‘மன்னா’ 9 தானியங்களுடனான ஆசியாவின் முதலாவது பல் தானிய போசாக்கு கிரக்கர் பிஸ்கட்டை அறிமுகப்படுத்தும் உஸ்வத்த
கடந்த 65 ஆண்டுகளுக்கும் மேலாக உயர்தர தின்பண்டங்கள் மற்றும் சிற்றுண்டிகளை வழங்கும் இலங்கையின் பழமை வாய்ந்த இனிப்புப்பண்ட உற்பத்தியாளரான உஸ்வத்த நிறுவனம் (Uswatte Confectionery Works (Pvt) Ltd), 9 தானியங்களுடனான ஆசியாவின் முதலாவது பல் தானிய போசாக்கு கிரக்கர் பிஸ்கட்டை அண்மையில் அறிமுகப்படுத்தி வைத்தது.
இந்த புரட்சிகரமான கிரக்கர் பிஸ்கட்டுகள், ஆரோக்கியம் மற்றும் போசாக்கான பொருட்களின் கலவையினால் தயாரிக்கப்படுகிறது. இது சுவை, ஆரோக்கியம் மற்றும் போசாக்கினை நிறைவான வகையில் வழங்குகிறது. புரதம், நார்ச்சத்து, விற்றமின்கள், கனியுப்புகள், நுண்ணங்கிகளை எதிர்த்து போராடும் உணவுக் கூறுகள் உள்ளிட்ட ஏனைய அத்தியாவசிய போசணைகளும் நிறைந்ததாக இது காணப்படுகின்றது. ‘மன்னா கிரக்கர்’ என அழைக்கப்படும் இந்த பிஸ்கட்டுகள், காலை உணவுக்கு சிறந்த மாற்றீடாகும் என்பதுடன், வழக்கமான பிஸ்கட்டுகள் மற்றும் கிரக்கர்களை விட மிகவும் ஆரோக்கியமானதுமாகும். இவை அனைத்திற்கும் மேலாக, இது சந்தையில் உள்ள ஏனைய கிரக்கர்களின் சுவைக்கு மாற்றீடாக உள்ளதோடு மாத்திரமன்றி, பல்வேறு ஆரோக்கியம் தொடர்பான நன்மைகளையும் வழங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
மன்னா கிரக்கர் ஆனது, இலங்கையில் உள்ள கிரக்கர் பிஸ்கட்டுகளுடன் ஒப்பிடுகையில், 11.6% வீதம் எனும் அதிகளவு நார்ச்சத்து கொண்ட ஒரே கிரக்கர் என்ற பெருமையை பெறுகிறது. இவ்வுற்பத்தியானது, சீனி சேர்க்கப்படாதது என்பதுடன், செயற்கை நிறமூட்டிகள், சுவையூட்டிகள், பழுதடையாமல் பாதுகாக்கும் இரசாயனங்கள் போன்றவற்றை கொண்டிராததுமாகும். ஆரோக்கியமான வாழ்க்கை முறையை விரும்புவோருக்கு இது ஒரு சிறந்த தெரிவாக அமைகிறது.
அதிக போசணைகளைக் கொண்டுள்ள மன்னா கிரக்கர், அனைத்து வயதினருக்கும் ஒரு சிறந்த சுவை அனுபவத்தை வழங்குகிறது. இந்த கிரக்கரிலுள்ள மேலதிக சுவையின் காரணமாக, ஏனைய சாதாரண கிரக்கர்களை ஓரம் கட்டி பெரும்பாலான சிறுவர்களுக்கு பிடித்த தெரிவாக இது மாறி வருகின்றது. மன்னா கிரக்கர்களை, வயது வந்தவர்கள் தனியாகவோ அல்லது சிறுவர்களுக்கு பாலாடைக்கட்டி, வெண்ணெய் அல்லது பழச்சாறுடன் பரிமாறுவதன் மூலம், உச்ச சுவை அனுபவத்தை அவர்களுக்கு வழங்கலாம்.
கோதுமை, பச்சைக் கடலை, மோல்ட் தானியம், திணை, கௌபி, பார்லி, சோளம், சிவப்பு அரிசி, குரக்கன் ஆகிய ஆரோக்கியமான 9 தானியங்களின் உயர் போசாக்கினை கொண்டதாக, மன்னா கிரக்கர் தயாரிக்கப்படுகிறது. இந்த புரட்சிகர பிஸ்கட் தயாரிப்பானது, 90% உள்ளூர் மூலப்பொருட்களை பயன்படுத்தி, மிக உயர்ந்த தரம் மற்றும் பாதுகாப்பு தரங்களை பின்பற்றி தயாரிக்கப்படுகிறது.
புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட இத்தயாரிப்பு தொடர்பில், உஸ்வத்த கன்பெக்ஷனரி வேர்க்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் தலைவர்/நிர்வாக பணிப்பாளர் குயின்டஸ் பெரேரா கருத்து தெரிவிக்கையில், “இந்த தனித்துவமான போசாக்கான கிரக்கர்களை உள்ளூர் சந்தையில் அறிமுகப்படுத்துவதில் நாம் பெருமைப்படுவதோடு, ஆரோக்கியமான வாழ்க்கைப் பாதையை விரும்பும் எமது விஸ்வாசமான நுகர்வோருக்கு அதற்கான பாதையை ஏற்படுத்தி ஊக்கப்படுத்துகிறோம். தற்போது ஆரோக்கியம் தொடர்பில் மக்கள் அதிக ஆர்வத்துடன் செயற்படுகிறார்கள். எனவே அதற்கான சந்தை இடைவெளியை, சுவை மற்றும் தரத்தில் எவ்வித குறைபாடும் மேற்கொள்ளாமல் மிகவும் போசாக்கான கிரக்கர்களை நாம் தீர்வாக வழங்க வேண்டும். சமநிலை உணவுக்கான அனைத்து விதமான முக்கிய போசணைத் தேவைகளையும் வழங்கும் புதிய மன்னா கிரக்கர்களை அனைத்து இலங்கையர்களும் விரும்புவார்கள் என நாம் நம்புகிறோம்.” என்றார்.
‘மன்னா’ எனும் சிங்களச் சொல்லின் பொருள், கடவுளால் பரிசளிக்கப்பட்ட உணவு என்பதாகும். மன்னா கிரக்கரில் அடங்கியுள்ள போசணைகளின் நன்மைகளின் அடிப்படையில், அதன் முக்கிய மூலப்பொருளான கோதுமை ஆனது, விற்றமின்கள், கனியுப்புகள், புரதங்கள் நிறைந்த மூலப்பொருளாகும். பச்சைக் கடலை ஆனது, சிறந்த தாவர அடிப்படையிலான புரத மூலங்களில் ஒன்றாகும். மோல்ட் தானியமானது, நார்ச்சத்து நிறைந்தது என்பதுடன், இதய நோய்களின் அபாயத்தை குறைக்கவும் உதவுகிறது. கௌபியானது, தீங்கு விளைவிக்கும் கொலஸ்ட்ரோலின் அளவைக் குறைக்கிறது. திணையானது, இரத்த அழுத்தத்தைக் குறைப்பதுடன், மாரடைப்பு அல்லது பக்கவாதம் ஏற்படும் அபாயத்தைக் குறைக்க உதவுகிறது. பார்லி, எலும்பு தொடர்பான பிரச்சினைகளைத் தடுப்பதுடன், கொலஸ்ட்ராலைக் குறைக்கிறது. அத்துடன் சோளத்தில், விற்றமின் B, விற்றமின் C உள்ளிட்ட பல்வேறு வகையான விற்றமின்கள் உள்ளடங்கியுள்ளன. சிவப்பு அரிசி ஆனது, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதுடன், உடல் எடையை குறைப்பதற்கு ஏற்றதாகும். குரக்கன், நீரிழிவு நோயை கட்டுப்படுத்த உதவுகிறது. இவ்வாறான ஆரோக்கியமான மூலப்பொருட்கள் அனைத்தையும் ஒன்றிணைத்தவாறு, நுகர்வோருக்கு மறக்கமுடியாத சுவை அனுபவத்துடன் மன்னா கிரக்கர் வருகின்றது.
தொழிற்துறை தொழில்நுட்ப நிறுவனத்தின், உணவுத் தொழில்நுட்ப பிரிவின் முன்னாள் தலைவர்/ பிரதிப் பணிப்பாளரான வைத்தியர் ஜானகி குணரத்ன Ph.D, மன்னா கிரக்கரில் உள்ள போசாக்கின் பெறுமதியின் அடிப்படையில், மிக உச்ச வகையில் அதனை பரிந்துரைக்கிறார். இது தொடர்பில் கருத்து வெளியிட்ட அவர், ‘மன்னா’ ஆனது, 9 தானியங்கள் மற்றும் பருப்பு வகைகளின் கலவையினால் வடிவமைக்கப்பட்ட பல் தானிய கிரக்கராகும். கிரக்கரின் கலவையானது, ‘உணவு பன்முகத்தன்மை’ மற்றும் குறிப்பாக அதன் நுண் போசாக்குகள் ஆகியவற்றின் அடிப்படையில் அது முழுமைப்படுத்தப்பட்டுள்ளது. காபோவைதரேட்டுகள், புரதங்கள், கொழுப்பு ஆகியன உரிய விகிதாசாரத்தில் அமையப் பெற்றுள்ளதோடு, போசாக்கின் அடிப்படையில் சிறந்த சமநிலையில் உள்ளது. இந்த பிஸ்கட், சீனி அற்றது என்பதுடன், சிக்கலான காபோவைதரேட்டுகளின் அதிக உள்ளடக்கத்தையும் கொண்டுள்ளது. இந்த பிஸ்கட்டின் உணர்திறன் பண்புகள் அனைவராலும் ஏற்றுக்கொள்ளத்தக்க வகையில் அமைந்துள்ளன. போசணைக் கலவையின் அடிப்படையில், இத்தயாரிப்பானது ‘ஆரோக்கியமான சிற்றுண்டிகள்’ எனும் பிரிவின கீழ் வகைப்படுத்தக் கூடியதாகும்.” என்றார்.
