மாதவிடாய் ஏழ்மை தொடர்பிலான பாரிய பணிக்காக, சிறந்த 50 தொழில்முறை மற்றும் தொழில் புரியும் பெண்கள் உலகளாவிய விருதை வென்ற Fems AYA
சிறந்த 50 தொழில்முறை மற்றும் தொழில் புரியும் பெண்கள் உலகளாவிய விருது (Top 50 Professional & Career Women Global Awards) விழாவில், ‘Fems AYA’ எனும் அதன் புரட்சிமிக்க திட்டத்திற்காக, ‘ஆண்டின் சிறந்த சமூக முன்முயற்சியை மையமாகக் கொண்ட பெண்களை முன்னிலைப்படுத்திய திட்டம்’ (Best Community Initiative Focusing on Women Led Project of the Year) எனும் மதிப்புமிக்க விருதை வென்றது. இந்தத் திட்டம், 270,000 குடும்பங்களுக்கு மாதவிடாய் தொடர்பான தயாரிப்புகளை அணுகக்கூடியதாகவும் கட்டுப்படியான விலையில் அதனை வழங்குவதன் மூலம் எண்ணற்ற பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு அதிகாரம் அளித்துள்ளது. அதே நேரத்தில் நாடு முழுவதும் உள்ள 15,000 இற்கும் அதிக பெண்களுக்கு இரண்டு வருடங்களில் சிறந்த மாதவிடாய் சுகாதார நடைமுறைகள் தொடர்பான பயிற்சி மற்றும் அறிவையும் இது வழங்கியுள்ளது. விழிப்புணர்வு ஏற்படுத்தும் செயலமர்வுகள் மூலம் சமூகத்தில் காணப்படும் மாதவிடாய் தொடர்பான இழிவான கருத்துகளை தகர்த்தெறியவும், அதன் மூலம் இலங்கையில் உள்ள பெண்களை தங்களது வெற்றிப் பயணத்தில் தடுத்து நிறுத்த முடியாதவர்களாகவும் மாற்றியமைக்க உதவியுள்ளது.
இலங்கையில் மாதவிடாய் ஏற்படும் பெண்களில் 30% இற்கும் குறைவானவர்களே ஆரோக்கிய நப்கின்களை தவறாமல் பயன்படுத்துகின்றனர் என்பதை உணர்ந்து, அதன் மூலம் முன்வைக்கப்பட்ட சவாலை ஏற்றுக்கொண்ட முதல் வர்த்தக நாமம் Fems ஆகும். Fems AYA (Fems அவள்) முன்முயற்சியானது விழிப்புணர்வை உருவாக்குதல், கட்டுப்படியான விலையை ஏற்படுத்துதல், பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு அதிகாரம் அளிப்பதற்கான அணுகலை மேம்படுத்துதல், மாதவிடாய் தொடர்பான களங்கத்தை அகற்றுதல், மாதவிடாய்க்கு ஆதரவான சூழலை உருவாக்குதல் ஆகியவற்றில் கவனம் செலுத்துகிறது. Fems AYA wing ஆரோக்கிய நப்கின்கள் கொண்ட ஒரு பொதிக்கு ரூ. 99 எனும் மிகக் குறைந்த விலை மட்டத்தில் வழங்குவதை கடந்த 2021 ஜூனில் 10 ஆரம்பித்ததன் மூலம், இத்திட்டமானது கட்டுப்படியான விலை தொடர்பான கவலையை நிவர்த்தி செய்தது. இது சிறந்த மாதவிடாய் சுகாதாரத்திற்காகவும், குறிப்பாக ஆரோக்கிய நப்கின்களை கட்டுப்படியான விலையில் பெற முடியாது என கருதுபவர்களுக்காகவும், உயர் தரத்திலான தெரிவாகவும் அமைந்துள்ளது. Fems AYA ஆனது, நகர்ப்புறங்களில் மட்டுமல்லாது, நாடளாவிய ரீதியிலும் கிடைக்கும் வகையில் வசதி செய்யப்பட்டுள்ளது.
Fems AYA ஆனது, சர்வோதய பெண்கள் அமைப்பு, Sarvodaya Fusion, The Arka Initiative, MJF Charitable Foundation ஆகிய ஒரே எண்ணம் கொண்ட 4 அமைப்புகளுடன் கூட்டுச் சேர்ந்துள்ளது.
இதற்கு மேலும் மதிப்புச் சேர்க்கும் வகையில், 124,000 இற்கும் மேற்பட்ட பெண்கள் மற்றும் சிறுமிகளின் மாதவிடாய் தொடர்பான அனைத்து வயதுப் பிரிவினரிடையேயும், சிறந்த மாதவிடாய் ஆரோக்கியம் மற்றும் சுகாதாரம் குறித்த விழிப்புணர்வையும் அதற்கான அணுகலையும் உருவாக்குவதன் மூலம் Fems AYA மூலம் மாதவிடாய் ஏழ்மையை முடிவுக்குக் கொண்டுவர உதவுகின்றது. கல்வி நிறுவனங்கள் மற்றும் பெருநிறுவனங்களில் நிறுவப்பட்ட, ஆரோக்கிய நப்கின் பெறும் விசேட தொகுதியை வடிவமைத்துள்ளதன் மூலம், Fems புத்தாக்கமான முன்னேற்றப் படிகளை எடுத்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
18 வருடங்களுக்கும் மேலான தனது பயணத்தில், பல்வேறு சமூக ஆதரவு நடவடிக்கைகள் மூலம் பெண்களின் முன்னேற்றத்திற்கான முன்னோடியான முயற்சிகளை இவ்வர்த்தகநாமம் தொடர்ந்து வருகிறது. Fems AYA ஆனது, ஒரு தேசிய முன்முயற்சி என்பதோடு, Fems அதன் இலக்குகளோடு இணைந்ததாக, இலங்கையில் பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு மாதவிடாய் வறுமை அற்ற வாழ்க்கையைத் தொடர உதவும் அதே நேரத்தில், மாதவிடாய் தொடர்பான சமூகத்திலுள்ள இழிவை நீக்கி, அது ஒரு சாதாரண உடல் செயற்பாடு என்பதை தெளிவூட்டுகிறது.
Recent Comments