புதிய முதலீடுகள் மூலம் பொருளாதார வளர்ச்சியைத் துரிதப்படுத்தும் கொழும்பு துறைமுக நகரம்

கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழுச் சட்டத்தின் கீழ், மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்த 77 வணிக நிறுவனங்களுக்கு (Businesses of Strategic Importance – BSIs) 2026 ஏப்ரல் மாதத்தில் அமைச்சரவை உத்தியோகபூர்வமாக அங்கீகாரம் வழங்கியுள்ளதன் மூலம், தெற்காசியாவின் முன்னணி வணிக மற்றும் முதலீட்டு மையமாக வளர்ந்து வரும் கொழும்பு துறைமுக நகரம் (Colombo Port City), தனது அடுத்தகட்ட வரலாற்று மைல்கல்லை எட்டியுள்ளது.

இந்த அனுமதியானது, கொழும்பு துறைமுக நகர விசேட பொருளாதார வலயத்தின் (SEZ) வளர்ச்சியை அடுத்தகட்டத்திற்கு கொண்டு செல்வதன் மூலம் முதலீடுகள், புத்தாக்கம் மற்றும் சர்வதேச வணிக சேவைகளுக்கான உலகளாவிய இணைப்புத் தளமாக இலங்கையை நிலைநிறுத்துகிறது.

அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்களில், முதன்மை மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்த (Primary BSIs) மூன்று நிறுவனங்கள் இணைந்து சுமார் ரூ. 125 பில்லியன் (சுமார் 262 மில்லியன் அமெரிக்க டொலர்) வெளிநாட்டு முதலீட்டை அடுத்த ஐந்து ஆண்டுகளில் இலங்கைக்குள் கொண்டுவரவுள்ளன.

Prime Melwa Port City (Pvt) Ltd மற்றும் Marina Hotel Holdings (Pvt) Ltd ஆகியன துறைமுக நகரின் Marina-Front குடியிருப்பு மற்றும் Marina Development ஆகிய சொகுசு குடியிருப்பு மற்றும் பொழுதுபோக்கு மையங்களை திட்டத்தை மேற்கொண்டு வருகின்றன

Home Lands Port City (Pvt) Ltd: துறைமுக நகரின் மையப்பகுதியான ‘சென்ட்ரல் பார்க்’ (Central Park) இற்கு அருகில் வணிகம் மற்றும் குடியிருப்பு இணைந்த நவீன கலப்பு-பயன்பாட்டு (Mixed-use) மாடிக்குடியிருப்பு வளாகத்தை அமைத்து வருகிறது.

Central Park Boulevard Port City – HomeLands

இந்த நவீன திட்டங்கள் குறித்து உலகளாவிய முதலீட்டாளர்களிடையே பெரும் வரவேற்பு ஏற்பட்டுள்ளது. இது, இலங்கையின் ரியல் எஸ்டேட் துறை மற்றும் நாட்டின் எதிர்காலப் பொருளாதாரம் மீது சர்வதேச சந்தையில் உள்ள நம்பிக்கையை உறுதிப்படுத்துகிறது.

முதன்மை நிறுவனங்கள் தவிர, அங்கீகரிக்கப்பட்ட ஏனைய இரண்டாம் நிலை மூலோபாய வணிகங்கள் (Secondary BSIs) மூலம் அடுத்த ஐந்து ஆண்டுகளில் மேலும் 364 மில்லியன் அமெரிக்க டொலர் வெளிநாட்டுச் செலாவணி நாட்டுக்குள் வரவுள்ளது. இதன் மூலம் இலங்கை இளைஞர்களுக்கு 10,000 இற்கும் மேற்பட்ட நேரடி வேலைவாய்ப்புகள் உருவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

2026 ஆம் ஆண்டின் 1ஆம் இலக்க கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு (திருத்தச்) சட்டம் அண்மையில் அமுல்படுத்தப்பட்டது. இந்த புதிய சட்டத் திருத்தம் மூலம், துறைமுக நகரின் நிர்வாகக் கட்டமைப்பு மேலும் வலுப்படுத்தப்பட்டுள்ளது. அத்துடன் ஒழுங்குபடுத்தல் விதிமுறைகள் எளிமையாக்கப்பட்டுள்ளதோடு, முதலீட்டாளர்கள் மிக இலகுவாக வணிகங்களை ஆரம்பிப்பதற்கான (Ease of doing business) சூழல் உருவாக்கப்பட்டுள்ளது.

