இலங்கையில் ‘TASTE THE CURRENT பிரசாரத்தை ஆரம்பித்துள்ள STING®

புதிய Taste The Current பிரசாரம் மூலம் டிஜிட்டல் குறும்படத்தை அறிமுகப்படுத்துகிறது

PepsiCo நிறுவனத்தின் வர்த்தக நாமமான Sting®, அதன் சமீபத்திய பிரசாரமான ‘Taste The Current’ மூலம் இலங்கையில் உள்ள வாடிக்கையாளர்களை உற்சாகப்படுத்த தயாராகியுள்ளது. இந்த பிரசாரமானது, ஆக்கபூர்வமாகவும் விளையாட்டுத் தனமாகவும் இளைஞர்களை உற்சாகப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. வர்த்தகநாமத்தின் எண்ணக்கருவை உள்ளடக்கிய ஒரு உயிரோட்டமான புதிய வீடியோ பிரசாரமாக அது அமைகின்றது.

இந்த வீடியோவானது, STING® ஐப் பருகுவதன் மூலம் நுகர்வோர் தமது தருணங்களை சக்தியுடன் கூடிய மின்மயமாகுமாறு ஆக்கபூர்வமாக கூறுகிறது. பழுதடைந்த கார் ஒன்றில் நெடுஞ்சாலை ஒன்றில் சிக்கித் தவிக்கும் பெண் ஒருவரை காண்பிக்கும் காட்சியுடன் இதன் கதை ஆரம்பமாகிறது. அவ்வழியே வரும் ஒரு இளைஞன் குறித்த பெண்ணுக்கு உதவி செய்யும் நோக்கில், அவளிடம் காரை மீண்டுமொரு முறை ஸ்டார்ட் செய்யுமாறு கூறுகிறான். கார் ஸ்டார்ட் ஆக மறுக்கும் நிலையில், அவன் தனது வாகனத்தில் இருந்த Sting® போத்தல்கள் அடங்கிய குளிர்பானப் பெட்டியை எடுத்து அதிலிருந்து ஒரு போத்தலை எடுத்து அவளை ஆச்சரியப்படுத்துகிறான். STING® பானத்தின் ஒரு மிடரானது, கதாநாயகனை கலகலப்பான நடன அசைவுகளைச் செய்யத் தூண்டுவதன் மூலம், எவ்வாறான ஒரு அதிர்வை ஏற்படுத்துகிறது என்பதை ஆக்கபூர்வமாக இந்த வீடியோ விளக்குகிறது. புதிய ஆர்வத்தால் தூண்டப்பட்ட இளைஞன் அவனுக்குள் ஏற்படும் சக்தியை மின்சாரமாக காருக்கு கடத்துவதன் மூலம் காரை ஸ்டார்ட் செய்ய வைத்து, பெண்ணைக் ஆச்சரியப்படுத்துவதோடு, அவளுக்கு உதவியும் செய்கிறான். ‘Taste The Current’ எனும் கோஷத்துடன், வர்த்தகநாமத்தின் மின்மயமாக்கும் அடிப்படையை ஆக்கப்பூர்வமாக மீள வலியுறுத்துவதன் மூலம் இந்த விளம்பர வீடியோ நிறைவடைகிறது.

Sting பானத்தின் புதிய பிரசாரத்தின் வெளியீடு பற்றி கருத்துத் தெரிவித்த PepsiCo நிறுவனத்தின் இலங்கை பிராந்தியத்திற்கான இணைப் பணிப்பாளர் அனுஜ் கோயல், “எமது புதிய டிஜிட்டல் பிரசாரத்தை இலங்கையில் வெளியிடுவதில் நாம் மகிழ்ச்சியடைகிறோம். Sting நுகர்வோரை உற்சாகமாக உணர வைத்து, அதன் ஒப்பிட முடியாத சுவை மூலம் தன்னை தனித்துவமாக அடையாளப்படுத்துகிறது. இது உடலுக்கு புத்துணர்ச்சியை அளிப்பதோடு மட்டுமல்லாது, மனதுக்கு ஊக்கத்தையும் அளிக்கிறது. புதிய விளம்பர வீடியோவானது, Sting பானத்தின் உதவியுடன் ஒரு தருணத்தை மின்மயமாக்கும் ஒரு சுவாரசியமான மற்றும் வேடிக்கையான நிகழ்வை எடுத்துக் காட்டுகின்றது. அத்துடன், எப்போதும் பயணித்துக் கொண்டிருக்கும் எமது வாடிக்கையாளர்களின் மனதில் இந்த வீடியோ பதிந்திருக்கும் என நாம் நம்புகிறோம்.

புதிய STING® விளம்பர வீடியோவானது, டிஜிட்டல் திரைகள், சமூக ஊடகங்கள் என முழு அளவிலான 360 பாகை பிரசாரமாக முன்னெடுக்கப்படவுள்ளது. இந்த பிரசாரமானது வருடம் முழுவதும் நுகர்வோரை இணைக்கும் பல்வேறு வகைகளில் நாடு முழுவதும் விரிவுபடுத்தப்படவுள்ளது. STING® இலங்கையில் உள்ள அனைத்து நவீன மற்றும் பாரம்பரிய சில்லறை விற்பனை நிலையங்களிலும், முன்னணி இணைய வர்த்தகத் தளங்களிலும் ரூ. 120 எனும் விலையில் ஒரு முறை பருகும் 200 மில்லி லீற்றர் அளவிலான PET போத்தல்களாக கிடைக்கும்.  

இது தொடர்பான மேலதிக தகவலுக்கு, @stinglanka மற்றும் facebook.com/Stinglanka பக்கங்களை தொடருங்கள்…

Share

You may also like...