ஒரியன்ட் ஃபைனான்ஸ் (Orient Finance) சிறுவர் தினத்தன்று விசேட ஒரியன்ட் சிறுவர் சேமிப்புக் கணக்கை அறிமுகப்படுத்தியுள்ளது
ஜனசக்தி குழுமத்தின் உறுப்பு நிறுவனமும், முன்னணி நிதியியல் சேவை வழங்குநருமான ஒரியன்ட் ஃபைனான்ஸ் பிஎல்சி, 2022 ஆம் ஆண்டு சிறுவர் தினத்தைக் கொண்டாடும் வகையில் ஒரியன்ட் சிறுவர் சேமிப்புக் கணக்கை அறிமுகப்படுத்தியுள்ளது. சிறுவர்களை இளம் வயதிலேயே சேமிக்கத் தொடங்குவதை ஊக்குவிக்கும் வகையில் இந்தக் கணக்கு வடிவமைக்கப்பட்டுள்ளதுடன், சிறுவர்களின் எதிர்காலத்தைப் பாதுகாக்கும் வகையில் முதிர்ச்சியின் போது சிறந்த பிரதிபலனை வழங்குகின்றது.
ஒரியன்ட் சிறுவர் சேமிப்புக் கணக்கு கவர்ச்சிகரமான வட்டி வீதங்கள், கவர்ச்சிகரமான ஊக்குவிப்புச் சலுகைகள் மற்றும் பாலர் பாடசாலை கல்விக்கு பயனளிக்கும் விசேட கல்வி நிகழ்ச்சித்திட்டங்கள் போன்ற சிறந்த பலாபலன்களை வழங்குகிறது. ஒரியன்ட் ஃபைனான்ஸ் நிறுவனத்துடன் அவர்களின் பயணத்தைத் தொடங்குவது, நீண்ட கால உறவுக்கு வழி வகுப்பதுடன், சிறுவர்களுக்குப் பெரிதும் பயனளிக்கும். அத்துடன், வரும் காலங்களில் நிதியியல் சேவைகளின் அடிப்படையில் அவர்கள் ஒரு சிறந்த ஆரம்பத்திற்கான அத்திவாரத்தைக் கொண்டிருப்பதையும் உறுதி செய்யும். ஸ்திரத்தன்மை மற்றும் பாதுகாப்பு உத்தரவாதத்துடன் ஒரே கூரையின் கீழ், அதன் தற்போதைய வாடிக்கையாளர்கள் தங்கள் குழந்தைகளின் சேமிப்பை முன்கூட்டியே திட்டமிடுவதற்கு இது உதவும்.
“40 ஆண்டுகளுக்கும் மேலான நம்பகமான சேவையுடன், இன்று நாங்கள் சிறுவர் சேமிப்புக் கணக்கு மூலம் எங்களின் தனித்துவமான நிதியியல் தீர்வுகள் வரிசையை மேலும் வலுப்படுத்தியுள்ளோம். சிறுவயதிலிருந்தே சேமிக்கும் நல்ல பழக்கத்தை மேம்படுத்துவதற்கு நாங்கள் உறுதிபூண்டுள்ளோம். குறிப்பாக, எங்களின் தற்போதைய வாடிக்கையாளர்கள் உண்மையிலேயே பயனடைவார்கள். ஏனெனில் அவர்கள் இப்போது தங்கள் சிறு பிள்ளைகளின் எதிர்காலத்திற்கான நிதியை தமது நம்பகமான நிதியியல் சேவை வழங்குனருடன் இணைந்து திட்டமிடலாம். இந்த சமீபத்திய அறிமுகத்தின் மூலம் பாலர் பாடசாலை கல்வியை ஆதரிப்பதில் முதலீடு செய்ய நாங்கள் ஆவலாக உள்ளதுடன், இது பொருளாதார ரீதியாக சவாலான இந்த காலகட்டத்தில் எங்கள் சமூகத்திற்கு ஆதரவளிப்பதற்காக, தொழில்துறையில் ஸ்திரமான சேவையை நாம் வழங்குவதற்கான ஒரு சான்றாகும்,” என்று ஒரியன்ட் ஃபைனான்ஸ் பிஎல்சி நிறுவனத்தின் நிறைவேற்று அதிகாரம் கொண்ட பணிப்பாளரும், பிரதம நிறைவேற்று அதிகாரியுமான கே. எம். எம். ஜாபிர் அவர்கள் கருத்து தெரிவித்தார்.
சிறுவர்களின் ஆரோக்கியமான வாழ்க்கை முறைக்கு நற்பழக்கவழக்கங்கள் அவசியம். இந்த தொலைநோக்கு இலக்கிற்கு இணங்க, இந்த சிறுவர் தினத்தில், எதிர்கால சந்ததியினரை வளர்ப்பதற்காக நற்பழக்கவழக்கங்களை ஊக்குவிக்கும் வகையில், ஒரியன்ட் ஃபைனான்ஸ் இந்த விசேட திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. எனவே, சிறுவயதிலிருந்தே சேமிப்பது, பருவ வயதில் அடியெடுத்து வைக்கும் சிறுவர்களின் அத்தியாவசியத் தேவைகளுக்கு உதவுகிறது. குறிப்பாக, அவர்களின் உயர் அல்லது வெளிநாட்டுக் கல்வி, மற்றும் அவர்களின் ஆரம்பகால தொழில்முயற்சிகளின் போது அவர்களுக்கு உதவுகிறது.
40 க்கும் மேற்பட்ட ஆண்டுகளில், ஒரியன்ட் ஃபைனான்ஸ் பிஎல்சி தன்னை ஒரு புத்தாக்கமான மற்றும் வாடிக்கையாளர்களை மையமாகக் கொண்ட நிதியியல் சேவை வழங்குநராக நிலைநிறுத்தியுள்ளதுடன், அர்ப்பணிப்புள்ள வாடிக்கையாளர் சேவையுடன் இணைந்து சரியான நேரத்தில் பொருத்தமான தயாரிப்பு தீர்வுகளை வழங்கிவருகிறது. ஒரியன்ட் ஃபைனான்ஸ் பிஎல்சி நிறுவனமானது அதன் நிதியியல் தீர்வுகளின் வரிசையை தொடர்ந்து வலுப்படுத்தி வருவதுடன், ஜனசக்தி குழுமத்தின் கூட்டுப் பலத்தின் இணைப்புடன், குழுமத்தின் மூலோபாயத்தின் ஒரு அங்கமாக அமையும் வகையில், தனது சமீபத்திய ஒரியன்ட் சிறுவர் சேமிப்புக் கணக்கு மூலம் பெரும் மதிப்பைச் சேர்ப்பிக்கிறது.
Recent Comments