’60 நாட்களில் இலங்கையை சுற்றி யூனிலீவர்‘ இலங்கை பல்கலைக்கழகங்களில் பயிலும் இளைஞர்களின் திறன்களை மேம்படுத்துவதவும், வலுப்படுத்தவும் ஆரம்பிக்கப்பட்ட ஒரு முயற்சி

2025 ஆம் ஆண்டுக்குள் 100,000 இலங்கை இளைஞர்களின் திறன்களை மேம்படுத்துவதற்கான பயணத்தில் யூனிலீவர் ஸ்ரீலங்கா ஈடுபட்டுள்ளது. அந்த வகையில், செப்டெம்பர் 2023 முதல் ’60 நாட்களில் இலங்கையை சுற்றி யூனிலீவர்’ பிரசாரத்தை அது முன்னெடுத்துள்ளது. இது, எதிர்வரும் 60 நாட்களில் பயிலுனர் பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்புத் திறன்களை வழங்குவதை மையமாகக் கொண்டு, எதிர்கால தொழில் உலகில் முன்னேற அவர்களைத் தயார்படுத்தும். யூனிலீவரின் இலங்கையைச் சுற்றிய பயணத்தின் முதலாவது நிறுத்தமானது, Asia Pacific Institute of Information Technology (APIIT) இல் இடம்பெற்றது. இங்கு, யூனிலீவர் ஸ்ரீலங்காவின் வீட்டு பராமரிப்பு தயாரிப்புப் பிரிவு தலைவரும் அதன் முகாமைத்துவ குழு உறுப்பினருமான கயான் ரூபசிங்க தலைமையில் #KathaBaha எனும் தலைப்பில், பயிலுனர் பட்டதாரிகளுக்கு ஒரு தனித்துவமான வாய்ப்பு வழங்கப்பட்டது. கயான் இங்கு தனது தொழில் வாழ்க்கை பயணம் தொடர்பான நுண்ணறிவுகளைப் பகிர்ந்து கொண்டார். ஆர்வமுள்ள மாணவர்களுக்கு விலைமதிப்பிட முடியாத தகவல்களையும் படிப்பினைகளையும் அவர் வழங்கினார். அத்துடன், இந்நிகழ்வில் யூனிலீவர் ஸ்ரீலங்காவின் கற்றல் மற்றும் மனிதவள மூலோபாயத்தின் முன்னணி அதிகாரியான அஞ்சலி ஜயதுங்க, நிபுணத்துவத்துடன், ‘உங்கள் நோக்கத்தைக் கண்டறிதல்’ எனும் அறிவூட்டும் அமர்வை மேற்கொண்டார். அஞ்சலியின் வழிகாட்டலானது, மாணவர்களின் நோக்கங்களைக் கண்டறிய உதவுவதில் முக்கிய பங்கு வகித்தது. இந்த அமர்வின் மூலம், மாணவர்கள் தங்கள் இலக்குகளை ஒரு வலுவான நோக்கத்துடன் இணைக்க தயாராகினர்.

யூனிலீவர் ஸ்ரீலங்காவின் தலைவரான ஹாஜர் அலபிபி கருத்துத் தெரிவிக்கையில், “2025 ஆம் ஆண்டளவில் 100,000 இலங்கை இளைஞர்களின் திறமையை மேம்படுத்தும் நோக்கத்துடன், 60 நாட்களில் இலங்கையைச் சுற்றி யூனிலீவர் திட்டத்தை அறிமுகப்படுத்துவதில் நாம் ஒப்பற்ற பெருமையடைகிறோம். அடுத்து வரும் 60 நாட்களில், உத்வேகத்தின் ஒரு பயணத்தை காணலாம். பயிலுனர் பட்டதாரி மாணவர்களை எதிர்காலத்திற்கு அவசியமான தகுதி, திறன்களை வழங்கி அவர்களை வளப்படுத்துவதில் கவனம் செலுத்தி, எதிர்கால பணியிடம் தொடர்பான வளர்ந்து வரும் துறைகளில் சிறந்து விளங்க இது அவர்களை மேம்படுத்தும். இந்த திட்டமானது எதிர்கால தலைவர்களை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. ’60 நாட்களில் இலங்கையை சுற்றி யூனிலீவர்’ திட்டத்தின், APIIT இல் வளாகத்தில் இடம்பெற்ற எமது முதலாவது ஈடுபாட்டு முயற்சியானது, அதிகளவான சாதகமான பின்னூட்டங்களை வழங்கியுள்ளது என்பதை குறிப்பிடுவதில் நாம் மகிழ்ச்சியடைகிறோம். இத்தேசத்தின் இளைஞர்களுக்கு சிறந்த எதிர்காலத்தை கட்டியெழுப்புவதற்கு யூனிலீவர் ஸ்ரீலங்காவுடன் இணைந்து ஒத்துழைப்பு வழங்கியமைக்காக APIIT குழுவிற்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்.” என்றார்.

