#HaridheEkkaAluthWenna போட்டியுடன் தமிழ், சிங்கள புத்தாண்டைக் கொண்டாடும் பெல்வத்தை
கொழும்பு, இலங்கை, ஏப்ரல் 2022: பால் உற்பத்திகளின் அடிப்படையில் நாட்டின் முன்னணித் தெரிவாக உள்ள பெல்வத்தை (Pelwatte), தமிழ், சிங்கள புத்தாண்டு கருப்பொருளை அடிப்படையாகக் கொண்ட, #HaridheEkkaAluthWenna போட்டியை சமீபத்தில் நிறைவு செய்திருந்தது. 2022ஆம் ஆண்டு ஏப்ரல் 10 ஆம் திகதி முதல் ஏப்ரல் 20 ஆம் திகதி வரை இப்போட்டி இடம்பெற்றிருந்தது. இதற்காக நாடு முழுவதிலுமிருந்து நூற்றுக் கணக்கான பங்கேற்பாளர்கள், பெல்வத்தை பால் உற்பத்திகளைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்ட புத்தாண்டை மையமாகக் கொண்ட உணவு மற்றும் இனிப்புப் பொருட்கள் அடங்கிய புகைப்படங்களை சமர்ப்பித்திருந்தனர்.
இதன்போது போட்டியாளர்கள் தங்கள் பேஸ்புக் பதிவுகளில் #HaridheEkkaAluthWenna ஹேஷ்டேக் உடன், தங்கள் உணவுகளின் படங்களை Pelwatte Facebook பக்கத்தின் ஊடாக சமர்ப்பித்திருந்தனர். பங்கேற்பாளர்கள் தங்கள் சமர்ப்பிப்புகளை மேற்கொள்வதற்கு முன்னர் இதற்கு தகுதிபெற, முதலில் Pelwatte Facebook பக்கத்தை Like செய்ய வேண்டும். இப்போட்டியின் சுவாரஸ்யமான அம்சம் யாதெனில், பங்கேற்பாளர்கள் பெல்வத்தை பால் உற்பத்திகளால் செய்யப்பட்ட உணவுகளின் புகைப்படத்தை சமர்ப்பிக்க வேண்டியுள்ளதால், குறித்த உணவுகளின் சமையல் குறிப்புகளைப் பகிருமாறு தெரிவிக்கப்பட்டிருந்தது. இங்கு வாடிக்கையாளர்கள் ஆக்கபூர்வமாக செயற்படுவதை ஊக்குவிப்பது மட்டுமல்லாமல், குறிப்பாக பெல்வத்தை பால் உற்பத்திகளுடன் பயன்படுத்தக்கூடிய பல்வேறு சமையல் குறிப்புகளைப் பற்றிய அறிவை தம்மிடையே பகிர்ந்து கொள்வதும் இதன் குறிக்கோளாக இருந்தது.
முழுமையான இலங்கை வர்த்தக நாமமாக விளங்கும் Pelwatte, பால் பொருட்களை உற்பத்தி செய்வதில் மட்டுமன்றி அதன் உற்பத்திகளின் பயன்பாடுகள் தொடர்பிலும் கவனம் செலுத்துகின்றது. இது தொடர்பில் பெல்வத்தை நிறுவனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் அக்மல் விக்ரமநாயக்க கருத்துத் தெரிவிக்கையில், “ஒரு பொறுப்பு மிக்க வர்த்தகநாமம் எனும் வகையில், சிறந்த தரத்தை வழங்குவதில் மட்டுமன்றி, வாடிக்கையாளர்கள் எமது தயாரிப்புகளை பயன்பாட்டிற்கு கொண்டு வந்து, அத்தயாரிப்புகள் தொடர்பில் மகிழ்ச்சியடைவதையும் நாம் உறுதிப்படுத்த விரும்புகிறோம். எனவே ‘ஹரிதே எக்க அலுத் வென்ன’ (சரியானவற்றுடன் இணைந்து புதியவர்களாக மாறுங்கள்) எனும் பிரசாரமானது, சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டில் பால் சார்ந்த பொருட்கள் தொடர்பான சமையல் குறிப்புகளை அறிய உதவுகிறது.” என்றார்.