பெருமளவிலான மூலதன முதலீடு, புதிய வேலைவாய்ப்பு உருவாக்கம், வெளிநாட்டுச் செலாவணி வருமானம் மற்றும் உலகளாவிய சந்தைகளுடன் இலங்கையை இணைக்கும் திறன் ஆகியவற்றைக் கொண்ட வணிகங்களே இவ்வாறு வகைப்படுத்தப்படுகின்றன. இவற்றுக்கு சிறப்பு நிதிச் சலுகைகளும் வரி விலக்குகளும் வழங்கப்படுகின்றன.

கொழும்பு துறைமுக நகரம்

வளைகுடா பிராந்தியத்தின் தற்போதைய புவிசார் அரசியல் மற்றும் உலகளாவிய வணிக மாற்றங்களைக் கருத்தில் கொண்டு, புதிய முதலீட்டாளர்களை ஈர்ப்பதற்காக கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு (CPCEC) விரைவான விசேட திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது.

இதன் மூலம், தேவையான ஆய்வுகள் நிறைவுற்றதும், டிஜிட்டல் முறையூடாக 7 நாட்களுக்குள் ‘அங்கீகரிக்கப்பட்ட நபர்’ (Authorised Person) ஆக முதலீட்டாளர்கள் பதிவு செய்யப்படுவர். பணியாளர்களை விரைவாகப் பணியில் அமர்த்துவதற்காக 5 வேலை நாட்களுக்குள் பணி வீசாக்கள் (Work Visas) வழங்கப்படும். ஒரே இடத்தில் கட்டுமான அனுமதிகள், திட்டமிடல் அனுமதிகள் மற்றும் ஏனைய ஒழுங்குபடுத்தல் அனுமதிகளை ஒரே இடத்தில் (Single Window) பெற்றுக்கொள்ளும் வசதி செய்யப்பட்டுள்ளது.

இத்திட்டத்தின் முதன்மை மேம்பாட்டாளரான CHEC Port City Colombo (Pvt) Ltd நிறுவனம், கடல் நில மீட்பு மற்றும் அடிப்படை உட்கட்டமைப்புகளுக்காக ஏற்கனவே 1.4 பில்லியன் அமெரிக்க டொலர்களை முதலீடு செய்து, கட்டுமானத்திற்குத் தயாரான நிலப்பரப்பை உருவாக்கியுள்ளது.

Prime-Melwa

முழுமையாக நிறைவடையும் போது சுமார் 15 பில்லியன் அமெரிக்க டொலர் மொத்த மதிப்பைக் கொண்டிருக்கவுள்ள கொழும்பு துறைமுக நகர், தெற்காசியாவின் மிக முக்கியமான நேரடி வெளிநாட்டு முதலீட்டு (FDI) திட்டமாகும். குறைந்த செயல்பாட்டுச் செலவு, சர்வதேச ஆளுகைத் தரம் மற்றும் மூலோபாய புவியியல் இருப்பிடம் ஆகிய நன்மைகள் மூலம் இது இலங்கையின் நீண்டகால பொருளாதார வளர்ச்சிக்கு வலுவான அடித்தளமாக அமையும்.

நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சுடன் இணைந்து, ஏற்றுமதி மற்றும் சேவை சார்ந்த தொழில்துறைகளை ஊக்குவிக்க கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு (CPCEC) தொடர்ந்து அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வருகிறது.

கொழும்பு துறைமுக நகர விசேட பொருளாதார வலயத்திற்குள் உள்ள முதலீட்டு வாய்ப்புகள் பற்றிய மேலதிக தகவல்களுக்கு, www.portcitycolombo.lk எனும் இணையத்தளத்தைப் பார்வையிடவும். ஒழுங்குபடுத்தல் கட்டமைப்பு, ஒரே கூரையின் கீழான முதலீட்டு வசதி சேவைகள், பதிவு செய்யப்பட்ட வணிகங்கள் மற்றும் விண்ணப்ப நடைமுறைகள் பற்றிய விபரங்களுக்கு, www.portcitycolombo.gov.lk எனும் இணையத்தளத்தைப் பார்வையிடவும்.

Image Caption –
Browns Marina Hotel

—- END —-

Share

You may also like...