ஜனசக்தி பைனான்ஸ் 44 வருட முன்னேற்றம் மற்றும் குறிக்கோளை கொண்டாடுகிறது


இலங்கையர்களுக்கு புத்தாக்கமான மற்றும் உள்ளடக்கமான நிதித் தீர்வுகளை வழங்குவதில் நான்கு தசாப்த காலப்பகுதிக்கு மேலான அர்ப்பணிப்பை வெளிப்படுத்தி, JXG (ஜனசக்தி குரூப்) துணை நிறுவனமான, ஜனசக்தி பைனான்ஸ் பிஎல்சி (முன்னர் ஒரியன்ட் பைனான்ஸ் பிஎல்சி என அறியப்பட்டது), தனது 44ஆவது வருட பூர்த்தியை பெருமையுடன் கொண்டாடியது. ஆரம்பம் முதல், இலங்கையின் வங்கிசாரா நிதிச் சேவைகள் துறையின் (NBFI) நம்பிக்கையை வென்ற செயற்பாட்டாளராக உயரும் வகையில், நிறுவனம் தொடர்ந்தும் வாடிக்கையாளர்களினதும், சமூகங்களினதும் வியாபித்துச் செல்லும் தேவைகளை நிவர்த்தி செய்த வண்ணமுள்ளது.
ஜனசக்தி பைனான்ஸ் பிஎல்சியின் தவிசாளர் ராஜேந்திர தியாகராஜா கருத்துத் தெரிவிக்கையில், “எமது 44 வருட பூர்த்தியை கொண்டாடுவது என்பது ஜனசக்தி பைனான்ஸைச் சேர்ந்த எம் அனைவருக்கும் மிகவும் பெருமைக்குரிய தருணமாகவும், சகலரையும் பிரதிபலிப்பதாகவும் அமைந்துள்ளது. இந்த நான்கு தசாப்த காலப்பகுதியில், இலங்கையின் நிதிக் கட்டமைப்பில் பெருமளவு மாற்றத்தை நாம் எதிர்கொண்டிருந்தோம். வாடிக்கையாளர்களின் வியாபித்து வரும் தேவைகளுக்கேற்ப எமது சேவைகளையும் மாற்றியமைத்திருந்தோம். நிதிசார் உள்ளடக்கம், புத்தாக்கம் மற்றும் பொறுப்பு வாய்ந்த வளர்ச்சி ஆகியவற்றுக்கான எமது அர்ப்பணிப்பின் வலிமையை இந்த மைல்கல் காலப்பகுதி வெளிப்படுத்தியுள்ளது. எமது முன்னோர்கள் ஏற்படுத்தியிருந்த உறுதியான அடித்தளத்தினாலும், JXG இன் (ஜனசக்தி குழுமம்) ஆற்றல்களினால் வலுவூட்டப்பட்டு வழிநடத்தப்பட்டிருந்த நாம், எமது நிலையை, பாரம்பரியத்தை நவீனத்துவத்துடன் பின்னிப்பிணைந்த தொலைநோக்குடைய நிறுவனமாக வெற்றிகரமாக மாற்றியமைத்துள்ளோம். எமது குழுமத்தின் பிரதான பெறுமதிகளினால் எமது பயணம் வழிநடத்தப்படுவதுடன், நாம் மேற்கொள்ளும் சகல செயற்பாடுகளிலும் மையமாக அமைந்துள்ளது.” என்றார்.
