Huawei Nova 7i, FreeBuds 4i, FreeLace Pro இன்றைய நேர்த்தியான தெரிவு

உலகின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனமான Huawei தனது உற்பத்திகளை விரிவுபடுத்தி பயனர்களுக்கு எளிதான சேவை வழங்ககுவதில் கவனம் செலுத்தியுள்ளது. அத்துடன் எதிர்காலத்தில் Huawei தனது பயனர்களுக்கு wireless earphones களை அறிமுகப்படுத்துவது புதிய அனுபவத்தையும் தரத்தையும் மேம்படுத்தும். இந்த wireless earphones கள்  Huawei இன் smartphones, tablets உள்ளிட்ட ஸ்மார்ட் சாதனங்களுடன் கிடைக்கப்பெறும்.

Huawei Nova 7i சிறந்த அம்சங்களை உள்ளடக்கிய முன்னணியில் விற்பனையாகும் ஸ்டார்ட் போன்களாகும். நேர்த்தியான வடிவமைப்பு மற்றும் எதிர்கால அம்சங்களான Quad camera, 8GB RAM, 128GB storage, Kirin 810 chipset ஆகிய கலவையுடன் கூடிய Huawei Nova 7i, தொழில்நுட்ப ஆர்வலர்கள் மத்தியில் மிகவும் பிரபலமான சாதனமாக மாறுகின்றது. மிகவும் மெருகூட்டப்பட்டு வடிவமைக்கப்பட்ட Nova 7i  மூன்று வர்ணங்களை உள்ளடக்கிய வகைகளுடன் வருகிறது. Sakura Green, Midnight Black மற்றும் Crush Green ஆகிய நிறங்களில் கிடைக்கின்றது. அத்துடன் வளைவான மூலைகளுடன்  ஒரு matte finish ஐ கொண்டுள்ளது. Nova 7i இன் 6.4 அங்குல LCD display யில் கேம்களை விளையாடும்போது, வீடியோக்களைப் பார்க்கும்போதும் அற்புதமான அனுபவத்தை வழங்குகிறது.

Nova 7i இல் 48MP main camera, 8MP Ultra-wide camera, 2MP Macro camera மற்றும் 2MP Depth camera ஆகியவை தொழில்முறை தரமான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை உருவாக்க இணைந்து செயல்படுகிறது. Night, Portrait, Panaroma, HDR, Slow motion, Super Macro மற்றும் Time Lapse போன்ற புதுமையான சிறப்பம்சங்களையுடையவை புகைப்படம் மற்றும் காணொளிகளை பயனர்கள் ஆக்கப்பூர்வமாக எடுக்க உதவுகிறது. இது திரையின் மேல் இடது மூலையில் பஞ்ச் துளை வழியில் துளையிடப்பட்ட மிகவும் செயல்திறன் கொண்ட 16MP செல்பி கெமராவையும் கொண்டுள்ளது.

இந்த ஸ்மார்ட்போன் 8GB RAM மற்றும் Kirin 810 மிகவும் மேம்பட்ட சிப்செட் மூலம் இயக்கப்படுவதுடன் lag free மற்றும் வேகமான செயல்திறனை வழங்குகிறது. அதன் 128GB storage புகைப்படங்கள், வீடியோக்கள், apps மற்றும் கேம்களை சேமிக்க போதுமான இடத்தை வழங்குகிறது. 4200mAh பேட்டரியுடன் நிரம்பிய Huawei Nova 7i ஆனது நீண்ட பேட்டரி ஆயுளை உறுதி செய்கிறது மற்றும் அதன் 40W Huawei சூப்பர் சார்ஜ் தொழில்நுட்பம் வெறும் 30 நிமிடங்களில் 70 வீதம் வரை சார்ஜ் செய்யும் திறன் கொண்டது.

மக்கள் தங்கள் வேலை மற்றும் அன்றாட வாழ்க்கையை வசதியாகக் கையாள பல வழிகளைத் தேடுகிறார்கள். ஸ்மார்ட்போன்களின் பாவனை அதிகரித்துள்ள நிலையில், வயர்லெஸ் இயர்போன்கள் போன்ற தொழில்நுட்ப உபகரணங்கள் மக்களின் வாழ்க்கையை எளிதாக்கும் வகையில் தோன்றியுள்ளன. Huawei இன் வயர்லெஸ் இயர்போன்கள் Active Noise Cancellation தொழில் நுட்பம் மற்றும்  unique music மற்றும் call experience மற்றும் background noises ஐ குறைக்கும் தன்மை கொண்டவையாகும்.

