ஒருங்கிணைந்த அறிக்கையிடல் விசேடத்துவத்திற்காக DIMO நிறுவனத்திற்கு அங்கீகாரம்

2022 ஒருங்கிணைந்த அறிக்கையிடல் விருதுகள் விழாவில், ஒட்டுமொத்த தங்க விருதை பெற்ற DIMO, குறித்த விருது வழங்கும் நிகழ்வில் ‘ஐந்து சிறந்த ஒருங்கிணைந்த அறிக்கைகள்’ இற்காக, ‘ஒருங்கிணைந்த சிந்தனை’ இற்ககாகவும், அதன் 2021/2022 ஆண்டு அறிக்கைக்கான ‘சிறந்த சுருக்கமான ஒருங்கிணைந்த அறிக்கை’ ஆகியவற்றுக்கான விசேட விருதுகளை நிறுவனம் பெற்றுள்ளது.

‘இலங்கை வாய்ப்புகள் நிறைந்தது’ எனும் தொனிப்பொருளை முன்னிலையாகக் கொண்டு தயாரிக்கப்பட்ட, DIMO நிறுவனத்தின் 2021/2022 வருடாந்த அறிக்கையானது, DIMO குழுமத்தை எதிர்காலத்தை நோக்கி முன்னெடுத்துச் செல்வதற்கான வாய்ப்புகளை பெறுவதை இவ்வறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது.

நிறுவனத்தின் ஒருங்கிணைந்த அறிக்கையிடலில் வெற்றி தொடர்பில் தனது எண்ணங்களைப் பகிர்ந்து கொண்ட, DIMO நிறுவனத்தின் பணிப்பாளர்/ பிரதம நிதி அதிகாரி சுரேஷ் குணரத்ன, “நிதி அறிக்கையிடலில் புத்தாக்கங்களைக் கொண்டுவருவதோடு, ஒருங்கிணைந்த அறிக்கையிடல் கொள்கைகளுடன் இணங்கும் DIMO நிறுவனத்தின் அர்ப்பணிப்பானது, வருடாந்த அறிக்கைகளுக்காக நாம் பெற்றுக் கொண்ண விருதுகள் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது. ஒரு பொறுப்பான நிறுவனம் எனும் வகையில், எமது அனைத்து பங்குதாரர்களின் கனவுகள் மற்றும் அபிலாஷைகளை ஊக்குவிக்க எம்மால் முடிந்துள்ளது.” என்றார்.

Share

You may also like...