மன்னா கிரக்கரை அறிமுகப்படுத்தியதன் மூலம், உஸ்வத்த கன்பெக்ஷனரி ஆனது, ஆரோக்கியமான மக்களைக் கொண்ட ஒரு புதிய தலைமுறையை உருவாக்கும் பயணத்திற்கு வழி வகுத்துள்ளதுடன், இதன் மூலம் நாடு முழுவதும் உள்ள விவசாயிகளுக்கு உதவும் அதே வேளையில், அவர்களின் உற்பத்திக்கான அதிக பெறுமதியை வழங்கி அவர்களை ஊக்குவிக்கிறது. தற்போது மற்றும் எதிர்கால ரீதியான பெரு நிறுவன சமூகப் பொறுப்பு (CSR) திட்டங்களை முன்னெடுப்பதற்காக இந்த தயாரிப்பிலிருந்து பெறப்பட்ட இலாபத்தின் 90% இனை உஸ்வத்த, பயன்படுத்தும். இத்தயாரிப்பை ஐரோப்பா, ஆபிரிக்கா, இந்தியா, அமெரிக்கா போன்ற வெளிநாட்டு சந்தைகளுக்கும், குறிப்பாக, சிறுவர்கள் மற்றும் இளைஞர்களிடையே பரவலாக போசாக்கு குறைபாடுகள் அடையாளம் காணப்படும் ஆபிரிக்க நாடுகளின் சந்தைகளுக்கும் இதனை ஏற்றுமதி செய்ய உஸ்வத்த திட்டமிட்டுள்ளது.
மன்னா கிரக்கர் தற்போது ‘குடும்பப் பொதி’ (Family Pack) ஆக இலங்கையில் கிடைக்கிறது. சிறிய ‘மினி பெக்’ (Mini Pack) விரைவில் உள்ளூர் சந்தையில் அறிமுகப்படுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
உஸ்வத்த கன்பெக்ஷனரி வேர்க்ஸ் (பிரைவேட்) லிமிடெட் பற்றி
உயர்தர, சுகாதாரமான தின்பண்டங்கள் மற்றும் சிற்றுண்டிகளை தயாரிப்பதில் இலங்கையின் முன்னோடியாக, உஸ்வத்த கன்பெக்ஷனரி வேர்க்ஸ் (பிரைவேட்) லிமிடெட் திகழ்கின்றது. கடந்த 65 ஆண்டுகளுக்கும் மேலான வரலாற்றைக் கொண்ட உஸ்வத்த கன்பெக்ஷனரி வேர்க்ஸ் நிறுவனம் இலங்கையின் பழமையான தின்பண் உற்பத்தி நிறுவனமாகும். நிறுவனத்தின் தயாரிப்பு பட்டியலில் Tipi Tip, Wafers, Glucorasa Jujubes, Party, Peppermint, Jelly, Glucolife, Fruit Candy, Jumbo Peanuts ஆகியன அடங்குகின்றன. உஸ்வத்த நிறுவனம் 1956 ஆம் ஆண்டில், கிறிஸ்டி பெரேரா மற்றும் அன்டன் பெரேரா ஆகிய இரண்டு சகோதரர்களால் நிறுவப்பட்டது. அதன் முதலாவது தொழிற்சாலை 1961 ஆம் ஆண்டில் இரத்மலானையில் நிறுவப்பட்டது. நிறுவனத்தின் புகழ் பெற்ற தயாரிப்பான குளுக்கோரச, அனைத்து இலங்கை நுகர்வோரிடமும், அனைத்து வயதினரிடையேயும் பிரபலமான ஒரு இனிப்புப் பண்டம் என்பதுடன், நிறுவனத்தின் ஆரம்ப கால தயாரிப்புகளிலும் ஒன்றாகும். 2009ஆம் ஆண்டு முதல், தற்போதைய நிர்வாக பணிப்பாளர் குயின்டஸ் பெரேராவின் தொலைநோக்கான தலைமைத்துவம் மற்றும் மூலோபாய வழிகாட்டலின் கீழ் உஸ்வத்த இருந்து வருகின்றது. அவர் இலங்கையில் மிகவும் அனுபவம் வாய்ந்த தின்பண்ட உற்பத்தியாளர் என்பதுடன் அமெரிக்காவில் உள்ள விஸ்கொன்சின் பல்கலைக்கழகத்தில் தின்பண்டங்கள் தொடர்பான பட்டத்தையும் பெற்றவராவார்.
Recent Comments