பத்திரிகை செய்தி – சுவதேஷி வர்த்தகநாம தயாரிப்புகள் – சுவதேஷி கோம்பா, ராணி சந்தனம் மற்றும் சுவதேஷி கோம்பா பேபி சவர்க்காரம் ஆகியன VEGETARIAN SOCIETY இன் அங்கீகாரத்தினைப் பெற்றுள்ளன  

80 ஆண்டுகளுக்கும் மேலாக மூலிகைகளைக் கொண்ட தனிப்பட்ட பராமரிப்புப் பொருட்களின் உற்பத்தி மற்றும் விற்பனையில் இலங்கையின் மிகப் பெரிய நிறுவனமாகத் திகழ்ந்து வருகின்ற சுவதேஷி (Swadeshi Industrial Works PLC) நிறுவனத்தின் வர்த்தகநாம உற்பத்திகளான குழந்தைகள் முதல் வளர்ந்தவர்களுக்கான சவர்க்கார உற்பத்தி வகைகள், பொடி வோஷ் மற்றும் ஷவர் ஜெல் உற்பத்தி வகைகள் Vegetarian Society இன் அங்கீகாரத்தைப் பெற்றுள்ளன. ஐக்கிய இராச்சியத்தின் மதிப்புமிக்க Vegetarian Society ஆல் 100% கம்பனியின் தயாரிப்புக்கள் Vegetarian என்ற அதிகாரப்பூர்வ அங்கீகரிக்கப்பட்ட வர்த்தக முத்திரையைக் காண்பிப்பதற்கான உரிமையைப் பெற்றுள்ளன.

பின்வரும் தயாரிப்புகள் இப்போது Vegetarian Society ஆல் அங்கீகரிக்கப்பட்ட வர்த்தக முத்திரையை பொதிகளில் கொண்டிருக்கும்: சுவதேஷி கோம்பா ஹேர்பல், சுவதேஷி கோம்பா கிளியர் சவர்க்காரம், சுவதேஷி கோம்பா பொடி வோஷ் தயாரிப்பு வகை, ராணி சந்தனம், ராணி ஜெல் பார், ராணி ஷவர் கிரீம் தயாரிப்பு வரிசை மற்றும் சுவதேஷி கோம்பா பேபி சவர்க்காரம்.  

Vegetarian Society மக்களை தாவர உணவு உண்பதை ஊக்குவிப்பதற்கான அறிவூட்டுவதற்கு இடமளிக்கிறது, மேலும் அவர்களின் தாவர வர்த்தக முத்திரை ஒரு தயாரிப்பானது 100% தாவர அடிப்படையிலானது என்று சான்றளிக்கிறது. வர்த்தகநாம தயாரிப்புகள் கடுமையான அளவுகோல்களை பூர்த்தி செய்ய வேண்டும், தங்களைத் தாங்களே சுயாதீன மூலப்பொருள் சோதனை மற்றும் உற்பத்தி முறைக்கு உட்படுத்தி Vegetarian Society இன் நிபுணர்களால் சரிபார்த்து, உறுதிபடுத்தப்படும் நடைமுறையை உள்ளடக்கியது. Vegetarian Society ஆல் அங்கீகரிக்கப்பட்ட வர்த்தக முத்திரையைக் காண்பிக்க, ஒரு தயாரிப்பு பின்வரும் கடுமையான நிபந்தனைகளை பூர்த்தி செய்ய வேண்டும்: தயாரிப்பின் உற்பத்தி நடைமுறையில் எந்த விலங்கு பரிசோதனையும் மேற்கொள்ளப்படவில்லை அல்லது அதன் உற்பத்திக்காக உள்வாங்கப்படவில்லை, விலங்குகளை கொல்வதன் விளைவாக எந்த மூலப்பொருளும் பெறப்படவில்லை, மரபணு மாற்றப்பட்ட உயிரினம் அற்றது மற்றும் குறுக்கு மாசுபாடு இல்லை என்ற உத்தரவாதத்தைக் கொண்டிருக்க வேண்டும். இந்த அளவுகோலைப் பூர்த்தி செய்யும் வர்த்தகநாம தயாரிப்புகளுக்கு மதிப்புமிக்க Vegetarian Society ஆல் அங்கீகரிக்கப்பட்ட வர்த்தக முத்திரையை தங்கள் தயாரிப்புப் பொதிகளில் காண்பிக்க உரிமம் வழங்கப்படுகிறது. இது வாடிக்கையாளர்களுக்கு அவர்கள் வாங்குவது 100% தாவர அடிப்படையானது மற்றும் விலங்குகள் பலியிடப்படவில்லை என்று நம்பகத்தன்மையுடன் உறுதிப்படுத்துகிறது.

