தெவுந்தர உத்பலாவர்ண ஸ்ரீ விஷ்ணு மகா தேவாலயம் மற்றும் அலுத்நுவர ஸ்ரீ தெடிமுண்ட மகா தேவாலயம் ஆகியன, முன்னணி மூலிகை – தனிநபர் பராமரிப்பு பொருட்கள் உற்பத்தியாளரான, சுதேசி இன்டஸ்ட்ரியல் வேர்க்ஸ் பி.எல்.சி.யினால் ஒளிரூட்டப்படுகின்றது. வருடாந்திர எசலா திருவிழாவின் போது, ”சுதேசி கோஹோம்ப ஆலோக பூஜா சத்காரய” எனும் கருப்பொருளின் கீழ், இந்த ஒளியூட்டும் நிகழ்வு மேற்கொள்ளப்பட்டது. சுதேசியினால், அலுத்நுவர ஸ்ரீ தெடிமுண்ட மகா தேவாலயம் தொடச்சியாக ஒளியூட்டப்படும் இரண்டாவவது வருடம் இதுவாகும்.
இந்நிகழ்வு தொடர்பில் கருத்து வெளியிட்ட சுதேசி நிறுவனத்தின் தலைவி, திருமதி அமாரி விஜேவர்தன தெரிவிக்கையில், முற்றிலும் இலங்கை நிறுவனம் எனும் வகையில், இவ்வாறான வருடாந்த ஒளியூட்டல் பூஜைகளை மேற்கோள்வன் மூலம், இலங்கையின் கலாசாரம் மற்றும் பாரம்பரிய பாரம்பரியத்தை பாதுகாப்பதை நாம் கடமையாக கருதுகிறோம்.
சுதேசியினால் நாட்டில் உள்ள வழிபாட்டுத் தலங்கள் வெளிச்சம் போட்டுக் காட்டுகின்றமையானது, அனைத்து வழிபாட்டாளர்களின் நலனுக்காக மாத்திரமன்றி நாட்டின் பாரம்பரியத்தை பாதுகாப்பதன் முக்கியத்துவத்தைப் பற்றி இளைய தலைமுறையினருக்கு விழிப்புணர்வூட்டுவதற்குமாகும் என அவர் சுட்டிக் காட்டினார். இந்த ஒளியூட்டும் நிகழ்வைத் தொடர்ந்து கண்கவர் கலாசார போட்டியும் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது. இது இலங்கையின் மரபுகள் மற்றும் வரலாற்றை எடுத்துக்காட்டுவதாக அமைந்தது.
அப்போதிருந்த உண்மையான உத்பலாவர்ண ஸ்ரீ விஷ்ணு மகா தேவாலயம், கிபி 661 இல் தபுலுசென் மன்னனால் கட்டப்பட்டது. இது பின்னர் போர்த்துக்கேயர்களால் அழிக்கப்பட்டது. பௌத்த இலக்கியங்களின்படி, புத்தர் இயற்கை எய்துவதற்கு முன் இலங்கையில் பௌத்தத்தை பாதுகாக்கும்படி ‘சக்ரா’ கடவுளிடம் கோரியிருந்தார். ‘சக்ரா’ கடவுள் இந்தக் கடமையை ‘உத்பலாவர்ண’ கடவுளிடம் ஒப்படைத்தார். ‘உத்பலாவர்ண’ என்பது “நீல நிறம்” என்பதாகும். இது ‘விஷ்ணு’ கடவுளின் நிறத்தை ஒத்திருக்கிறது. எனவே தெவுந்தர தேவாலயம் உத்பலாவர்ண ஸ்ரீ விஷ்ணு தேவ மந்திரய என்று அழைக்கப்படுகிறது.
