் மத்தியில் மிகவும் பரிச்சயமாகியிருந்தன.

பூமியில் உள்ள உயிர்களைப் பாதுகாப்பதற்கான தனது முயற்சிகளை சீரமைத்து, நிலைபேற்றியலுடனான பொதியிடல் வழிமுறைகளை நோக்கி நகர்த்தவும், மறுசுழற்சி செய்ய முடியாத ஸ்டைரோஃபோமுக்கு பதிலாக கூழ்ம பொதியிடல் வழிமுறைகளைப் பயன்படுத்தவும் சிங்கர் நடவடிக்கை எடுத்துள்ளது. மேலும், ஒட்டுமொத்த குளிர்சாதனப் பெட்டி உற்பத்தி ஆலையும் எரிசக்தி திறன் கொண்ட தூண்டல் இயந்திரங்கள், கழிவுகளை பொறுப்பாக அகற்றுதல், உலோகம் மற்றும் பிளாஸ்திக்கை மறுசுழற்சி செய்தல் போன்றவற்றைத் தொடர்ந்து கடைப்பிடித்து வருகிறது. சிங்கர் சுற்றுச்சூழல் பாதுகாப்பு பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதில் ஆர்வமாக உள்ளது. தனது உள்ளூர் உற்பத்தி செயல்முறையின் மூலம் சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்கு பங்களிப்பதற்கான வழிகளை ஆராய்ந்து வருகிறது.

முற்றும்

Share

You may also like...