இலங்கையில் முழுமையான சுகாதார பராமரிப்பில் புரட்சியை ஏற்படுத்தும் ‘சிலோன் ஹோலிஸ்டிக்’

சிலோன் ஹோலிஸ்டிக், ஒரு முன்னோடி டிஜிட்டல் சுகாதார பராமரிப்பு தளமென்பதுடன், இது இலங்கையில் முதன்முறையாக ஆயுர்வேதம், பாரம்பரிய மருத்துவம், சித்தா, யுனானி மற்றும் மேலும் பல முழுமையான மருத்துவ முறைகளில் பிரதானமாக கவனம் செலுத்துகிறது!

கோவிட் – 19 தொற்றுநோயினை அடுத்து உருவான இந்த டிஜிட்டல் சிகிச்சையக அமைப்பு, மருத்துவ நிபுணர்கள் மற்றும் நோயாளிகளுக்கு இடையே ஏற்படும் திடீர் இடைவெளியை நீக்கும் பொருட்டு ஸ்தாபிக்கப்பட்டது. குறிப்பாக தொற்றாத நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் வைரஸால் இலகுவாக பாதிக்கப்படக் கூடிய அதிக ஆபத்துள்ள குழுவான முதியவர்கள் அவர்களின் வழக்கமான சிகிச்சையைத் தொடர மருத்துவமனைகளுக்குச் செல்ல முடியாதவர்களுக்கானதாகும். வாய்ப்புகள், அடுத்த தலைமுறை திறன்களை வழங்குவதன் மூலமும் இலங்கை இளைஞர்கள் மிகவும் புதுமையான மற்றும் தொழில்முனைவோராகவும், மிக அழுத்தமான அபிவிருத்தி சவால்களை நிலையான முறையில் தீர்க்க அவர்களை வலுவூட்டும் இலங்கை ஐக்கிய நாடுகள் அபிவிருத்தி நிகழ்ச்சித் திட்டம் (UNDP) இன் முதற்தர இளைஞர்கள் மற்றும் புத்தாக்க நிகழ்ச்சித் திட்டமான HackaDev மூலம் தொழில்நுட்ப, நிதி ரீதியாக சிலோன் ஹோலிஸ்டிக் ஆதரிக்கப்படுகிறது.

HackaDev Enterprise Support Programme (HESP)) என்பது கோவிட் – 19 தொற்றுநோயால் பாதிக்கப்பட்ட நிறுவனங்ககள் மற்றும் HackaDev முன்னாள் மாணவர் வலையமைப்பினைச் சேர்ந்த தொழில்முனைவோரை மீண்டும் கட்டியெழுப்பும் மற்றும் மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட ஒரு முயற்சியாகும். 2020/21 இல் முதல் தொகுதி வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்ட நிலையில், 15 நிறுவனங்களுக்கு 06 மாத கால விரிவான அபிவிருத்தி ஆதரவை வழங்கியது. HESP தலையீடுகளின் ஆரம்ப நிதி மற்றும் வளர்ச்சிக்கான ஆதரவு செயல்முறையை நிர்வகிப்பதற்கான நிபுணர் சேவை வழங்குநராக Curve Up நியமிக்கப்பட்டதுடன், அவர்கள் தொழில்முனைவோருக்கு அவர்களின் பயணத்தில் தேவையான ஆதரவையும் வழிகாட்டலையும் வழங்குவதில் வெற்றிகரமாக திகழ்ந்ததுடன், திட்டத்தை வெற்றிகரமாக பூர்த்தி செய்வதற்கு பங்களித்தனர்.

உடல், மன, உணர்வு, ஆன்மீக மற்றும் சமூக நல்வாழ்வை உள்ளடக்கிய முழுமையான ஆரோக்கியத்தை மேம்படுத்தும் நோக்கத்துடனும், ஆரோக்கியமான எதிர்காலத்தை உருவாக்க பங்களிப்புச் செய்ய, சிலோன் ஹோலிஸ்டிக் 24×7 இ-செனலிங், மெய்நிகர் ஆலோசனைகள் மற்றும் மருத்துவ ஆலோசனை, ஒரு ஒன்லைன் மருந்தகம் மற்றும் தனிப்பட்ட மருந்து விநியோகங்கள் உள்ளிட்ட பரந்த அளவிலான டெலிஹெல்த் சேவைகளை வழங்குகிறது. தொற்றுநோய்க்கு மத்தியில் ஒரு பாதுகாப்பான அமைப்பாக இருப்பதுடன், சிலோன் ஹோலிஸ்டிக் என்பது பல்வேறு மருத்துவ முறைகளை ஒருங்கிணைப்பதற்கான ஒரு இடமாகும். இது முதன்மையாக முழுமையான நல்வாழ்வை ஊக்குவிப்பது மற்றும் விழிப்புணர்வை ஏற்படுத்துவதில் கவனம் செலுத்துகிறது.