இந்த மைல்கல் பற்றி ஜனசக்தி பைனான்ஸ் பிஎல்சியின் நிறைவேற்று பணிப்பாளர் மற்றும் பிரதம நிறைவேற்று அதிகாரி கே.எம்.எம். ஜபிர் கருத்துத் தெரிவிக்கையில், “44 வருட சாதனைப் பயணத்தை நாம் கொண்டாடும் நிலையில், சேவை, வலிமை மற்றும் நம்பிக்கை போன்ற அடித்தளங்களுடன் ஆரம்பித்த பயணத்தை நாம் நினைவுகூர்கிறோம். JXG (ஜனசக்தி குழுமம்) இன் அங்கமாக மாற்றமடைந்ததை தொடர்ந்து, எமது அடையாளத்தை மாற்றியமைத்துள்ளதுடன், வாடிக்கையாளர்களுக்கான எமது வாக்குறுதியை மேம்படுத்தியுள்ளோம். நாம் எந்தளவு தூரம் பயணித்துள்ளோம் என்பதற்கான கொண்டாட்டமாக மாத்திரம் இந்த மைல்கல் அமைந்திராமல், நிதிசார் உள்ளடக்கம் மற்றும் புத்தாக்கம் போன்றவற்றினூடாக அர்த்தமுள்ள தாக்கம் மற்றும் உள்ளார்ந்த ஆற்றலின் திறவுகோலாக அமைந்திருக்கும் எமது குறிக்கோளை மீள உறுதி செய்வதாக அமைந்துள்ளது. எமது பெறுமதி வாய்ந்த வாடிக்கையாளர்கள், அர்ப்பணிப்பான ஊழியர்கள் மற்றும் நம்பிக்கையான பங்காளர்கள் அனைவருக்கும் தொடர்ச்சியான ஆதரவுக்கும், எமது பயணத்தில் கொண்டுள்ள நம்பிக்கைக்கும், எமது முழு தலைமைத்துவ அணி சார்பாக மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.” என்றார்.

ஜனசக்தி பைனான்ஸ் பிஎல்சியின் பணிப்பாளர்/பிரதம நிறைவேற்று அதிகாரி

ஜனசக்தி பைனான்ஸ் பிஎல்சியின் தவிசாளர்

நிறுவனத்தின் பயணத்தில் பிரதான திருப்பு முனையாக, ஒரியன்ட் பைனான்ஸ் பிஎல்சி என்பதிலிருந்து ஜனசக்தி பைனான்ஸ் பிஎல்சி என அண்மையில் மூலோபாய ரீதியில் பெயர் மாற்றம் செய்யப்பட்டிருந்தமையை குறிப்பிட முடியும். இலங்கையின் நன்மதிப்பை பெற்ற மற்றும் வளர்ந்து வரும் நிதிசார் பன்முகப்படுத்தப்பட்ட நிறுவனங்களில் ஒன்றான JXG (ஜனசக்தி குழுமம்) இன் கொள்கைகளினூடாக உறுதியான வளர்ச்சியினை எய்துவது என்பதற்கமைய இந்த மாற்றம் அமைந்துள்ளது. மேம்படுத்தப்பட்ட நிலை, நம்பகத்தன்மை மற்றும் மூலோபாய வழிகாட்டல் போன்றவற்றுடன் மேம்படுத்தப்பட்ட ஜனசக்தியின் நம்பிக்கை மற்றும் வாடிக்கையாளர் நோக்கு ஆகியவற்றை பின்பற்றுவதற்கு இந்த மாற்றம் ஏதுவாக அமைந்துள்ளது.
வர்த்தக நாமத்தில் மாற்றம் மேற்கொள்ளப்பட்டதை தொடர்ந்து, நிறுவனத்தின் வாடிக்கையாளர்களுக்கு முன்னுரிமை எனும் கோட்பாடு மேலும் உறுதி செய்யப்பட்டுள்ளது. ஜனசக்தி பைனான்ஸ் தொடர்ந்தும் பிரத்தியேகமான, புத்தாக்கமான மற்றும் பொறுப்பு வாய்ந்த நிதித் தீர்வுகளை வாடிக்கையாளர்களின் தேவைகளை நிவர்த்தி செய்யும் வகையில் வழங்குகிறது. அதற்காக, சேவை வாக்குறுதியை அடிப்படையாகக் கொண்டு, கரிசனை மற்றும் நம்பிக்கையான முறையில் இயங்குகிறது. இந்த அர்ப்பணிப்பை மேலும் உறுதி செய்யும் வகையில் ஜனசக்தி பைனான்ஸ் தலைமையகம் அண்மையில் நவீன வசதிகள் படைத்த புதிய வளாகத்துக்கு இடமாற்றப்பட்டிருந்தது. செயற்பாட்டு வினைத்திறன், வாடிக்கையாளர் அனுபவத்தை மேம்படுத்தல் மற்றும் நிறுவனத்தின் தொலைநோக்குடைய செயற்பாடுகள் போன்றவற்றில் முக்கிய படியாக இது அமைந்துள்ளது.