இந்த சான்று அங்கீகாரம் கிடைக்கப்பெற்றமை குறித்து கருத்து தெரிவித்த Swadeshi Industrial Works PLC நிறுவனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளரும், பணிப்பாளர் சபையின் பிரதித் தலைவருமான திருமதி சூலோதரா சமரசிங்க அவர்கள் கருத்துத் தெரிவிக்கையில், சுவதேஷி தனது தயாரிப்புகளுக்கு மதிப்புமிக்க Vegetarian Society Accreditation அங்கீகாரத்தைப் பெறுவதில் மிகவும் மகிழ்ச்சியடைகிறது. ஒரு நிறுவனமாக, சுற்றுச்சூழலுக்கும் அனைத்து உயிரினங்களுக்கும் நன்மை பயக்கும் தெரிவுகளை மேற்கொள்வதில் நாங்கள் எப்போதும் நம்பிக்கை கொண்டுள்ளோம். எங்களின் அனைத்து சருமப் பராமரிப்பு மற்றும் சுத்தப்படுத்தல் தயாரிப்புகளும் நெறிமுறை சார்ந்த மூலப்பொருட்களை அடிப்படையாகக் கொண்டவை என்பதுடன், விலங்குகளுக்கு தீங்கு விளைவிக்காதவை. இதற்காக விலங்குகளை பரிசோதிப்பதையும் நாங்கள் வெறுக்கிறோம், எனவே விலங்குகளில் உள்ளதாக சோதிக்கப்பட்ட எந்த மூலப்பொருட்களையும் நாம் பயன்படுத்த மாட்டோம். விலங்கு அடிப்படையிலான பொருட்களைப் பயன்படுத்தாமை சருமத்தை ஆரோக்கியமாக வைத்திருப்பதுடன், இயற்கையான, தாவரப் பொருட்களைக் கொண்ட தயாரிப்புகள் மென்மையாகவும், மிருதுவாகவும், சருமத்தால் நன்றாக உறிஞ்சப்பட்டு ஆரோக்கியமான சருமத்தைப் பேணிப் பராமரிக்க உதவுகின்றன. உலகளாவிய ரீதியில், அதிகளவான நுகர்வோர் விழிப்புணர்வைப் பெற்று, நெறிமுறை சார்ந்த, உற்பத்தி செய்யப்பட்ட மற்றும் சுற்றுச்சூழல் மற்றும் விலங்கு நலக் காரணங்களுடன் தொடர்புடைய தயாரிப்புகளைத் தேர்ந்தெடுத்து வருகின்றனர். எனவே இந்த அங்கீகாரத்தின் மூலம், இந்த அற்புதமான பயணத்தின் ஒரு பகுதியாக இன்னும் கூடுதலான அளவில் சுற்றுச்சூழலுக்கு நட்புறவான, சூழல் மீது அக்கறை உணர்வு கொண்ட மற்றும் கருணை மிக்க வாழ்க்கை முறையை வாழ்வதற்கு இலங்கையர்களை ஊக்குவிக்க முடியும் என நாங்கள் நம்புகிறோம்,” என்று குறிப்பிட்டார்.

