அறிவார்ந்த கல்வி முதிர்ச்சி மதிப்பீட்டு மாதிரியை ஆராய, கல்வியின் டிஜிட்டல் மாற்றத்திற்கான வாய்ப்புகள் பற்றிய விளக்க அறிக்கையை வெளியிடும் Huawei
பெங்கொக்கில் இடம்பெற்ற HUAWEI CONNECT 2022 இல் ‘கல்விக்கான டிஜிட்டல் பயணத்தை துரிதப்படுத்தல்’ அமர்வின் போது, கல்வியின் டிஜிட்டல் மாற்றத்திற்கான வாய்ப்புகள் தொடர்பான விளக்க அறிக்கையை (White Paper) Huawei வெளியிட்டு வைத்தது. இது முதன் முறையாக அறிவார்ந்த கல்வி முதிர்ச்சி மதிப்பீட்டு மாதிரியை ஆராய்கிறது. கற்பித்தல் முறைகளை புத்தாக்கமாக அமைக்கவும், அனைத்தும் உள்ளடங்கிய கல்வி வளங்களை மேம்படுத்தவும், ஆராய்ச்சித் திறன்களை மேம்படுத்தவும், நிர்வாகத்தை மேம்படுத்தவும், கல்வியின் டிஜிட்டல் மாற்றத்தை துரிதப்படுத்தவும் அனைத்து சூழ்நிலைகளுக்குமான கல்வித் தீர்வுகளையும் பயன்படுத்தவுமான முன்மொழிவுகளை Huawei அதில் முன்வைத்தது.
கல்வி மற்றும் சுகாதாரப் பாதுகாப்புப் பிரிவின் பணிப்பாளர் Mark Yang இது தொடர்பில் தெரிவிக்கையில், “கல்வியின் டிஜிட்டல் மாற்றத்திற்கான வாய்ப்புகள் தொடர்பான விளக்க அறிக்கையானது (White Paper), கல்வியின் டிஜிட்டல் மாற்றம் தொடர்பான கூட்டு ஆய்வில் வாடிக்கையாளர்கள், கூட்டாளர்கள் மற்றும் Huawei ஆகியனவற்றின் உலகளாவிய மூலோபாயங்கள் மற்றும் நடைமுறைகளின் தொகுப்பாகும். இது அறிவார்ந்த கல்வியின் அடிப்படைக்கருத்து மற்றும் கட்டமைப்பின் வரையறைகளை வழங்குகிறது. அறிவார்ந்த கல்வியின் முதிர்ச்சி மதிப்பீட்டு மாதிரியை முதன் முறையாக White Paper ஆராய்கிறது. இந்த மாதிரியானது, 6 உப பரிமாணங்கள் மற்றும் 5 மட்டங்களை உள்ளடக்கியுள்ளது. இது பாடசாலைகள் தங்களை தாங்களே மதிப்பிடுவதற்கு உதவுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. எனவே இதன் மூலம் கல்வித் தகவல் மயமாக்கலின் எதிர்கால வளர்ச்சிக்கான தெளிவான பாதையைக் கொண்டிருக்க முடியும்.” என்றார்.
Huawei யின் உலகளாவிய வெற்றிக் கதைகளின் அடிப்படையில் Huawei யின் அனைத்து சூழ்நிலைக் கல்வித் தீர்வுகளையும், கல்வி மற்றும் சுகாதாரத் துறையின் தொழில்துறை நிபுணரான Patrick Low விபரிக்கையில், “Huawei இன் அனைத்து சூழ்நிலைக்குமான அறிவார்ந்த கல்வித் தீர்வுகள், அறிவார்ந்த கல்விக்கான விரிவான கட்டமைப்பை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளன. அவை பல்கலை வளாகத்தில் பல்வேறு வணிகச் சூழ்நிலைகளின் தேவைகளைப் பூர்த்தி செய்கின்றன. பல்வகைப்பட்ட கற்பித்தல் பயன்பாடுகளுக்கு ஆதரவளித்தல், அனைத்து சூழ்நிலைகளிலும் ஸ்மார்ட் கற்றல், கற்பித்தல், முகாமைத்துவம், ஆராய்ச்சி ஆகியவற்றை உணர்ந்து, பல்வேறு நாடுகளிலும் திறமையாளர்களுக்கான பயிற்சிகளுக்கான வசதியை ஏற்படுத்துகின்றன.” என்றார்.
அனைத்தும் உள்ளடக்கப்பட்ட கல்வியும் இந்த அமர்வின் போதான பரபரப்பான பேசுபொருளாக அமைந்தது. தாய்லாந்தின் UniNet Scientific Research Network யில், கல்வி மேம்பாட்டுக்கான தகவல் தொழில்நுட்ப நிர்வாக அலுவலகத்தின் பிரதிப் பணிப்பாளரான Ekapong Musikacharoen யின் கருத்துப்படி, “தாய்லாந்தின் NREN ஆனது, 155 பல்கலைக்கழகங்களை இணைத்து, 100 Gbit/s எனும் சுமூகமான தரவு வெளிப்படுத்தலை பூர்த்தி செய்கிறது. இதன் மூலம் அனைத்து தாய்லாந்து கல்வி வாடிக்கையாளர்களுக்கும் உயர்தர வலையமைப்புக்கான இணைப்புகளை வழங்கப்பட்டு, நியாயமான மற்றும் உள்ளடக்கிய கல்வி ஊக்குவிக்கப்படுகின்றது” என்றார்.
ENDS
Recent Comments