Big Bad Wolf புத்தக விற்பனை முதல் முறையாக ஒன்லைனில்
இலங்கையர்கள் தமக்கு மிகவும் பிடித்த Wolf உடன் இணைந்து ஆரவார கோஷத்தை எழுப்பும் நேரம் வந்து விட்டதாக தெரிகின்றது. ஆம், இம்முறை புதிய திருப்பத்துடன் 2020 ஒக்டோபர் 1 முதல் 4 வரையில், தொடர்ச்சியாக 4 ஆவது வருடமாகவும் Wolf உங்களைத் தேடி வருகின்றது. நாடு முழுவதிலும் உள்ள புத்தக ஆர்வலர்கள் மற்றும் ஆர்வமுள்ள வாசகர்கள் பிரபலமான, புத்தம் புதிய தரமான ஆங்கில புத்தகங்களை 50% – 90% தள்ளுபடிகளுடன் பெறவுள்ளனர். Wolf மீண்டும் திரும்புவதற்காக ஆவலுடன் காத்திருக்கும் அதன் wolf pack இற்கு சேவை செய்ய, உலகளாவிய சவால்களை எதிர்கொண்டு Wolf மீண்டும் வெளிப்பட்டுள்ளது. இந்த ஆண்டு, நாடு முழுவதும் உள்ள Big Bad Wolf புத்தக விற்பனையின் ரசிகர்களும், முழு Big Bad Wolf புத்தக சரக்குகளுக்கு மிகவும் பாதுகாப்பான அணுகலை அனுபவித்து மகிழ்வதை உறுதி செய்வதற்காக, நேரடி விற்பனை நிகழ்வுக்கு பதிலாக ஒன்லைன் ஊடான விற்பனையாக இது முன்னெடுக்கப்படவுள்ளது.
தொற்றுநோயைத் தொடர்ந்து இலங்கையர்கள் “புதிய இயல்பு” நிலைக்கு பழக்கமாகி வருகிறார்கள், மேலும் இலத்திரனியல் வர்த்தகம் இந்த சந்தர்ப்பத்தில் சிறப்பாக செயற்பட்டு வருகின்றது. வீட்டு வாசலுக்கான விநியோகத்துடன் கூடிய ஒன்லைன் ஷொப்பிங் முறைமையானது, பொதுவாக நாடு முழுவதும் பிரபலமாக உள்ளது. நடத்தை மற்றும் சந்தைகளில் ஏற்பட்டுள்ள இந்த மாற்றங்களானது Big Bad Wolf இனை மலிவு விலையில் புத்தகங்களை வழங்கும் அதன் புத்தக விற்பனையை, இவ் ஆண்டு ஒன்லைன் மூலமான விற்பனை முறைக்கு மேம்படுத்த வழிகோலியுள்ளது. கடந்த வருடங்களில் கொழும்பில் நடைபெற்ற நேரடி விற்பனை நிகழ்வுகளை விட, இம்முறை இலங்கையர்கள் ஐந்து மடங்கு அதிக புத்தகங்களுக்கான அணுகலைப் பெறவுள்ளனர்.
Big Bad Wolf புத்தக விற்பனையின் இணை ஸ்தாபகர் அண்ட்ரூ யப், கருத்து தெரிவிக்கையில்,”வாசிப்பின் மகிழ்ச்சியை மேலும் பரப்புவதற்கும், இலங்கையில் அதிகமான மக்களுக்கு மலிவு விலையில் ஆங்கில புத்தகங்களை அணுகுவதற்கும் வழி செய்யும் எங்கள் தொலை நோக்கம் நிஜமாகின்றது. இந்த ஆண்டு விற்பனையின் ஒரு முக்கிய அம்சம் என்னவெனில், நாட்டின் எந்தப் பகுதியில் வசிப்பவரும் தங்கள் வீடுகளில் இருந்தவேறு சௌகரியமாக புத்தக விற்பனையை அணுக முடியும். எங்கள் வாடிக்கையாளர் மற்றும் ஊழியர்களின் பாதுகாப்புக்கு முன்னுரிமை அளிப்பதுடன், இந்த முறை முதல் முறையாக இடம்பெறும் ஒன்லைன் விற்பனையின் அனுபவம், உண்மையிலேயே நாடு முழுவதும் உள்ள அனைத்து புத்தக ஆர்வலர்களையும் ஒன்றிணைக்கும் ஒரு அனுபவமாக இருக்கும் என்று நாங்கள் நம்புகிறோம்,” என்றார்.
