இலங்கைஇரத்தினக்கல்மற்றும்ஆபரணசங்கம்ஜனாதிபதிஅநுரகுமாரதிஸாநாயக்கவிற்குவாழ்த்து

எதிர்கால சந்ததியினருக்கான செழுமையான பாரம்பரியத்தை பேணியவாறு, உலகளாவிய அங்கீகாரத்தை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்ட புத்தாக்கம் மற்றும் நிலைபேறான தன்மை ஆகியவற்றின் ஊடாக இலங்கையின் இரத்தினக்கல் மற்றும் ஆபரணத் தொழிற்துறையை வலுவூட்டுவதை SLGJA நோக்காகக் கொண்டுள்ளது. இலங்கையின் இரத்தினக்கல் மற்றும் ஆபரணத் தொழில்துறையை, நெறிமுறை நடைமுறைகள் மூலம் வழிநடாத்தி, சந்தைக்கான அணுகலை எளிதாக்கி, நிலைபேறான ஆதாரங்களை வழங்கும் இச்சங்கம், இத்தொழில்துறையின் தொடர்ச்சியான வளர்ச்சி, உலகளாவிய போட்டித்திறன் மற்றும் சமூகப் பொருளாதாரப் பங்களிப்பிற்கான திறன்களை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இலங்கையின் இரத்தினக்கல் மற்றும் ஆபரணத் துறையை வழிநடாத்திச் செயற்படும் SLGJA சங்கமானது, தொழில்துறை தொடர்பான பிரச்சினைகளை அரசாங்கம் மற்றும் தொடர்பான ஏனைய உரிய நிறுவனங்களிடம் கொண்டு செல்கிறது. SLGJA ஆனது, FACETS Sri Lanka சர்வதேச இரத்தினக்கல் மற்றும் ஆபரண கண்காட்சியின் ஏற்பாட்டாளராக 31 ஆண்டுகளுக்கும் மேலாக விளங்கி வருகின்றது. இச்சங்கமானது, ஒத்துழைப்பு, புத்தாக்கம், சர்வதேச கூட்டாண்மைகளை ஏற்படுத்துவதன் மூலம் தற்போது தொழில்துறையில் செயற்பட்டு வருவோருக்கு ஒரு அடித்தளமாக இருந்து வருகின்றது.

இலங்கையின் செழுமையான கலாசார பாரம்பரியம் மற்றும் பொருளாதார பலத்தின் ஒரு அங்கமாக மிக நீண்ட காலமாக இருந்துவரும் ஒரு தொழில்துறை எனும் வகையில், ஜனாதிபதியின் தொலைநோக்கு ரீதியான தலைமைத்துவத்தின் கீழ், எமது நாடு தொடர்ச்சியாக செழித்து, பரந்துபட்ட புதிய உச்சங்களை எட்டும் என்பதில் நாம் நம்பிக்கை கொண்டுள்ளோம். முன்னேற்றம், தேசிய ஒற்றுமை, அனைத்து இலங்கையர்களின் நல்வாழ்வு தொடர்பில் ஜனாதிபதி கொண்டுள்ள அர்ப்பணிப்பானது, நாட்டின் அடையாளம் மற்றும் பொருளாதாரம் ஆகிய இரண்டின் அடித்தளமாக விளங்கும் இரத்தினக்கல் மற்றும் ஆபரணத் துறையின் மதிப்புகள் மற்றும் அபிலாஷைகளுடன் இணைந்து செல்கின்றது.

ஜனாதிபதி மற்றும் அவர் வகிக்கும் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்களுடன் தேர்தலுக்கு முன்னர் அறிவார்ந்த ரீதியிலான கலந்துரையாடல்கள் முன்னெடுக்கப்பட்டிருந்தது. இக்கலந்துரையாடல்கள் இரத்தினக்கல் மற்றும் ஆபரணத் துறை எதிர்கொள்ளும் மாறுபட்ட சவால்கள் மற்றும் வாய்ப்புகளைப் புரிந்துகொண்ட கட்சி எனும் வகையிலும், ஜனாதிபதியின் தலைமைத்துவத்தின் மீதும், இரத்தினக்கல் மற்றும் ஆபரணத் துறை ஒளிமயமான எதிர்காலம் குறித்தும் மிகுந்த நம்பிக்கையை அளித்துள்ளது.

இலங்கை கொண்டுள்ள உலகளாவிய நற்பெயரை மேம்படுத்துவதில் இரத்தினக்கல் மற்றும் ஆபரணத் தொழில்துறை முக்கிய பங்கு வகிக்கிறது. அந்த வகையில், SLGJA சங்கமானது இந்த முக்கிய தொழில்துறையை மேலும் மேம்படுத்துவதற்கும் ஊக்குவிப்பதற்கும் ஜனாதிபதியின் நிர்வாகத்துடன் இணைந்து நெருக்கமாக பணியாற்ற ஆர்வமாக உள்ளது. ஒன்றிணைந்து, நிலைபேறான வளர்ச்சிக்கான வாய்ப்புகளை உருவாக்கலாம் என்பதுடன், சர்வதேச போட்டித்தன்மையை அதிகரிக்கலாம், எதிர்கால சந்ததியினருக்கு இத்தொழில்துறையின் நீண்ட கால வெற்றியையும் உறுதி செய்யலாம்.

தேசிய பொருளாதாரத்திற்கு பாரிய பங்களிப்பை வழங்கும் தொழில்துறைகளை ஆதரிப்பதற்கும் வலுப்படுத்துவதற்குமான ஜனாதிபதியின் நிர்வாகம் தொடர்ச்சியான முன்னேற்றகரமான நடவடிக்கைகளை எடுக்குமென SLGJA நம்பிக்கை கொண்டுள்ளது. பொருளாதார அபிவிருத்தியை ஊக்குவிக்கின்ற, ஏற்றுமதியை ஊக்குவிக்கின்ற, இரத்தினக்கல் மற்றும் ஆபரண வர்த்தகத்தில் உலகளாவிய தலைவர் எனும் இலங்கையின் நிலைப்பாட்டை மேம்படுத்துகின்ற எந்தவொரு முயற்சிக்கும் SLGJA சங்கம் உதவத் தயாராக உள்ளது.

ஜனாதிபதி பெற்ற தகுதிமிக்க தேர்தல் வெற்றி தொடர்பில் அவருக்கு மீண்டுமொரு முறை வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்வதோடு, முதன் முறையாக ஏற்றுள்ள இந்த பதவிக்காலத்தில் அவர் வெற்றிபெற வாழ்த்துகிறோம். அவரது தலைமைத்துவம் அனைத்து இலங்கையர்களுக்கும் சமாதானத்தையும், செழிப்பையும், முன்னேற்றத்தையும் கொண்டு வர பிரார்த்திக்கிறோம்.

Share

You may also like...