ஸ்மார்ட்போன்களை வெல்லும் கண்கவர் வடிவமைப்பு, குவாட் கெமரா கொண்ட Huawei Nova 7i

உலகளாவிய ஸ்மார்ட்போன் தரக்குறியீடான Huawei, 2020 ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்திய மிகவும் பிரபலமான மற்றும் சிறந்த விற்பனைக்குள்ளான ஸ்மார்ட்போன்களில் Huawei Nova 7i உம் ஒன்றாகும். Nova 7i இலங்கையர்களால் அதிகம் ஏற்றுக்கொள்ளப்பட்ட பல அம்சம் நிறைந்த நடுத்தர வகை ஸ்மார்ட்போனாக விளங்குகிறது. இது கடந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டாலும், அதன் பிரிவில் உள்ள ஸ்மார்ட்போன்களில் வெல்ல முடியாத அம்சங்களை கொண்டதாக காணப்படுகின்றது. Nova 7i பலரின் இதயங்களை ஈர்த்துள்ளதுடன் அதன் தொடர்ச்சியான கேள்வியானது, ஸ்மார்ட்போன் ஆர்வலர்களை அதன் முக்கிய அம்சங்களை ஆராய ஊக்குவித்துள்ளது.

நம்பமுடியாத விலையில் அறிமுகப்படுத்தப்பட்ட Nova 7i இனது முதல் ஈர்ப்பு, Nova குடும்பத்தில் அதற்கு முந்தைய ஸ்மார்ட்போன்களைப் போலவே மேட் பூச்சுடன் கூடிய ஆச்சரியமிக்க வடிவமைப்பாகும். அதன் வளைந்த அலுமினிய சட்டகம், கையில் பிடிப்பதற்கு மிகவும் வசதியாக அமைக்கப்பட்டுள்ளது. இதன் 6.4 அங்குல dew drop திரையானது, அதன் ஒட்டுமொத்த அழகுக்கு மேலும் மெரூகூட்டுகிறது. அத்துடன் பெரிய திரையானது, மொபைல் கேம்களை தடையின்றி விளையாடுவதற்கும் திரைப்படங்களைப் பார்ப்பதற்கும், பயனர்களுக்கு ஒரு பரந்துபட்ட பார்வையிடும் அனுபவத்தை வழங்குகிறது.

இலகுவகை சிறப்பம்சங்களைக் கொண்ட Huawei Nova 7i ஆனது, குவாட் கெமராவை கொண்டு அமைந்துள்ளது. இதன் 48MP பிரதான கெமரா, 8MP அல்ட்ரா வைட் ஆங்கிள் கெமரா, 2MP மெக்ரோ கெமரா மற்றும் 2MP ஆழத்திற்கான கெமரா கலவையானது பயனரை ஆக்கப்பூர்வமான, தெளிவான, மனதுக்கு நிறைவைத் தரும் புகைப்படங்களை எடுக்க உதவுகிறது. அதன் AI மூலமான சுப்பர் நைட் பயன்முறை அம்சமானது, மங்கலான அல்லது குறைந்த ஒளி சூழலில், கலக்கமற்ற புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களைப் எடுக்க உதவுகிறது. 2MP மெக்ரோ கெமரா ஆனது, பயனரை 4CM அளவான இடைவெளியிலான நெருக்கமாக படங்களை குவியப்படுத்த அனுமதிக்கிறது. Nova 7i இன் 2MP ஆழத்திற்கான கெமரா ஆனது, பொக்கே விளைவுக்கு பங்களிப்பதுடன் அதன் AI portrait color அம்சமானது, புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களில் சினிமா விளைவை அதிகரிக்கிறது. இக்கெமரா அமைப்பின் மூலம், Portrait, Panaroma, HDR, Slow motion, Moving picture, Super Macro, Time lapse போன்ற பல பயன்முறைகளில் காட்சிகளை படம்பிடிக்க முடியும். அவை அதிக படைப்பாற்றலை கட்டவிழ்த்து விட உதவுகின்றன. அதன் 16MP செல்பி கெமராவானது, திரையின் இடதுபுறத்தில் சிறு துளை மூலம் இணைக்கப்பட்டுள்ளது.