“அதிகமான மக்கள் சமநிலையான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கையை நோக்கி நகர்கையில் தொற்றுநோய்க்கு மத்தியில் முழுமையான நல்வாழ்வானது கவனத்தை ஈர்த்துள்ளது. உடல், உணர்ச்சி, மன, ஆன்மீகம் அல்லது சமூகமாக இருந்தாலும், வாழ்க்கையின் ஒவ்வொரு பகுதியிலும் ஆரோக்கியத்தை பேணுவதன் முக்கியத்துவத்தை மக்கள் படிப்படியாக அறிந்து வருவதுடன், எங்கள் வர்த்தகநாமத்தால் இந்த விடயத்தில் ஒரு முக்கியமான தாக்கத்தை உருவாக்க முடிந்தது. தொற்றுநோயின் இந்த நெருக்கடியான காலகட்டத்தில் சிலோன் ஹோலிஸ்டிக் மக்களுக்கு பாதுகாப்பான சூழலை உருவாக்கி, அவர்களை சம்பந்தப்பட்ட சுகாதார நிபுணர்களுடன் இணைக்கிறது என்று நாங்கள் நம்புகிறோம். எங்கள் தளமானது இலங்கை சமூகத்தின் பிரதான தேவைகளை நிவர்த்தி செய்வதுடன்,  கோவிட் – 19 வளைவை சமப்படுத்த உதவுகிறது,”என்று சிலோன் ஹோலிஸ்டிக் ஸ்தாபகர் மற்றும் பிரதான நிறைவேற்று அதிகாரி மருத்துவர் உமேஷா வித்தாநாச்சி தெரிவித்தார்.

இந்த முயற்சி தொடர்பில் கருத்து தெரிவித்த கித்மினி நிசங்க, அறிவு முகாமைத்துவம் மற்றும் அறிக்கையிடல் அதிகாரி, கொள்கை மற்றும் நிகழ்ச்சிக் குழு, இலங்கை UNDP, கருத்து தெரிவிக்கையில்; “UNDP, அதன் HackaDev திட்டத்தின் மூலம், இலங்கையின் பாரம்பரிய மருத்துவம் மற்றும் சுகாதாரப் பராமரிப்பு அமைப்பை டிஜிட்டல் யுகத்திற்கு கொண்டு செல்வதை நோக்கமாகக் கொண்ட மெய்நிகர் மருத்துவ ஆலோசனை தளத்தை உருவாக்கும் பயணத்தில் Ceylon Holistic க்கு ஆதரவளித்ததில் மகிழ்ச்சி அடைகிறது. மருத்துவர் உமேஷா மற்றும் அவரது குழுவினரின் வெற்றிகரமான தொழில் முயற்சியாண்மை பயணத்திற்கு வாழ்த்தினை தெரிவித்துக் கொள்வதுடன், இலங்கையில் சமூக புத்தாக்கம் மற்றும் தொழில் முயற்சியாண்மை ஆகியவற்றை ஊக்குவிக்கும் அதே வேளையில், நிலையான அபிவிருத்தி இலக்குகளை (எஸ்.டி.ஜி.) அடைய இளைஞர்கள் மற்றும் இலங்கை ஹோலிஸ்டிக் போன்ற அவர்களின் புத்தாக்கங்களுக்கு HackaDev தொடர்ந்து ஆதரவளித்து வருகின்றது,” என்றார்.

தொற்றுநோய் காரணமாக பல பின்னடைவுகளை சந்தித்த இலங்கையின் ஆரோக்கிய சுற்றுலாத் துறையிலும் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய சமூக நிறுவனமாக சிலோன் ஹோலிஸ்டிக்கின் குறிப்பிடத்தக்க வகிபாகம் நீண்டுள்ளது.

சிலோன் ஹோலிஸ்டிக் இலங்கையில் சுகாதாரப் பாதுகாப்பு முறையை வலுவூட்டுவதில் பாரிய முன்னேற்றம் கண்டு வருவதுடன், ஆரோக்கியமான எதிர்காலத்திற்காக தொடர்ந்து பாடுபட்டு வருகிறது. அதன் இறுதி குறிக்கோள், மக்கள் ஒரு முழுமையான வாழ்க்கை முறைக்கு மாற்றமடைய உதவுவதாகும். இது நீண்ட காலத்தில் தொற்றாத நோய்களைத் தடுப்பதில் குறிப்பிடத்தக்க பங்கை வகிக்கும்.

இலங்கை UNDP, அதன் பங்குதாரர்களுடன் இணைந்து, இளம் தொழில்முயற்சியார்களை உறுதியான மற்றும் பேண்தகு நடவடிக்கை மூலம் வலுவூட்ட உறுதிபூண்டுள்ளதுடன் எதிர்காலங்களில் இதுபோன்ற பல HackaDev முன்னாள் மாணவ தொழில்முயற்சியார்களை, தொற்றுநோயின் பாரிய சமூக-பொருளாதார விளைவுகளிலிருந்து முன்னேற ஆதரவளிக்க எதிர்பார்க்கின்றது.

மேலதிக விபரங்களுக்கு,  www.ceylonholistic.com இணையதளத்திற்கு விஜயம் செய்யுங்கள்.

Share

You may also like...