சந்தையில் முன்னிலை வகிப்பதற்கான ஒரு மூலோபாயப் பாதையை வகுத்துள்ள Hayleys Agriculture Holdings
கடந்த ஐந்து தசாப்தங்களாக, Hayleys Agriculture Holdings லிமிடெட் நிறுவனம், ஒரு விவசாய இரசாயன உற்பத்தியாளர் எனும் நிலையிலிருந்து (agrochemical manufacturer) இலங்கையின் மிகவும் பன்முகப்படுத்தப்பட்ட மற்றும் ஒருங்கிணைந்த விவசாய நிறுவனங்களில் ஒன்றாக உருவெடுத்துள்ளது. இன்று, அதன் வணிகத் துறைகளானது மதிப்பு கூட்டப்பட்ட உணவு ஏற்றுமதி, தேங்காய் சார்ந்த தயாரிப்புகள், F1 ஹைப்ரிட் மலர் விதைகள், இழைய வளர்ப்பு தாவரங்கள், விவசாய உள்ளீடுகள் (agri-inputs) மற்றும் விவசாய தொழில்நுட்பங்கள் என பரந்து விரிவடைந்துள்ளது. அதன் சமீபத்திய பெருநிறுவன பிரச்சாரமான ‘Where Value Blossoms’ (மதிப்புகள் மலரும் இடம்) என்பது இந்த பரிணாம வளர்ச்சியைப் பிரதிபலிப்பதுடன், Hayleys Agriculture நிறுவனம் எதைக் குறிக்கிறது என்பதை வரையறுக்கும் ஒரு மூலோபாய வர்த்தகநாமக் கட்டமைப்பாகவும் செயற்படுகிறது. அதாவது ஒட்டுமொத்த விவசாய சூழல் கட்டமைப்பிலும் மதிப்பு உருவாக்கம், புத்தாக்கம், நிலைபேறான தன்மை, அனைவரையும் உள்ளீர்த்தல், நீண்டகால கூட்டாண்மை ஆகியவற்றை இது குறிக்கிறது. இந்த புதிய வர்த்தகநாம வெளிப்படுத்தலானது நிறுவனத்தின் பெருநிறுவன அடையாளத்தை வலுப்படுத்துவதுடன், இலங்கையிலிருந்து உலகிற்கு நிலைபேறான, மதிப்பு கூட்டப்பட்ட விவசாயத்தின் எதிர்காலத்தை வடிவமைக்கும் ஒரு நோக்கத்தால் இயக்கப்படுகின்ற நிறுவனமாக அங்கீகரிக்கப்படுவதற்கான அதன் இலட்சியத்தையும் மேலும் பலப்படுத்துகிறது.
உலகளாவிய சந்தைகளுக்காக கட்டமைக்கப்பட்ட வணிக துறைகள்
இந்த பிரச்சாரமானது, சந்தையில் முன்னிலை வகிக்கும் பல்வேறு வணிகங்களின் ஆதரவுடன் முன்னெடுக்கப்படுகிறது. ‘HJS Condiments’ நிறுவனம் இலங்கையின் மிகப் பாரிய பதப்படுத்தப்பட்ட பழங்கள் மற்றும் காய்கறிகளை ஏற்றுமதி செய்யும் நிறுவனமாகத் திகழ்வதுடன், இத்துறையில் நாட்டின் ஒட்டுமொத்த ஏற்றுமதியில் சுமார் 60% பங்கைக் கொண்டுள்ளது. ‘CocoLife by Hayleys’ நிறுவனம் சர்வதேச சந்தைகளுக்கு பிரீமியம் தரத்திலான தேங்காய் சார்ந்த தயாரிப்புகளை வழங்குகிறது. அதே நேரத்தில், 1980 இல் Hayleys Agriculture நிறுவனத்தினால் நிறுவப்பட்ட ஒரு கூட்டு முயற்சியான ‘Quality Seed Co.’ நிறுவனம், F1 ஹைப்ரிட் மலர் விதைகளை ஏற்றுமதி செய்யும் நாட்டின் ஒரேயொரு நிறுவனமாக இன்றும் விளங்கி வருகிறது. ‘Hayleys Agro Biotech’ நிறுவனமும் இழைய வளர்ப்பு தாவரங்களை ஏற்றுமதி செய்யும் நாட்டின் முன்னணி நிறுவனமாக தன்னை நிலைநிறுத்தியுள்ளது. தமக்கு முழுமையாகச் சொந்தமான துணை நிறுவனமான ‘Haychem Bangladesh’ நிறுவனம் மூலம் தனது தடத்தை இலங்கைக்கு அப்பால் வெற்றிகரமாக விரிவுபடுத்தி, உலகளாவிய இலட்சியங்களைக் கொண்ட ஒரு விவசாய நிறுவனமாக தனது நிலையை Hayleys Agriculture நிறுவனம் வலுப்படுத்தியுள்ளது.
