பொரளையில் அதிநவீன காட்சியறையை திறந்த Yamaha
இலங்கையில் Yamaha வாகனங்களின் உத்தியோகபூர்வ விநியோகஸ்தரான Associated Motorways (Private) Limited (AMW), கொழும்பின் பொரளையில் Yamaha நிறுவனத்தின் பிரம்மாண்டமான முதன்மை காட்சியறையைத் திறந்து வைத்துள்ளது. இது இலங்கையில் Yamaha வர்த்தகநாமத்தின் 45 வருட காலப் பூர்த்தியைக் குறிப்பதுடன், வர்த்தகநாமத்தின் மோட்டார் சைக்கிள்கள், ஸ்கூட்டர்கள், Outboard Motors (OBM), Water vehicles, அசல் உதிரிப்பாகங்கள், இணை பாகங்கள், உத்தியோகபூர்வ Yamaha வர்த்தகநாம பொருட்களை ஒரே கூரையின் கீழ் கொண்டு வந்துள்ள ஒரு மீளவடிமைக்கப்பட்ட வணிக தளமாக அமைந்துள்ளது.
Yamaha நிறுவனத்தின் நீண்டகால பாரம்பரியத்தைக் கொண்ட பொரளை கிளையானது, வர்த்தகநாமத்தின் உலகளாவிய அடையாளத்தைப் பிரதிபலிக்கும் வகையிலும், வாடிக்கையாளர்களைக் கவரும் வகையிலும் ஒரு நவீன காட்சியறையாக மாற்றியமைக்கப்பட்டுள்ளது.
இந்தத் திறப்பு விழா குறித்து அசோசியேட்டட் மோட்டார்வேஸ் நிறுவனத்தின் Yamaha சந்தைப்படுத்தல் குழுவின் பிரதிநிதி ஒருவர் கருத்துத் தெரிவிக்கையில், “புதிய பொரளை எண்ணக்கரு காட்சியறையானது (Concept Showroom) ஆனது எமது வாடிக்கையாளர்கள் பெற வேண்டுமென நாம் விரும்பும் நவீன Yamaha அனுபவத்தை வெளிப்படுத்துகிறது. இது வெறுமனே மோட்டார் சைக்கிள் அல்லது ஸ்கூட்டரை கொள்வனவு செய்யும் இடமாக மட்டுமல்லாமல், வாடிக்கையாளர்கள் ஒட்டுமொத்த Yamaha வர்த்தகநாமத்துடன் தொடர்பு கொள்ளக்கூடிய ஒரு தளமாகும். இலங்கையில் எமது இருப்பை வலுப்படுத்தும் வேளையில், வாடிக்கையாளர்களின் அதிகரித்து வரும் எதிர்பார்ப்புகளைப் பூர்த்தி செய்யும் அதே நேரத்தில் எமது தயாரிப்புகளின் தரத்தைப் பிரதிபலிக்கும் சில்லறை விற்பனை தளங்களை உருவாக்குவதில் நாம் அர்ப்பணிப்புடன் உள்ளோம்.” என்றார்.
இந்நிகழ்வில், இலங்கையிலுள்ள ஜப்பானிய தூதரகத்தின் தற்காலிக தூதரக பொறுப்பதிகாரி நவோகி கமோஷிடா (Naoaki Kamoshida), Al Futtaim நிறுவனத்தின் வாகனப் பிரிவின் பிரதம நிறைவேற்று அதிகாரி ஜோர்ஜ் நேவ்யா (Jorge Navea), அதன் பிரதித் தலைவர் அன்டாய்ன் பார்தேஸ் (Antoine Barthes), Yamaha Motor India குழுமத்தின் தலைவர் ஹாஜிமே அஓட்டா (Hajime Aota), Yamaha Motor நிறுவனத்தின் நிறைவேற்று பொது முகாமையாளர் தோஷிரோ யாகி (Toshiro Yagi), குழும முகாமையாளர் ஹிடேகி யமநாகா (Hideki Yamanaka), Associated Motorways (Private) Limited நிறுவனத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் ஜவஹர் கணேஷ், மோட்டார் வாகன விளையாட்டின் புகழ்பெற்ற இலங்கையின் சாதனையாளர் டிலந்த மாலகமுவ உள்ளிட்ட உள்நாட்டு, வெளிநாட்டு முக்கியஸ்தர்கள் பலர் கலந்துகொண்டனர்.
வாடிக்கையாளர்கள் FZ, R15, MT-15 போன்ற அதிதிறன் கொண்ட மோட்டார் சைக்கிள்கள், RayZR போன்ற நடைமுறைக்கு உகந்த ஸ்கூட்டர்கள், கடல்சார் தயாரிப்புகள், அசல் உதிரிப்பாகங்கள், Yamaha வர்த்தகநாம உற்பத்திகள் உள்ளிட்ட Yamaha வர்த்தகநாமத்தின் முழுமையான தயாரிப்பு வரிசையை இக்காட்சியறையில் பார்வையிட முடியும். இந்த ஒருங்கிணைந்த கட்டமைப்பானது, வருகை தருவோருக்கு Yamaha வர்த்தகநாமத்தின் அனைத்து தயாரிப்புகளையும் ஒரே இடத்தில் கண்டறிய உதவுவதுடன், நிபுணர்களின் வழிகாட்டல் மற்றும் விற்பனைக்குப் பிந்தைய ஆதரவையும் வழங்குகிறது.
சர்வதேச சில்லறை வர்த்தகநாமத் தரங்களுக்கு அமைய வடிவமைக்கப்பட்டுள்ள இந்த காட்சியறையின் நவீன கட்டமைப்பானது, கொள்வனவாளர்கள் மிகவும் வசதியான மற்றும் அதிவேகமான சூழலில் Yamaha தயாரிப்புகளை தெரிவு செய்வதற்கு வழிவகுக்கிறது. இது தரம் மற்றும் புத்தாக்கம் மீதான வர்த்தகநாமத்தின் அர்ப்பணிப்பை மேலும் உறுதிப்படுத்துகிறது.
இந்த பொரளை முதன்மை காட்சியறை மூலம் இலங்கையில் ஒரு புதிய அத்தியாயத்தை Yamaha நிறுவனம் வெளிப்படுத்துவதுடன், நாடு முழுவதிலும் உள்ள வாடிக்கையாளர்களுக்கு சிறப்பான வாகன உரிமை மற்றும் சில்லறை விற்பனை அனுபவத்தை வழங்குவதற்கான அதன் தொடர்ச்சியான முதலீட்டை நிரூபிக்கிறது.
END

Recent Comments