முற்றிலும் புதிய XPENG G6 ரக வாகனத்தை இலங்கையில் அறிமுகம் செய்யும் Evolution Auto: Tesla Model Y இற்கு நிகரான உலகளாவிய மாற்றீடு

Evolution Auto நிறுவனமானது, முற்றிலும் புதிய XPENG G6 ரக மின்சார வாகனத்தை Evolution Auto நிறுவனத்தின் XPENG காட்சியறையில் மே 15ஆம் திகதி இடம்பெறும் பிரத்தியேக நிகழ்வின் ஊடாக உத்தியோகபூர்வமாக இலங்கைக்கு அறிமுகப்படுத்தவுள்ளது. இந்த அறிமுகமானது, நாட்டில் உயர்தர மின்சார வாகனப் போக்குவரத்தை மீள்வரையறை செய்யும் அடுத்த தலைமுறை புத்திசாலித்தனமான மின்சார SUV வருகையை எடுத்துக் காட்டுகிறது.

Tesla Model Y வாகனத்திற்கு உலகளாவிய ரீதியில் ஒரு போட்டியாளராகக் கருதப்படும் XPENG G6, மேம்பட்ட தொழில்நுட்பம், புத்திசாலித்தனமான வடிவமைப்பு மற்றும் அதிநவீன வசதிகளை ஒன்றிணைப்பதன் மூலம் இலங்கையின் உயர்தர மின்சார வாகன (EV) சந்தையில் ஒரு புதிய மைல்கல்லை நிறுவுகிறது. இதன் அறிமுகமானது உள்ளூர் வாகனத் துறையில் ஏற்பட்டுள்ள ஒரு பாரிய மாற்றத்தைப் பிரதிபலிக்கிறது. இதன் மூலம் உலகத்தரம் வாய்ந்த மின்சார வாகனங்கள் விரிவான விற்பனை மற்றும் விற்பனைக்குப் பின்னரான சேவை ஆதரவுடன் தற்போது இலங்கையர்களுக்குக் கிடைக்கின்றன.

Evolution Auto ஊடாக XPENG இலங்கையில் பிரவேசிப்பதானது, ஒரு குறிப்பிட்ட மாதிரியின் அறிமுகத்திற்கு அப்பாற்பட்ட விடயமாகும். சர்வதேச ரீதியில் வேகமாக வளர்ந்து வருகின்ற மற்றும் அன்றாட போக்குவரத்தில் புத்திசாலித்தனமான கட்டமைப்பு, தன்னியக்க வாகனம் செலுத்தல் அமைப்பு (autonomous driving), செயற்கை நுண்ணறிவு (AI) ஆகியவற்றை இணைப்பதில் புகழ் பெற்ற உலகளாவிய வர்த்தகநாமத்தை இலங்கைக்கு அறிமுகப்படுத்துவதாக இது அமைகிறது. G6 மாதிரியானது செயல்திறன் மற்றும் புத்திசாலித்தனத்தின் தடையற்ற இணைப்பை வழங்குகிறது.

இதன் முக்கிய சிறப்பம்சங்களில் 480 கி.மீ. (WLTP) வரையிலான பயணத் தூரம், XPILOT ஊடான Level 2 தன்னியக்க வாகனம் செலுத்தல் வசதி, 15.6 அங்குல நடுத்தர அளவிலான தொடுதிரை, பயண அனுபவத்தை மேம்படுத்தும் பிரீமியம் X-opera 18 ஸ்பீக்கர் அமைப்பு ஆகியன உள்ளடங்கும்.

இவற்றுடன் 570 லீற்றர் கொள்ளளவு கொண்ட விசாலமான (boot) இடவசதி, உட்புற மாறுபடும் மின்விளக்குகள் (ambient lighting), முன் ஆசன காற்றோட்ட வசதி மற்றும் ரிமோட் பார்க்கிங், முன்கூட்டியே சார்ஜ் செய்ய திட்டமிடுதல், ரிமோட் வெப்பநிலை கட்டுப்பாடு, டிஜிட்டல் திறப்பு பகிர்வு (remote parking, scheduled charging, remote climate control, digital key sharing) ஆகியவற்றை அனுமதிக்கும் ஒருங்கிணைந்த கையடக்கதொலைபேசி செயலி ஆகிய நடைமுறை சார்ந்த வசதிகளையும் G6 கொண்டுள்ளது. இதன் மூலம் நவீன வாழ்க்கை முறைக்கு ஏற்ப தொழில்நுட்ப ரீதியாக மேம்பட்ட வாகனமாக இருப்பதை இது உறுதி செய்கிறது.