கேகாலை மாவட்டத்தில் அமைந்துள்ள ‘அலுத்நுவர ஸ்ரீ தெடிமுண்ட மகா தேவாலயம்’ தம்பதெனிய காலத்தில் கட்டப்பட்டது. இரண்டாம் பராக்கிரமபாகு மன்னர் சிவனொளிபாதமலைக்குச் செல்லும் வழியில் அலுத்நுவர வழியாகச் சென்றபோது, அவர் அந்த இடத்தைப் பார்த்து மிகவும் ஈர்க்கப்பட்டு, அந்த சொத்தை தேவாலயத்திற்கு தானம் செய்ய முடிவு செய்தார் என்று நம்பப்படுகிறது. 5ஆம் பண்டித பராக்கிரமபாகு மன்னரின் காலத்தில் தேவாலயத்தில் பல கட்டடங்கள் கட்டப்பட்டன. குறித்த இடம் அப்போது நவதிலகபுரய என்று அழைக்கப்பட்டு பின்னர் அது அலுத்நுவர என மாறியது. “தெடிமுண்ட தெய்யோ” என அழைக்கப்படுவது, இலங்கையில் உள்ள புத்த சாசனத்தின் காவல் தெய்வத்தையாகும்.
புத்தரின் புனித தந்தம் வைக்கப்பட்டுள்ளதும் பண்டைய சுவரோவியங்கள் பேணப்படுகின்றதுமான, வரலாற்று சிறப்புமிக்க தம்பதெனிய ரஜ மகா விகாரையின் ‘ஸ்ரீ தலதா மாளிகை’ சுதேசி நிறுவனத் தலைவர் திருமதி அமாரி விஜேவர்தனேவினால், கடந்த கால மகிமையை மீண்டும் கொண்டுவரும் எனும் வகையில், கடந்த 2013 ஆம் ஆண்டில் புதுப்பிக்கப்பட்டது.
திருமதி அமாரி விஜேவர்தன ஹெலன விஜேவர்தன லமாதெனியின் பேத்தி ஆவார். ஹெலன விஜேவர்தன, 1927 ஆம் ஆண்டில் களனி ராஜ மகா விஹாரையின் புனரமைப்பு பணியை ஆரம்பித்து வைத்தார்.
கதிர்காம கிரி வெஹெர, ருஹுணு மஹா கதிர்காம தேவாலயம், செல்லக் கதிர்காம தேவாலயம், மஹனுவர ஸ்ரீ விஷ்ணு மஹா தேவாலயம், சபரகமு மஹா சமன் தேவாலயம், ரெதிகம ரிதி விகாரை, லங்காதிலக ரஜ மஹா விகாரை, தெரணியகல சமன் தேவாலயம், அம்மதுவ குடா கதரகம தேவலாயம், தம்பதெனிய ரஜா மகா விகாரை, கேரகல ரஜ மகா விகாரை ஆகியவற்றின் வருடாந்த ஆலோக பூஜைகளுக்கும், சுதேசி பங்களிப்பு செய்து வருகின்றது.
100% உள்ளூர் நிறுவனமான சுதேசி, இலங்கையிலுள்ள சமூகங்களுக்கான தேசத்தைக் கட்டியெழுப்புதல் மற்றும் சமூக பொறுப்புணர்வு திட்டங்களைத் தொடர்ந்தும் மேற்கொண்டு வருகிறது. சுதேசி கோஹோம்ப ஆனது, இயற்கை அன்னையை பராமரித்தல், கலாசார விழுமியங்களை மேம்படுத்துதல் போன்றவற்றில் கவனம் செலுத்தி, நிலைபேறான திட்டங்களை நிறைவேற்றுதற்காக தன்னை அர்ப்பணித்துள்ளது. மத தலங்கள் மற்றும் புகையிரத நிலையங்களுக்கு கை கழுவும் தொகுதிகளை வழங்குதல் உள்ளிட்ட விடயங்கள், கொவிட்-19 தொற்று சூழ்நிலையில் சிறுவர்களை இலக்காகக் கொண்ட வீடியோ மூலமான கை கழுவுதல் படிமுறைகள், வேப்பிலை மர நடுகை பிரசாரங்கள், இலங்கையில் வரட்சியான பகுதிகளில் உள்ள மக்களுக்கு நீர் தொட்டிகளை நன்கொடை செய்தல், கோஹோம் பேபி பராமரிப்பு பொருட்களை கர்ப்பிணித் தாய்மார்களுக்கு வழங்குதல் மற்றும் சிறந்த நற்குணங்களை எடுத்துரைக்கும் “ஹொந்த புருது” (சிறந்த பழக்க வழக்கங்கள்) எனும் புத்தகத்தின் மூலம் பாடசாலை மாணவர்களுக்கு விழிப்புணர்வூட்டும் நடவடிக்கைகள் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை சுதேசி நிறுவனத்தின் சமூக மேம்பாட்டு முயற்சிகளாக குறிப்பிடலாம்.
