உங்கள் ஆடம்பரமான ஐரோப்பிய வாகனத்தை DIMO CERTIFIED மூலம் விற்கும்போது மன அமைதிக்கு உத்தரவாதம்
இலங்கையின் முன்னணி பெரு நிறுவனங்களில் ஒன்றான DIMO வின், ஏற்கனவே சொந்தமாகக் கொண்டுள்ள வாகனங்களை விற்பனை செய்யும் பிரிவான DIMO CERTIFIED ஆனது, ஐரோப்பிய ஆடம்பர வாகன உரிமையாளர்கள் தங்கள் வாகனத்தை மனதுக்கு அமைதியான வகையில் விற்பனை செய்வதற்கான சிறந்த வாய்ப்பை வழங்குகிறது. 80 ஆண்டுகளுக்கும் மேலாக ஒரு இலங்கை தரக்குறியீடாக விளங்கும் DIMO, தொடர்ந்தும் அதன் மீது வைக்கப்பட்டுள்ள வாடிக்கையாளர்களின் நம்பிக்கைக்கு நன்றி செலுத்துவதற்காக அது தொடர்ச்சியாக தன்னை அர்ப்பணித்து செயற்பட்டு வருகிறது. அதேவேளை, உங்கள் ஆடம்பர ஐரோப்பிய வாகனத்தை விற்பனை செய்யும்போது, DIMO வின் நம்பகமான மதிப்பீடுகளுடன், உங்கள் வாகனத்திற்கு சிறந்த மதிப்பு வழங்கப்படுவதுடன், அதன் பரிவர்த்தனையின் நிறைவில், உங்கள் மன அமைதிக்கும் உத்தரவாதம் அளிக்கப்படுகிறது.
பல வருடங்களாக, Mercedes-Benz, Jeep, Chrysler உரிமையாளர்கள் தாங்கள் ஏற்கனவே கொள்வனவு செய்த வாகனங்களை விற்கும்போது விலைமதிப்பற்ற சேவையை அனுபவித்து வந்தனர். தற்போது நிறுவனங்கள் மற்றும் தனிநபர்கள் தங்கள் ஆடம்பர ஐரோப்பிய வாகனத்தை விற்கும்போது DIMO வின் எட்டு தசாப்த கால நம்பிக்கை மற்றும் நிபுணத்துவத்தை அனுபவிக்க வாய்ப்பு கிடைக்கின்றது.
DIMO CERTIFIED ஆனது, எந்தவொரு வாடிக்கையாளரும் தாங்கள் ஏற்கனவே சொந்தமாகக் கொண்டுள்ள ஆடம்பர வாகனத்தை விற்பனை செய்யவும் அதனை கொள்வனவு செய்வதற்குமான வாய்ப்பை வழங்குகிறது. இதில் Mercedes-Benz, Chrysler, Jeep SUV கள் மற்றும் 2010 இற்குப் பின்னர் பதிவு செய்யப்பட்ட ஏனைய ஆடம்பர ஐரோப்பிய வாகன தரக்குறியீடுகளும் உள்ளடங்குகின்றன. இதன்போது, வாடிக்கையாளர்கள் எப்போதும் DIMO வின் பாதுகாப்பில் பேணப்படுவதோடு, வாகனம் அசல் நிலையில் உள்ளது என்ற உறுதிப்பாட்டுடன், அது அவதானிப்பிற்காக வழங்கப்பட்டதிலிருந்து மீண்டும் கொள்வனவிற்காக வெளியிடப்படும் வரை, வாக்குறுதியளித்தபடி பேணப்படுகிறது.