போட்டித்தன்மை வாய்ந்த நன்மையாக விளங்கும் புத்தாக்கம்
புத்தாக்கமானது நீண்ட காலமாக நிறுவனத்தின் வளர்ச்சிக்கான உத்தியின் மையமாகவும், அதன் பெருநிறுவன வர்த்தகநாம அடையாளத்தின் முக்கிய தூணாகவும் இருந்து வருகிறது. இது இலங்கை விவசாயத்தை நவீனமயமாக்குவதில் ஒரு முன்னோக்கு சிந்தனை கொண்ட பங்காளராக இந்நிறுவனத்தை நிலைநிறுத்துகிறது. 2004 ஆம் ஆண்டில், Hayleys Agriculture நிறுவனம் ‘Agrotech Harvester’ மூலம் இயந்திரமயமாக்கப்பட்ட அறுவடை தீர்வுகளை அறிமுகப்படுத்தியது. அதனைத் தொடர்ந்து 2010 இல் வளர்ந்து வரும் தொழிலாளர் பற்றாக்குறை சவால்களுக்குத் தீர்வு காணவும், விவசாய நவீனமயமாக்கலை மேம்படுத்தவும் ‘Kubota Harvester’ இயந்திரம் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்நிறுவனம் நுண்-நீர்ப்பாசனம் (micro-irrigation) மற்றும் தன்னியக்க சுழலும் கட்டமைப்புகளின் (pivot systems) பயன்பாட்டை ஊக்குவித்து, விவசாயிகள் நீரைப் பயன்படுத்துவதை மேம்படுத்தவும் விளைச்சலை அதிகரிக்கவும் உதவியுள்ளது. மிக அண்மையில், நிறுவனத்தின் ‘OMNIX’ டிஜிட்டல் தளத்தின் அறிமுகமானது விவசாயிகளின் கொள்வனவு, பயிர்ச்செய்கைத் திட்டமிடல், தடம் கண்டறியும் திறன் (traceability), விநியோகச் சங்கிலி ஒருங்கிணைப்பு ஆகியவற்றை மேம்படுத்தியுள்ளது. செயற்கை நுண்ணறிவு (AI) மூலம் இயக்கப்படும் தன்னியக்கமாக்கல், துல்லியமான விவசாயம் மற்றும் டிஜிட்டல் விவசாயம் ஆகியவற்றில்
மேற்கொள்ளப்படும் நிறுவனத்தின் முதலீடுகள், நீண்டகால உற்பத்தித் திறன், செயற்பாட்டு விசேடத்துவம் மற்றும் எதிர்காலத்திற்கு ஏற்ற விவசாயத்திற்கான அதன் அர்ப்பணிப்பை மேலும் வலுப்படுத்துகின்றன. அத்துடன், FSSC, BRCGS, HACCP, SMETA SEDEX, USDA Organic உள்ளிட்ட சர்வதேச ரீதியில் அங்கீகரிக்கப்பட்ட தரச்சான்றிதழ்களால் இந்நிறுவனத்தின் செயற்பாடுகள் ஆதரிக்கப்படுகின்றன.
