வாகன தொழிற்துறை மற்றும் ஆயிரக்கணக்கான தொழில்கள் ஆபத்தில், CMTA தெரிவிப்பு

உள்நாட்டு இறக்குமதியாளர்கள் ஊடாக வாகன தயாரிப்பாளர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் இலங்கையின் ஒரேயொரு வர்த்தக அமைப்பான Ceylon Motor Traders Association (CMTA), வாகன இறக்குமதி மீதான இடைக்காலத் தடை நீடிக்கும் காலப்பகுதி தொடர்பில் தெளிவான பதிலை வழங்குமாறும், அரசாங்கத்தினால் ஆய்வுக்குட்படுத்தப்பட்ட சட்டப்படியான இறக்குமதியாளர்களுக்கு வாகன இறக்குமதியை ஒழுங்குபடுத்த வேண்டியதன் தேவையையும் அரசிடம் வலியுறுத்தியுள்ளது.

CMTA வின் தலைவர், யசேந்திர அமரசிங்க குறிப்பிடுகையில், “முக்கியமாக, இலங்கையில் கொவிட்-19 ஐக் கட்டுப்படுத்துவதற்கான அரசாங்கத்தின் தலைமைத்துவம் மற்றும் முயற்சிகளை பாராட்டுகின்றோம். எமது நிலமை ஏனைய பல உலக நாடுகளை விட மிகவும் சிறந்த நிலையில் உள்ளமைக்கு அரசாங்கத்தின் நடவடிக்கைகளை பாராட்டுகின்றோம். எவ்வாறாயினும், வாகன இறக்குமதி தடையானது ஆயிரக்கணக்கான இலங்கையர்களை மோசமாக பாதித்துள்ளது. மேலும், அது எப்போது நீக்கப்படும் என்பது குறித்து எங்களுக்குத் தெளிவாகத் தெரிவிக்க வேண்டியது அரசாங்கத்தின் பொறுப்பாகும். இதன் மூலம்,  வணிகங்களும் மக்களும் முன்னரே திட்டமிடுதல் நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும். இந்த இடைக்காலத் தடையை நீக்குவது தொடர்பில் மட்டுமல்லாமல், தொழிற்துறையை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்ல முறையான விதிமுறைகளை அரசாங்கம் அறிமுகப்படுத்த வேண்டியது மற்றைய முக்கிய பிரச்சினையாகும். இலங்கை மற்றும் உலகெங்கிலும் உள்ள வாகன உற்பத்தியாளர்களுக்கும், இடையிலான பாலமாக செயல்படுவதன் மூலம் போக்குவரத்து துறையில்  CMTA  குறிப்பிடத்தக்க பங்கு வகிக்கிறது. 2019 ஆம் ஆண்டில்,  CMTA  இலங்கைக்கான எதிர்கால நகர்கை திட்டமொன்றை விபரிக்கும் கொள்கை பரிந்துரைகள் அடங்கிய ஆவணமொன்றை உருவாக்கத் தொடங்கியது. இந்த முன்மொழிவை உருவாக்க  CMTA சர்வதேச பிரயோக ஆராய்ச்சி நிறுவனங்கள் மற்றும் சர்வதேச பங்காளிகளுடன் இணைந்து செயல்படுகிறது. இது நிறைவடைந்ததும் சம்மேளனம் இதனை அரசாங்கத்திடம் முன்வைக்கும்,” என்றார்.

