மின்சார Mercedes-Benz EQ வாகனங்கள் மூலம் இலங்கையில் நிலைபேறான போக்குவரத்திற்கு வழி ஏற்படுத்தும் DIMO

EQ Ranges M02B EQS EQA EQB EQC EQE sRGB

இலங்கையில் Mercedes-Benz இன் ஒரே அங்கீகரிக்கப்பட்ட பொது விநியோகஸ்தரும், பல்வகைத் துறை கூட்டு நிறுவனமுமான DIMO ஆனது, உள்ளூர் சந்தையில் Mercedes-Benz EQ மின்சார வாகன வகைகளை அறிமுகப்படுத்தியதன் மூலம், நிலைபேறான போக்குவரத்தை நோக்கிய ஒரு முக்கிய முன்னேற்ற பாதையை ஏற்படுத்தியுள்ளது.

DIMO வழங்கும் மின்சார Mercedes-Benz EQ வகைகளில், Mercedes-Benz EQA, EQB, EQE, EQE SUV, EQS & EQS SUV ஆகியவற்றின் ஈர்க்கக்கூடிய வரிசை உள்ளடங்கியுள்ளது. இதன் மூலம் பல்வேறு மட்டத்திலான வாடிக்கையாளர்களுக்கு நிறுவனம் சேவையை வழங்குகிறது.

Mercedes-Benz EQ வாகனங்களின் மின்சார வகையின் புதிய நுழைவு நிலை வகையின் பெயரே EQA ஆகும். அதன் SUV உடலின் மாறுபடும் வடிவமைப்பானது, அதில் பயணிக்கும் சாரதிக்கு உச்ச மகிழ்ச்சியை தரும் அம்சமாக காணப்படுகின்றது. Mercedes-Benz EQA ஆனது, வாகனத்தின் அனைத்து உற்சாகமூட்டும் பண்புகளையும் கொண்டுள்ளதோடு, வாகனத்தை செலுத்த ஒரு திறனான மின்சார powertrain இணைக்கப்பட்டுள்ளது. 140kW மின்வலுவைக் கொண்ட EQA ஆனது, 450 கிலோ மீற்றர் வரை பயணிக்கக் கூடியதாகும்.

EQB ஆனது Mercedes-EQ வின் முற்போக்கான சொகுசுத் தன்மை கொண்ட, சிறப்பம்சமான SUV அம்சங்களைக் கொண்டுள்ளது. 140kW மின்வலுவைக் கொண்ட EQB ஆனது, 450 கிலோ மீற்றர் வரை பயணிக்கக் கூடியதாகும். பெரிய வாகனங்களுக்கான (EVA2) மின்சார கட்டமைப்பை அடிப்படையாகக் கொண்ட மற்றொரு மாதிரி வகையான EQE business saloon ஆனது, விளையாட்டு நோக்க வடிவமைப்பை வெளிப்படுத்துகிறது. 215kW மின்வலு கொண்ட EQE ஆனது, 650 கிலோ மீற்றர் வரை பயணிக்கக் கூடியதாகும். EQE 4MATIC SUV ஆனது, EQE executive sedan இன் பல்வேறு அம்சங்கள் கொண்ட வகையாகும். 215kW மின்வலு கொண்ட EQE SUV ஆனது, 500 கிலோ மீற்றர் வரை பயணிக்கக் கூடியதாகும்.

Mercedes-Benz EQ இன் முதலாவது முழுமையான மின்சார சொகுசு சலூனின் அறிமுகமானது, EQS ஆடம்பரப் பிரிவை மீள்வரையறை செய்கிறது. இது அதிநவீன தொழில்நுட்பம், வடிவமைப்பு, செயற்பாடு, இணைப்பு ஆகியவற்றை உள்ளடக்கியுள்ளதோடு, சாரதிக்கும் உடன் பயணிப்போருக்கும் ஒரு ஒப்பற்ற அனுபவத்தை உறுதியளிக்கிறது. 265kW மின்வலு கொண்ட EQS ஆனது, 700 கிலோ மீற்றர் வரை பயணிக்கக் கூடியதாகும்.

EQS 4MATIC SUV ஆனது, வழக்கமான வடிவமைப்பிலிருந்து மாறுபட்ட, ஏழு பேர் பயணிப்பதற்கான ஒரு ஆடம்பரமான தீர்வாக உள்ளது. 265kW மின்வலு கொண்ட EQS SUV ஆனது, 550 கிலோ மீற்றர் வரை பயணிக்கக் கூடியதாகும்.