நாட்டின் சிறந்த ஐந்து வங்கிசாரா நிதிச் சேவைகளை வழங்கும் நிறுவனங்களில் ஒன்றாக திகழ்வது எனும் தெளிவான ஐந்தாண்டு இலக்குடன் இயங்கும் ஜனசக்தி பைனான்ஸ், டிஜிட்டல் மாற்றியமைப்பை பின்பற்றி, நிதிசார் உள்ளடக்கத்தை விரிவாக்கம் செய்து, சகல பங்காளர்களுக்கும் நிலைத்திருக்கும் பெறுமதியை ஏற்படுத்தி அடுத்த கட்டத்துக்கு தனது பயணத்தை முன்னெடுத்துச் செல்ல எதிர்பார்த்துள்ளது. புதுப்பிக்கப்பட்ட வலு மற்றும் குறிக்கோளுடன் ஜனசக்தி பைனான்ஸ் முன்னோக்கி செல்கிறது. JXG (ஜனசக்தி குழுமம்) இன் வலிமையுடன் வழிநடத்தப்படுவதுடன், தெளிவான குறிக்கோளுடன் இயங்கி, நிதிசார் உள்ளடக்கம், பொறுப்பு வாய்ந்த புத்தாக்கம் மற்றும் ஆழமான வாடிக்கையாளர் நம்பிக்கை போன்றவற்றை தனது சகல செயற்பாடுகளிலும் உள்வாங்குவதில் கவனம் செலுத்துகிறது.
###.
ஜனசக்தி பைனான்ஸ் (முன்னர் ஒரியன்ட் பைனான்ஸ் என அறியப்பட்டது) பற்றி
தமது வாடிக்கையாளர்களின் குறித்த தேவைகளை நிவர்த்தி செய்யும் வகையில் பரந்த நிதிச் சேவைகளைப் பெற்றுக் கொடுக்கும் நிறுவனமாக ஜனசக்தி பைனான்ஸ் திகழ்கின்றது. இந்த சேவைகளில் நிலையான வைப்புகள், சேமிப்பு கணக்குகள், குத்தகை, தங்கக்கடன்கள், மாற்று நிதித் தீர்வுகள், கூட்டாண்மை நிதிவசதியளிப்புகள் மற்றும் பல சேவைகள் அடங்கியுள்ளன. நிதித்துறையில் 44 வருட கால உறுதித்தன்மை, வலிமை, தங்கியிருக்கும் திறன் மற்றும் நிபுணத்துவம் ஆகியவற்றை நிறுவனம் கொண்டுள்ளது. புத்தாக்கத்துக்கு முக்கியத்துவம் வழங்குவது மற்றும் அதிசிறந்த தீர்வுகளையும், வாடிக்கையாளர் சேவையையும் பெற்றுக் கொடுப்பதில் கவனம் செலுத்தி, வாடிக்கையாளரை-மையப்படுத்திய நிதிச் சேவைகளை வழங்கும் நிறுவனமாக ஒரியன்ட் பைனான்ஸ் பிஎல்சி தன்னை நிலைநிறுத்தியுள்ளது. ஜனசக்தி பைனான்ஸ் ஒரு ஜனசக்தி குழும நிறுவனம் என்பதுடன், இலங்கை மத்திய வங்கியின் உரிமம் பெற்று இயங்கும் நிறுவனமாகும். LRA தரப்படுத்தலினால் BB+ (Positive Outlook) தரப்படுத்தலையும் பெற்றுள்ளது.
Recent Comments