மதிப்புமிக்க ‘சேவா அபிமன்’ விருதுகள் மூலம் தனது ஊழியர்களை கௌரவித்த Ocean Lanka

இலங்கையின் மிகப் பெரிய தைத்த ஆடை உற்பத்தியாளரான Ocean Lanka (Pvt) Ltd, அதன் மதிப்புமிக்க ‘சேவா அபிமன்’ விசுவாசத்திற்கான விருதுகளின் மற்றொரு பதிப்பை அண்மையில் கொண்டாடியது. அதன் மதிப்புமிக்க ஊழியர்களின் அசைக்க முடியாத அர்ப்பணிப்புக்கு மதிப்பு வழங்கும் வகையில் இந்நிகழ்வு அமைந்துள்ளது. இந்த வருடாந்த கௌரவிப்பு நிகழ்வானது, தனது பணியாளர்களிடம் இருந்து Ocean Lanka பெற்றுள்ள நம்பிக்கை மற்றும் விசுவாசத்தின் ஒரு வெளிப்பாடாகும்.

‘சேவா அபிமன்’ விருதுகள் மூலம் பல ஆண்டுகளாக ஒப்பிட முடியாத விசுவாசத்தையும் சேவையையும் வெளிப்படுத்திய தனது ஊழியர்களை Ocean Lanka (Pvt) Ltd அங்கீகரித்து கௌரவிப்பதில் பெருமை கொள்கிறது. இவ்வருடம், அர்ப்பணிப்புள்ள 187 ஊழியர்கள் கௌரவிக்கப்பட்டனர். அவர்களில் 127 ஊழியர்கள் 10 வருட சேவைக் கால மைல்கல்லை கடந்தவர்ககள் என்பதோடு 60 ஊழியர்கள் 20 வருடகால அசைக்க முடியாத சேவைக் காலத்தை கொண்டாடினர். இந்த குறிப்பிடும்படியான சாதனையானது, Ocean Lanka குழுவினரின் நீடித்த அர்ப்பணிப்பை எடுத்துக்காட்டுகிறது.

இந்நிகழ்வு குறித்து தனது உணர்வுபூர்வமான கருத்தை வெளியிட்ட Ocean Lanka (Pvt) Ltd. நிறுவனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் Dr. Austin Au, “Ocean Lanka மீது எமது அர்ப்பணிப்புள்ள ஊழியர்கள் வைத்துள்ள அபரிமிதமான நம்பிக்கை மற்றும் விசுவாசத்தை எண்ணி நாம் மகிழ்ச்சியடைகிறோம். ‘சேவா அபிமன்’ ஆனது வெறுமனே விருது வழங்கும் விழா மாத்திரமல்ல, அது எம்மை முன்னோக்கி கொண்டு செலுத்தும் ஒரு கொண்டாட்டமாகும். இது எமது பணியாளர்களின் அர்ப்பணிப்பில் ஆழமாக வேரூன்றிய ஒன்றாகும். தமது நீண்ட கால சேவைக்கான கௌரவத்தைப் பெறுகின்ற ஊழியர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதை காணும்போது, விசுவாசம் மற்றும் அர்ப்பணிப்பை வளர்ப்பதில் எமது நிறுவனம் கொண்டுள்ள உறுதிப்பாடு இதிலிருந்து தெளிவாக தென்படுகிறது.” என்றார்.

Ocean Lanka அதன் ஊழியர்களின் தொழில்முறை மேம்பாடு மற்றும் அவர்களது விசுவாசம் ஆகியவற்றில் உறுதியாக உள்ளது. அதற்காக நிறுவனம் அதன் ஊழியர்களுக்கு ஊக்குவிப்புகளை தொடர்ச்சியாக ஒதுக்கும் என்பதோடு, அவர்கள் தங்களது சிறந்த செயற்றிறனை தொடர்ச்சியாக வழங்க ஊக்குவிக்கும் வகையிலான நடவடிக்கைகளை முன்னெடுக்கும்.

‘சேவா அபிமன்’ விசுவாசத் திட்டம் (Loyalty Program) போன்ற திட்டங்கள் மூலம், Ocean Lanka (Pvt) Ltd நிறுவனம் தொழிற்துறையில் முன்னணியில் இருப்பதை உறுதிப்படுத்துவதோடு மட்டுமல்லாமல், தனது பெறுமதிவாய்ந்த சொத்தாக கருதப்படும் ஊழியர்களுக்கு மதிப்பு வழங்கி முதலீடு செய்யும் நிறுவனமாக இருப்பதற்கான தனது உறுதிப்பாட்டைக் காட்டுகிறது. Ocean Lanka (Pvt) Ltd மற்றும் அதன் அர்ப்பணிப்புள்ள பணியாளர்களுக்கு இடையே நீண்ட கால உறவுகளைக் கொண்டாடுவதற்கான ஒரு தளமாக இந்த நிகழ்வு விளங்குவதோடு, வேலைத்தளத்தில் சிறந்து விளங்குவதற்கும், விசுவாசத்தை காண்பிப்பதற்குமான நிறுவனத்தின் நீடித்த அர்ப்பணிப்பை காண்பிக்கிறது. Ocean Lanka (Pvt) Ltd நிறுவனம் தைத்த ஆடைத் துறையில் தொடர்ச்சியாக முன்னேறி வருகின்றது. அத்துடன், அதன் பணியாளர்களிடையே திறமை, அர்ப்பணிப்பு, அசைக்க முடியாத விசுவாசத்தை வளர்க்கும் பணிச்சூழலை வளர்ப்பதில் நிறுவனம் தொடர்ச்சியாக கவனம் செலுத்துகிறது

Share

You may also like...