மாலைதீவில் கடல்சார் பொறியியல் தீர்வுகளை மேம்படுத்தும் DIMO

இலங்கையின் முன்னணியிலுள்ள பல்வகை துறைசார்ந்த கூட்டு நிறுவனமான DIMO, மாலைதீவில் தனது கடல்சார் தீர்வுகளை தொடர்ந்தும் மேம்படுத்துவதற்கான திட்டங்களை முன்வைத்துள்ளது. இலங்கை மற்றும் மாலைதீவு ஆகிய இரு நாடுகளிலும் MTU, DDC கடல்சார் எஞ்சின்களுக்கான அங்கீகரிக்கப்பட்ட சேவை விற்பனையாளரான DIMO, அதன் கடல்சார் பொறியியல் பிரிவான DIMO Marine Solutions மூலம், வெளிநாட்டு கப்பல்கள், அதி சொகுசு படகுகள், ஓய்வு விடுதிகள் ஆகியவற்றின் உரிமையாளர்கள் தொடர்பில் அதிக கவனம் செலுத்தவுள்ளது. 2017 ஆம் ஆண்டில், மாலைதீவில் கடல்சார் சேவைகளை எளிதாக்குவதற்கு Coastline Investments நிறுவனத்துடன் கூட்டு முயற்சியில் DIMO நுழைந்தது.

மாலைதீவின் தேசிய படகுச் சங்கத்தின் (NBAM) உத்தியோகபூர்வ கண்காட்சியான (Maldives Marine Expo) மாலைதீவு கடல்சார் கண்காட்சியில் பங்குபற்றியதன் மூலம், மாலைதீவில் தனது கால்தடத்தை விரிவுபடுத்த DIMO மேலும் ஒரு படி முன்னேறிச் சென்றது. இக்கண்காட்சிக்கு மேலதிகமாக, DIMO Marine Engineering Solutions (கடல்சார் பொறியியல் தீர்வுகள்) குழுவானது, பல்வேறு குறிப்பிடத்தக்க தாக்கத்தை மாலைதீவில் ஏற்படுத்தும் வகையிலான சந்தைப்படுத்தல் பிரசாரங்களை வெற்றிகரமாக முன்னெடுத்திருந்தது. குறிப்பாக அது கொண்டுள்ள பரந்த அளவிலான கடல்சார் பொறியியல் தீர்வுகள் தொடர்பில், தற்போதுள்ள மற்றும் எதிர்கால வாடிக்கையாளர்களுக்கு தெளிவூட்டல்களை வழங்குவதை இது நோக்கமாகக் கொண்டிருந்தது. குறித்த பிரசாரங்கள் தொடர்பில் பல்வேறு சாதகமான கருத்துகள் வெளியிடப்பட்டுள்ளதோடு, DIMO Marine Engineering Solutions குழுவினருக்கு புதிய வணிக வாய்ப்புகளுடன் முன்னோக்கிச் செல்வதற்கான தளத்தையும் அது அமைத்துக் கொடுத்துள்ளது.

குழுமத்தின் கடல்சார் பொறியியல் வணிகத்தை மேற்பார்வையிடும் DIMO நிறுவனத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் விஜித பண்டார இது தொடர்பில் கருத்துத் தெரிவிக்கையில், “மாலைதீவில் சுற்றுலாத்துறையானது பொருளாதார வளர்ச்சியின் பிரதான பங்கை வகிக்கின்றது. இதன் காரணமாகவே, கொவிட்-19 தொற்று சவால்களைத் தொடர்ந்து இத்தொழில்துறை விரைவான மீட்சியைக் காண்பித்திருப்பது மிகவும் ஊக்கமளிக்கிறது. இத்தொழில்துறை மீண்டும் முன்னேறி வருவதால், ஆடம்பர படகுகள் முதல் கடல்சார்ந்த உணவகங்கள் முகாமைத்துவம் வரையிலான, மாலைதீவின் சுற்றுலா மற்றும் ஓய்வெடுத்தல் பிரிவிலுள்ள, கடல் பொறியியல் துறையில் பல்வேறு வாய்ப்புகள் வருவதை DIMO ஆகிய நாம் அவதானித்தோம். கடந்த 8 தசாப்த கால அனுபவத்தால் உந்துதலளிக்கப்பட்ட DIMO நிறுவனமானது, கடல்சார் பொறியியல் தீர்வுகள் மூலம் இந்த வாய்ப்புகளை ஆராய முழுமையாகத் தயாராகியுள்ளது. எமது இப்புதிய முயற்சிகளின் மூலம், இப்பிராந்தியத்தில் உள்ள சமூகங்களின் கனவுகள் மற்றும் அபிலாஷைகளுக்கு DIMOவினால் உந்துதலை வழங்க முடியுமாக இருக்கும்.” என்றார்.

