‘LIFE’: ஐந்தாண்டு கால மீள்காடாக்கத் திட்டத்திற்கான தனது பங்களிப்பை வெற்றிகரமாக நிறைவுசெய்த DIMO

இலங்கையில் முன்னணியிலுள்ள பல்வகைத் துறை கூட்டு நிறுவனமான DIMO, கன்னெலியவில் நடைமுறைப்படுத்தப்பட்ட 5 வருட வனப் பாதுகாப்பு மறுசீரமைப்பு திட்டமான ‘LIFE’ திட்டத்திற்கான தனது பங்களிப்பை சமீபத்தில் வெற்றிகரமாக நிறைவு செய்தது. இந்த காடு மீளுருவாக்க திட்டமானது, Biodiversity Sri Lanka (BSL) உள்ளிட்ட பல்வேறு தனியார் துறை நிறுவனங்களுடன் இணைந்து, இயற்கை பாதுகாப்புக்கான சர்வதேச ஒன்றியத்தின் (IUCN) தொழில்நுட்ப ஆதரவுடனும், வனவள பாதுகாப்பு திணைக்களத்தின் வழிகாட்டலுடனும் மேற்கொள்ளப்பட்டு வந்தது.

கன்னெலிய வனப் பகுதியில் அழிவடைந்த நிலையில் காணப்பட்ட 12 ஹெக்டயர் வனப்பகுதியை மீளகட்டமைப்பதற்காக 15 தனியார் துறை நிறுவனங்களுடன் இணைந்து ‘LIFE’ திட்ட பயணத்தை DIMO நிறுவனம் 2016 இல் ஆரம்பித்தது. பல வருட திட்டமிடல், செயற்படுத்தல், கண்காணிப்பு நடவடிக்கைகளைத் தொடர்ந்து, மீள்காடாக்கல் காலம் முழுவதும் 46 பூர்வீக இனங்களைச் சேர்ந்த 18,000 இற்கும் மேற்பட்ட தாவரங்கள் மீண்டும் மீள்நடுகை செய்யப்ப்பட்டதோடு, அவை குறித்த இடத்தில் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தைக் காட்டியுள்ளன. மேம்படுத்தப்பட்ட உயிர்ப்பல்வகைமை மற்றும் சூழல் தொகுதி சேவைகளுக்கான மதிப்பிற்கு ஒரு பெறுமதியை சேர்க்கும் நோக்கத்துடனும், இலங்கையின் உயிர்ப்பல்வகைமைக்கு உயிரூட்டவுமாக இத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டிருந்தது.

அத்துடன் இந்த மீள்காடு உருவாக்க திட்டமானது, வண்ணத்துப்பூச்சிகளின் பல்வகைத்தன்மையிலும் குறிப்பிடத்தக்க வளர்ச்சியைக் காண்பித்துள்ளதோடு சமீபத்திய உயிர்ப்பல்வகைமை ஆய்வின் அடிப்படையில், குறித்த மறுசீரமைப்பு பகுதியில் 22 வகையான வண்ணத்துப்பூச்சிகளை காணக்கூடியதாக உள்ளது. இது ஒரு சிறந்த மாற்றத்தை வெளிப்படுத்துகிறது. ஏனெனில் இவ்வண்ணத்துப்பூச்சிகள் சூழல் மறுசீரமைப்பு தொடர்பான முன்னேற்றத்தின் சிறந்த குறிகாட்டியாகும். அது மாத்திரமன்றி இப்பகுதியில் ஆரம்பத்தில் காணப்படாத பல்வேறு புதிய இன விலங்குகள் பதிவாகியுள்ளன. இத்தளத்தின் பல்வேறு பகுதிகள், இரண்டாவது மற்றும் மூன்றாவது மீளுருவாக்க மட்டத்தை அடைந்ததன் விளைவாக, ஏராளமான விலங்கினங்களை அவை ஈர்த்துள்ளன. இப்பகுதியில் இதுவரை 100 வகையான விலங்கினங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

2017 – 2030 ஆம் ஆண்டுக்கான ஐக்கிய நாடுகளின் காடுகளுக்கான மூலோபாயத் திட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள பல்வேறு இலக்குகளுடன் இத்திட்டம் ஒருங்கமைகின்றது. நிலைபேறான வன முகாமைத்துவம் மூலம் உலகளாவிய ரீதியிலான வனப் பரப்பு இழப்பை மாற்றியமைப்பது இதன் 1ஆவது இலக்காகும். ‘LIFE’ திட்டமானது, 12 ஹெக்டயர் காட்டை மீளமைப்பதன் மூலம் இந்த இலக்கிற்கு நேரடியாக பங்களிப்பதோடு, இலங்கையின் மிக பல்வகைப்பட்ட வெப்பமண்டல ஈர வலய பசுமையான வனச் சூழல் தொகுதிகளில் ஒன்றில் நிலைபேறான முகாமைத்துவத்தை பேண ஊக்குவிக்கிறது.

