realme உலகளவில் 100 மில்லியன் கையடக்க தொலைபேசிகளை விற்பனை செய்யும் வேகமான ஸ்மார்ட்போன் தரக்குறியீடாக மாறியுள்ளது

லகின் அதிவேக காந்தவியல் வயர்லெஸ் சார்ஜிங் MagDart அறிமுகம்

  • ஓகஸ்ட் 2018 இல் ஆரம்பிக்கப்பட்டு மூன்று வருடங்களுக்குள் 100 மில்லியன் விற்பனை இலக்கை அடைகிறது
  • வருடாந்த 149% வளர்ச்சி விகிதத்துடன் 2ஆம் காலாண்டில் உலகளாவிய ஸ்மார்ட்போன் வளர்ச்சியில் realme முன்னிலை வகிக்கிறது

     – realme, வளர்ந்து வரும் உலகளாவிய நுகர்வோர் தொழில்நுட்ப நிறுவனம், உலகளவில் 100 மில்லியன் ஸ்மார்ட்போன்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளது. 2020 மற்றும் 2021 ஆம் ஆண்டுகளில் கொவிட்-19 காரணமான பொருளாதாரச் சவால்களுக்கு மத்தியில், வலுவான செயல்திறன் காரணமாக realme, மூன்று வருடங்களில் இந்த மைல்கல்லை எட்டிய வேகமான உலகளாவிய ஸ்மார்ட்போன் தரக்குறியீடாக மாறியுள்ளது. சந்தை ஆராய்ச்சி ஆலோசனை நிறுவனமான International Data Corporation (IDC) மேற்கொண்ட ஆய்வின் தரவுகளின்படி, 2021 இன் இரண்டாம் காலாண்டில் மிகவும் வேகமாக வளர்ந்து வரும் முக்கிய ஸ்மார்ட்போன் தரக்குறியீடாக realme மாறியுள்ளது எனவும், அது வருடத்திற்கு வருட வளர்ச்சி வீதத்தை 149% ஆக கொண்டுள்ளது எனவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சாதனையானது, உலகளாவிய ரீதியில் realme இனது விற்பனை மற்றும் வணிக மூலோபாயங்களின் வெற்றியை மேலும் உறுதிப்படுத்தியுள்ளது. 2018 இல் நிறுவப்பட்ட realme, தற்போது உலகளவில் 61 வெவ்வேறு சந்தைகளில் 7ஆவது பெரிய ஸ்மார்ட்போன் தரக்குறியீடு எனும் இடத்தையும், தயாரிப்பாளர்களின் வரிசையில் 13 சந்தைகளில் முதல் 5 ஸ்மார்ட்போனாகவும் இடம் பிடித்துள்ளது. பிலிப்பைன்ஸ் மற்றும் பங்களாதேஷில் முதல் இடத்தையும், இந்தியா மற்றும் ரஷ்யாவில் நான்காவது இடத்தையும் ஐரோப்பாவில் ஐந்தாவது இடத்தையும் 2021 இன் இரண்டாம் காலாண்டில் பிடித்துள்ளது.

realme யின் பிரதான நிறைவேற்று அதிகாரி, ஸ்கை லி (Sky Li) இச்சாதனை தொடர்பில் கருத்து வெளியிடுகையில், “இளைஞர்கள், எமது நுகர்வோர் மற்றும் எமது ஊழியர்கள் ஆகியோர் எதிர்காலத்திற்கு தலைமை தாங்கவும், காலத்திற்கு காலம் ட்ரெண்ட்காக இருக்கவும், நன்கு வேரூன்றியுள்ள இத்தொழில்துறையில் பாரிய மாற்றங்களை கொண்டு வர எமக்கு தைரியம் அளித்தனர். கடந்து வந்த இந்த மூன்று வருடங்கள் உண்மையில் ஒரு தொழில் முனைவோர் எனும் மனப்பான்மை மற்றும் realme இன் தங்கு தடையற்ற வளர்ச்சியை பறை சாற்றி நிற்கிறது. எமது இளம் பயனர்களின் பெரும் ஆதரவுக்கு நன்றிகளைத் தெரிவிப்பதோடு, 100 மில்லியன் ஸ்மார்ட்போன்களை உலகளாவிய சந்தையில் வெளியிட்டு விற்பனை செய்யும் எமது இலக்கை அடையவும், ஸ்மார்ட்போன் சந்தையில் குறிப்பிடத்தக்க இடத்தையும் நாம் பெற  அவர்களே காரணமாகும். உலகெங்கிலும் உள்ள இளம் நுகர்வோருக்கு கட்டுப்படியாகும் வகையிலான விலையில் உயர் தர ப்ரீமியம் செயல்திறன் மற்றும் காலத்திற்கேற்ற போக்குகளுடனான வடிவமைப்புகளுடன் நாம் எமது தயாரிப்புகளை தொடர்ந்தும் அவர்களுக்கு வழங்குவோம்.” என்றார்.

2022ஆம் ஆண்டின் இறுதியில் மேலும் 100 மில்லியன் கையடக்க சாதனங்களை தயாரித்து வெளியிடவும், 2023 வருடத்திற்குள் அதே மைல்கல்லை எட்டவும் என, இரு 100 மில்லியன் இலக்கை அடைவதே realme இனது அடுத்த குறிக்கோளாகும் என்று லி தெரிவித்தார்.