DIMO நிறுவனத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளரும், குழுமத்தின் வாகனப் பிரிவின் மேற்பார்வையாளருமான ரஜீவ் பண்டிதகே இது தொடர்பில் தெரிவிக்கையில், “உலகளாவிய ரீதியில், மின்சாரமயமாக்கல்  துறையில் நாம் ஒரு முக்கியமான கட்டத்தில் நிற்கிறோம். Mercedes-Benz மின்சார வாகனங்களின் பல்துறை அம்ச வரிசையை வெளியிடுவதன் மூலம், இந்த மின்சாரமயமாக்கல் பயணத்திற்காக DIMO முழுமையாகத் தயாராக உள்ளது. இந்த வாகனங்களுக்கான பராமரிப்புத் தகுதிகள் நமது சமூகத்தின் பாதுகாப்பை உறுதி செய்வதில் முக்கிய பங்காற்றுகின்றன. எமது உயர் பயிற்சி பெற்ற நிபுணர்கள் மற்றும் அதிநவீன கருவிகளைக் கொண்ட எமது குழுவினர் இந்த மின்சார வாகனங்களுக்கு சேவை வழங்குவதற்கும் பழுதுபார்ப்பதற்கும் சிறப்பாக தயாராக உள்ளனர். இதேவேளை, சூரிய மின்கலத் தொகுதி தீர்வுகள், வீடு மற்றும் வணிக நிறுவனங்களில் சார்ஜிங் இற்கான நிறுவல்கள் உள்ளிட்ட பிரத்தியேகமாக உருவாக்கப்பட்ட EV உட்கட்டமைப்புகளை வழங்குவதற்கு DIMO தயார் நிலையில் உள்ளது. வாகனத் துறையில் ஒரு முன்னோட்டமாக, நாடு முழுவதும் மின்சார வாகன போக்குவரத்தை ஏற்படுத்துவதன் மூலம், தேசத்தின் கனவுகள் மற்றும் அபிலாஷைகளை ஊக்குவிப்பதற்காக DIMO உறுதி பூண்டுள்ளது.” என்றார்.

இலங்கையில் Mercedes-Benz இன் ஒரே அங்கீகரிக்கப்பட்ட பொது விநியோகஸ்தரான DIMO ஆனது, EQA மற்றும் EQB இற்கு Mercedes-Benz AG இனது உற்பத்தியாளர் உத்தரவாதத்தை 8 வருடங்களுக்கு அல்லது 160,000 கி.மீ. இற்கு வழங்குகிறது. EQA மற்றும் EQB இற்கு 10 வருடங்கள் அல்லது 250,000 கி.மீ. உற்பத்தியாளர் உத்தரவாதத்தை வழங்குகிறது. EQE மற்றும் EQS மாதிரிகளுக்கு HV மின்கலங்கள், விற்பனைக்குப் பின்னரான சேவைகள், நாடு முழுவதும் 24 மணிநேர இலவச வீதியோர உதவி, கணனிமயமாக்கப்பட்ட வாகன பராமரிப்புப் பதிவுகள் உள்ளிட்ட பல்வேறு சேவைகளை வழங்குகிறது.

அனைத்து பழுதுபார்ப்புகளும் Mercedes-Benz தொழில்நுட்ப வல்லுனர்களால் மேற்கொள்ளப்படுகின்றன. Mercedes-Benz AG வழிகாட்டல்களுக்கு அமைய, Mercedes-Benz AG இனால் பரிந்துரைக்கப்பட்ட அந்தந்த வாகன மாதிரிகளுக்கு ஏற்றவாறு வடிவமைக்கப்பட்ட, சமீபத்திய மென்பொருள் புதுப்பிப்புகளுடன், உற்பத்தியாளர் தொகுதிகள் மூலம் நேரடியாக இவை மேற்கொள்ளப்படுகின்றன.

DIMO நிறுவனத்தின் மதிப்பிற்குரிய கூட்டாளரான Mercedes-Benz AG, அதன் ‘Ambition 2039’ திட்டத்தின் கீழ் காபன் நடுநிலையாக்கல் (carbon-neutral) கொண்ட புதிய கார் வகைகளை உருவாக்குவதற்காக தன்னை அர்ப்பணித்துள்ளது. 2030 ஆம் ஆண்டளவில், Mercedes-Benz AG இனால் வெளியிடுப்படும் கார்களில் 50% இற்கும் அதிகமானவை  மின்சாரத்தால் இயங்கும் தொகுதிகளைக் கொண்டிருக்கும். மேலும், Mercedes-Benz AG ஆனது அதன் உற்பத்திச் செயன்முறைகளில் காபன்-நடுநிலையாக்கலை உறுதி செய்வதோடு, வள-சேமிப்புப் மூலப்பொருட்களைப் பயன்படுத்தி, சுற்றுச்சூழலுக்கு இணக்கமான உணர்வு கொண்ட நடைமுறைகளுக்கு விரிவான அர்ப்பணிப்பை பிரதிபலிக்கிறது.

DIMO நிறுவனத்தின் மின்சார Mercedes-Benz EQ வகைகளின் அறிமுகமானது, நிலைபேறான போக்குவரத்தை நோக்கிய ஒரு மகத்தான முன்னேற்றத்தை வெளிப்படுத்துகிறது. ஒரு பொறுப்பான நிறுவனம் எனும் வகையில், இந்த வாகனங்களின் மின்கலங்களை அதன் வாழ்நாள் கடந்தவுடன் அவற்றை அப்புறப்படுத்துவதற்கும் மீள் ஏற்றுமதி செய்வதற்கும் அவசியமான வழிமுறைகளை DIMO நடைமுறைப்படுத்தியுள்ளது. நாட்டில் நெறிமுறையான வணிக நடைமுறைகளுக்கு இணங்கி நடக்கும் DIMO நிறுவனம், ஒரே எண்ணம் கொண்ட மதிப்புமிக்க வாடிக்கையாளர்கள் மற்றும் பங்குதாரர்களை கவரும் என்பதோடு, அவர்களை தக்கவைத்து, சந்ததி சந்ததியாக அவர்களது சரியான போக்குவரத்து கூட்டாளியாக அவர்களை முன்னோக்கிக் கொண்டு செல்ல எதிர்பார்க்கிறது.

Share

You may also like...