Huawei Media Pad T5 மற்றும் Free Buds 3 வீட்டிலிருந்து பணியாற்றுவதை எளிதாக்குவதுடன், எல்லையற்ற பொழுதுபோக்கினையும் வழங்குகின்றது

புத்தாக்க ஸ்மார்ட்போன் தயாரிப்பு நிறுவனமான Huawei,  ஸ்மார்ட்போன்கள் முதல் மீடியா பேட்கள், அணியும் தொழில்நுட்பம், இயர்பட்ஸ், மென்பொருட்கள் மற்றும் கருவிகள் வரை நவீன சகாப்தத்தின் பன்முகத் தேவைகளைப் பூர்த்தி செய்யும் புதுமையான  தயாரிப்புகளின் வரிசையை காட்சிப்படுத்துகின்றது. Huawei அண்மையில் அறிமுகப்படுத்திய சிறப்பம்சங்களால் நிரம்பிய Huawei Media Pad T5  மற்றும் Free Buds 3 ஆகிய இரண்டும் பொழுதுபோக்கு, கல்வி மற்றும் தொழில்சார்ந்த தனித்துவமான அனுபவத்தைத் தருகின்றன. தற்போது ​​இலங்கை மட்டுமன்றி உலகின் பெரும்பாலான பகுதிகள் வீட்டின் உள்ளேயே தங்கியிருக்க வேண்டிய மற்றும் வீட்டில் இருந்து வேலை செய்ய வேண்டிய,  குறிப்பிடத்தக்களவு முடக்கல் நிலைக்கு முகங்கொடுத்துள்ளன. தற்போது ​​வீட்டுக்குள் இருப்பது ஒரு போதும் மந்தமான அனுபவமல்ல. ஏனெனில் Huawei Media Pad T5   மற்றும் Free Buds 3 ஆகியன தனித்தனியாகவும், ஒன்றாக இணைந்தும் சிறந்த செயற்திறனை வழங்குவதற்காக வடிவமைக்கப்பட்டுள்ளமையாகும்.

10.1 அங்குல Huawei Media Pad T5 திரைப்படங்களைப் பார்ப்பதற்கும், விளையாட்டுக்கள் அல்லது ஒன்லைன் கற்றலுக்கும் உகந்த பெரிய திரையின் சௌகரியத்தை வழங்குகிறது. அனைவரும், வீட்டிலேயே இருக்கும் போது, Huawei Media Pad T5   பல்வகையான பொழுதுபோக்கு தெரிவுகளைக் கொண்டு வரும் விருப்பமான துணை என்பதுடன், மின்னஞ்சல், தட்டச்சு பணிகள், சமூகவலைத்தள கணக்குகளின் முகாமைத்துவம் உட்பட அவசியமான பணிகள் உட்பட பல செயற்பாடுகளுக்கு உதவுகின்றது. இதன் 1080p full HD பிரகாசமான திரையானது தெளிவான விவரங்களை வழங்குகின்றது. மேலும் இதன் 16:10 வடிவ விகிதம், இந்த மீடியா டெப்லட்டை திரைப்படங்கள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மற்றும் இணையத்தளங்களை பார்வையிடுவதற்கு உகந்ததாக்குகின்றது. இதன் இரட்டை ஸ்பீக்கர்கள் Huawei இன் Histen Audio தொழில்நுட்பத்துடன் தயாரிக்கப்பட்டுள்ளதுடன், சினிமா அனுபவத்துக்கு இணையான ஒலியின் தரத்தை வழங்குகின்றது.

Media Pad T5  இன் பெரிய திரையில் மின் புத்தகங்களைப் படிப்பது மிகவும் வசதியானது மற்றும் அதன் கண்களுக்கு இதமான பயன்முறையானது வாசிப்பதற்கும், நீண்ட நேரம் இணையத்தில் உலாவுவதற்கும் ஏற்ற துணையாக இதனை மாற்றுகின்றது. இதன் கண்களுக்கு இதமான பயன்முறையானது TÜV Rheinland இனால் சான்றுப்படுத்தப்பட்டுள்ளது. இது குறைந்த நீல ஒளி மற்றும் ஸ்மார்ட்போன்களின் ஒளி உயிரியல் பாதுகாப்புச் சான்றிதழ் ஆகும். கண்களுக்கு இதமான பயன்முறையானது தீங்கு விளைவிக்கும் நீல ஒளியை வடிகட்டும் திறன் கொண்டதுடன், அதிக கவனம் தேவையான  அலுவலக வேலைகளுக்கு அவசியமான  ஆரோக்கியமான வாசிப்பு நிலைமைகளை பகல் மற்றும் இரவு வேளைகளில் உருவாக்குகிறது. வீட்டிலிருந்து பணி புரியும் போது கோப்புக்களை பரிமாற்றும் தேவை ஏற்படுவதுடன், Huawei சாதனங்களிடையே மொபைல் டேட்டாவை பயன்படுத்தாமல் கோப்புகளை பரிமாற்ற உதவும் Huawei Share வசதியுடன் Media Pad T5 வருகின்றது. மேலும், Media Pad T5 சிறுவர்களுக்கான பகுதியொன்றையும் கொண்டது. இது குழந்தைகள் விளையாடுவதற்கும், கற்றுக்கொள்வதற்கும் என விசேடமாக வடிவமைக்கப்பட்ட அப்ளிகேஷன்களைக் கொண்டது.