உலகளாவிய ரீதியில் பாதுகாக்கப்பட்ட காடுகளின் பரப்பளவை கணிசமாக அதிகரிப்பதை உள்ளடக்கிய 3ஆவது இலக்குடனும் ‘LIFE’ திட்டம் ஒத்துப்போகிறது. கன்னெலியவில் உள்ள குறித்த இடம் ஏற்கனவே வனவள பாதுகாப்புத் திணைக்களத்தின் நீண்டகால நிர்வாகத் திட்டங்களின் கீழ் உள்ளது. இறுதியாக, நிலைபேறான வன நிர்வாகத்தை செயல்படுத்துவதற்கும், விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப ரீதியான ஒத்துழைப்பு மற்றும் கூட்டாண்மைகளை வலுப்படுத்துவதற்கும் அனைத்து மூலங்களிலிருந்தும் புதிய மற்றும் மேலதிக நிதி ஆதாரங்களைத் திரட்டுவது 4ஆவது இலக்கில் அடங்குகின்றது. இந்தத் திட்டமானது, 15 தனியார் துறை நிறுவனங்களுக்கிடையேயான ஒத்துழைப்பாக இருப்பதால், இந்த இலக்குடன் ஒத்துப்போவதுடன், இத்திட்டத்திற்கான மொத்த முதலீடு 5 வருட காலத்திற்கு சுமார் 100,000 அமெரிக்க டொலர்களாக உள்ளது.

DIMO குழுமத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி கஹநாத் பண்டிதகே இது தொடர்பில் தெரிவிக்கையில், “எமது நிறுவனத்தால் பயன்படுத்தப்பட்ட நிலத்திற்கான இழப்பீடாக மற்றுமொரு பாதிப்படைந்த வனப்பகுதியை மீள்காடாக்குதல் எனும், காடுகளை மீளக்கட்டமைப்பது தொடர்பான எமது அர்ப்பணிப்பை வெளிப்படுத்துகின்ற, 1:1 எனும் மறுசீரமைப்பு தொடர்பான எமது நிலைபேறானதன்மை இலக்குடன் இத்திட்டம் ஒருங்கிணைந்திருப்பதால், இத்திட்டத்திற்கான எமது பங்களிப்பைப் பற்றி நான் பெருமையடைகின்றேன். இத்திட்டமானது,  பூமியில் உயிர் வாழிகள், உயிர்வாழ் சூழல் தொகுதிகளின் நிலைபேறான பயன்பாட்டைப் பாதுகாத்தல், மீளமைத்தல், ஊக்குவித்தல் ஆகியவற்றின் முக்கியத்துவத்தை எடுத்துக்காட்டுவதன் மூலம், நிலைபேறான மேம்பாட்டு இலக்கு 15 உடன் இணங்குகின்றது. எமது பங்குதாரர்கள் அனைவரினதும் கனவுகள் மற்றும் அபிலாஷைகளை ஊக்குவிக்கும் நோக்கத்துடன் செயற்படும் ஒரு நிறுவனம் எனும் வகையில், உரிய நிலைபேறானதன்மை பங்காளியாக மாறுவதன் மூலம் எமது இயற்கை சூழலைப் பாதுகாப்பதை உறுதிசெய்ய நாம் கடமைப்பட்டுள்ளோம்.” என்றார்.

ஒட்டுமொத்தத்தில், ‘LIFE’ திட்டமானது அமோக வெற்றி பெற்றுள்ளது. இத்திட்டத்திற்கான தனது பங்களிப்பை DIMO நிறுவனம் வெற்றிகரமாக நிறைவு செய்திருந்த போதிலும், எதிர்காலத்திலும் அது நிலைபேறானதன்மை முயற்சிகளுக்கு ஆதரவளிக்கும். ஒரு பொறுப்புள்ள பெருநிறுவனமாக இருப்பதற்கான நிறுவனத்தின் உறுதிப்பாட்டின் ஒருங்கிணைந்த பகுதியாக அவை அமைகின்றது.

END

Image Caption

‘LIFE’ திட்டமானது, மீள் காடாக்கத்தின் மூலம் இப்பகுதியில் பல்லுயிர் பெருக்கத்தை மேம்படுத்தியுள்ள விதம்

Share

You may also like...