நிறுவனத்தின் மையமாக திகழும் நிலைபேறான தன்மை
Hayleys Agriculture நிறுவனத்தின் வணிக உத்தியில் நிலைபேறான தன்மை என்பது ஒரு அடிப்படை அங்கமாக உள்ளதுடன், அதன் பெருநிறுவன நற்பெயரை வளர்ப்பதில் முக்கிய காரணியாக அது விளங்கி வருகிறது. தற்போது, நிறுவனத்தின் ஒட்டுமொத்த நீர்த் தேவையில் 27% ஆனது, மழைநீர் சேகரிப்பு மற்றும் மீள்சுழற்சி செய்யப்பட்ட நீர் கட்டமைப்புத் தொகுதிகள் உள்ளிட்ட நிலைபேறான வழிகள் மூலமாகவே பெறப்படுகிறது. ‘Quality Seed Co.’ நிறுவனம் இலங்கையின் மிகப்பெரிய மழைநீர் சேகரிப்பு வசதியை செயற்படுத்துகிறது. இது 7.6 மில்லியன் லீற்றர் சேமிப்புத் திறனைக் கொண்டுள்ளதுடன், அதன் வருடாந்த நீர்த் தேவையில் 35% வரை பூர்த்தி செய்யக்கூடியது. நீராவி அடிப்படையிலான தாவர வளர்ப்பு ஊடகங்களின் கிருமி நீக்கம், புதுப்பிக்கத்தக்க மின்சக்தி பயன்பாடு, கழிவுநீர் மீள்சுழற்சி, ஒருங்கிணைந்த பூச்சிச் கட்டுப்பாடு, காலநிலைக்கு உகந்த ஸ்மார்ட்டான விவசாயம் மற்றும் நுண் நீர்ப்பாசன தொழில்நுட்பங்கள் உள்ளிட்ட பல்வேறு சூழல் பொறுப்புணர்வுமிக்க நடைமுறைகளை நிறுவனம் செயற்படுத்தி வருகின்றது.
பகிரப்பட்ட மதிப்பை ஏற்படுத்துதல்
வெறுமனே வணிக வெற்றிகளுக்கு அப்பால், Hayleys Agriculture நிறுவனத்தின் வளர்ச்சி மாதிரியானது, அனைவரையும் உள்ளீர்த்த பொருளாதார பங்கேற்பிற்கு முக்கியத்துவம் அளிக்கிறது. ‘Quality Seed Co.’ மற்றும் ‘Hayleys Agro Biotech’ ஆகிய நிறுவனங்களின் பணியாளர்களில் 80% இற்கும் அதிகமானோர் பெண்கள் ஆவர். அதே நேரத்தில் இந்நிறுவனத்தின் ஒப்பந்த வெளிச் சார்ந்த விவசாய வலையமைப்பானது (outgrower network) சுமார் 30% பெண் விவசாயிகளைக் கொண்டுள்ளது.
12,500 இற்கும் மேற்பட்ட விவசாயிகளைக் கொண்ட வெளிச்சார்ந்த ஒப்பந்த விவசாய வலையமைப்பானது, உற்பத்தி விநியோகச் சங்கிலியின் மீள்திறனை மேலும் வலுப்படுத்துவதுடன், கிராமிய சமூகங்களில் நிலைபேறான வாழ்வாதார வாய்ப்புகளையும் உருவாக்குகிறது. நிறுவனத்தின் வளர்ச்சியானது மனிதர்களை வலுவூட்டுதல், சமூகங்களை மேம்படுத்துதல் மற்றும் இலங்கை விவசாயத்தின் எதிர்காலத்திற்கு ஆதரவளித்தல் ஆகியவற்றுடன் பிணைக்கப்பட்டுள்ளது என்பதை, மனிதர்களை மையமாகக் கொண்ட இந்த அணுகுமுறை நிரூபிக்கிறது.
Hayleys Agriculture நிறுவனத்தின் புதிய ‘Where Value Blossoms’ பிரச்சாரமானது, உள்நாட்டு திறன்களை எவ்வாறு உலகத்தரம் வாய்ந்த, மதிப்புக் கூட்டப்பட்ட விவசாய தயாரிப்புகள், சேவைகள், தொழில்நுட்பங்கள் மற்றும் வெற்றிகரமான வெளிநாட்டு முதலீடுகளாக மாற்ற முடியும் என்பதை காண்பிப்பதன் மூலம், உலக அரங்கில் இலங்கையின் விவசாய வர்த்தகநாமத்தை மேலும் வலுப்படுத்துகிறது.

Recent Comments