Huawei Y6p மற்றும் Band 4e (Active) உடன் இணையற்ற நன்மைகளை வழங்கும் Huawei

Huawei Y6p என்பது Y தொடரில் முன்னணி ஸ்மார்ட்போன் என்பதுடன் இளைஞர்கள் மத்தியில் மிக பிரபலமானதாகும். பல தொழில்நுட்ப ஆர்வலர்கள் சிறப்பம்சங்களால் நிரம்பிய Y6p இனைப் பாராட்டுகையில், புதிய Y6p ஸ்மார்ட்போனை கொள்வனவு செய்யும் போது 5GB இலவச Huawei மொபைல் கிளவுட் ஸ்டோரேஜ் சலுகை வழங்கப்படுமென ஹவாய் அறிவித்துள்ளது.

புதிதாக கொள்வனவு செய்த Y6p சாதனத்துடன் இலவச கிளவுட் ஸ்டோரேஜினைப் பெற, பயனர் முதலில் Huawei ID உடன் பதிவு செய்ய வேண்டும். எதிர்கால அணுகலுக்காக புகைப்படங்கள், வீடியோக்கள் மற்றும் கோப்புகளை பாதுகாப்பாக சேமிக்க  5GB இலவச கிளவுட் ஸ்டோரேஜைப் பயன்படுத்தலாம். 50GB, 200GB மற்றும் 2048GB போன்ற மாதாந்த மற்றும் வருடாந்த மேம்படுத்தல் திட்டங்களிலிருந்து தேவைகளின் அடிப்படையில் பயனர் கிளவுட் ஸ்டோரேஜினை மேம்படுத்த முடியும். வருடாந்த சந்தாக்கள் வழியாக கிளவுட் ஸ்டோரேஜினை மேம்படுத்துவோர் ஜூலை இறுதி வரை செல்லுபடியாகும் Huawei கிளவுட் ஸ்டோரேஜ் அதிர்ஷ்ட குலுக்கல் மூலம் அற்புதமான பரிசுகளை வெல்லும் வாய்ப்பைப் பெற்றுள்ளனர். இதன் வெற்றியாளர்களுக்கு Huawei Nova 7 SE  ஸ்மார்ட்போன், ஐந்து Huawei Watch Fit சாதனங்கள் மற்றும் நான்கு Huawei Band 6 சாதனங்கள் பரிசாக வழங்கப்படும்.

Huawei Y6p இன் மிக முக்கியமான அம்சங்களாவன, ​​இது 44GB RAM + 64GB சேமிப்பிடத்தை இனைக் கொண்டுள்ளது. இது பயனருக்கு போதுமான சேமிப்பகத்தையும்,  தடையற்ற செயற்பாடு, வேகமான செயல்திறனையும் வழங்குகிறது. இந்த தொடரின் குறிப்பிடத்தக்க மேலுமொரு சிறப்பம்சம் என்னவெனில் இதன் உயர் திறன் கொண்ட பற்றரியாகும். Y6p 5000mAh பற்றரி மூலம் இயக்கப்படுகிறது. இது பயனர்கள் கேம்ஸ், வீடியோக்கள் மற்றும் இணைய உலாவலுக்கு சாதனத்தை தொடர்ந்து பயன்படுத்த உதவுகிறது. இதன் நீண்டகால பாவனைக்குரிய பற்றரியானது பிஸியான வாழ்க்கையைக் கொண்டவர்களுக்கு இந்தச் சாதனத்தை சிறந்ததாக்குகிறது.

கெமராவைப் பொறுத்த வரையில், Y6p மூன்று கெமராவைக் கொண்டு அமைக்கப்பட்டுள்ளது, 13MP பிரதான கெமரா, 5MP Ultra Wide Angle lens மற்றும் 2MP Depth lens ஆகியவற்றைக் கொண்டுள்ளது. இந்த கெமரா கலவையானது தெளிவான, பரந்த மற்றும் உயர் விரிவான படங்களை எடுப்பதன் மூலம் மொபைல் புகைப்படம் எடுப்பதற்கு ஏற்றதாக இதனை மாற்றுகின்றது. இதன் 8MP செல்பி கெமரா சம சக்தி வாய்ந்ததென்பதுடன், தானியங்கி ரீடச்சிங் மூலம் வியக்க வைக்கும் உருவப்படங்களை வழங்குகிறது.