CMTA உலகளாவிய வாகன வர்த்தகநாமங்களினது உரிமத்தைக் கொண்ட அனைவரையும் உள்ளடக்கியது. இவை கார்கள், வணிக நோக்கிலான வாகனங்கள், 2 சக்கர வாகனங்கள் மற்றும் 3 சக்கர வாகனங்கள், அத்துடன் டயர்கள் மற்றும் உராய்வு நீக்கி எண்ணை  ஆகியவற்றை இறக்குமதி செய்வதுடன், நேரடி மற்றும் மறைமுகமாக 20,000 இற்கும் மேற்பட்டோருக்கு வேலைவாய்ப்பை வழங்குவதுடன், நாடு முழுவதும் உட்கட்டமைப்பில் கணிசமான முதலீடுகளை மேற்கொண்டுள்ளன.  அனைத்து வாகன இறக்குமதியையும் முழுமையாக இடை நிறுத்தியமை முழுத் தொழிலுக்கும் பெரும் சிரமத்தை ஏற்படுத்தியுள்ளது என்று சம்மேளனம் மீண்டும் வலியுறுத்துகிறது. இறக்குமதியை மீண்டும் தொடங்கத் திட்டமிடும் ஒரு உறுதியான காலக்கெடுவை வழங்குமாறு அது அரசாங்கத்திடம் கோருகிறது, மேலும் அது எதிர்காலத்தில் தொடங்கப்படுவதற்கு  எதிர்பார்க்கப்படும் திகதி பல மாதங்கள் ஆகுமெனில், தொழில்துறைக்கு ஆதரவை வழங்குமாறு அரசாங்கத்திடம் கோருகிறது, இதனால் இறக்குமதியாளர்கள்  அதன் ஊழியர்கள் மற்றும் பொதுச் செலவுகளை தக்க வைத்துக் கொள்ள முடியும், ஏனெனில் விரைவில் கையிருப்பு தீர்ந்து விடுமென்பதுடன், வாகன விற்பனை மூலம் எவ்வித வாகன விற்பனை வருமானவும் இருக்காது. பரஸ்பர சாத்தியமான எதிர்கால வழியை உருவாக்க முயற்சிக்க சம்பந்தப்பட்ட அரசாங்க அதிகாரிகளுடன் ஆக்கபூர்வமான உரையாடலை நடத்த நாங்கள் மிகவும் விரும்புகிறோம்” என திரு. அமரசிங்க மேலும் குறிப்பிட்டார்.

CMTA நாட்டின் பொருளாதாரம் மற்றும் வெளிநாட்டு இருப்புக்களை எதிர்கொள்ளும் சவால்களைப் புரிந்து கொண்டுள்ள அதேவேளை, அதன் உறுப்பினர்கள் தங்கள் சுமையின் பங்கை ஏற்றுக் கொண்டு, இதுவரை சம்பளக் குறைப்பு மற்றும் / அல்லது ஆட்குறைப்புகளை குறைக்க தங்களால் முடிந்தவரை முயற்சி செய்கிறார்கள், உறுப்பு நிறுவனங்கள் மற்றும் அவற்றின் விநியோகஸ்தர்கள் திட்டமிட தெளிவான திசை எதுவும் இல்லாமையால், நீடிப்பதற்கு கடுமையான நடவடிக்கைகளை எடுப்பதைத் தவிர வேறு வழி எதுவும் இல்லை. மேலும், வாகன இறக்குமதிக்கான இடைக்காலத் தடை அமுல்படுத்தப்பட்ட உடனேயே, தொழில்துறையின் தொடர்ச்சியை உறுதி செய்வதற்கான திட்டங்களை உருவாக்கும் பொருட்டு இறக்குமதி கட்டுப்பாடுகள் எப்போது நீக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது என்பது குறித்து தெளிவான தகவல்களைக் கோரி அந்த அமைப்பு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு கடிதங்களை சமர்ப்பித்ததாக சம்மேளனம் தெரிவித்தது. துரதிர்ஷ்டவசமாக, இந்த கோரிக்கைகளுக்கு முறையான பதில் எதுவும் கிடைக்கவில்லை.