APIIT, Business School and Foundation நிகழ்ச்சி தலைவர் டாக்டர். ஹசுலி பெரேரா தெரிவிக்கையில், “APIIT உடனான ’60 நாட்களில் இலங்கையை சுற்றி யூனிலீவர்’ திட்டத்தின் வளாக ஈடுபாட்டு முயற்சியானது, தொழில் நுண்ணறிவுகளை மட்டும் வழங்காது, சுய அடையாள பயணத்திற்கான விலைமதிப்பற்ற வாய்ப்பையும் எமது மாணவர்களுக்கு வழங்கியது. யூனிலீவர் தொழில்வாழ்க்கை அறிவூட்டலானது, எமது மாணவர்களுக்கு தொழில் பயிலல் மற்றும் வேலை வாய்ப்புகள் பற்றிய அர்த்தமுள்ள கலந்துரையாடல்களில் ஈடுபடுவதற்கும் அவர்களின் வாழ்க்கைப் பாதைகளை நிர்ணயிப்பதற்குமான பிரத்தியேகமான தளத்தை வழங்கியது. இந்நிகழ்வு ஒரு மாபெரும் வெற்றியாக அமைந்ததோடு, இந்த வாய்ப்பை எமக்கு வழங்கிய யூனிலீவர் ஸ்ரீலங்கா நிறுவனத்திற்கு எமது மனமார்ந்த பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.” என்றார்.

ஒவ்வொரு பல்கலைக்கழக ஈடுபாட்டு நிகழ்வின் போதும், பயிலுனர் பட்டதாரி மாணவர்கள் யூனிலீவர் ஸ்ரீலங்காவின் வணிகத் தலைவர்களுடன் நெருக்கமாக இணையும் வாய்ப்பைப் பெறுவார்கள். அது மாத்திரமன்றி, அவர்கள் தனிப்பட்ட ரீதியான தொழில்வாழ்க்கை அறிவூட்டல்களை பெறுவதற்கான வாய்ப்பையும் பெறுவார்கள். நேருக்குநேர் கலந்துரையாடலை மெடிக்கொள்வதன் மூலம் எவ்வாறு பெருநிறுவன உலகில் வெற்றிகரமாக நுழைவது என்பதோடு, அவர்களது தொழில்வாழ்க்கை பயணத்தை எவ்வாறு வடிவமைப்பது என்பதற்கான வழிகாட்டலையும் இது வழங்கும். யூனிலீவர் ஸ்ரீலங்காவின் ’60 நாட்களில் இலங்கையைச் சுற்றி யூனிலீவர்’ பிரசாரத் திட்டமானது வெறுமனே ஒரு பயணம் அல்ல என்பதோடு, இது இலங்கை இளைஞர்களின் திறனை வளர்ப்பதற்கும், அவர்களின் ஆர்வத்தைத் தூண்டுவதற்கும், எதிர்கால தொழில் உலகில் வெற்றிக்கான கருவிகளை அவர்களுக்கு வழங்குவதற்குமாக அர்ப்பணிக்கப்பட்ட ஒரு திட்டமாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

Share

You may also like...