சிங்கர், டெல் வருதுகள் 2022 வலுமிக்க பங்காளர்களை அங்கீகரிக்கிறது
சிங்கர் ஸ்ரீலங்கா பிஎல்சி என்பது ஒரு நூற்றாண்டு கால வரலாற்றைக் கொண்ட நாட்டின் முதன்மையான நுகர்வோர் பொருள் சில்லறை விற்பனையாளராக உள்ளது மற்றும் அனைத்து தரப்பு மக்களாலும் நம்பப்படுகிறது. உலகின் மிகப்பெரிய தொழில்நுட்ப நிறுவனங்களில் ஒன்றான டெல், பல்வேறு வகையான தகவல் தொழில்நுட்பத் தயாரிப்புகளை வழங்குகிறது. டெல் உடனான சிங்கரின் கூட்டாண்மை 2014 ஆம் ஆண்டிலிருந்து ஆரம்பமானது. மேலும் இது சில வருடங்களுக்குள் விரைவான வளர்ச்சியைப் பெற்றுள்ளது. இலங்கை வாடிக்கையாளர்கள் சிங்கரின் சில்லறை விற்பனை மற்றும் விநியோகப்பிரிவின் மூலம் டெல் இன் தயாரிப்புக்களை பெற அனுமதிக்கிறது.
2022 ஆம் ஆண்டிற்கான சிங்கர் டெல் கூட்டாளர் பாராட்டு விருதுகள், 2021 இல் சிங்கரின் டெல் தயாரிப்புக்களை மறுவிற்பனை செய்த அதிசிறந்த ஈடுபாட்டைக் கொண்டவர்களை அங்கீகரிப்பதில் கவனம் செலுத்தியது. இந்த விருதுகள் Blue Ribbon Club என்ற கருப்பொருளுடன் சிறப்பான அங்கீகாரத்தை மேலும் வலுப்படுத்துகிறது. டெல் தயாரிப்புகளுக்கான சிங்கரின் சிறந்த 10 மறுவிற்பனையாளர்களில் ஒருவராக இருப்பதே இந்த விருதை வெல்வதற்கான அளவுகோலாகும். சிங்கர் மற்றும் டெல் இந்த நிகழ்வை ஆண்டுதோறும் நடத்தும் மற்றும் ஒவ்வொரு ஆண்டும் பத்து உறுப்பினர்களை Blue Ribbon Club இல் சேர்கின்றது.
இந்த விருதுகள் குறித்து சிங்கர் ஸ்ரீலங்கா பிஎல்சி குழுமத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி மகேஷ் விஜேவர்தன கருத்துத் தெரிவிக்கையில், “ஒவ்வொரு வருடமும் சிங்கருடன் இருந்தமைக்காக நாங்கள் எங்கள் பங்காளிகளுக்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறோம் என்றார், மேலும் எங்களின் மறுவிற்பனையாளர்கள் வென்றுள்ள விருதுகள் அவர்களின் அர்ப்பணிப்பு மற்றும் ஆர்வத்திற்கு சான்றாகும். டெல் உடன் எமக்கு நீண்டகால பங்காளித்துவம் உள்ளது, இது பல ஆண்டுகளாக வளர்ச்சியடைந்து வருகிறது, இன்று, இலங்கையில் டெல் தயாரிப்புகளின் முன்னணி விநியோகஸ்தராக நாங்கள் இருக்கிறோம், நுகர்வோர் மற்றும் வர்த்தக பிரிவுகளுக்காக சிங்கர் வென்ற டெல் பிராந்திய விருதுகளின் மூலம் இது தெளிவாகிறது.
சிங்கரின் முதல் 10 பங்காளிகள் : 1. IT Galaxy (Pvt) Ltd, 2. Sell-x Computers(Pvt) Ltd 3. Barclays Computers (Pvt) Ltd, 4. Unity Systems (Pvt) Ltd, 5. Incotech Lanka (Pvt) Ltd, 6. Virus Technologies, 7. Sense Micro Distributors (Pvt) Ltd, 8. Atech Technology Solutions (Pvt) Ltd, 9. Mega Mass Computers (Pvt) Ltd, 10. Green Earth
சிங்கர் நிறுவனம், இந்த வருடத்தில் சிறந்த இரு விற்பனையாளர்களை அங்கீகரித்துள்ளதுடன், வர்த்தகப் பிரிவில் விருதை சானக சமரகோனும், நுகர்வோர் பிரிவில் சிறந்த விற்பனையாளராக ரவிந்து ஹேரத்தும் வெற்றி பெற்றனர்.
வெற்றிக்கான ஒரு கூட்டிணைந்த இலக்கு மற்றும் சந்தை மேலாதிக்கத்தை அடைவதற்கான பொதுவான குறிக்கோள், சிங்கர் மற்றும் டெல் கூட்டாண்மையை குறிக்கும், இது தொழில்துறையில் முன்னணி தொழில்நுட்பம் மற்றும் தனித்துவமான விற்பனைக்குப் பின்னரான சேவை ஆகியவற்றை வழங்குகிறது. சிங்கர் மற்றும் டெல் கூட்டாண்மை சந்தைப் பங்கை மேலும் வலுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. சிங்கர் மற்றும் டெல் எதிர்காலத்திற்கு தயாராக உள்ளனர் என்பது மிகவும் தெளிவாக உள்ளமை குறிப்பிடத்தக்கது.
Recent Comments