கார்கில்ஸ் வங்கி Intellect உடனான மூலோபாயப் பங்காண்மையை மேலும் விரிவுபடுத்துகிறது
அடுத்த தலைமுறை வங்கியியல் சேவைகளுக்கு வலுவூட்டுவதற்காக Composable eMACH.ai பிரதான வங்கியியல் கட்டமைப்பிற்கு மேம்படுத்தப்பட்டுள்ளது

விரிவுபடுத்தப்பட்டுள்ள இந்த பங்காண்மை, பிரதான வங்கியியல், கடன் வழங்கல், வணிக நிதி மற்றும் திறைசேரி ஆகிய துறைகளை உள்ளடக்கியதுடன், கார்கில்ஸ் வங்கியின் நீண்டகால வளர்ச்சி இலக்குகளுக்கு ஆதரவளிக்கும் ஒருங்கிணைந்த, எதிர்காலத்திற்குத் தயாரான வங்கியியல் தளத்தையும் உருவாக்குகிறது.
AI-ஐ மையமாகக் கொண்ட, நிறுவனத் தரத்திலான நிதித் தொழில்நுட்பத்தில் உலகளாவிய முன்னணி நிறுவனமான Intellect Design Arena Ltd., இலங்கையின் உரிமம் பெற்ற வர்த்தக வங்கியான கார்கில்ஸ் வங்கி, தனது டிஜிட்டல் வங்கியியல் ஆற்றல்களை விரிவுபடுத்துவதற்கும், Intellect உடனான தனது நீண்டகால தொழில்நுட்பக் பங்காண்மையை மேலும் வலுப்படுத்துவதற்கும், Composable eMACH.ai Core Banking அமைப்பைத் தெரிவு செய்துள்ளதாக அறிவித்துள்ளது.
விரிவுபடுத்தப்பட்டுள்ள இந்த பங்காண்மை, கார்கில்ஸ் வங்கியின் டிஜிட்டல் மாற்றத்தின் அடுத்த கட்டத்தைக் குறிப்பதுடன், cloud-ready வங்கியியல் கட்டமைப்பின் மூலம் தனது தொழில்நுட்பக் கட்டமைப்பை நவீனமயமாக்க வங்கிக்கு வழிவகுக்கும். பிரதான வங்கியியல், கடன் வழங்கல், வணிக நிதி மற்றும் திறைசேரி ஆகிய துறைகளை உள்ளடக்கிய இத்திட்டம், அதிக சுறுசுறுப்பு, செயல்பாட்டு நெகிழ்வுத்தன்மை மற்றும் நீண்டகால வணிக வளர்ச்சிக்கு ஆதரவளிக்கும் ஒருங்கிணைந்த தொழில்நுட்பத் தளத்தை உருவாக்குகிறது. இந்நவீனமயமாக்கல் திட்டம், வாடிக்கையாளர் இணைத்துக் கொள்ளல், வைப்புகள், செலுத்துகைகள், கடன் தோற்றுவித்தல், கடன் முகாமைத்துவம், வரம்புகள் மற்றும் பிணைய முகாமைத்துவம், வணிக நிதி மற்றும் திறைசேரி ஆகிய முக்கியமான வங்கியியல் ஆற்றல்களை நிலைமாற்றச் செய்வதுடன், விரைவான தயாரிப்பு புதுமைகளுக்கும் சீரான வாடிக்கையாளர் அனுபவங்களுக்கும் வழிவகுக்கும்.
பல ஆண்டுகளாகக் கட்டியெழுப்பப்பட்ட நம்பிக்கையின் அடிப்படையில் அமைந்த இந்த விரிவுபடுத்தப்பட்ட பங்காண்மை, தனது வணிகம் மற்றும் வாடிக்கையாளர்களின் தேவைகளுக்கேற்ப உருவெடுக்கக்கூடிய ஒரு நவீன வங்கியியல் தளத்தில் முதலீடு செய்வதற்கான கார்கில்ஸ் வங்கியின் தொடர்ச்சியான அர்ப்பணிப்பை வெளிப்படுத்துகிறது. Intellect நிறுவனத்தின் Design Thinking தத்துவம் மற்றும் வங்கியியல் மாற்றத்திற்கான First Principles அணுகுமுறையின் வழிகாட்டுதலுடன், அடுத்த தசாப்தத்தில் வங்கியின் வளர்ச்சி, கண்டுபிடிப்பு நிகழ்ச்சி நிரல் மற்றும் மாறிவரும் வாடிக்கையாளர் எதிர்பார்ப்புகளுக்கு ஆதரவளிக்கும் நெகிழ்வான, விரிவாக்கக்கூடிய மற்றும் எதிர்காலத்திற்குத் தயாரான தொழில்நுட்பத் தளத்தை உருவாக்குவதில் இப்பங்காண்மை கவனம் செலுத்துகிறது. தொடர்ச்சியான தொழில்நுட்ப மேம்பாடுகள் மற்றும் மென்பொருள் புதுப்பிப்புகள் மூலம் இத்தளம் மேலும் விரிவடையும் என்பதுடன், மாறிவரும் சந்தைக் கோரிக்கைகள் மற்றும் வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்புகளுக்கு ஏற்றவாறு கார்கில்ஸ் வங்கி செயல்படுவதையும் இது உறுதி செய்யும்.
