Singer இன் நேர்த்தியான built-in உபகரணங்களுடன் உங்கள் சமையலறையை மேம்படுத்துங்கள்

ஆடம்பர மனைகள் மற்றும் அடுக்குமாடி குடியிருப்புகள் அதிகரித்து வருவதை நாம் தொடர்ந்து அவதானித்து வரும் நிலையில்,  நவீன வாழ்க்கை முறையானது எமது வேகமான வாழ்வில் வடிவமைப்பு செயல்பாடு மற்றும் செயல்திறனின் தேவையை எடுத்துக்காட்டி பழக்கப்பட்ட எண்ணக்கருவாக மாறியுள்ளது. எமது வாழ்வில் விரயமாகும் நேரத்தை குறைப்பதே இதன் குறிக்கோள் என்பதுடன், குறிப்பாக வீட்டின் இதயமாக கருதப்படும் ‘சமையலறை’ என்று  வரும்போது மிகவும் முக்கியமான தேவையாகும்.

உங்களுக்கு எதிராக அல்லாமல் உங்களுடன் வேலை செய்யும் ஒரு சமையலறை என வரும் போது அதன் செயல்பாடு முக்கியத்துவம் வாய்ந்ததாகும். இதன் போதே Singer Sri Lanka வின் built-in சமையலறை உபகரணங்கள் முக்கியத்துவம் பெறுவதுடன், இது அனைத்தையும் உள்ளடக்கிய, வசதியான மற்றும் பராமரிக்க இலகுவான நவீன சமையலறைக்கான முழுமையான மேம்படுத்தலை உறுதி செய்கின்றது.

நவீன சமையலறை தேவைகளை பூர்த்தி செய்ய வடிவமைக்கப்பட்டதுடன், Singer, Beko, Indesit  மற்றும் Hafele போன்ற சர்வதேச வர்த்தகநாமங்களைச் சேர்ந்த built-in ovens, built-in microwaves, built-in hobs, hoods மற்றும் dishwashers தயாரிப்பு வரிசைகளை உள்ளடக்கியது. இந்த உபகரணங்கள் பாரம்பரிய முறையிலான சமையலறைகளை மிகச் சிறந்த உலகளாவிய சமையலறைகளுக்கு இணையானதாக மாற்றி நவீனமயப்படுத்தவுள்ளன.

அவை நாளாந்த பணிகள் பலவற்றை எளிதாக்குவதற்கு உதவுவது மட்டுமல்லாமல், சமைத்தல் மற்றும் சுத்தம் செய்வதற்கான செயல்முறையை விரைவுபடுத்துவதோடு, ஒட்டுமொத்தத்தில் பொருளாதார ரீதியாகவும் பலனளிக்கக் கூடியவை. மேலதிகமாக, built-in தயாரிப்பு வரிசையானது எளிதான நிறுவல் வழிமுறைகளுடன் வருவதால்  ஒருங்கிணைப்பும் தடையற்றதாகும். சமையலறை இடப்பரப்பையும் முடிந்தவரை சிறப்பாக அதிகரித்துக் கொள்ள உதவுவதுடன், உச்ச செயல்பாட்டுக்கும் உதவுகின்றது.

“எங்கள் வாடிக்கையாளர்களுக்கு செயல்பாடு மற்றும் Style அடிப்படையில் சிறந்த தரமான சமையலறை உபகரணங்களை கொண்டு வருவதற்கு மிகவும் குறிப்பிடத்தக்க சர்வதேச வர்த்தகநாமங்களுடன் கைகோர்ப்பதில் நாங்கள் மிகவும் பெருமைப்படுகிறோம். எங்கள் built-in சமையலறை உபகரணங்கள் எந்த சமையலறைக்கும் நேர்த்தியான மற்றும் அதிநவீன தோற்றத்தை வழங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன. அவற்றின் நோக்கம் மற்றும் செயல்பாட்டுக்கு மேலதிகமாக, அவை பொருத்தப்பட்ட சமையலறையை சீராக வைத்திருக்க உதவுவது மட்டுமல்லாமல், தடையற்ற அழகையும் உருவாக்க உதவுகின்றன, ”என Singer Sri Lanka, சந்தைப்படுத்தல் பணிப்பாளர், ஷனில் பெரேரா தெரிவித்தார்.

இந்த built-in சமையலறை வரிசையானது Singer Plus, Singer Homes மற்றும் Singer Mega காட்சியறைகளில் கொள்வனவு செய்ய முடியும், மேலும் கவர்ச்சிகரமான சலுகைகள் மற்றும் மாதாந்த தவணைக் கொடுப்பனவு கடனட்டை வசதிகளுடன் வருகிறது. இந்த தயாரிப்புகளை www.singer.lk ஊடாக கொள்வனவு செய்ய முடியும். தனது வாடிக்கையாளர்களுக்கு உயர்தர விற்பனைக்குப் பின்னரான சேவையை மிகுந்த தொழில்சார் தன்மையுடன் வழங்குவதுடன், நாடு முழுவதும் 430 க்கும் மேற்பட்ட விற்பனை நிலையங்கள் மற்றும் விநியோகஸ்தர் வலையமைப்புடன் கூடிய இலங்கையில் மிகப் பெரிய விநியோக வலையமைப்பை உள்ளடக்கியது.

1877 ஆம் ஆண்டில் இலங்கையில் ஆரம்பிக்கப்பட்டதிலிருந்து நுகர்வோர் சாதனங்களின் சில்லறை விற்பனையாளராக முன்னணியில் இருப்பதற்கான தூரநோக்குடன் இந்நிறுவனம் எப்போதும் இயங்கி வருகின்றது. இதற்கிணங்க, இங்கிலாந்தை தளமாகக் கொண்ட நிதியியல் சஞ்சிகையான Global Banking and Finance Review அண்மையில் Singerக்கு ஆண்டின் ‘Retail Brand of the Year – Sri Lanka 2020’ பட்டத்தை வழங்கியது. இந்த வெற்றியின் மூலமான பெருமிதத்துடன், நியாயமான விலையில் வசதிகளையும் சௌகரியங்களையும் வழங்குவதன் மூலம் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதற்கான நோக்கத்துடன் தனது பணியை Singer Sri Lanka தொடர்கிறது.

###

Share

You may also like...