இதன்போது தமிழ், சிங்கள புத்தாண்டு வாழ்த்துகளை தெரிவித்த அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில், “கடந்த சில வருடங்கள் கடினமானதாகவே அமைந்திருந்தன. எவ்வாறாயினும், மக்கள் மீதான தனது பொறுப்பை பெல்வத்தை தொடர்ந்தும் மேற்கொள்ளும் என்பதுடன், எமது விசுவாசமான வாடிக்கையாளர்களை புன்னகைக்க செய்யவும், கடினமான காலங்களில் சாதகமான எண்ணங்களை கொண்டிருப்பதற்காகவும் இவ்வாறான நிகழ்வுகளை தொடர்ந்தும் ஏற்பாடு செய்யும். அத்துடன், பெல்வத்தையைச் சேர்ந்த எமது பண்ணைகள் முதல் தொழிற்சாலைகள் மற்றும் பங்குதாரர்கள் உள்ளிட்ட அனைவர் சார்பாகவும், உங்கள் அனைவருக்கும் சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.” என்றார்.
அதற்கமைய, சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டுக்காக தயாரிக்கப்பட்ட பாரம்பரிய உணவுகளின் நூற்றுக் கணக்கிலான புகைப்படங்கள் பங்கேற்பாளர்களால் சமர்ப்பிக்கப்பட்டிருந்தன. பங்கேற்பாளர்கள் தேங்காய் டொபி, பால் டொபி, பல வகை பலகாரங்கள் உள்ளிட்ட பல்வேறு சுவையான உணவுகளைக் கொண்டு வண்ணமயமான உணவுப் பொருட்களுடன் மிகவும் ஆக்கப்பூர்வமாக உணவுகளை ஒழுங்கு செய்திருந்ததைக் காண முடிந்திருந்தது. இது ஒரு வண்ணமயமான, அறிவார்ந்த செயற்பாடாக மட்டுமல்லாமல், பங்கேற்பாளர்கள் தங்கள் சமையல் குறிப்புகளைப் பகிர்வதன் மூலம் ஒருவருக்கொருவர் உதவுவதற்கும் அதிக மகிழ்ச்சியுடனான ஒற்றுமை உணர்வையும் ஏற்பட வழிவகுத்திருந்தது. பின்வரும் வெற்றியாளர்களுடன் 2022 ஏப்ரல் 20ஆம் திகதி போட்டி நிறைவடைந்திருந்தது: டானியா துனுவில, குமுதினி எல்பாத்த, துசாந்தி லக்ஷ்மி, சுபோதா ஜயமினி, எம்.ஏ.பிரியாங்கனி, திலினி அச்சலா பீரிஸ், ரமிலா உதேஷ், சரனி பெர்ணான்டோ மற்றும் அரோஷ என் நெத்ம.
Facebook இல் #HaridheEkkaAluthWenna எனும் ஹேஷ்டேக்கை அணுகுவதன் மூலம், போட்டியில் பங்கேற்பாளர்கள் தயாரித்து பகிர்ந்துள்ள பல்வேறு உணவுகள் மற்றும் அவற்றின் சமையல் குறிப்புகளை அறிந்து, அனைவரும் பெல்வத்தை தயாரிப்புகளைப் பயன்படுத்தி இந்த உணவுகளை அனைவரும் வீட்டிலேயே தயாரித்து சுவையை அனுபவிக்குமாறு, பெல்வத்தை உங்கள் அனைவரையும் அன்புடன் அழைக்கிறது. இவ்வாறு தயாரிக்கப்பட்ட அனைத்து உணவுகளும் பெல்வத்தை பால் உற்பத்திகளின் தரம் மற்றும் வினைத்திறனுக்கு உண்மையான சான்றாகும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Recent Comments