INCOHST 2026 ஊடாக தொடர்ந்து புத்தாக்கத்திற்கு உத்வேகம் அளிக்கும் NCHS
INCOHST என்பது நவலோக உயர் கல்வி நிறுவனத்தின் (Nawaloka College of Higher Studies) சிந்தனையில் உதித்த ஒரு சிறந்த திட்டமாகும். இது இன்று புத்தாக்கம் மற்றும் வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களை மையமாகக் கொண்ட இலங்கையின் முதன்மையான பாடசாலை மட்ட தொழில்நுட்பப் போட்டிகளில் ஒன்றாகத் திகழ்கிறது.
முதன்முதலில் 2018 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட INCOHST, இலங்கை மாணவர்களிடையே IoT (Internet of Things) பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதையும், இளம் கண்டுபிடிப்பாளர்கள் தொழில்நுட்பத்தின் மூலம் உண்மையான சமூகத் தேவைகளுக்கு தீர்வுகளை வடிவமைப்பதற்கான ஒரு தளத்தை வழங்குவதையும் நோக்கமாகக் கொண்டு, நாட்டின் முதலாவது பாடசாலைகளுக்கு இடையிலான IoT போட்டியாக அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த முக்கிய முயற்சியானது, அவுஸ்திரேலியாவின் ஸ்வின்பர்ன் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தின் (Swinburne University of Technology) ஆதரவுடன் NCHS நிறுவனத்தால் ஏற்பாடு செய்யப்பட்டதுடன், பாடசாலை மாணவர்களிடையே படைப்பாற்றல், விமர்சன ரீதியான சிந்தனை மற்றும் நடைமுறை ரீதியான புத்தாக்கங்களை ஊக்குவிப்பதன் காரணமாக, இது விரைவான அங்கீகாரத்தை மக்கள் மத்தியில் பெற்றுக் கொண்டுள்ளது.
INCOHST 2026
கடந்த ஆண்டுகளில் அடைந்த வெற்றிகளைத் தொடர்ந்து INCOHST 2026 ஆனது, அடுத்த தலைமுறை புத்தாக்க கண்டுபிடிப்பாளர்கள் மற்றும் எதிர்கால தொழில்நுட்பத் தலைவர்களுக்கு உத்வேகம் அளிக்கும் தனது பணியைத் தொடர்ச்சியாக முன்னெடுத்துச் செல்கிறது. NCHS நிறுவனத்தால் வருடாந்தம் ஏற்பாடு செய்யப்படும் இப்போட்டியானது, நாடு முழுவதிலுமிருந்தும் மாணவர்கள் வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களை ஆராய்ந்து அறிவதற்கும், சமூகங்களிலும் தொழில்துறைகளிலும் சாதகமான தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய IoT அடிப்படையிலான தீர்வுகளை உருவாக்குவதற்கும் ஊக்குவிக்கப்படும் ஒரு தேசிய அளவிலான அங்கீகாரம் பெற்ற தளமாக பரிணமித்துள்ளது.
பொதுவாக IoT என அழைக்கப்படும் ‘Internet of Things’ ஆனது, தரவுகளைச் சேகரிக்கவும் பரிமாறவும் அனுமதிக்கும் சென்சர்கள் (sensors), மென்பொருட்கள் மற்றும் இணையத் தொடர்புகளுடன் ஒருங்கிணைக்கப்பட்ட ஒன்றோடொன்று இணைக்கப்பட்ட பௌதிக ரீதியான சாதனங்கள், வாகனங்கள், உபகரணங்கள் ஆகியவற்றின் வலையமைப்பைக் குறிக்கிறது. இந்த ஸ்மார்ட் தொழில்நுட்பங்கள், அன்றாட ஸ்மார்ட் வீடுகளுக்கான உபகரணங்கள் மற்றும் அணியக்கூடிய தொழில்நுட்ப சாதனங்கள் (wearable technology) முதல் மேம்பட்ட தொழில்துறை தொகுதிகள், சுகாதாரத் தீர்வுகள் மற்றும் ஸ்மார்ட் நகர உட்கட்டமைப்புகள் வரை மக்களின் வாழ்க்கை மற்றும் வேலை செய்யும் முறையை மாற்றியமைத்து வருகின்றன. INCOHST ஊடாக, மாணவர்கள் எதிர்காலத்தை மையமாகக் கொண்ட இந்த தொழில்நுட்பங்களுடன் அறிமுகப்படுத்தப்படுவதுடன், வகுப்பறைக்கு அப்பால் சிந்தித்து, நிஜ உலகச் சவால்களைத் தீர்ப்பதற்கு புத்தாக்கம் மற்றும் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதற்கு வலுவூட்டப்படுகிறார்கள்.
