‘ஹிதவத்கமட்ட முல்தென’ திட்டத்தின் அடுத்த கட்டம் ஆரம்பம்; ஊழியர்களை தொடர்ந்தும் வலுவூட்டும் Anton

கடந்த 60 வருடங்களுக்கும் மேலாக, வீடுகளுக்கான தீர்வுகளை வழங்கும், முற்றுமுழுதான இலங்கை உற்பத்தியாளரான Anton, ‘ஹிதவத்கமட்ட முல்தென’ (நெருங்கியோருக்கு முன்னுரிமை) எனும் திட்டத்தின் அடுத்த கட்டத்தை அண்மையில் ஆரம்பித்து வைத்தது. நாடு தற்போது எதிர்கொண்டுள்ள நெருக்கடியான சூழ்நிலைக்கு முகம் கொடுக்கும் வகையில், அன்டன் அதன் அனைத்து ஊழியர்களுக்கும் உலர் உணவுப் பொருட்களை விநியோகித்து வருகிறது. அன்டன் தனது ஊழியர்களுக்கு ஆதரவாக பல வருடங்களாக முன்னெடுத்து வரும் பல்வேறு திட்டங்களில் இதுவும் ஒன்றாகும்.

அன்டன் நிறுவன ஊழியர் கே.ரி.டி. விஜேசேகர, ‘ஹிதவத்கமட்ட முல்தென’  திட்டம் குறித்து கருத்துத் தெரிவிக்கையில், “இந்த சவாலான காலத்தில் எமது நிறுவனம் தொடர்ச்சியாக எமக்கு ஆதரவளித்து எம்மை வழிநடாத்தி வருகின்றமை தொடர்பில் நான் மிகவும் நன்றியுள்ளவனாக இருக்கிறேன். அன்டனின் ஒரு அங்கத்தவன் எனும் வகையில், நிறுவனம் தொடர்ந்தும் எம்மை ஊக்குவித்து ஆதரவளித்து வருகிறது. அதுவே ஒரு பாக்கியமாகும். குறிப்பாக தற்போதைய நிலையில், நாடு எதிர்கொண்டுள்ள நெருக்கடியான சூழ்நிலையில், ஊழியர்களாகிய நாம் பெற்றுள்ள ஆதரவு விலைமதிப்பற்றதாகும்.” என்றார்.

அன்டன் கடந்த 2017 இல் ‘ஹிதவத்கமட்ட முல்தென’ திட்டத்தை அறிமுகப்படுத்தியிருந்தது. அந்த வகையில், ஊழியர்களை வலுவூட்டவும், அவர்கள் நிறுவனத்தின் ஓர் ஒருங்கிணைந்த அங்கம் எனும் உண்மையை மேலும் வலுப்படுத்தவுமான நீண்ட கால நோக்குடன் சமீபத்திலிருந்து இத்திட்டமானது, முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. தமது ஊழியர்களின் நல்வாழ்வை ஆதரிப்பதற்கான தேவை அதிகரித்து வருவதையும், அவர்களுக்கு ஆதரவாக செயல்படுத்தப்பட்டு வரும் பல்வேறு முயற்சித் திட்டங்களில், தற்போது மிகவும் தேவையானதாக காணப்படுகின்ற உலர் உணவுப் பொருட்களின் விநியோகமும் ஒன்றாகும் என்பதை நிறுவனம் அறியும்.

அன்டனின் பிரதம செயற்பாட்டு அதிகாரி லஹிரு ஜயசிங்க, இத்திட்டம் குறித்து கருத்துத் தெரிவிக்கையில், “ஹிதவத்கமட்ட முல்தென’ எனும் திட்டமானது நாம் எமது ஊழியர்களுக்கு வழங்கும் நன்றிக்கடன் என்பதோடு, நாம் அவர்களுக்கு ஆதரவளிக்கும் பல்வேறு வழிகளிலும் இதுவும் ஒன்றாகும். எமது ஊழியர்களுக்கு உலர் உணவுகள் உள்ளிட்ட ஏனைய அத்தியாவசியப் பொருட்களை விநியோகிப்பதானது, அவர்களை வலுவூட்டுவதற்கும் அவர்களது குடும்பங்களுக்கு ஆதரவளிப்பதற்கும் ஒரு வழியாகும். இந்த கடினமான காலத்தில், ஒரு தேசமாக இன்று நாம் அனைவரும் எதிர்கொள்ளும் சவால்களை சமாளிக்க, நாம் ஒருவருக்கொருவர் உதவ எம்மால் முடிந்த அனைத்தையும் செய்வது கட்டாயமாகும்.” என்றார்.

நிறுவனம் அதன் தொடக்கத்திலிருந்தே, ஊழியர்களே அதன் வெற்றிக்கு உந்து சக்தியாக இருந்து வருவதாக அன்டன் உறுதியாக நம்புகின்றது. அந்த வகையிலேயே அவர்கள் எதிர்கொள்ளும் சவால்களை சமாளிப்பதற்கான, ‘ஹிதவத்கமட்ட முல்தென’ எனும் திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை நிறுவனம் தாமாகவே முன்னெடுத்து வருகின்றது.

END

Share

You may also like...