‘சுதேஷி கொஹொம்ப’ தொடர்பான புலமைச் சொத்துரிமைகளை மீறியதற்காக Dasun Consumer Products (Pvt) Ltd இற்கு எதிராக தடை உத்தரவைப் பெற்ற சுதேசி இண்டஸ்ட்ரியல் வோர்க்ஸ் பிஎல்சி

கடந்த 8 தசாப்தங்களாக சுதேசி கொஹொம்ப உற்பத்தியாளரும் சந்தைப்படுத்துனருமான சுதேசி இண்டஸ்ட்ரியல் வோர்க்ஸ் பிஎல்சி நிறுவனம், அதன் தயாரிப்பு தொடர்பான புலமைச் சொத்துரிமைகளை மீறியமைக்காக Dasun Consumer Products (Pvt) Ltd. நிறுவனத்திற்கு எதிராக பல்வேறு தடை உத்தரவுகளைப் பெற்றுள்ளது. இது Dasun Consumer Products Pvt. Ltd. தனது தயாரிப்புகளில் சுதேசி கொஹொம்பவின் புலமைச் சொத்துரிமைகளை மீறுவதற்கு எதிராக வழங்கப்பட்டுள்ளது. Dasun Consumer Products Pvt. இற்கு எதிராக அறிவுசார் சொத்துரிமைகளை மீறுவதைத் தடுக்கும் தடை உத்தரவுகளை, 2023 ஒக்டோபர் 06 ஆம் திகதி கொழும்பு வர்த்தக மேல் நீதிமன்றம் இந்த தடை உத்தரவுகளை பிறப்பித்துள்ளது.

சுதேசி கொஹொம்ப வர்த்தக முத்திரையின் பெருமைக்குரிய உரிமையாளராக சுதேஷி இண்டஸ்ட்ரீஸ் விழங்குகின்றது. ‘சுதேஷி கொஹொம்ப’ கடந்த எட்டு தசாப்தங்களாக மூலிகை சவர்க்காரம் மற்றும் மூலிகை தனிநபர் பராமரிப்பு பிரிவில் சந்தையில் முன்னணியில் திகழ்கிறது.

பதிவுசெய்யப்பட்ட ஒரு வர்த்தக முத்திரையும், 80 ஆண்டுகளுக்கும் மேலாக பயன்படுத்தப்பட்டு வருகின்றதுமான சுதேசி கொஹொம்ப, ‘கொஹொம்ப’ புலமைச் சொத்துரிமைகளை மீறுவதிலிருந்து, Dasun Consumer Products (Pvt) Ltd நிறுவனத்தை தடுக்கும் வகையில் கொழும்பு வர்த்தக மேல் நீதிமன்ற நீதிபதி சுமித் பெரேரா இந்த தடை உத்தரவை பிறப்பித்துள்ளார். சுதேசி கொஹொம்ப ஆனது, இலங்கையின் தேசிய ஔடதங்கள் ஒழுங்குபடுத்தல் அதிகாரசபையினால் (NMRA) பதிவு செய்யப்பட்ட ஒரு தயாரிப்பு ஆகும். 100% இலங்கை நிறுவனமான சுதேஷி நிறுவனம், இங்கிலாந்தின் Vegetarian Society, UK யின் அங்கீகாரம் மற்றும் தோல் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட வயதுவந்தவர்களுக்கான மூலிகை கொண்ட தனிநபர் பராமரிப்பு தயாரிப்பு உட்பட, தொழில்துறையில் முந்திக் கொண்டு தனது பெயரில் பல்வேறு முதலாவது சாதனை உரிமை கோரல்களுக்கு உரித்துடையதாக திகழ்கின்றது.

இலங்கையிலுள்ள மூலிகையுடனான தனிநபர் பராமரிப்பு பிரிவில் முன்னோடியும் சந்தையின் முன்னணி நிறுவனமுமான Swadeshi Industrial Works PLC நிறுவனம் 1941 இல் கூட்டிணைக்கப்பட்ட, ISO 9001:2015 சான்றளிக்கப்பட்ட நிறுவனமாகும். சுதேஷி அதன் மூலிகை பராமரிப்பு தயாரிப்பு வர்த்தக முத்திரைக்கு பிரபலமாக விளங்குகின்றது. குறிப்பாக சுதேசி கொஹொம்ப, ராணி சந்தனம், சுதேசி கொஹொம்ப பேபி ஆகியன பல வருடங்களாக இலங்கையர்களால் அன்புடன் அரவணைக்கப்பட்டு வரும் வர்த்தகநாமங்களாகும். சுதேசி நிறுவனம், இலங்கையில் முதலிடத்திலுள்ள மூலிகை வர்த்தகநாமமான ‘கொஹொம்ப ஹேர்பல்’ மற்றும் பாரம்பரிய அழகு வர்த்தகநாமமான ராணி சந்தனம் ஆகியவற்றை தயாரித்து சந்தைப்படுத்துகின்றமை குறிப்பிடத்தக்கது. நிறுவனம் 80 ஆண்டுகால வளமான வரலாற்றைக் கொண்டுள்ளதோடு, அது நீண்ட கால நம்பகத்துடன் சிறந்து விளங்குவதன் மூலம் தற்போது உலகளாவிய சந்தையிலும் தனது தடத்தை பதித்துள்ளது. சுதேசி கொஹொம்ப, மிகவும் விரும்பப்படும் வர்த்தகநாமங்களில் ஒன்று என, 2023 ஆம் ஆண்டில் Brand Finance உடன் இணைந்து, LMD இனால் வழங்கப்பட்ட தனிநபர் பராமரிப்பு தயாரிப்பாக (சவர்க்காரம்) விளங்குகின்றது.

சுதேசி தொழிற்சாலையானது, உயர் தரத்திலான, சருமத்திற்கு மிருதுவான மற்றும் மென்மையான மூலிகை மூலபொருட்களைப் பயன்படுத்தி உயர் தர தனிநபர் பாதுகாப்பு உற்பத்திகளை வழங்குகிறது.

சிறந்த தரமான தோல் பராமரிப்புப் பொருட்களில் நிபுணத்துவம் பெற்ற இந்நிறுவனம், தோலுக்கு மிருதுவானதும் மென்மையானதுமான இயற்கை மூலிகைப் பொருட்களை மூலப்பொருட்களாகப் பயன்படுத்துகிறது. சுதேசியின் பிரபலமான வர்த்தகநாமங்களில் சுதேசி கொஹொம்ப, ராணி சந்தனம், சுதேசி கொஹொம்ப பேபி, பேர்ல்வைட், லக் பார், சேஃப்ப்ளஸ், பிளக் ஈகிள் பேர்ஃப்யூம், கொஹொம்ப ஹேண்ட் வொஷ், கொஹொம்ப பொடி வொஷ், ஷவர் ஜெல் ஆகியன உள்ளடங்குகின்றன. சுதேசியின் தயாரிப்புகள் யாவும் 100% சைவத்தை அடிப்படையானது. அவை விலங்குகள் மீது சோதிக்கப்படவில்லை என்பதுடன் விலங்குகளின் கொடுமைகளிலிருந்து விலக்கற்றவையாகும்.

இவ்வழக்கில் சுதேசி இன்டஸ்ட்ரியல் வோர்க்ஸ் பிஎல்சி சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி கலாநிதி ரொமேஷ் டி சில்வா, வசந்தகுமார் நைல்ஸ் ஆகியோர் ஆஜராகியிருந்ததோடு, சட்டத்தரணி சனத் விஜேவர்தனவினால் சட்ட உதவி வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Share

You may also like...