Nova 7i ஆனது, 1080×2310 தெளிவுத்திறன் மற்றும் 83.5% எனும் திரைக்கு : உடல் விகிதத்துடன் (screen-to-body ratio), குறைவான சட்டக இடைவெளியுடன் (bezels) வருகிறது. மொபைல் கேமிங்கிற்கு ஏற்ற பெரிய திரையை மாத்திரமன்றி, அதன் மேம்படுத்தப்பட்ட GPU Turbo தொழில்நுட்பம் அதிக வினைத்திறன் தேவை கொண்ட கேம்களை விளையாடும்போது கூட பின்னடைவு இல்லாத செயற்றிறனை வழங்குகிறது.

Nova 7i ஆனது 8GB RAM + 128GB நினைவகம் போன்ற மிகவும் தரமான அம்சங்களால் நிரம்பியுள்ளது. இது Kirin 810 chipset மூலம் இயக்கப்படுவதோடு, சக்தி வாய்ந்த Chip மற்றும் 8GB RAM ஆகியவற்றின் கலவையானது, வேகமான மற்றும் மிருதுவான செயல்திறனை உறுதி செய்கிறது.

அதன் 4200mAh பெரிய மின்கலம், பயனர்கள் தமது ஸ்மார்ட்போன் பணிகளை, அடிக்கடி மின் இழப்பு ஏற்படும் இடையூறுகள் இல்லாமல் தொடர அனுமதிக்கிறது. அது தவிர, அதன் 40W Huawei super charge தொழில்நுட்பம் மூலம் 30 நிமிடங்களில் சாதனத்தை 70% வரை சார்ஜ் செய்யும் திறனை வழங்குகின்றது. இவ்வசதியானது, இந்த ஸ்மார்ட்போனின் பிரபலத்திற்று மற்றொரு காரணமாக அமைகின்றது.

Sakura Green, Midnight Black, Crush Green (சகுரா பச்சை, கறுப்பு, க்ரஷ் பச்சை ) வண்ணங்களில் அறிமுகப்படுத்தப்பட்ட Huawei Nova 7i ஆனது, ரூ. 47,999 எனும் விலையில், அனைத்து Huawei அனுபவ மையங்களிலிருந்தும், நாடு முழுவதும் உள்ள சிங்கர் காட்சியறைகளிலிருந்தும் ஒன்லைனில் Daraz.lk மற்றும் Singer.lk வழியாக கொள்வனவு செய்யலாம்.

தகவல் மற்றும் தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பத்தின் (ICT) உட்கட்டமைப்பு மற்றும் ஸ்மார்ட் சாதனங்களின் முன்னணி உலகளாவிய வழங்குநரான Huawei நிறுவனம், முழுமையாக இணைக்கப்பட்ட, புத்திசாலித்தனமான உலகிற்காக, ஒவ்வொரு நபருக்கும், வீட்டுக்கும், நிறுவனத்திற்கும் டிஜிற்றல் தொழில்நுட்பங்களை கொண்டு சேர்ப்பதில் உறுதியாக உள்ளது. உலகளாவிய மிகப்பெரும் தொழில்நுட்ப நிறுவனமான Huawei, புகழ்பெற்ற விருது விழாக்களில் முறையாக கௌரவிக்கப்பட்டு, உலகளாவிய தரக்குறியீடுகளின் தரவரிசையில் தொடர்ந்து இடம்பெற்றுள்ளது. மிகவும் மதிப்புமிக்க உலகளாவிய தரக்குறியீடுகள் தொடர்பான, BrandZ Top 100 பட்டியலில் Huawei 45ஆவது இடத்தையும், Forbes உலகின் மிக மதிப்புமிக்க தரக்குறியீடகள் பட்டியலில் 79ஆவது இடத்தையும் பிடித்துள்ளது. அத்துடன் சமீபத்திய Brand Finance Global 500 மிகவும் மதிப்புமிக்க தரக்குறியீடுகள் பட்டியலில் முதல் 10 மதிப்புமிக்க தரக்குறியீடுகளில் ஒன்றாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. Interbrand இனது, சிறந்த உலகளாவிய தரக்குறியீடுகள் பட்டியலில் Huawei 68ஆவது இடத்தைப் பெற்றுள்ளது. மேலும் Fortune உலகளாவிய 500 பட்டியலிலும் அது இடம்பிடித்துள்ளது.

Share

You may also like...