பதிவு செய்யப்பட்ட வாகனத்தை விற்பது என்பது, வழக்கமாக அதிக நேரம் எடுத்துக்கொள்ளப்படும் ஒரு செயன்முறையாகும். இதற்காக விற்பனையாளர் பல்வேறு தரப்பட்ட முயற்சிகளை செய்ய வேண்டி ஏற்படுகிறது. வாகனத்தை விற்பது பற்றிய விளம்பரங்களை பல்வேறு தளங்களில் வெளியிட்ட பின்னர், வாங்குபவர்கள், தரகர்கள், வாகனத்தை உண்மையில் கொள்வனவு செய்ய விரும்பாத போதிலும் சந்தையில் உள்ள வாகனங்களின் தற்போதைய விலையை அறிய விரும்பும் நபர்கள் ஆகிய பல தரப்பட்ட நபர்களிடமிருந்து பல்வேறு தொலைபேசி அழைப்புகளுக்கு, வாகன உரிமையாளர் பதிலளிக்க வேண்டிய நிலை காணப்படுகின்றது. ஒரு சிலர் வாகனத்தை பரிசோதிப்பதற்காக, விற்பனையாளரைப் அணுக விரும்புவர், இது தற்போது நாட்டில் ஆபத்தான வகையில் பரவி வரும் கொவிட்-19 தொற்றுக்கு மத்தியில், குறிப்பிடும்படியான உடல் ஆரோக்கியம் தொடர்பான ஆபத்தான விடயமாகும். இருப்பினும், DIMO CERTIFIED ஐ அணுகுவதன் மூலம், ஆடம்பர ஐரோப்பிய வாகனங்களை விற்க விரும்பும் நபர்களுக்கு, DIMO வின் தொழில்முறை சேவை காரணமாக மன அமைதிக்கு உத்தரவாதம் அளிக்கப்படுவதோடு, இதுபோன்ற தொல்லைகளையும் தவிர்க்கலாம். Mercedes-Benz, Chrysler, Jeep உள்ளிட்ட உலகப் புகழ்பெற்ற சொகுசு வாகன தரக்குறியீடுகளைக் கையாள்வதில் பரந்த அனுபவமுள்ள DIMO CERTIFIED இனது, தொழில்முறை மதிப்பீட்டு குழு உங்கள் வாகனத்திற்கு மிகவும் துல்லியமான மற்றும் நம்பகமான கொள்வனவுக்கான விலையை நிர்ணயிக்கும்.
DIMO வினால் இறக்குமதி செய்யப்பட்டு பராமரிக்கப்படும் Mercedes-Benz, Chrysler, Jeep வகைகளுக்கு, DIMO 800 இல் ஒரு விரிவான வாகனச் சோதனை மேற்கொள்ளப்படும் அதே நேரத்தில் ஏனைய ஐரோப்பிய வாகனங்களுக்கு, அவற்றின் விற்பனைக்கு பிந்திய சேவை நிலையமான பிரத்தியேக DIMO AutoLab இல் மதிப்பீடு செய்யப்படுகின்றன. DIMO CERTIFIED இன் கீழ் மீள்விற்பனை செய்யும் வாகனங்கள், DIMO CERTIFIED இனது பெருமையை தொடர்ந்தும் பேணும் வகையில், நன்கு பராமரிக்கப்பட்ட ஆடம்பர ஐரோப்பிய வாகனங்களை உண்மையான மைலேஜுடன் மாத்திரமே மீள் கொள்வனவு செய்யும் என்பதை உறுதிப்படுத்த விரும்புகிறது. இவை அனைத்திற்கும் மேலாக, DIMO விலிருந்து மற்றொரு வாகனமொன்றை கொள்வனவு செய்ய வேண்டிய அவசியமின்றி, DIMO விற்கு வாகனத்தை விற்பது எனும் தனித்துவமான நன்மையையும் DIMO CERTIFIED அதன் வாடிக்கையாளர்களுக்கு வழங்குகிறது.