வாகன இறக்குமதியை ஒழுங்குபடுத்துவதற்கு அரசாங்கமும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று CMTA  உறுதியாக நம்புகிறது. மோட்டார் வாகனங்களின் இறக்குமதியின் தரம் மற்றும் அளவைக் கட்டுப்படுத்த வாகன இறக்குமதியாளர்களை ஆராய்ந்து பதிவுசெய்யும் திட்டத்தை அரசாங்கம் செயற்படுத்த வேண்டும் என்று அது அறிவுறுத்துகிறது. இது உலகெங்கிலும் உள்ள எல்லா நாடுகளிலும் பின்பற்றப்படும் ஒரு நடைமுறை என்பதுடன் நுகர்வோர் நம்பகமான கூட்டாண்மை நிறுவனத்திடமிருந்தே ஒரு வாகனத்தை வாங்குகிறார்கள், மாறாக நேர்மையற்ற இயக்குனர்களிடமிருந்து இல்லை என்ற உறுதிப்பாட்டை வழங்கும். இந்தச் சந்தர்ப்பத்தில், வாகன இறக்குமதியில் சுமார் 30% மட்டுமே தயாரிப்பாளரால் அங்கீகரிக்கப்பட்ட இறக்குமதியாளர்கள் மூலமாக இடம்பெறுகின்றது. இறக்குமதியாளர்களுக்கான விதிமுறைகளை அறிமுகப்படுத்துவதன் மூலம் இலங்கை நுகர்வோரைப் பாதுகாக்கும் அதேவேளை, ஒட்டோமொபைல் துறையின் தரத்தை மேம்படுத்துவதோடு, வெளிநாட்டு நாணய வெளிப்பாய்ச்சலை அரசாங்கம் கணிசமாகக் குறைக்க முடியும் என்று CMTA நம்புகிறது.

இலங்கை Ceylon Motor Traders Association (CMTA), 100 ஆண்டுகளுக்கு முன் ஸ்தாபிக்கப்பட்டதுடன், இலங்கை வர்த்தக சம்மேளனத்தின் ஒன்றிணைக்கப்பட்ட துணை அமைப்பாக 1919 ஆம் ஆண்டு முதல் திகழ்கின்றது. தமது தயாரிப்பாளரால் அங்கீகாரமளிக்கப்பட்ட இறக்குமதியாளரின் ஊடாக இலங்கையில் பிரதிநிதித்துவப்படுத்தப்படும் அனைத்து சர்வதேச வர்த்தக நாமங்களுடனும் நேரடித் தொடர்பைக் கொண்ட ஒரேயொரு சம்மேளம் இதுவாகும்.  இப் பிராந்தியத்தில் மிக சிரேஷ்ட வாகன வர்த்தக சங்கம் இதுவாகும். CMTA உறுப்பினர்கள் கூட்டாக ஆயிரக்கணக்கான இலங்கையர்களை பணிக்கு அமர்த்தியுள்ளனர், அதே நேரத்தில் பொறியியல் மற்றும் முகாமைத்துவத்தில் சர்வதேச ரீதியாக கடைபிடிக்கப்படும் சிறந்த நடைமுறைகளை நாட்டிற்கு கொண்டு வருகிறார்கள். மேலும், நன்கு பயிற்றப்பட்ட மற்றும் வெளிநாடுகளில் வேலை செய்யக்கூடிய ஒரு தொழிற்படையை உருவாக்குகின்றது. CMTA உறுப்பினர்கள் அனைவரும் தாங்கள் பிரதிநிதித்துவப்படுத்தும் தயாரிப்பாளரால் தணிக்கை செய்யப்படுகிறார்கள். மேலும் அவர்கள் இறக்குமதி செய்யும் வாகனங்கள் தயாரிப்பாளர்களிடமிருந்து முழு உத்தரவாதத்துடன் நேரடியாக தருவிக்கப்படுவதுடன், இதனால் இலங்கை பொதுமக்கள் தங்கள் வாகனங்களின் தரம் மற்றும் இறக்குமதியாளரின் நம்பகத்தன்மை குறித்து உறுதி செய்யப்படுகிறார்கள்.

Share

You may also like...