வெங்கடேஷ் முரளி பொது முகாமையாளராகவும், வளர்ந்து வரும் சந்தைகள், வியட்நாமுக்கான தலைவராகவும் VMware இனால் நியமனம்

தொழிற்துறை மென்பொருள் தீர்வுகளுக்கான முன்னணி புத்தாக்க கண்டுபிடிப்பு நிறுவனமான VMware, Inc. (NYSE: VMW), வெங்கடேஷ் முரளியை வளர்ந்து வரும் சந்தைகள் மற்றும் வியட்நாமின் பொது முகாமையாளராகவும் தலைவராகவும் நியமிப்பதாக அறிவித்துள்ளது. தகவல் தொழில்நுட்பத் துறையில் இரண்டு தசாப்தங்களுக்கும் மேலான அனுபவம் மற்றும் தீர்வுகள் விற்பனை மற்றும் சேனல் டெவலப்மெண்ட் ஆகியவற்றில் வலுவான பின்னணியைக் கொண்டுள்ள வெங்கடேஷ், வணிக யுத்தி மற்றும் பிராந்தியத்தில் VMware இன் வளர்ச்சியை முன்னோக்கிக் கொண்டு செல்வதில் கவனம் செலுத்துவார். நிறுவனத்தின் தொழில்துறை தொடர்பான முன்னணி புத்தாக்க கண்டுபிடிப்புகளை மேம்படுத்தியவாறு, மக்கள், சேவைகள் மற்றும் வணிகங்களை மாற்றியமைக்கும், பிராந்தியத்தில் மிக வேகமாக விரிவாக்கமடைந்து வரும் டிஜிட்டல் பொருளாதாரத்தில் பல நிறுவனங்கள் கவனம் செலுத்துவதால், டிஜிட்டல் மாற்றத்தை விரைவுபடுத்தும் வகையில், நிறுவனத்தின் கூட்டாளர்கள் மற்றும் நிறுவனங்களுடன் இணைந்து அவர் பணியாற்றுவார்.

தென்கிழக்கு ஆசியா மற்றும் கொரியாவின் VMware உப தலைவரும் நிர்வாக பணிப்பாளருமான Paul Simos கருத்துத் தெரிவிக்கையில், “ஆசியாவில் வளர்ச்சி அடைந்து வரும் பொருளாதார நிலை, 2023[1] ஆம் ஆண்டில் 5.3% இனால் வளர்ச்சியடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அத்துடன், 2025 ஆம் ஆண்டில் தென்கிழக்கு ஆசியாவில் இரண்டாவது பெரிய இணையப் பொருளாதாரத்தை கொண்டதாக வியட்நாம் மாறும் என்று கணிக்கப்பட்டுள்ளது. வெங்கடேஷின் நியமனத்துடன், இவ்வாறு மாற்றமுறுகின்றதும் வேகமாக வளர்ந்து வருகின்றதுமான பிராந்தியத்தில், வணிகம் மற்றும் டிஜிட்டல் மாற்றத்திற்கான எமது ஆதரவை மேலும் வலுப்படுத்த, VMware உற்சாகமாக உள்ளது.” என்றார்.  நிறுவனத்தின் Head of Channels பதவியை வகித்த வெங்கடேஷ், 2020 ஆம் ஆண்டு முதல் வியட்நாம் மற்றும் வளரும் சந்தைகளில் VMware இன் ஒவ்வொரு பிரிவினதும் வியூக வளர்ச்சி மற்றும் செயற்பாட்டிற்கு வழிவகுத்தார். எமது கூட்டாளர்களில் மாற்றத்தை உருவாக்கியமை தொடர்பில் குறிப்பிடத்தக்க பங்கை அவர் கொண்டிருந்தார். இப்பிராந்தியத்தில் உள்ள வாடிக்கையாளர்கள் மற்றும் கூட்டாளர்களுடன் VMware இன் உறவுகளை மேலும் வலுப்படுத்தி, அவர் தொடர்ந்தும் வலுவான வளர்ச்சியை வழங்குவார் என, நான் நம்புகிறேன்.” என்றார்.

வெங்கடேஷ், VMware இல் இணைவதற்கு முன்னர், Lenovo Enterprise Solutions இற்கான மத்திய ஆசிய பசிபிக் பகுதியில் உள்ள Software Defined Infrastructure தலைவராக [2]இருந்தார். அங்கு அவர் பிராந்தியம் முழுவதும் உள்ள அரசாங்கங்கள், நிறுவனங்கள் மற்றும் சிறு மற்றும் நடுத்தர வணிகங்களுக்கான Software Defined Solutions & Datacentre விற்பனை மூலோபாயத்தை வழிநடத்தியிருந்தார். அத்துடன், Dell Global BV யில் Global Computing and Networking Solutions தலைவராக செயற்பட்ட அவர், நிறுவன தீர்வுகளை செயற்படுத்தும் குழுவை உருவாக்கி வழிநடத்தினார்.

இது தொடர்பில் கருத்து வெளியிட்ட வெங்கடேஷ், “ஆசியாவில் வளர்ந்து வரும் சந்தைகள் உள்ளிட்ட, உலகெங்கிலும் உள்ள வாடிக்கையாளர்களுக்கு டிஜிட்டல் மாற்றமானது, முதன்மையான தேவையாக உள்ளது. Hybrid மற்றும் multi-cloud நவீன பயன்பாடுகள் மற்றும் இணையப் பாதுகாப்பு ஆகியவற்றில் நவீன மற்றும் சிறந்த தீர்வுகளை நோக்கி முன்னேறும் வகையில், வளர்ந்து வரும் பொருளாதாரங்களுக்கு உதவும் வகையிலான, ஒரு தனித்துவமான நிலையில் VMware உள்ளது. கூட்டாளர்களுடனும் வாடிக்கையாளர்களுடனும் நெருக்கமாக இணைந்து பணியாற்றுவதன் மூலம், நிறுவனங்கள் தங்கள் டிஜிட்டல் மாற்றத்திற்கு உரிய தீர்வை பெறவும், அதனை மாற்றியமைக்கவும், அவர்களின் டிஜிட்டல் மாற்றப் பயணங்களை விரைவுபடுத்தவும் நாம் உதவுவோம்.” என்றார்.

VMware பற்றி

VMware மென்பொருளானது, உலகின் சிக்கலான டிஜிட்டல் உட்கட்டமைப்பை வலுவூட்டுகின்றது. இந்நிறுவனத்தின் cloud, app modernization, networking, security, digital workspace சேவைகளானவை, எந்தவொரு சாதனத்திலும் எந்தவொரு கிளவுட் கணனியிலும் மென்பொருளை வழங்க உதவுகின்றன. VMware கலிபோர்னியாவின் பாலோ அல்டோவை தலைமையகமாகக் கொண்டுள்ளதுடன், அதன் மென்பொருள் புத்தாக்க கண்டுபிடிப்புகள் மூலம் உலகளாவிய சிறந்த தாக்கத்துக்கு நன்மை பயக்கும் சக்தியாக இருப்பதில் அது உறுதியாக உள்ளது. இது தொடர்பான மேலதிக விபரங்களுக்கு, நுழையுங்கள்: https://www.vmware.com/company.html


 

[2]

Share

You may also like...