ஸ்மார்ட் எதிர்காலம்: செயற்கை நுண்ணறிவும் நிலைபேறான தன்மையும் ஒன்றிணையும் இடம்
செயற்கை நுண்ணறிவு (AI) மற்றும் IoT ஆகியன வேறுபட்ட தொழில்நுட்பங்களாக இருந்தாலும், அவை ஒன்றாக இணையும் போதே மிகவும் சக்திவாய்ந்தவையாக மாறுகின்றன. IoT சாதனங்கள் வெப்பநிலை, இயக்கம், பயன்பாட்டு முறைகள் அல்லது இயந்திரங்களின் செயற்பாடு போன்ற தரவுகளை தொடர்ச்சியாக சேகரிக்கின்றன. நடைமுறை போக்குகளை கண்டறியவும், முரண்பாடுகளை கண்டறியவும், தன்னியக்க பதில்களைத் தூண்டவும் AI இந்தத் தரவுகளை செயலாக்குகிறது.
இப்போட்டிக்கான ஏற்பாடாக, நாடு முழுவதிலுமிருந்து வந்த மாணவர்கள் கண்டி, கொழும்பு, திருகோணமலை ஆகிய இடங்களில் இடம்பெற்ற மும்முரமான பயிற்சிப் பட்டறைத் தொடர்களில் கலந்து கொண்டனர். தொழில்துறை நிபுணர்களால் வழிநடத்தப்பட்ட இப்பயிற்சிப் பட்டறைகளானவை, பங்கேற்பாளர்களுக்கு IoT தொழில்நுட்பங்கள் மற்றும் அவற்றின் பயன்பாடுகள் குறித்த அத்தியாவசிய நுண்ணறிவுகளை வழங்கின. அனைவரினதும் பங்கேற்புடனான இந்த ஊடாடல் அமர்வானது, இறுதி நிகழ்விற்கான புத்தாக்கமான தீர்வுகளை மாணவர்கள் உருவாக்குவதற்கு அடித்தளமாக அமைந்தன. நிலைபேறான வளர்ச்சிக்கான தொழில்நுட்பத் தீர்வுகள் குறித்து மாணவர்கள் விமர்சன ரீதியாகச் சிந்திப்பதை ஊக்குவிக்கும் வகையில், ‘Smart Future: Where AI Meets Sustainability’ (ஸ்மார்ட் எதிர்காலம்: செயற்கை நுண்ணறிவும் நிலைபேறான தன்மையும் ஒன்றிணையும் இடம்) எனும் இந்த ஆண்டிற்கான போட்டித் தலைப்பு வலியுறுத்தப்பட்டது.

இப்போட்டித் தொடரின் இறுதிப் போட்டியானது, மே 16ஆம் திகதி, தொடர்ச்சியாக ஏழாவது வருடமாக Monarch Imperial ஹோட்டலில் வெற்றிகரமாக நடைபெற்றது. இது நாடு முழுவதிலுமிருந்தும் இளம் புத்தாக்க கண்டுபிடிப்பாளர்கள் மற்றும் தொழில்நுட்ப ஆர்வலர்களை ஒன்றிணைத்திருந்தது. இந்த ஆண்டுக்கான போட்டியில் கொழும்பு, காலி, திருகோணமலை, கண்டி ஆகிய மாவட்டங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தி 58 அணிகள் கலந்துகொண்டன. இது பாடசாலை மாணவர்களிடையே STEM மற்றும் IoT புத்தாக்கங்கள் மீது அதிகரித்து வரும் ஆர்வத்தையும் அது தொடர்பான உற்சாகத்தையும் பிரதிபலிக்கிறது.
