Lenovo 2021/22 பங்குதாரர் விருதுகளில் சிறந்த வர்த்தக சம்பியனாக IT Gallery தெரிவு

– இலங்கையில் Lenovo தயாரிப்புகளுக்கான அங்கீகரிக்கப்பட்ட விநியோகஸ்தராகவும் கௌரவிப்பு

உலகளாவிய புகழ்பெற்ற ICT தயாரிப்புகள் மற்றும் சேவைகளின் இலங்கையின் முன்னணி விநியோகஸ்தரான IT Gallery Computers (Pvt) Ltd. ஆனது, அண்மையில் இடம்பெற்ற Lenovo FY21/22 Partner Awards Overseas (Lenova 2021 – 2022 இற்கான வெளிநாட்டு பங்குதாரர் விருதுகளில்) சிறந்த வர்த்தக சம்பியனாக கௌரவிக்கப்பட்டுள்ளது. இலங்கையில் ThinkPad, ThinkBook, Legion, ThinkCentre கணனிகள், மடிகணனிகள் மற்றும் துணைக்கருவிகளுக்கான அங்கீகரிக்கப்பட்ட Lenovo விநியோகஸ்தராகவும் இந்நிறுவனம் நியமிக்கப்பட்டுள்ளது.

கொவிட் தொற்றுநோய் மற்றும் இலங்கையில் நிலவும் பொருளாதார நெருக்கடி ஆகிய இரண்டு விடயங்களாலும் ஏற்பட்டுள்ள சவால்களுக்கிடையிலான போராட்டத்திற்கு மத்தியில், இந்த தனித்துவமான கூட்டாண்மைக்கு கிடைத்த பாராட்டுகளாக இவை அமைகின்றன. Lenovo உடனான IT Gallery யின் கூட்டாண்மையானது, மார்ச் 2020 இற்கு முன்பிருந்து, இந்நிறுவனம் Lenovo தயாரிப்புகளின் அங்கீகரிக்கப்பட்ட விநியோகஸ்தராகவும் Lenovo Commercial Series விநியோகஸ்தராக நியமிக்கப்பட்டதிலிருந்து தொடர்ந்து வருகின்றது.

நேபாளத்தின் கட்மண்டுவில் உள்ள Hyatt Regency ஹோட்டலில் இடம்பெற்ற இவ்விருது வழங்கும் விழாவில், இலங்கையில் வணிக Notebook  Series, Commercial Desktops, Workstations உள்ளிட்ட வர்த்தகத் தயாரிப்பு வகைகளின் விற்பனைக்காக Lenovo FY21/22 இல் IT Gallery சிறந்த வர்த்தக சம்பியனாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. இந்த விருதை ISO AP Commercial Channel நிறைவேற்று பணிப்பாளர் Roy Ng மற்றும் Lenovo இந்தியாவின் முகாமைத்துவ பணிப்பாளர் Shailendra Katyal ஆகியோர் வழங்கி வைத்தனர்.

தெற்காசிய பிராந்தியத்தில் Lenovo விற்கான நுகர்வோர், வணிகம் மற்றும் டெப் கணனிகளுக்கான பொது முகாமையாளர் நவீன் கெஜ்ரிவால் இந்த கூட்டாண்மை முழுவதும் வழங்கிய, குறிப்பாக கடந்த இரண்டு ஆண்டுகளாக வழங்கிய தொடர்ச்சியான ஆதரவிற்கு IT Gallery மிகவும் நன்றியுடையதாக உள்ளது. இந்தியாவின் வணிக வணிகத்தின் நிறைவேற்று பணிப்பாளர் அஜய் சேகலின் விலைமதிப்பற்ற ஆதரவிற்காகவும் IT Gallery நன்றி தெரிவித்துக் கொள்கிறது.