‘மீள் கொள்வனவு’ விலையைப் பொறுத்தவரை, DIMO CERTIFIED எப்போதும் விற்பனையாளர்களுக்கு வாகனத்திற்கான சிறந்த மதிப்பை வழங்கும். காரணம் இச்செயல்பாட்டில் மூன்றாம் தரப்பினரின் தலையீடு கிடையாது. வாகன உரிமையாளர்கள் தங்கள் ஆடம்பர வாகனத்தை விற்கும்போது எதிர்கொள்ளும் முக்கிய தடைகளில் ஒன்று, நிதி நிறுவனங்களில் நிலுவையில் உள்ள குத்தகை என்பதையும் DIMO புரிந்து கொண்டுள்ளது. அந்த வகையில் நிலுவையில் உள்ள அனைத்து குத்தகைக் கொடுப்பனவுகளையும் நேரடியாக செலுத்துவதன் மூலம் DIMO ஆனது, வாகனத் தொழில் துறையில் புரட்சியை ஏற்படுத்தியவாறு, வாகன உரிமையாளரை மேலதிக நிதிச் சுமையிலிருந்து விடுவிப்பதுடன், விற்பனை செயன்முறையையும் சுமூகமாக மேற்கொள்ள உதவுகிறது. அத்துடன், பதிவு செய்யப்பட்ட உரிமையாளரின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், குறித்த வாகனத்தின் விற்பனை நிறைவடைந்தவுடனேயே வாகன அனுமதிப்பத்திரம் புதிய உரிமையாளருக்கு மாற்றப்படும். வாகனம் விற்பனை செய்யப்பட்ட சில மாதங்கள் அல்லது பல ஆண்டுகளுக்குப் பின்னர், பதிவு செய்யப்பட்ட உரிமையாளருக்கு சட்டச் சுமைகளுக்கு வழிவகுக்கின்ற விடயங்களான, தெரியாத தரப்பினருக்கு திறந்த காகிதங்கள் மூலம் வாகனத்தை ஒப்படைக்கும் அபாயங்களை இது குறைக்கிறது.
DIMO வின் பொது முகாமையாளர் (DIMO CERTIFIED Pre-Owned Vehicles) தரங்க குணவர்தன இது தொடர்பில் தெரிவிக்கையில், “80 ஆண்டுகளுக்கும் மேலான உயர்ந்த வரலாற்றைக் கொண்ட, வாகனத் துறையில் புகழ்பெற்ற நிறுவனம் எனும் வகையில், எமது வாடிக்கையாளர் மைய அணுகுமுறைக்கு ஏற்ப DIMO தொடர்ந்தும் புதுமையான தீர்வுகளை வழங்கி வருகிறது. 2020 ஆம் ஆண்டில் ‘DIMO CERTIFIED’ எனும் மாற்றத்துடன், ஏற்கனவே சொந்தமான வாகனங்களின் விற்பனை வர்த்தகத்தை ஆரம்பித்து, இலங்கையில் வாகனத் துறையை மீள் வரையறை செய்யும் வகையிலான பல்வேறு புதிய சேவைகளை நாம் அறிமுகப்படுத்தியுள்ளோம். வாகனத் துறையில் நாம் கொண்டுள்ள இணையற்ற நிபுணத்துவம் காரணமாக, எமது மதிப்புமிக்க வாடிக்கையாளர்களுக்கு நம்பகமான மதிப்பீடு மற்றும் தொந்தரவு இல்லாத, மன அமைதிக்கு வழி வகுக்கும் பரிவர்த்தனைகளுடன் மிக விரிவான சேவையை வழங்க முடிகிறது.” என்றார்.
CarsatDIMO (www.carsatdimo.lk) எனும் பயனர் நட்பு வடிவமைப்பில் அமைந்த இணையத்தளம் மூலம் வாகனத்தை மீள் கொள்வனவு செய்யும் செயன்முறை எளிதாக்கப்பட்டுள்ளது. DIMO ஆனது அதன் பெறுமதிமிக்க வாடிக்கையாளர்களுக்கு உண்மையான, சிறந்த சேவையை வழங்குவதை உறுதியளித்துள்ள ஒரு தரக்குறியீடாக விளங்குகிறது. அந்த வகையில் வாடிக்கையாளர்களுக்கு எழும் சந்தேகங்களை நீக்குவதற்காக, மீள் கொள்வனவு தொடர்பில் DIMO CERTIFIED இனை தொடர்பு கொள்ள, 077 244 97 97 எனும் 24 மணி நேர பிரத்தியேக உடனடி வாடிக்கையாளர் தொலைபேசி இலக்கமும் வழங்கப்பட்டுள்ளது.
நிறைவு
Recent Comments