“Media Pad T5  மற்றும் Free Buds 3 ஆகிய இரண்டும் நுகர்வோரின் வாழ்க்கைக்கு சௌகரியத்தை சேர்ப்பதற்காக அறிமுகப்படுத்தப்பட்ட மிகவும் புத்தாக்கமான தொழில்நுட்ப சாதனங்களாகும்.  இந்த இரண்டு சாதனங்களும் பல வகையான பணிகளில் பயனர்களுக்கு உதவக்கூடியவை என்பதுடன், ஒன்றாக முழுமையான அனுபவத்தை வழங்கும் திறன் படைத்தவையாகும். இது ஒவ்வொருவரும் வீட்டுக்குள்ளேயே இருந்து அலுவலக பணிகள், கல்வி நடவடிக்கைளை முன்னெப்பதுடன், சில பொழுதுபோக்கு முறைகளும் தேவைப்படும் காலப்பகுதியென்பதுடன், வீட்டில் இருந்து பணியாற்றும் மாதிரியும் பரீட்சித்துப் பார்க்கப்படுகின்றது.  Media Pad T5 மற்றும் Media Pad T5  இந்த அனைத்து தேவைகளையும் பூர்த்தி செய்வதுடன், ஒருவர் தனிமைப்படுத்தல் காலப்பகுதியை கடக்கவும் உதவுகின்றது, என Huawei Devices – இலங்கைக்கான தலைவர் பீட்டர் லியூ தெரிவித்தார்.

Huawei இன் தொழில்நுட்ப தயாரிப்பு வரிசையின் புத்தாக்க இணைப்பே Huawei Free Buds ஆகும் . இதனை எந்தவொரு சாதனத்துடனும் உடனடியாக இணைப்பை ஏற்படுத்தக் கூடியதாகும். தற்போது பாவனையாளர்கள் பெருத்த  வயர்களால்  ஏற்படும் கவனச்சிதறல் இன்றி Free Buds 3 ஐ அணிந்து தமது சாதனத்தினை எடுக்காமலேயே ஏனையை பணிகளைச் செய்தவாறு இசையைக் கேட்க அல்லது அழைப்பில் பேச முடியும். பாவனையாளர்கள் எல்லா நேரங்களிலும் போன் அழைப்புகளுக்கு கவனம் செலுத்தத் தேவையில்லை என்பதால், வீட்டில் அலுவலக வேலைகளில் முழு கவனத்தையும் செலுத்தும் சௌகரியத்தை வழங்குகின்றது. Free Buds 3 வைத்திருக்கின்றமை அன்றாட வாழ்க்கையை எளிதாக்குவது மட்டுமன்றி, நீண்ட நேரத்திற்கு தடையற்ற பொழுதுபோக்கினை வழங்குகின்றது.

Media Pad T5 மற்றும் Free Buds 3 இரண்டும் இணையும் போது, தொழில்சார் செயற்பாடான கொன்பரன்ஸ் அழைப்பு போன்றவற்றின் போது மிகச் சிறந்த செயற்திறனை வழங்குவதுடன், Free Buds 3 இன் active noise cancellation அம்சமானது முழுமையான, integrated bass உடன் மிகத் தெளிவான இசை அனுபவத்தையும் தருகின்றது.  இதன் dolphin Bionic design வடிவமைப்பானது உறுதியான மற்றும் சௌகரியமான அணிதலுக்கு உதவுவதுடன், குவியும் ஒலியை வழங்குகின்றது. Free Buds 3, 20 மணித்தியாலங்கள் தொடர்ச்சியாக இயங்கக்கூடிய திறனைக் கொண்டதுடன், இது அடிப்படையில் ஒரு நாள் முழுவதுமாகும்.

Share

You may also like...