விரிவாக்கப்பட்ட ஈடுபாட்டின் அங்கமாக, கார்கில்ஸ் வங்கி பின்வருவனவற்றை நிறுவும்:
- Composable eMACH.ai Core Banking கட்டமைப்பின் மூலம் தனது வங்கியியல் தொழில்நுட்பத்தை நவீனமயமாக்கல்.
- பிரதான வங்கியியல், கடன் வழங்கல், திறைசேரி மற்றும் வணிக நிதி ஆகிய துறைகளை உள்ளடக்கிய ஒருங்கிணைந்த தளத்தை நிறுவுதல்.
- நவீன, composable மற்றும் cloud-ready கட்டமைப்பின் மூலம் தனது டிஜிட்டல் கட்டமைப்பை வலுப்படுத்துதல்.
- கண்டுபிடிப்புகளை விரைவுபடுத்துதல், வாடிக்கையாளர் அனுபவங்களை மேம்படுத்துதல் மற்றும் நீண்டகால வணிக வளர்ச்சிக்கு ஆதரவளித்தல்.
- அடுத்த தசாப்தத்தில் வங்கியின் மூலோபாய வளர்ச்சிக்கு ஏற்ப மேம்படக்கூடிய, எதிர்காலத்திற்குத் தயாரான வங்கியியல் தளத்தைக் கட்டியெழுப்புதல்
கார்கில்ஸ் வங்கியின் பிரதம தகவல் அதிகாரி இந்திக பெர்னான்டோ கருத்துத் தெரிவிக்கையில், “கார்கில்ஸ் வங்கியில், வாடிக்கையாளர் அனுபவத்தை மேம்படுத்துவதுடன், எமது நீண்டகால வளர்ச்சி இலக்குகளுக்கு ஆதரவளிக்கும் அதிநவீன தொழில்நுட்பங்களில் தொடர்ச்சியாக முதலீடு செய்வதில் நாங்கள் உறுதியுடன் ஈடுபட்டுளோம். புதுமை முயற்சிகள் மற்றும் பரஸ்பர நம்பிக்கையை மையமாகக் கொண்ட பகிரப்பட்ட தொலைநோக்குப் பார்வையுடன், Intellect நிறுவனத்துடனான எங்களது உறவு பல வருடங்களாகப் படிப்படியாக வளர்ந்து வந்துள்ளது. இப்பங்காண்மையை மேலும் விரிவுபடுத்துவதன் மூலம், எதிர்வரும் ஆண்டுகளில் எமது வாடிக்கையாளர்களுக்கு மிக எளிமையான, புத்திசாலித்தனமான மற்றும் மேலும் தனிப்பயனாக்கப்பட்ட வங்கியியல் அனுபவங்களை வழங்குவதற்கு வழிவகுக்கும் ஒருங்கிணைந்த, எதிர்காலத்திற்குத் தயாரான வங்கியியல் தளம் ஒன்றை நாம் கட்டியெழுப்புகிறோம்.” என்றார்.
Intellect Design Arena இன் இந்தியா மற்றும் தெற்காசிய பிரதம நிறைவேற்று அதிகாரி ரமணன் எஸ்வி கருத்துத் தெரிவிக்கையில், “உயர்தர வாடிக்கையாளர் அனுபவங்களை வழங்குவதுடன், நிலையான வளர்ச்சிக்கு ஆதரவளிக்கக்கூடிய நவீன மற்றும் நெகிழ்வான தொழில்நுட்பத் தளங்களில் வங்கிகள் முதலீடு செய்வதன் மூலம், இலங்கையின் வங்கியியல் துறை, ஒரு புதிய மாற்றக் கட்டத்திற்குள் நுழைந்து வருகிறது. இந்த விரிவுபடுத்தப்பட்ட கூட்டாண்மையினூடாக கார்கில்ஸ் வங்கியுடனான எமது நீண்டகால உறவை மேலும் ஆழப்படுத்துவதில் நாங்கள் பெருமிதமடைகிறோம். பிரதான வங்கியியல், கடன் வழங்கல், திறைசேரி மற்றும் வணிக நிதி ஆகிய துறைகளின் ஊடாக எங்களது Composable eMACH.ai கட்டமைப்பை ஒருங்கிணைப்பதன் மூலம், சிறந்த செயல்பாட்டுத் திறனையும் தொடர்ச்சியான புதுமைகளையும் ஒருங்கே கொண்ட ஒருங்கிணைந்த, எதிர்காலத்திற்குத் தயாரான தளத்தில் வங்கி இயங்குவதற்கு நாங்கள் வழியமைக்கிறோம். அடுத்த தசாப்தத்தில் கார்கில்ஸ் வங்கி, அதன் வாடிக்கையாளர்கள் மற்றும் வளர்ந்து வரும் நிதியியல் சூழல் அமைப்பிற்கு சேவை செய்யக்கூடிய ஒரு வலுவான வங்கியியல் அடித்தளத்தை கட்டியெழுப்புவதற்கான எமது பகிரப்பட்ட அர்ப்பணிப்பை மேலும் உறுதிப்படுத்துவதாக இந்நவீனமயமாக்கல் அமைந்துள்ளது.” என்றார்.
###

Recent Comments