Binance அதன் உலகளாவிய சட்ட அமுலாக்கத்தை வலுவாக்குகிறதுவளர்ந்து வரும் தேவையைப் பூர்த்தி செய்வதற்கான பயிற்சித் திட்டம்
இது கிரிப்டோ குற்றங்களை எதிர்த்துப் போராட உதவுவதோடு, சட்ட அமுலாக்கம், கட்டுப்பாட்டாளர்களுக்கு உதவ Binance இன் தொடர்ச்சியான முயற்சியுமாகும்
Binance, பரிவர்த்தனை அளவின் அடிப்படையில் உலகின் மிகப்பெரிய கிரிப்டோகரன்சி (cryptocurrency) பரிமாற்றத்திற்கு உரித்துடைய உலகளாவிய புளொக்செயின் சூழல் அமைப்பாகும். இது தனது உலகளாவிய சட்ட அமுலாக்க பயிற்சித் திட்டத்தை (Global Law Enforcement Training Program) இன்று உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது. கடந்த வருடம் விசாரணைக் குழுவின் மேப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டிருந்த இது தற்போது அதிவேகமாக வளர்ந்துள்ளது. இந்தத் திட்டம் உலகளாவிய ரீதியில் இத்தொழில்துறையின் முதலாவது ஒருங்கிணைந்த முயற்சியாகும். சட்ட அமுலாக்கத்திற்கும் சட்டத்தரணிகளுக்கும் நிதி மற்றும் இணையக் குற்றங்களைக் கண்டறிய உதவுவதற்கும் மோசடியான நபர்கள் மீது வழக்குத் தொடர உதவுவதற்குமாக, Binance இனால் இது உருவாக்கப்பட்டுள்ளது.
Binance இன் புலனாய்வு மற்றும் விசாரணைகள் தொடர்பான உலகளாவிய தலைவர் Tigran Gambaryan இது தொடர்பில் கருத்து வெளியிடுகையில், “பெரும்பாலான கட்டுப்பாட்டாளர்கள், பொதுச் சட்ட அமுலாக்க முகவர்கள், தனியார் துறை பங்குதாரர்கள் ஆகியோர் கிரிப்டோவை உன்னிப்பாகக் கவனித்து வருவதால், கிரிப்டோ குற்றங்களைப் பற்றி முழுமையாக கற்றறிவதற்கும் அவற்றுக்கு எதிராகப் போராடுவதற்குமான பயிற்சிகளின் தேவை அதிகரித்து வருவதை நாம் அவதானிக்கிறோம். இத்தேவையைப் பூர்த்தி செய்வதற்காக, உலகெங்கிலும் உள்ள கட்டுப்பாட்டாளர்களுடன் கைகோர்த்து மேலும் பல பயிற்சிகளை நடத்துவதற்கும், அவர்களுடன் இணைந்து செயற்படுவதற்கும் நாம் எமது குழுவை வலுப்படுத்தியுள்ளோம்.” என்றார்.
கடந்த வருடத்தில், ஆர்ஜென்டினா, பிரேசில், கனடா, பிரான்ஸ், ஜேர்மனி, இஸ்ரேல், நெதர்லாந்து, பிலிப்பைன்ஸ், ஸ்வீடன், தென் கொரியா, ஐக்கிய இராச்சியம் போன்ற நாடுகள் உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் சட்ட அமுலாக்கத்துடன் இணைந்து 30 இற்கும் மேற்பட்ட சைபர் மற்றும் நிதிக் குற்றங்களுக்கு எதிரான பட்டறைகளை, Binance Investigations குழு நடாத்தியிருந்ததோடு அதில் பங்கேற்றுமிருந்தது.
Silkroad to Hydra உள்ளிட்ட உலகிலுள்ள மிகப்பெரிய கிரிப்டோ குற்றத் தளங்களில் சிலவற்றைக் குறைக்க உதவிய, உலகப் புகழ்பெற்ற வல்லுநர்கள் உள்ளிட்ட, பாதுகாப்பு வல்லுநர்கள் மற்றும் முன்னாள் சட்ட அமுலாக்க முகவர்கள் உள்ளிட்டோரைக் கொண்ட Binance Investigations குழுவின் தலைவர்களால் இப்பயிற்சிகள் வழங்கப்படுகின்றன.