ஐக்கிய இராச்சியத்தின் The Vegetarian Society இன் கூட்டு குறித்து கருத்து தெரிவித்த Vegetarian Society  இன் வணிக மற்றும் வழங்கல் சேவைகளின் தலைமை அதிகாரியான வனேசா பிரவுன் அவர்கள் கூறுகையில், எங்கும் தாவர தயாரிப்புகளுக்கான தேவை அதிகரித்து வருகிறது, மேலும் சுவதேஷி தங்கள் வாடிக்கையாளர்களின் தேவைகளை நிறைவேற்றுவதைக் காண்பது மனநிறைவளிக்கின்றது. Vegetarian Society ஆல் அங்கீகரிக்கப்பட்ட தாவர வர்த்தக முத்திரையைக் காண்பிப்பதன் மூலம், இந்த தயாரிப்புகள் தாவர அடிப்படையிலானவை என்ற உத்தரவாதத்தை கொள்வனவாளர்களுக்கு சுவதேஷி தெளிவாக எடுத்துக் கூறுகின்றது,” என்று குறிப்பிட்டார்.

சுவதேஷி (Swadeshi Industrial Works PLC) நிறுவனம் தொடர்பான விபரங்கள்

சிங்கள மொழியில் “எங்கள் மண்” அல்லது “உள்நாடு” என்று மொழிபெயர்க்கப்பட்ட சுவதேஷி என்பது 1941 களில் தொடங்கப்பட்டதிலிருந்து இலங்கைய தலைமுறைகளின் வாழ்வுகளை சிறப்பாக எட்டியுள்ள ஒரு வர்த்தகநாமம் ஆகும். அதன் பச்சை முத்திரை நாட்டின் அனைத்து பகுதிகளிலும் உள்ள நுகர்வோரால் உடனடியாக அடையாளம் காணக்கூடிய அளவுக்கு பிரபல்யம் பெற்றுள்ளது. ராணி மற்றும் கோம்பா போன்ற தனித்துவம் கொண்ட, புகழ்பூத்த வர்த்தகநாமங்கள் இந்த நிறுவனத்தின் தயாரிப்புக்களாக தோற்றம் பெற்றதுடன், இந்நிறுவனத்தின் தயாரிப்புகள் உலகெங்கிலும் உள்ள வாடிக்கையாளர்களால் பயன்படுத்தப்படுகின்றன. மேலும் இந்த வர்த்தகநாமமானது அழகான, ஆரோக்கியமான மற்றும் இயற்கையான ஊட்டமளிக்கும் சருமத்திற்கான தனித்துவமான அடையாளமாக ஏகமனதாக நுகர்வேரால் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. சுவதேஷி சவர்க்காரங்கள், பிரதானமாக வேம்பு மற்றும் சந்தனம் போன்ற தேசிய மூலிகை மற்றும் இயற்கைப் பொருட்களைப் பயன்படுத்துகின்றன. வேம்பு பல நூற்றாண்டுகளாக இயற்கையான பாக்டீரியா எதிர்ப்பு சுத்தப்படுத்தியாக ஆயுர்வேத செய்முறைகளில் ஒரு மூலப்பொருளாகப் பயன்படுத்தப்படுகிறது. அதே சமயம் சந்தனம் பளபளக்கும் சருமத்தை குளிர்விப்பதற்கான மற்றும் அதன் கவர்ந்திழுக்கும் வாசனைக்காக ஒரு மூலப்பொருளாக பெருமதிப்புப் பெற்றுள்ளது. சவர்க்காரங்கள், பொடி வோஷ், ஷாம்பு, கொலோன்கள் மற்றும் கிறீம்கள் (வளர்ந்தோர் மற்றும் குழந்தை பராமரிப்பு ஆகிய இரண்டும்) அவர்களின் மூலிகை கொண்ட தனிப்பட்ட பராமரிப்பு தயாரிப்புகள் எப்போதும் 100% தாவர மூலப் பொருட்களால் தயாரிக்கப்பட்டவை, அவை விலங்கு பரிசோதனையிலிருந்து விடுபட்டவை மற்றும் இப்போது அதற்கான சான்று அங்கீகார முத்திரையைக் கொண்டுள்ளன.

Share

You may also like...