நுகர்வோர் இலத்திரனியல், தனிநபர் கணனிகள், மென்பொருள், வணிகத் தீர்வுகள் உள்ளிட்ட பல்வேறு  உலகின் முன்னணி உற்பத்தியாளர்களில் Lenovo வும் ஒன்றாகும். உலகளாவிய கணனிச் சந்தையில் இந்நிறுவனம் 25% சந்தைப் பங்கைக் கொண்டுள்ளது. உள்நாட்டில், IT Gallery ஆனது அதன் நாடு  முழுவதுமான, பரந்த விநியோக வலையமைப்பின் மூலம், நாடு முழுவதும் Lenovo தயாரிப்புகள் நுகர்வோரை சென்றடைய வழிவகுத்துள்ளது. தற்போது, ​​Lenovo குடையின் கீழான பல்வேறு வர்த்தகநாமங்களுக்கான அங்கீகரிக்கப்பட்ட விநியோகஸ்தர் எனும் வகையில், Lenovo தயாரிப்புகள் உள்ளூரில் அதிவேகமாக காலூன்றி வளர்ச்சியடையும் சாத்தியம் உருவாகியுள்ளது.

IT Gallery நிறுவனத்தின் பணிப்பாளரும் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான டிலந்த பெரேரா, இந்த கௌரவம் குறித்து கருத்துத் தெரிவிக்கையில், “வர்த்தகநாம முத்திரை கொண்ட கணனிகளின் இலங்கையின் முன்னணி விநியோகஸ்தராக மாற்றடைவதே எமது வாழ்நாள் கனவாகும். மிகத் தாழ்மையான தொடக்கத்திலிருந்து நீண்ட மற்றும் வளைவு நெளிவுகளைக் கொண்ட பாதை வழியாக, இந்த கனவை எம்மால் அடைய முடிந்துள்ளது. Lenovo உள்ளிட்ட பல்வேறு உலகப் புகழ்பெற்ற வர்த்தகநாமங்களுடன் கைகோர்த்துள்ளதன் மூலம் IT Gallery ஆனது, அதன் தயாரிப்பு வகைகளை மேலும் அதிகரித்துக்கொள்ள முடிந்துள்ளது. இதன் மூலம் எமது விநியோகம் இலங்கையின் அரச, தனியார் மற்றும் பெருநிறுவனத் துறைகளை சென்றடைகின்றது. இதுவரை நாம் அடைந்த சாதனைகள் தொடர்பில் என்னால் பெருமையடைந்து கொள்ள முடியவில்லை, எதிர்காலத்தில் மேலும் பல வெற்றியை எதிர்பார்க்கிறேன்.” என்றார்.

Lenovo வர்த்தகநாமம் தவிர,  Hikvision வீடியோ கண்காணிப்பு தீர்வுகள், EAST UPS மற்றும் மின்வலு தயாரிப்புகள், Pantum Printer தயாரிப்புகள், A4 Tech உதிரிப்பாகங்கள், G&G Printer பாகங்கள், OCEAN Multimedia தயாரிப்புகள் உள்ளிட்ட பல்வேறு வர்த்தகநாமங்களின் அங்கீகரிக்கப்பட்ட விநியோகஸ்தராகவும் IT Gallery உள்ளது. இது தவிர Information Security & Networking, CCTV, ELV, Physical உட்கட்டமைப்பு தீர்வுகள், Visualisation & Storage தீர்வுகள், Power & UPS தீர்வுகள், இறுதி பயனர் கணினி மற்றும் அச்சிடுதல் தீர்வுகள் ஆகியவற்றிலும் IT Gallery நிபுணத்துவம் பெற்றுள்ளது. இலங்கையில் உள்ள வாடிக்கையாளர்கள் மற்றும் வணிகப் பங்காளிகளின் தெரிவுக்கு பாத்திரமான தொழில்நுட்பப் பங்காளியாக விளங்கும் IT Gallery இன் தூரநோக்கு மற்றும் கணனி ஒருங்கிணைப்பு, மீள்விற்பனை, ஆலோசனை சேவைகள் மூலம் பரந்த சந்தையை அடையும் அதன் இலட்சியம் ஆகியன, இவ்வாறான பாராட்டுகள் மற்றும் கூட்டாண்மைகளுக்கு காரணமாக அமைகின்றன.

END

Share

You may also like...