FACETS Sri Lanka: சர்வதேச இரத்தினக்கல் மற்றும் ஆபரணக் கண்காட்சி 2024 ஜனவரியில்
ஆசியாவின் முதன்மையான இரத்தினக்கல் மற்றும் ஆபரணக் கண்காட்சி தொடர்ச்சியாக 30ஆவது வருடமாக மீண்டும் இடம்பெறவுள்ளது. 2024 FACETS Sri Lanka கண்காட்சியானது, இலங்கையின் அதிசயங்களை உலகுக்குக் காட்சிப்படுத்துவதன் மூலம், நாட்டின் இரத்தினக்கல் மற்றும் ஆபரண கலாசாரத்தின் வரலாற்றை வெளிப்படுத்துகின்றது. உலகின் மிகச்சிறந்த இரத்தினக் கற்களை கொண்டுள்ளதன் மூலம், இலங்கை ஒரு இரத்தினக் களஞ்சியமாக உலகம் முழுவதும் அறியப்படுகின்றது. மிகப்பெரிய இரத்தினக்கல் மையங்களில் ஒன்றாக கருதப்படும் இலங்கையின் தனித்துவமான மற்றும் அழகிய இரத்தினக்கற்கள் உலகெங்கிலும் கேள்வியாக உள்ளன. இக்கண்காட்சியில் இலங்கை தனது அற்புதமான இரத்தினக்கற்களை காட்சிப்படுத்துவதற்கு மேலதிகமாக, உள்ளூர் கலாச்சார அம்சங்களுடன் உலகளாவிய போக்குகளை இணைக்கும் வகையிலான சிறப்பாக வடிவமைக்கப்பட்ட ஆபரண வடிவமைப்புகளையும் உற்பத்தி செய்து காண்பிக்கிறது.
இம்முறை FACETS கண்காட்சியானது, இலங்கையின் இரத்தினக்கல் மற்றும் ஆபரணத் துறையின் மூலவேர்களை எடுத்துக் காண்பிப்பதோடு, அரசர்கள் கால சகாப்தத்திற்குப் பயணித்து, பல ஆண்டுகளாக நாட்டின் இரத்தினங்கள் மற்றும் ஆபரணத் தொழில் எவ்வாறு வளர்ச்சியடைந்துள்ளது என்பதை வெளிப்படுத்துகின்றது. FACETS 2024 கண்காட்சியானது, வடிவமைப்பு மற்றும் கைவினைப்பொருளின் உணர்ச்சிகரமான அம்சத்தை மையமாகக் கொண்டு இரத்தினக்கற்கள் மற்றும் ஆபரணங்களின் உலகத்தை காட்சிப்படுத்துவதோடு, அவை ஆண்டாண்டு காலமாக எவ்வாறு வளர்ச்சியுற்றது என்பதையம் எடுத்துக் கூறுகின்றது. அது மாத்திரமன்றி, இது இத்தொழில்துறையின் எதிர்காலத்திற்கு அவசியமான விடயங்கள் தொடர்பில் கவனம் செலுத்துவதோடு, தற்கால போக்குடைய நகை வடிவமைப்புகள் மற்றும் எதிர்காலத்தில் உலகளாவிய பார்வையாளர்களை அது எவ்வாறு கவரும் என்பதையும் ஆராய்கிறது. FACETS கண்காட்சியின் 30ஆவது பதிப்பான இந்நிகழ்வானது, இத்தொழில்துறையை பாதிக்கும் பல்வேறு குறிப்பிடும்படியான விடயங்களில் கவனம் செலுத்தும் என்பதோடு, நிலைபேறானது முதல் நியாயமான வர்த்தகத்தை ஊக்குவித்தல் மற்றும் இத்தொழில்துறையை மேலும் வளர்ப்பதற்காக இத்தொழில்துறை கடைபிடிக்க வேண்டிய சூழல் தொடர்பான விழிப்புணர்வு நடைமுறைகள் தொடர்பிலும் கவனம் செலுத்தும். FACETS கண்காட்சியின் இந்தப் பதிப்பானது, இரத்தினக்கல் மற்றும் ஆபரணத் தொழிலில் இலங்கை எவ்வாறு நிலைபேறாதன்மையை ஒருங்கிணைத்துள்ளது என்பதை எடுத்துச் சொல்கின்ற, பிரத்தியேகமான நிலைபேறானதன்மையைக் கொண்டிருக்கும். இலங்கையின் முழு பெறுமதிச் சங்கிலியின் நிலைபேறானதன்மையானது, தன்னுடையது எனும் நிலையிலிருந்து சந்தைக்கு என்பதையும், இந்த உலகளாவிய கண்காட்சியானது, இது போன்ற வளம் மிக்க ஒரு நாடு, மிகவும் நிலைபேறான தளத்திற்கு மாறுவது முக்கியமானது என்பதையும், இலங்கை இரத்தினக்கல் மற்றும் ஆபரண சங்கம் மற்றும் இரத்தினக்கல் மற்றும் ஆபரண தொழிற்சங்கம் இணைந்து அறிவிப்பதில் பெருமிதம் கொள்கிறது.
FACETS 2024 கண்காட்சியானது 2024 ஜனவரி 06 முதல் 08 வரை கொழும்பு சின்னமன் கிராண்ட் ஹோட்டலில் நடைபெறவுள்ளது. சர்வதேச இரத்தினக்கல் மற்றும் ஆபரணக் கண்காட்சியானது, உலகளாவிய இரத்தினக்கல் மற்றும் ஆபரணத் தொழில்துறை, உயர் மட்ட வர்த்தக கொள்வனவாளர்கள், இரத்தினக்கற்கள் மற்றும் ஆபரண மொத்த விற்பனையாளர்கள், ஏற்றுமதியாளர்கள், உற்பத்தியாளர்கள், பட்டைதீட்டுவோர், சில்லறை விற்பனையாளர்கள் மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஆர்வமுள்ளவர்கள் உள்ளிட்ட அனைவரையும் ஒன்றிணைக்கவுள்ளது.
FACETS Sri Lanka – 2024 ஜனவரி 06 – 08,
கொழும்பு சின்னமன் கிராண்ட்
இப்போதே பதிவு செய்யுங்கள்: [email protected]
Recent Comments