2021 – 2022 ஜனாதிபதி சுற்றுச்சூழல் விருதுகளில் தங்கம் வென்றது யூனிலீவர்
2021-2022 ஆம் ஆண்டுக்கான ஜனாதிபதி சுற்றாடல் விருது வழங்கும் நிகழ்வில் அக்கரபத்தனையில் உள்ள யூனிலீவரின் Ceytea தொழிற்சாலை, சுற்றாடலுக்கு வழங்கிய பங்களிப்பிற்காக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் தங்க விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது.
மத்திய சுற்றாடல் அதிகாரசபையினால் (CEA) ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஜனாதிபதி சுற்றாடல் விருது விழாவில், சுற்றுச்சூழல் காப்பு மற்றும் பாதுகாப்பு விடயத்தில் சிறந்த பங்களிப்பைச் செய்த தனிநபர்கள் மற்றும் நிறுவனங்களுக்கு கௌரவமளிக்கப்பட்டன. ஜனாதிபதி விருதுகளான இவை இலங்கையில் சுற்றுச்சூழல் காப்பு மற்றும் பாதுகாப்புத் ஆகிய பிரிவுகளில் மிகவும் மதிப்புமிக்க அங்கீகாரமாக கருதப்படுகின்றது. 2021-2022 ஆம் ஆண்டிற்கான விருது வழங்கும் விழா 2023 ஏப்ரல் 28ஆம் திகதி ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் BMICH இல் நடைபெற்றது.
தனது தினசரி விநியோகச் சங்கிலி செயற்பாட்டில் நிலைபேறானதன்மை நடைமுறைகளை வெற்றிகரமாக ஒருங்கிணைத்து செயற்படும் Ceytea ஆனது, அதன் செயற்பாடுகளில் சுற்றுச்சூழல் மீதான தாக்கத்தைக் குறைப்பதில் பாரிய முன்னேற்றம் கண்டுள்ளது. கடந்த 10 ஆண்டுகளில், தொழிற்சாலை அதன் வலுசக்தி நுகர்வு மற்றும் நீர் நுகர்வு அளவுகளை முறையே 34% மற்றும் 71% ஆகவும், அதன் CO2 வெளியீட்டை 89% ஆகவும் குறைத்துள்ளது. 2014 ஆம் ஆண்டு முதல் Ceytea ஆனது, ஒரு புத்தாக்கமான கழிவு முகாமைத்துவத் திட்டத்தை செயற்படுத்தி வருகின்றது. இத்திட்டமானது, உற்பத்திச் செயன்முறையின் போது வெளியிடப்படும் சுமார் 70% கழிவுகளை, அதன் உயிரியல்-திண்மக் கழிவு கொதிகலனுக்கான எரிபொருளாக மாற்றவும் மீதமுள்ள 30% ஆன கழிவுகளை உயிரியல் உரமாக மாற்றவும் உதவுகிறது.
யூனிலீவர் Ceytea Instant Tea தொழிற்சாலையின் முகாமையாளர் திருமதி அனுஷா கொத்தலாவல இது தொடர்பில் தனது மகிழ்ச்சியை தெரிவிக்கையில், “நிலைபேறான அபிவிருத்தியை எமது தேசத்தில் முன்னெடுத்துச் செல்லும் முன்னோடியான நிறுவனங்களில் ஒன்றாக அங்கீகரிக்கப்பட்டதில் நாம் பெருமையடைகிறோம். எமது நிலைபேறான வளர்ச்சி தொடர்பான நிகழ்ச்சி நிரலை செயற்படுத்துவதில் எனது குழு மிக ஆர்வத்துடனும் அர்ப்பணிப்புடனும் செயற்பட்டு வருகின்றது. இதன் ஒரு பகுதியாக, பயன்படுத்தப்பட்ட தேயிலை இலைக் கழிவுகளில் 70% ஆனவை, தொழிற்சாலைக்குத் தேவையான நீராவி சக்தியை உருவாக்குவதற்கான உயிரியில் கொதிகலனுக்கு அனுப்பப்படுகிறது. மீதமுள்ளவை எமது தேயிலைத் தோட்டங்களில் இடுவதற்கு அவசியமான உயிரியல் உரங்களை உற்பத்தி செய்ய பயன்படுத்தப்படுகின்றன. இவ்வாறு செய்வதன் மூலம், எமது தேயிலைக் கழிவுகளுக்கு ஒரு வட்டப் பொருளாதாரத்தை உருவாக்கி, அதன் மூலம் எமது சுற்றுச்சூழல் பாதிப்பை நடுநிலையாக்குகிறோம்.” என்றார்.
