எனது குழந்தைக்கு பல் துலக்குவதை ஒரு வேடிக்கையான செயலாக மாற்றுவது எப்படி?

உங்கள் குழந்தையை பல் துலக்கச் செய்வதென்பது சில சமயங்களில் நீங்கள் ஒரு போருக்குச் செல்வது போன்று உணரலாம். நீங்கள் பற்தூரிகையை எடுத்துக் கொண்டு வருவதை உங்கள் குழந்தை பார்த்தவுடன், அவர்கள் பல் துலக்குவதை தவிர்க்கும் வகையில், கத்துவது, அழுவது போன்ற நடவடிக்கையை மேற்கொள்ளலாம். இவை எல்லாவற்றையும் வெற்றி கொண்டு நீங்கள் அவர்களை ‘சிங்’ அருகில் அழைத்துச் சென்றால், அடுத்த சிக்கல், அவர்களின் சிறிய சிறிய பற்களைத் துலக்குவதற்காக அவர்களது வாயைத் திறக்க வைப்பது. ஆனால் இதை இவ்வாறு செய்ய வேண்டியதில்லை.

பின்வரும் எளிய தந்திரோபாயங்களை கையாள்வதன் மூலம் உங்கள் குழந்தையை வேடிக்கையான வகையில் பல் துலக்கும் பழக்கத்தை மேற்கொள்ளச் செய்ய முடியும்.

அவர்களது பற் தூரிகையை அவர்களே தெரிவு செய்ய அனுமதிக்கவும்

உங்கள் குழந்தைகளுக்கு அவர்களுக்கான உரிமையின் உணர்வைக் காட்டுங்கள். பல் துலக்குதல் தொடர்பான அவர்களின் ஆர்வத்தையும், ஊக்கத்தையும் அதிகரிப்பதற்காக, அவர்கள் துலக்கும் பற் தூரிகையை அவர்களே தேர்ந்தெடுக்க அனுமதியுங்கள். குழந்தைகள் பல் துலக்கத் தயங்குவதற்கான காரணங்களில் ஒன்று, அது அவர்களுக்கு ஒரு ஆர்வமற்ற விடயமாக இருப்பதாகும். இதற்கு, க்ளோகார்ட் சூட்டி பற் தூரிகை அவர்களுக்கு சிறந்த தெரிவாக இருக்கும். இது பல்வேறு வண்ணங்களில் வருவதுடன், இது அவர்களின் சிறிய பற்களுக்கென்றே விசேடமாக தயாரிக்கப்படுவதே அதற்கான காரணமாகும்.

முதலில் அவர்களின் பொம்மைகளுக்கு பல் துலக்க வையுங்கள்

உங்கள் பிள்ளைகள் அவர்களுக்குப் பிடித்த பொம்மையின் பற்களைத் துலக்கச் செய்வது, தங்கள் பற்களைத் துலக்குவதற்கான பயத்திலிருந்து அவர்களை விடுபட உதவுகிறது. அவர்களின் பொம்மையின் பற்களை முதலில் அவர்களைத் துலக்கச் செய்வதன் மூலம் அவர்கள் தங்கள் பற் தூரிகையை எவ்வாறு பயன்படுத்தலாம் என்பது தொடர்பான அனுபவத்தை அவர்களுக்கு வழங்கலாம்.

புதிய பழச் சுவை கொண்ட பற்பசையை பயன்படுத்தி பார்க்கவும்

உங்கள் குழந்தை அவர்களது பற்பசையைத் தெரிவு செய்ய அனுமதியுங்கள். இதன் மூலம் அவர்களை அப்பணியிலான ஈடுபாட்டை மேற்கொள்ளச் செய்யுங்கள். குழந்தைகள் பொதுவாக பழச் சுவை கொண்ட பற்பசைகளை விரும்புகிறார்கள். அவர்கள் க்ளோகார்ட் சூட்டியின் ஸ்ட்ரோபெரி மற்றும் மாம்பழச் சுவை கொண்ட பற்பசையை முயற்சி செய்ய அனுமதியுங்கள். இவை இரண்டும் குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த சுவைகளாகும்.

உங்கள் குழந்தைகளுக்கு பல் துலக்குவதை எவ்வாறு என காண்பியுங்கள்; உங்கள் குழந்தைகளுடன் நீங்களும் பல் துலக்குங்கள்

உங்கள் குழந்தைகளை பல் துலக்க ஊக்குவிக்க, எப்படி பல் துலக்க வேண்டும் என்பதை அவர்களுக்குக் காண்பியுங்கள். அத்துடன் அவர்களுடன் ஒன்றாக நீங்களும் இணைந்து பல் துலக்குங்கள். நீங்கள் அதைச் செய்வதைப் பார்த்தவுடன், உங்கள் குழந்தைகளுக்கும் அதைச் செய்வதில் அதிக ஆர்வம் காட்டுவார்கள், அவர்களுக்கு அதிக விருப்பமும் ஏற்படும்.

மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் பாடலைப் பாடுங்கள்

பல் துலக்குவதற்கு எடுக்கும் நேரமாக பரிந்துரைக்கப்படும் சுமார் இரண்டு நிமிடங்கள் நீளத்திற்கு மகிழ்ச்சியான தொனியுடன் கூடிய குழந்தைகளுக்கான பாடலொன்றை கேட்கச் செய்யுங்கள். சிறிது காலம் சென்றதும், உங்கள் குழந்தை குறிப்பிட்ட பாடலை கேட்கும் போது பல் துலக்குவதுடன் மேலும் அதைச் செய்வதில் மகிழ்ச்சியும் அடையும்.

சிறுவர்களை ஊக்குவிக்க பரிசுகளை வழங்குங்கள்

பரிசுகளை வழங்குவது உங்கள் குழந்தைகளை பல் துலக்க ஊக்குவிக்க உதவும். நீங்கள் வழங்கும் பரிசனாது, இனிப்பாகவோ, ஆரோக்கியமற்ற தின்பண்டங்களாகவோ அல்ல என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளும்; ஏனெனில் அவை பற் சிதைவை ஏற்படுத்தக் கூடியன. அதற்குப் பதிலாக, தினமும் ஒரு ஸ்டிக்கர் வழங்குவது போன்ற எளிமையான ஒரு வழியை முயற்சிக்கவும். இதன் மூலம் அவர்களை அதனை சேகரிக்க ஊக்கவிக்கச் செய்யலாம். அல்லது ஒரு பூங்காவிற்கு செல்வதற்கான பயணத்தைத் திட்டமிடலாம்.

Share

You may also like...