இந்த 100 மில்லியன் மைல்கல் என்பது, realme யின் அற்புதமான உலகளாவிய அடைவுகளின் அண்மைய உயர்வை பறைசாற்றுகின்றது. அந்த வகையில் நிறுவனம் மற்றுமொரு ‘முதலாவது’ எனும் அடைமொழியை தனதாக்கியுள்ளது. ஸ்மார்ட் கையடக்க சாதன கைத்தொழில் துறையில் முன்னணி புத்தாக்கவியலாளராக உருவெடுத்துள்ள realme உலகின் முதலாவது காந்தவியல் வயர்லெஸ் சார்ஜிங் (Magnetic Wireless Charging) திறனுடன் உலகின் அதிவேக காந்தவியல் வயர்லெஸ் சார்ஜிங் அமைப்பை அறிமுகப்படுத்தியுள்ளது. realme Flash ஆனது, காந்தவியல் வயர்லெஸ் சார்ஜிங் திறன் கொண்ட உலகின் முதல் அன்ட்ரொய்ட் போன் ஆகும். realme யின் MagDart சார்ஜர், உலகின் வேகமான காந்தவியல் வயர்லெஸ் சார்ஜர் எனும் வகையிலும், 50W திறன் கொண்ட சார்ஜர் ஆனது, அதன் பிரதான மின்சுற்றுப்பலகையில் வெப்பநிலையை கணக்கான அளவில் பராமரித்து, செயற்படுத்தப்பட்ட காற்று மூலமான குளிரூட்டும் (active air cooling) அமைப்பின் மூலம் பேணப்படுகின்றது.

realme Sri Lanka, பயிற்சி முகாமையாளர், துஷங்க குமார்,  இது தொடர்பில் கருத்து வெளியிடுகையில், “realme எப்போதும் உலகளாவிய இளம் ஸ்மார்ட்போன் பயனர்களுக்கு முன்னணி தொழில்நுட்பங்களை கொண்டு வருவதில் முன்னிற்கிறது. realme Flash மற்றும் MagDart Charger ஆகியன realme இற்கு உரித்தான தொழில்நுட்ப கண்டுபிடிப்புகளாக விளங்குகின்றன. இப்புத்தாக்க கண்டுபிடிப்புகளுடன் சேர்ந்தவாறு, பல புதிய கண்டுபிடிப்புகள் மற்றும் ஸ்மார்ட் அணிகலன்களையும் நாம் வெளியிடுகிறோம். இவையும் பல முன்னேற்றகரமான அம்சங்களை ஒருங்கிணைக்கிறது. இங்குள்ள மிக முக்கியமான வளர்ச்சி யாதெனில், இக்கண்டுபிடிப்புகள் ஸ்மார்ட்போன் உலகில் ஒரு புதிய தொகுதியின் உருவாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனை நாம் realme Magnetic Charging Ecosystem (rMCE) என அழைக்கிறோம். உலகின் மற்றுமொரு முதல் அம்சமான, realme காந்தவியல் தொகுதிக்கு உங்களை வரவேற்கிறோம்.” என்றார்.

ஜூலை 2020 இல், realme உலகின் முன்னணி 125W SuperDart இனை அறிமுகப்படுத்தியது. இந்த MagDart ஆனது காந்தவியல் வயர்லெஸ் சார்ஜிங்கை ஒரு புதிய வேக சகாப்தத்திற்கு கொண்டு சென்றது. realme இனது சமீபத்திய தயாரிப்புகளின் முழு விபரங்கள் www.realme.com இல் கிடைக்கின்றன.

Realme பற்றி

Realme என்பது ஒரு தொழில்நுட்ப தரக்குறியீடாகும். இது முன்னணி தரம் மற்றும் காலத்திற்கு ஏற்ற நவீனத்துவமான ஸ்மார்ட்போன்களாகும் என்பதுடன் அது AIoT தயாரிப்புகளை உலக சந்தைக்கு வழங்குகிறது. Realme பயனர்கள், இளமை மற்றும் உலக அளவிலான எண்ணம் கொண்டவர்களாக இருப்பார்கள். Realme தயாரிப்புகள் யாவும், சமீபத்திய தொழில்நுட்பம் மற்றும் வடிவமைப்பைப் பயன்படுத்தி இளைஞர்களை ‘துள்ளுவதற்கு துணிய’ வழி வகுக்கின்றன. Realme உலகின் 7ஆவது சிறந்த ஸ்மார்ட்போன் தரக்குறியீடாக விளங்குவதோடு, 2020 இன் 3ஆவது காலாண்டில் உலகளாவிய ஸ்மார்ட்போன் ஏற்றுமதிகளின் Counterpoint புள்ளி விபரங்களின்படி பிரதான ஸ்மார்ட்போன் தரக்குறியீடுகளில் ஒன்றாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. 2019ஆம் ஆண்டில், Realme இனது உலகளாவிய ஸ்மார்ட்போன் ஏற்றுமதி 25 மில்லியனை எட்டி, அது வருடத்திற்கு வருட (YoY) வளர்ச்சி 808%  விகிதத்தை அடைந்ததன் மூலம், 2019 இலிருந்து 2020 இரண்டாம் காலாண்டு வரை தொடர்ச்சியாக நான்கு காலாண்டுகளில் உலகில் மிக வேகமாக வளர்ந்து வரும் ஸ்மார்ட்போன் தரக்குறியீடாக அடையாளம் காணப்பட்டுள்ளது. உலகளாவிய ரீதியில் சீனா, தென்கிழக்கு ஆசியா, தெற்காசியா, ஐரோப்பா, ரஷ்யா, அவுஸ்திரேலியா, மத்திய கிழக்கு, ஆபிரிக்கா உள்ளிட்ட 61 சந்தைகளில் Realme தனது கால்தடத்தை பதித்துள்ளதுடன், 70 மில்லியனுக்கும் அதிகமான உலகளாவிய பயனர்களையும் அது கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share

You may also like...