பல்வேறு புத்தாக்கமான திட்டங்கள் மற்றும் விளக்கக்காட்சிகள் மூலம் பங்கேற்பாளர்கள் தங்களது படைப்பாற்றலை வெளிப்படுத்துவதற்கான ஒரு ஆற்றல்மிக்க தளமாக இந்நிகழ்வு அமைந்தது. தொழில்நுட்பம் மற்றும் புத்தாக்கங்கள் மூலம் நிஜ உலக சவால்களுக்கான தீர்வுகளை அணிகள் செயன்முறைப்படுத்திக் காட்டியமையானது, போட்டித் தொடர் முழுவதும் உற்சாகமும் ஆரோக்கியமான போட்டிச் சூழலும் நிலவியது.
இப்போட்டித் தொடரின் வெற்றியாளர்களாக காலி ரிச்மண்ட் கல்லூரி தெரிவு செய்யப்பட்டது.
இப்போட்டியானது கலாநிதி குலாரி லொகுகே மற்றும் கலாநிதி அலன் ரொபர்ட்சன் உள்ளிட்ட புகழ்பெற்ற நடுவர் குழுவினால் மதிப்பீடு செய்யப்பட்டது. இவர்களின் நிபுணத்துவமும் தொழில்துறை அனுபவமும் இந்நிகழ்விற்கு பெரும் மதிப்பைச் சேர்த்தன.
இந்நிகழ்வில் பேராசிரியர் ரங்கிக ஹல்வத்துர, கலாநிதி லலித் லியனகே மற்றும் திருமதி சந்தமாலி கொடித்துவக்கு உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் விசேட விருந்தினர்களாக கலந்து சிறப்பித்தனர்.

Nawaloka College of Higher Studies
நவலோக உயர் கல்வி நிறுவனமானது (NCHS), சர்வதேச ரீதியாக அங்கீகரிக்கப்பட்ட உயர்கல்வித் தகைமைகளை வழங்குவதற்காக அர்ப்பணிக்கப்பட்டுள்ள ஒரு அமைப்பாகும். கொழும்பின் மையப்பகுதியில் அமைந்துள்ள NCHS, மாணவர்களுக்கு சர்வதேச கற்றல் சூழலை வழங்கும் நவீன வசதிகளைக் கொண்டுள்ளது. உயர்தரக் கல்வி தொடர்பில் இந்நிறுவனம் கொண்டுள்ள அர்ப்பணிப்பானது, தனிப்பட்ட மாணவர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்ட அதன் பிரத்தியேக பாடநெறிகளில் பிரதிபலிக்கிறது. NCHS இல் ஒரு கல்விப் பாதை (Pathway) திட்டத்தை நிறைவு செய்த பின்னர், மாணவர்கள் அவுஸ்திரேலியாவின் Hawthorne அல்லது மலேசியாவில் உள்ள Swinburne பல்கலைக்கழக வளாகங்களில் தங்களது பட்டப்படிப்புகளைத் தொடர முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. இது அவர்கள் மேலதிக கல்வியை தொடர்வதற்கான தடையற்ற மாற்றத்தை உறுதி செய்கிறது.
INCOHST அல்லது NCHS இன் ஏனைய திட்டங்கள் பற்றிய மேலதிக விபரங்களை அறிய ஆர்வமுள்ளவர்கள், 0777 899 998 அல்லது 011 2 777 666 எனும் இலக்கங்களைத் தொடர்பு கொள்வதன் மூலமாக அல்லது [email protected] எனும் மின்னஞ்சல் முகவரி மூலமாக அணுகலாம். INCOHST 2026 போன்ற நிகழ்வுகள் மூலம், NCHS நிறுவனம் தொடர்ச்சியாக அடுத்த தலைமுறை புத்தாக்க கண்டுபிடிப்பாளர்களை வலுவூட்டி, எதிர்கால தொழில்நுட்ப சவால்களை எதிர்கொள்வதற்கான திறன்களையும் அறிவையும் அவர்களுக்கு வழங்கி வருகிறது.

Recent Comments