DIMO ஆனது மாலைதீவில் MTU மற்றும் DDC எஞ்சின் சந்தையில் அதன் ஊடுருவலை அதிகரிக்க எதிர்பார்க்கும் அதே சமயம், கடல் சார் எஞ்சின்களின் பழுதுபார்த்தல், சேவையளித்தல் உள்ளிட்ட அனைத்து விடயங்களிலும் அதன் நிபுணத்துவம் ஈடு இணையற்றதாக இருக்கும் வகையில் அது உறுதிப்படுத்துகின்றது. MGDUFF Marine Cathodic Protection Systems மற்றும் Boat Anodes இற்கான முகவர் எனும் வகையில் அதன் நிபுணத்துவத்தைப் பயன்படுத்தி, மாலைதீவு கடல்சார் தொழில்துறையில் வணிக வாய்ப்புகளை மேம்படுத்துவதற்கான ஒரு வழியாக DIMO ஆனது, Hull Protection இலும் கவனம் செலுத்துகின்றது.

Hull Protection வகையில் உள்ள Boat Anodes மற்றும் MGDUFF Marine Cathodic Protection Systems பாதுகாப்பு தொகுதிகள் தவிர, Aluminium Anodes மற்றும் ZINGA Paint ஆகியனவும் DIMO Marine Engineering Solutions தயாரிப்பு வகைகளில் காணப்படுகின்றன.

DIMO Marine Engineering Solutions தீர்வுகளானது, மாலைதீவு சந்தையில் கடல் அல்லது உவர் நீர் சுத்திகரிப்பு தொகுதிகள் மற்றும் கழிவு நீர் சுத்திகரிப்பு தொகுதிகளை வழங்குவதன் மூலம் அதன் தயாரிப்பு வகைகளை மேலும் விரிவுபடுத்தியுள்ளது. குறிப்பாக தீவுகள் முழுவதும் பரவியுள்ள ஆடம்பர ஓய்வு விடுதிகளில் அது கவனம் செலுத்துகிறது. இதை அடைவதற்காக, DIMO நிறுவனமானது, நவீன நீர் சுத்திகரிப்பு தொகுதிகள் மற்றும் கழிவு நீர் முகாமைத்துவ தீர்வுகளை வழங்கும் ROCHEM உடன் இணைந்துள்ளது. உலகளாவிய பொழுதுபோக்குத் துறையானது தனது வணிக நடவடிக்கைகளில் நிலையான தீர்வுகளை இணைத்துக்கொள்வதை நோக்கி அதிகளவில் கவனம் செலுத்தி வரும் நிலையில், DIMO நிறுவனமானது, மாலைதீவின் சுற்றுலா ஓய்வுத் துறையில், நீச்சல் தடாகமானது சாம்பல், கறுப்பு மற்றும் தொழில்துறை நீரைத் திறமையாக நிர்வகிக்கும் வகையில், உலகளாவிய தரத்திற்கு ஏற்றவாறு நிலைபேறான முறையில் நிர்வகிப்பதற்கான ஆற்றலை வழங்குகிறது.

MTU, DDC, MGDUFF, ROCHEM உள்ளிட்ட உலகளாவிய தொழில் வல்லுனர்களுடனான வலுவூட்டப்பட்ட கூட்டாண்மையானது, கப்பல்கள், அகழ்வாராய்ச்சிகள், ஸ்லிப்வேகள், கடல்வழித் தீர்வுகள் உள்ளிட்ட ஏனைய கடல்வழித் தீர்வுகள் மற்றும் ஏனைய உபகரணங்களின் எஞ்சின்கள் உள்ளிட்ட ஏனைய கூறுகளின் பரந்த அளவிலான பழுது பார்த்தல் மற்றும் கட்டுமானப் புதுப்பிப்புகளை வெற்றிகரமாக மேற்கொள்கின்றமையானது, DIMO நிறுவனத்தின் திறனுக்கான சான்றுகளாகும். ஏற்றுக்கொள்ளப்படும் அனைத்து பணிகளும் கவனமாக திட்டமிடப்பட்டு, மேற்பார்வையிடப்பட்டு, கடல்சார் கப்பல் பழுதுபார்க்கும் துறையில் 30 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவமுள்ள உயர் தகுதி வாய்ந்த ஊழியர்கள் மற்றும் திறமையான நிபுணர்களால் மேற்கொள்ளப்படுகின்றன. இது தவிர, மாலைதீவிலுள்ள தீவுகளுக்குள் எந்தவொரு இடத்துக்கும் பறந்து சென்று விரைவான சேவைகளை வழங்கும் வகையிலான, உயர் தொழில்நுட்பக் கருவிகளைக் கொண்டுள்ள ஒரு பிரத்தியேகமான குழுவொன்றும் இதில் உள்ளதோடு, அது மாலைதீவு வாடிக்கையாளர்களுக்கு இணையற்ற சேவையை வழங்க DIMO விற்கு உதவுகிறது.

ENDS

Image Caption:

DIMO கடல்சார் தீர்வுகள் குழு அதன் பணியில்…

Share

You may also like...