Hemas Consumer Brands யின் முதன்மையான 3-in-1 சலவை தீர்வு Diva Fresh

Hemas Consumer Brands இன் முதன்மையான சலவை வர்த்தக நாமமான Diva, 2003ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டதிலிருந்து இலங்கைக்கே உரித்தான வாசனைத் திரவியங்களுடனான தயாரிப்புகளை உருவாக்கி வருகின்றது. உள்ளூர் நுகர்வோரின் நாடித் துடிப்பையும், துணி துவைப்பதில் உள்ள களைப்பையும் எப்போதும் புரிந்துகொண்ட வர்த்தகநாமமாக அது விளங்குகின்றது. Diva Fresh 3-in-1 ஆனது சந்தையில் உள்ள தயாரிப்பு வகைகளாகும். இது ஒரே தடவையில் பயனர்களுக்கு மூன்று நன்மைகளை வழங்குவதற்காக குறிப்பாக நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி தயாரிக்கப்படுகிறது.

Diva Fresh 3-in-1 வழங்கும் நன்மைகளில் Perfume Magic அம்சமும் அடங்குகின்றது. இது Fibre Clean தொழில்நுட்பத்துடன் நீண்ட கால நறுமணத்தை வழங்குவதோடு, ஆடைகளுக்கு சிறந்த தூய்மை மற்றும் பிரகாசத்தை வழங்கும் Optical Brighteners அம்சத்தையும் கொண்டுள்ளது. Diva Fresh 3-in-1 ஆனது, Diva Fresh Rose, Purple Lotus & Lavender, Araliya, Jasmine, Sepalika உள்ளிட்ட உண்மையான உள்ளூர் உணர்வுடன் வடிவமைக்கப்பட்ட பல்வேறு வகைகளில் கிடைக்கிறது.

இன்றுவரை, Diva உள்ளூர் குடும்பங்களுக்கு முழுமையான தீர்வுகளை உருவாக்கி வருவதுடன், இது 3-இன்-1 செயற்பாட்டை வழங்கும் Diva Fresh ஆனது உண்மையான இலங்கை வர்த்தக நாமமாக மட்டுமல்லாமல், மக்களின் சலவைத் தேவைகளை புரிந்த வர்த்தகநாமத்திற்கான ஒரு சான்றாக விளங்குகின்றது. . Diva Fresh 3-in-1 நாடு முழுவதும் பல்வேறு அளவுகளில் கிடைக்கிறது. அத்துடன் Hemas E-Store ஊடாகவும் (https://hemasestore.com/brand/diva/) அதனை கொள்வனவு செய்யலாம்.

Hemas Consumer பற்றி

வீடுகள் மற்றும் தனிநபர் பராமரிப்புத் துறையில் இலங்கையின் முன்னணி உற்பத்தியாளரான Hemas Consumer ஆனது, Hemas Holdings PLC இன் துணை நிறுவனமாகும். 1948 இல் நிறுவப்பட்ட Hemas, குடும்பங்கள் ஆரோக்கியமாக வாழ உதவுதல் எனும் ஒரு எளிய நோக்கத்துடன் ஆரம்பிக்கப்பட்டது. இன்று, 4,500 இற்கும் மேற்பட்ட ஊழியர்களைக் கொண்ட முன்னணி மக்கள் மைய நிறுவனம், நுகர்வோர், சுகாதார மற்றும் பல்துறை அம்சங்களில், உலகத் தரம் வாய்ந்த தயாரிப்புகள் மற்றும் சேவைகளின் தனித்துவ துறை மூலம் மக்களுக்கு ஆரோக்கியமான வாழ்க்கையை வழங்கி வருகிறது. Hemas நிறுவனம், அதன் தொடர்ச்சியான பயணத்தில், தொடர்ந்தும் மாறுபட்ட மற்றும் முக்கிய விடயங்களில் முதலீடு செய்வதோடு, அர்த்தமுள்ள வரப்பிரசாதங்களை உருவாக்கி, நம்பகமான கூட்டாண்மைகளை வளர்த்து வருவதோடு, அதன் மூலம் இவ்வனைத்தையும் உள்ளடக்கிய உலகத்தை வெற்றி கொள்கிறது.

Share

You may also like...