முழு நாள் பயிற்சித் திட்டத்தில், blockchain, crypto assets (புளோக்செயின் மற்றும் கிரிப்டோ சொத்துகள்) தொடர்பான கருத்துகள் பற்றி தனித்தனி நபர்களுடனான பட்டறைகளும் அடங்குகின்றன. இது தொடர்பான பாடத்திட்டத்தில், வளர்ந்து வரும் சட்டம் மற்றும் ஒழுங்குபடுத்தல் சூழல் பற்றிய நுண்ணறிவுகளும் அடங்குகின்றன. Binance இன் நிதி மோசடி தடுப்பு (anti-money laundering – AML) கொள்கைகள் மற்றும் ஏற்படக் கூடிய சாத்தியமான மோசடிகளைக் கண்டறிந்து தடுப்பதற்காக, நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட விசாரணை முறைகள் ஆகியவையும் இங்கு விரிவாக கலந்துரையாடப்படுகின்றன.
நிறுவனத்தின் வலுவான ஒத்திசைதல் மற்றும் நிதி மோசடி தடுப்பு திட்டங்களின் விளைவாக, சமீபத்தில் பிரான்ஸ், இத்தாலி, ஸ்பெயின் உள்ளிட்ட நாடுகளில் அனுமதி மற்றும் உத்தியோகபூர்வ பதிவுகளை Binance பெற்றுக் கொண்டுள்ளது. இதன் மூலம் G7 நாடுகளில் இதை நிறைவேற்றுவதற்கான பரிமாற்ற அனுமதி பெற்ற ஒரு சில கிரிப்டோ நிறுவனங்களில் ஒன்றாக அது மாறியுள்ளது.
குற்றப் புலனாய்வு (IRS-CI) சைபர் குற்றப் பிரிவின் உள்ளக வருமான சேவை முன்னாள் விசேட முகவர் Gambaryan தெரிவிக்கையில், “பயனர்களைப் பாதுகாப்பது, Binance நிறுவனமாகிய எமது முதன்மையான பணியாகும். பயங்கரவாதத்திற்கு நிதியளித்தல், ransomware, மனித கடத்தல், சிறுவர் ஆபாசம், நிதிக் குற்றங்களுக்கு எதிரான விடயங்களில் கவனம் செலுத்தவும், சந்தேகத்திற்குரிய கணக்குகள் மற்றும் மோசடி நடவடிக்கைகளைக் கண்காணிக்கவும், அவற்றை கண்டறியவும் சட்ட அமுலாக்கத்துடன் கைகோர்த்து நாம் செயற்படுகிறோம்” என்றார்.
2021 நவம்பர் மாதம் முதல், Binance Investigations குழுவானது, 27,000 இற்கும் மேற்பட்ட சட்ட அமுலாக்க கோரிக்கைகளுக்கு, சராசரியாக 3 நாட்கள் எனும் பதிலளிப்பு காலத்தில் பதிலளித்துள்ளது. இது எந்தவொரு வழக்கமான நிதி நிறுவனத்தையும் விட வேகமான பதிவாகும். “சட்ட அமலாக்கத்தில், எந்தவொரு பாரம்பரிய நிதி நிறுவனத்துடனும், ஒப்பிட முடியாத வேகமான பதிலளிப்பு கட்டமைப்பைக் கொண்டதாக Binance விளங்குகிறது.” என Gambaryan சுட்டிக்காட்டினார்.
###
Binance பற்றி Binance என்பது உலகின் முன்னணி blockchain சூழல் தொகுதி கட்டமைப்பு என்பதுடன், கிரிப்டோகரன்சி உட்கட்டமைப்பு சேவை வழங்குநராகும். இது நிதித் தயாரிப்புத் தொகுப்பைக் கொண்டுள்ள இது, பரிமாற்ற அளவின் அடிப்படையில் மிகப்பெரிய டிஜிட்டல் சொத்து பரிமாற்றத்தை கொண்டுள்ளது. உலகெங்கிலும் உள்ள மில்லியன் கணக்கானோரால் நம்பப்படும் Binance இயங்குதளமானது, பயனர்களின் பணச் சுதந்திரத்தை அதிகரிப்பதற்காக அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. அத்துடன் வர்த்தகம் மற்றும் நிதி, கல்வி, தரவு மற்றும் ஆராய்ச்சி, சமூக நன்மை, முதலீடு மற்றும் அடைகாத்துப் பேணல், பரவலாக்கம், உட்கட்டமைப்புத் தீர்வுகள் உள்ளிட்ட பல்வேறு கிரிப்டோ தொடர்பான சேவைகள் மற்றும் சலுகைகளின் இணையற்ற தயாரிப்புகளை இது கொண்டுள்ளது. இவை தொடர்பான மேலதிக தகவலுக்கு : https://www.binance.com
Recent Comments