Huawei  சாதனங்களை ஒன்றுடன் ஒன்று இணைக்கும்போது அதிக செயல்திறன் மற்றும் உற்பத்தித்திறனை வழங்குவதனால் தொழில்நுட்ப ஆர்வலர்கள் ஆர்வமாக உள்ளனர், இதனால் அவர்கள் சாதனங்களை ஆராய்வதில் கவனம் செலுத்துவதுடன், ஒரு சிறந்த பயனர் அனுபவத்திற்காக Huawei Y6p உடன் இணைக்கப்படலாம். Y6ப் உடன் இணைக்கக்கூடிய ஸ்மார்ட் சாதனங்களில் ஒன்று, அவர்களின் உடல்நலம் மற்றும் நல்வாழ்வைப் பற்றி அக்கறை கொள்பவர்களுக்கான Huawei Band 4e (Active) – Huawei நிறுவனத்தின் ஒப்பிடமுடியாத உடற்பயிற்சி திறன்களைக் கொண்ட அண்மைய ஸ்மார்ட் பட்டியாகும். Band 4e (Active) ஆனது Huawei Y6p உடன் இணைக்கப்படும்போது பயனர் அதிக உடற்பயிற்சி திறன்களையும் விரிவான புள்ளிவிவரங்களையும் பெற முடியும்.

Huawei Band 4e இன் நிறை வெறும் 6g (strap இன்றி) மட்டுமே ஆகும். எனவே இது மிகவும் இலகு நிறை கொண்டதாகும். Slide and touch தொடுகையை ஆதரிக்கும் 0.5 அங்குல PMOLED திரையுடன் இது வருகின்றது. மினரல் சிகப்பு மற்றும் கிராபைட் கறுப்பு பட்டி பட்டி வண்ணங்கள் இதன் வடிவத்துக்கு மேலும் மெருகூட்டுவதாக அமைந்துள்ளது. இதன் உயரம் 40.5mm, அகலம் 14.8mm, ஆழம் 11.2mm, என்பதால் மணிக்கட்டில் அல்லது காலில் அணிய முடியும்.

Huawei Band 4e (Active) இன் மிகவும் கவர்ச்சிகரமான அம்சங்களில், அதன் புதுமையான இரட்டை அணிதல் முறை, தொழில்சார் தர ஓட்ட வழிகாட்டி, சைக்கிள் ஓட்டுதல் கண்காணிப்பு, கூடைப்பந்து செயல்திறன் கண்காணிப்பு, 5ATM நீரிலிருந்தான பாதுகாப்பு, 2 வார மின்கல ஆயுள் ஆகியன முக்கிய சிறப்பம்சங்கள் என்பதுடன், இவை ஸ்மார்ட் பேண்ட் பிரிவில் ஏனையவற்றை விட சிறப்பானதாக இதனை ஆக்குகின்றது. சைக்கிள் ஓட்டுவதில் ஆர்வமுள்ளவர்களுக்கு, Huawei Band 4e (Active), அதன் தனித்துவமான cycle cadence monitoring அம்சத்துடன் ஒரு தொழில்சார் தரத்திலான ஓட்டுநர் ஆகுவதற்கு உதவுகிறது. இது பயனரின் திறனை துல்லியமாக பதிவுசெய்கிறது. இதனால் பயனர் முடியுமான மேம்பாடுகளையும் சுழற்சியையும் மிகவும் திறமையாக அடையாளம் காண முடியும். Huawei Band 4e (Active) இன் கூடைப்பந்து பயன்முறை செங்குத்து பாய்ச்சல் தரவு, உயரம் மற்றும் செயலிழப்பு நேரம், வேகம், தூரம் மற்றும் இயக்கத்தை மேம்படுத்துவதற்கான பயன் உள்ளிட்ட இயக்க புள்ளிவிவரங்கள் போன்ற விரிவான விவரங்களை வழங்குகிறது. இந்த பேண்ட் விளையாட்டிலிருந்து விளையாட்டுக்கான செயல்திறனைப் பதிவுசெய்கிறது, இது பயனருக்கு சிறபாக பயிற்சி பெற உதவுகிறது.

இந்த பயனுள்ள கண்காணிப்பு அம்சங்களுக்கு மேலதிகமாக, Band 4e (Active) ஒரு சரியான வாழ்க்கை உதவியாளராகும், இது தூக்க கண்காணிப்பு, ஸ்டெப்கள், தூரம், கலோரிகள் கண்காணிப்பு போன்ற ஸ்மார்ட் அம்சங்களுடன் ஆரோக்கியமாகவும் சுறுசுறுப்பாகவும் இருக்க பயனருக்கு உதவுகிறது. உள்வரும் அழைப்பு / தகவல் அறிவிப்புகள், செயற்பாடுகளுக்கான நினைவூட்டல்கள், பயிற்சி நேரம், சாதனை நினைவூட்டல்கள், அலாரம், போனைக் கண்டுபிடித்தல் தெரிவு மற்றும் இது போன்ற பல்துறை அம்சங்களுடன் இது பயனருக்கு மேலும் உதவுகிறது.

Huawei Y6p இனை ரூபா 32,499/- என்ற விலையிலும் Huawei Band 4e (Active) ரூபா 5,499/- என்ற விலையிலும் கிடைக்கின்றது. விரைவில் Huawei experience centers , அங்கீகாரம் பெற்ற Huawei மீள் விற்பனையாளர்கள், Singer காட்சியறைகள், Daraz.lk, Singer.lk   ஊடாக பெற்றுக்கொள்ள முடியும்.

Share

You may also like...