இந்த இயர்போன்கள் வயர்கள் இல்லாது அணியும் ஆடம்பரத்தை வழங்குகின்றன. Huawei FreeBuds 4i இயர்போன்கள் Active Noise Cancellation (ANC) தொழில்நுட்பத்துடன் நெரிசலான சூழலிலும் தெளிவாக இசையை அனுபவிக்க முடியும். இயர்போன்களின் சென்சார்கள் சுற்றுப்புற சத்தத்தைக் கண்டறிந்து குறைக்கும் திறன் கொண்டவை, இதனால் பயனர்கள் எங்கிருந்தாலும் இசை அல்லது தொலைபேசி அழைப்புகளில் கவனம் செலுத்த முடியும். அத்துடன் அதன் இரட்டை மைக் சத்தமில்லாத சூழலில் தெளிவான தொலைபேசி அழைப்புகளை உறுதி செய்கிறது. 10mm dynamic driver இல் Huawei FreeBuds 4i சிறந்த தர ஒலி அனுபவம், தெளிவான குரல், punchy bass மற்றும் நேர்த்தியான சீரான ஒலியை வழங்குகின்றது.

FreeBuds 4i மிகவும் இலகுவானதாகவும் காதுகளில் வசதியாக பொருந்தக்கூடிய ஒரு சிறந்த வடிவமைப்பைக் கொண்டுள்ளது. Huawei FreeBuds 4i இன் குறிப்பிடத்தக்க அம்சங்களில் ஒன்று, ஒரு முறை சார்ஜ் செய்தால் 10 மணிநேரம் தொடர்ச்சியாக இசையை கேட்க முடியும். 10 நிமிடங்கள் சார்ஜ் செய்தால் 4 மணிநேர இசையை கேட்க முடிகிறது. இது அதன் முன்னணி விரைவு சார்ஜ் தொழில்நுட்பத்திற்கு சிறந்த எடுத்துக்காட்டு. FreeBuds 4i செராமிக் வெள்ளை, கார்பன் கறுப்பு மற்றும் சிவப்பு நிறங்களில் கிடைக்கிறது.

Huawei FreeLace Pro அறிமுகத்துடன் வயர்லெஸ் இயர் பட்ஸுக்கு பதிலாக Huawei மற்றொரு தெரிவை வழங்குகிறது – இது எப்போதும் பயனர்களுக்கு ஏற்ற neckband style earphone ஆகும். Huawei FreeLace Pro இரட்டை மைக் Active Noise ஐ நிறுத்தும் தொழில்நுட்பத்துடன் பயன்பாட்டுக்கு வரவுள்ளது. இது பயனர்களுக்கு எவ்வித இடையூறும் இல்லாது  உயர் தரத்துடன் இசையை ரசிக்க முடிகின்றது. அதன் 14mm டைனமிக் டிரைவர்  சுயாதீனமாக குறைந்த அதிர்வெண் ஒலி குழாய் மூலம் அதிர்வு விளைவை அடையக் கூடியதாக உள்ளதுடன் அது punchier மற்றும் deeper bass அடைய முடிகின்றது.

அதன் சக்திவாய்ந்த ஆடியோ தரத்திற்கு கூடுதலாக, FreeLace Pro அழைப்பு சத்தம் ரத்துசெய்தல் அமைப்புடன் வருகிறது, இது அழைப்புகளின் போது வெளிப்புற சூழல் சத்தத்தின் குறுக்கீட்டை திறம்பட குறைக்கிறது. ஒற்றை பேட்டரி சார்ஜ் மூலம், Huawei FreeLace Pro 24 மணிநேரம் தொடர்ச்சியான இசை அனுபவிக்க முடிகின்றது.

Huawei Nova 7i ஐ ரூபா 52,999/-, Huawei FreeBuds 4i ரூ. 20,999/- மற்றும் Huawei FreeLace Pro ரூ. 21,999/- அனைத்து Huawei விற்பனை நிலையங்கள், சிங்கர் காட்சியறைகள், அங்கீகரிக்கப்பட்ட விற்பனை நிலையங்கள் மற்றும் Daraz.lk மற்றும் Singer.lk ஆகியவற்றின் மூலம் கொள்வனவு செய்யமுடியும்.

Share

You may also like...