XPENG நிறுவனம் அதன் வாகனங்களுக்கு அப்பால், ஒரு எதிர்கால போக்குவரத்து புத்தாக்க நிறுவனமாகத் தன்னை நிலைநிறுத்தியுள்ளது. அதன் பரந்துபட்ட உற்பத்திகளில் P7+ sedan, G9 SUV, X9 MPV போன்ற பல்வேறு ஸ்மார்ட் மின்சார வாகனங்களுடன், ‘Xpeng Iron’ எனப்படும் மனித உருவிலான ரோபோக்கள் மற்றும் ‘AEROHT’ பறக்கும் கார் பிரிவு போன்ற நவீன தொழில்நுட்ப மேம்பாடுகளும் உள்ளடங்கியுள்ளன. இது தொழில்நுட்பத்துடனும் போக்குவரத்துடனும் மனிதர்கள் எவ்வாறு தொடர்பு கொள்கிறார்கள் என்பதை மறுசீரமைப்பதில் நிறுவனத்தின் நீண்டகால அர்ப்பணிப்பை எடுத்துக் காட்டுகிறது.

இந்த அறிமுகம் குறித்து Evolution Auto நிறுவனத்தின் சந்தைப்படுத்தல் பிரிவுத் தலைவர் அஷான் விக்ரமசிங்க கருத்துத் தெரிவிக்கையில், “இலங்கைக்கு XPENG வர்த்தகநாமத்தை அறிமுகப்படுத்துவதில் நாம் பெருமிதம் கொள்கிறோம். இது புத்திசாலித்தனமான மின்சார வாகனப் போக்குவரத்தின் புதிய யுகத்தை உருவாக்குகிறது. XPENG G6 என்பது வெறுமனே வாகனம் மட்டுமல்ல, எதிர்காலத்தில் தொழில்நுட்பம், நிலைபேறான தன்மை மற்றும் புத்தாக்கம் ஆகியன எவ்வாறு எமது அன்றாட வாழ்க்கையில் ஒன்றிணையப் போகின்றன என்பதன் அடையாளமாகும். Evolution Auto நிறுவனத்தின் வாடிக்கையாளர் சேவை மற்றும் விற்பனைக்குப் பின்னரான சிறப்பான ஆதரவுடன், இலங்கையின் உயர்தர மின்சார வாகனங்களுக்கு இந்த அறிமுகமானது ஒரு புதிய தரத்தை உருவாக்கும் என நாம் நம்புகிறோம்.” என்றார்.

XPENG G6 வாகனத்தின் அறிமுகமானது உயர்தர வாகனக் கொள்வனவாளர்கள், மின்சார வாகன ஆர்வலர்கள், தொழில்நுட்பம் சார்ந்த தொழில் வல்லுநர்களிடையே பெரும் ஆர்வத்தை உருவாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மே 15ஆம் திகதி இடம்பெறவுள்ள இந்த பிரத்தியேக அறிமுக நிகழ்வில் கலந்துகொள்ள விரும்பும் வாடிக்கையாளர்கள் மற்றும் ஆர்வலர்கள், +94 74 411 2132 (ரணில்) எனும் இலக்கத்தின் ஊடாக தொடர்பு கொள்வதன் மூலம் அல்லது www.xpeng.lk எனும் இணையத்தளத்திற்குச் செல்வதன் மூலம் முன்கூட்டியே பதிவு செய்து தமக்கான இடத்தை பெற்றுக்கொள்ளுமாறு அழைக்கப்படுகிறார்கள்.

END

Share

You may also like...