இது தொடர்பில், யூனிலீவர் விநியோகச் சங்கிலிப் பணிப்பாளர் தமித் அபேரத்ன தனது கருத்துகளை பகிர்ந்து கொண்டபோது, “யூனிலீவர் ஸ்ரீ லங்கா ஆகிய நாம், எமது விநியோகச் சங்கிலியின் போது சுற்றாடலுக்கு ஏற்படும் பாதிப்பை குறைப்பதற்கான சில படிகளுடன் முன்னோக்கிச் செயற்படக்கூடிய புத்தாக்கமான வழிகளை நாம் தொடர்ந்து தேடுவதற்கு முயற்சிக்கிறோம். இந்த அங்கீகாரம் எமக்குள் ஒரு பெருமையை ஏற்படுத்துவதோடு, சாதனை உணர்வையும் ஏற்படுத்துகிறது. எமது தொழிற்துறையில் எம்மாலான சாத்தியமான விடயங்களை அதன் எல்லை வரை கொண்டு சேர்ப்பதற்கு இது எம்மைத் தூண்டுகிறது. எமது மூலோபாய தூநோக்கிற்கு உண்மையாக இருந்து, நிலைபேறான வாழ்க்கையை எல்லோருக்கும் பொதுவானதாக மாற்றுவதற்காக தமது கடமைக்கு அப்பாற்பட்டு செயற்படும் இத்தொழிற்சாலையின் முகாமையாளர் திருமதி. அனுஷா கொத்தலாவல மற்றும் அவரது குழுவினருக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.” என்றார்.
இது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள யூனிலீவர் ஸ்ரீ லங்கா நிறுவனத்தின் தலைவரும் அதன் முகாமைத்துவப் பணிப்பாளருமான திருமதி ஹாஜர் அலபிபி, “சுற்றுச்சூழலுக்கான எமது சாதகமான பங்களிப்புகளுக்காக ஜனாதிபதி விருது எனும் அங்கீகாரத்தைப் பெறுவது யூனிலீவர் ஸ்ரீ லங்கா ஆகிய எமக்கு உண்மையில் ஒரு பெருமையான தருணமாகும். இது உண்மையிலேயே எமது மக்கள், இந்த பூமி, சமூகங்களை எல்லாவற்றிற்கும் முதலாக முன்னிறுத்தி வைப்பதற்காக நாம் மேற்கொள்ளும் முயற்சிகள் மற்றும் அர்ப்பணிப்புக்கான ஒரு சான்றாகும். சுற்றாடல் பாதுகாப்பு தொடர்பில் அங்கீகாரமளிப்பதற்காக, ஒரு வலுவான கட்டமைப்பை நிறுவி, நிலைபேறான இலங்கையை நோக்கிச் செல்வதற்காக பெருநிறுவனங்களை ஊக்குவிக்கும் ஜனாதிபதி மற்றும் சுற்றாடல் அமைச்சு, மத்திய சுற்றாடல் அதிகார சபை ஆகியோருக்கு எமது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.” என்றார்.
Ceytea நிறுவனத்தால் தயாரிக்கப்படும் Black Instant தேயிலைத் தூளானது, Pepsi-Lipton International JV இனால் தயாரிக்கப்படும் ஐஸ் டீயின் (Iced Tea) அடிப்படை மூலப்பொருளாகப் பயன்படுத்தப்படுகிறது. அந்நிறுவனம் ‘Lipton’ மற்றும் ‘Brisk’ போன்ற உலகப் புகழ்பெற்ற வர்த்தகநாமங்களின் கீழ் உலகளாவிய ரீதியில் 70% ஆன ஐஸ் டீ தொடர்பில் காணப்படும் கேள்வியை பூர்த்தி செய்கிறது. இலங்கையில் உள்ள Black Tea உற்பத்தித் தொழில்துறையின் தண்டு மற்றும் நார்ப்பொருளான BMF ஐ தனது முக்கிய மூலப்பொருளாக Ceytea கொள்வனவு செய்து, அதி நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி Black Instant தேயிலைத் தூளாக அதனை மாற்றுகிறது. இதன் மூலம் தேயிலைக் கழிவுகளிலிருந்து பெறுமதியான உற்பத்தியை உருவாக்குகிறது. இவ்வாறு, சிலோன் தேயிலையின் நன்மதிப்பை உலகின் மிக வேகமாக வளர்ந்து வரும் பான வியாபாரத்திற்கு கொண்டு செல்வதோடு, Ceytea மூலம் 17 மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கும் அதிக அந்நியச் செலாவணியை நாட்டிற்கு கொண்டு வருவதன் மூலம், நாட்டின் மிக உயர்ந்த பெறுமதி சேர்க்கப்பட்ட தேயிலைக் கைத்தொழில்களில் ஒன்றாக விளங்குகின்றது.
Ends
Photo Captions
Recent Comments