இலங்கையிலுள்ள மூலிகையுடனான தனிநபர் பராமரிப்பு பிரிவில் முன்னோடி மற்றும் சந்தையின் முன்னணி நிறுவனமான Swadeshi Industrial Works PLC நிறுவனம் 1941 இல் கூட்டிணைக்கப்பட்டது. சுதேசியின் முன்னணி தரக்குறியீடுகளில் சுதேசி கோஹோம்ப ராணி சந்தனம், சுதேசி கோஹோம்ப பேபி, லிட்டில் இளவரசி, பெர்ல்வைட், லக் பார், சேஃப்ப்ளஸ், லேடி, பிளக் ஈகிள் பேர்ஃப்யூம் மற்றும் சுதேசி பொடி வொஷ் & ஷவர் ஜெல் ஆகியன உள்ளடங்குகின்றன. சுதேசியின் தயாரிப்புகள் அனைத்து தயாரிப்புகளும் 100% தாவர ரீதியானது என்பதுடன் விலங்குகள் மீதான கொடுமைகளிலிருந்து அவை விடுபட்டதாக அமைந்துள்ளன. இது நிறுவனத்தின் முன்னோக்கு-சிந்தனை நடைமுறைகளுக்கும், நுகர்வோருக்கு நெறிமுறை ரீதியானதும் சூழல் நட்புரீதியானதுமான தெரிவுகளை மேற்கொள்ள உதவும் என நாம் எதிர்பார்க்கிறோம். நிறுவனம் எப்போதும் தனது தயாரிப்புகளின் ஆரோக்கியம் மற்றும் சூழல் தாக்கத்தை கருத்தில் கொண்டு, தொடர்ந்து முன்னுரிமையளிக்கிறது. அனைத்து சுதேசி தயாரிப்புகளும் இலங்கை சுகாதார அமைச்சின் தேசிய ஔடதங்கள் ஒழுங்குபடுத்தல் அதிகாரசபையின் (NMRA) கீழ் பதிவு செய்யப்பட்டுள்ளன. சுதேசி தயாரிப்புகளில் பயன்படுத்தப்படும் அனைத்து வாசனைத் திரவியங்களும் உலகளவில் ஏற்றுக்கொள்ளப்பட்ட சர்வதேச வாசனை சங்கத்தினால் (IFRA) சான்றளிக்கப்பட்டுள்ளதுடன், ISO 9001 – 2015 தரச் சான்றிதழின் அடிப்படையில் தயாரிக்கப்படுகின்றன.
சுதேசி சிறந்த மூலிகை சவர்க்கார தரக்குறியீடான கோஹோம்ப ஹேர்பல் மற்றும் பாரம்பரிய அழகு சவர்க்கார தரக்குறியீடான ராணி சந்தனத்தை தயாரித்து விற்பனை செய்கிறது.
புகைப்படம்:
சுதேசி நிறுவனத் தலைவி திருமதி அமாரி விஜேவர்தன, அலுத்நுவர ஸ்ரீ மஹா தெடிமுண்ட தேவாலயம்/ மஹநுவர, ஸ்ரீ மகா விஷ்ணு தேவாலய பஸ்நாயக்க நிலமே மஹிந்திர ரத்வத்தே, தெவுந்தர உத்பலாவர்ண ஸ்ரீ விஷ்ணு மகா தேவாலயத்தின் பதில் பஸ்நாயக்க நிலமே சமிந்த வணிகசேகர மற்றும் சுதேசி நிறுவன அதிகாரிகள், ஒளியூட்டும் நிகழ்வில் கலந்து கொண்டிருந்தனர்.
Recent Comments