“விற்பனையை ஒன்லைனுக்கு எடுத்துச் செல்வதன் மூலம் நாம் வரலாற்றை உருவாக்கி வருகின்றமையானது, அனைத்து இலங்கையர்களுக்கும் புத்தம் புதிய அனுபவமாக இருக்கும். Big Bad Wolf ஒன்லைன் புத்தக விற்பனையானது புதிய மாற்றத்தை ஏற்படுத்துவதுடன், ஒன்லைன் மூலமான விற்பனையானது இலங்கையில் வழக்கமானதொன்றாக மாறுமென நம்புகின்றோம். அது மட்டுமல்லாமல், எங்கள் புத்தக விற்பனையானது அதிகளவிலான இலத்திரனியல் நுகர்வோரை ஈர்ப்பதன் மூலம் துணிச்சலான கருத்தை பதிவு செய்யுமென நாம் எதிர்ப்பார்க்கின்றோம்,” என அவர் மேலும் தெரிவித்தார்.
இது தொடர்பில் தனது கருத்தை தெரிவித்த, ProRead Lanka (Pvt) Ltd வின் பணிப்பாளர், நிஷான் வாசலதந்திரி, “இலங்கை மக்கள் தொடர்ந்து வாசிக்க இந்த ஆர்வத்தை தொடர்ந்து ஊக்குவிக்கவும், இலங்கையில் வாசிப்பு கலாசாரத்தை தொடர்ந்து அபிவிருத்தி செய்யவும் நாம் எதிர்ப்பார்க்கின்றோம். புத்தகங்கள் தகவல்களுக்கான நுழைவாயிலாகும். புத்தகங்கள் மற்றும் அறிவைப் பெற்றுக்கொள்வதில் இலங்கையின் மிகுந்த ஆர்வம் ஆச்சரியமாக உள்ளதுடன், மேலும் Big Bad Wolf Online Book Sale Sri Lanka 2020, நாட்டின் அந்த ஆர்வத்துக்கு ஆதரவளிக்கவே இங்குள்ளது. இங்கு கிடைக்கவுள்ள பாரிய தொகை புத்தக்கங்களானது ஒவ்வொரு முறை Big Bad Wolf ஒன்லைன் புத்தக விற்பனைக்கு விஜயம் செய்யும் போதும் வெவ்வேறு வகையான புத்தகங்கள் கிடைக்கப்போவது உறுதியாகும்”, என்றார்.
இந்த வருடத்தின் விசேட Big Bad Wolf ஒன்லைன் புத்தக விற்பனையானது பெரும் தொகையான வாசகர்களிடையே பல தரப்பட்ட வாய்ப்புகளை வழங்குகின்றது. Big Bad Wolf Book விற்பனையின் குறைந்த விலைகள் வாடிக்கையாளர்களை, அவர்கள் முன்பு முயற்சித்திராத புதிய எழுத்தாளர்கள் மற்றும் படைப்புகளை முயற்சிக்க ஊக்குவிக்கின்றது. ஒன்லைன் புத்தக விற்பனையானது 24 மணித்தியாலமும் கிடைப்பதால் புத்தக ஆர்வலர்கள் நாளின் எந்த நேரத்திலும், வீட்டிலிருந்தவாறு எளிதாக ஏராளமான தலைப்புகளில் அமைந்த புத்தகங்களை கொள்வனவு செய்ய முடியும்.
Big Bad Wolf ஒன்லைன் புத்தக விற்பனை, இலங்கையில் 2017 ஆம் ஆண்டு முதற்தடவையாக ஆரம்பிக்கப்பட்டதுடன், இலங்கையிலுள்ள புத்தக ஆர்வலர்களை திருப்திப்படுத்தும் நோக்கில் 2018,2019 ஆண்டுகளிலும் இலங்கையில் இந்நிகழ்வு இடம்பெற்றிருந்தது. இந்த 3 விற்பனைகளும் பெரும் வெற்றியடைந்தது. புத்தகங்கள் அனைத்தும் வேகமாக விற்பனையாகியதுடன், கதவு திறப்பதற்கு முன்னரே நீண்ட வரிசையில் புத்தக ஆர்வலர்கள் காத்திருந்தனர்.
இலங்கை முழுவதிலும் உள்ள புத்தக ஆர்வலர்கள் எங்கள் இணையதளத்தில் முன்கூட்டியே பதிவு செய்வதன் மூலம் முக்கிய தகவல்களை பெற்றுக்கொள்ள முடியும். மேலும் போட்டிகள், கொடுப்பனவுகள் மற்றும் பலவற்றைப் பற்றி எங்கள் சமூக ஊடக பக்கங்கள் வழியாக அறிந்து கொள்ளலாம்:
Recent Comments