கல்வி அமைச்சு மற்றும் திறன் அபிவிருத்தி, தொழிற்கல்வி, ஆராய்ச்சி மற்றும் புத்தாக்க இராஜாங்க அமைச்சுடன் இணைந்து தொழிற்பயிற்சி தொடர்பான NAITA – Huawei ICT Academy அறிமுகம்

உலகளவில் அங்கீகாரம் பெற்ற மற்றும் உள்ளூர் மற்றும் சர்வதேச வேலைவாய்ப்பு சந்தைகளுக்குத் தேவையான சர்வதேச ரீதியில் அங்கீகாரம் பெற்ற தகுதிகளைக் கொண்ட ‘Smart Technocrats’ (ஸ்மார்ட் தொழில்நுட்பவியலாளர்கள்) உருவாக்குவதற்கான இலங்கையின் நோக்கு மற்றும் முன்னுரிமையை நிறைவேற்றும் நோக்கில் Huawei Sri Lanka அண்மையில்  NAITA உடன் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தை மேற்கொண்டது. தேசிய பயிலுநர் மற்றும் கைத்தொழிற் பயிற்சி அதிகாரசபை (NAITA) ஆனது, கல்வி அமைச்சின் மேற்பார்வையின் கீழ் திறன் அபிவிருத்தி, தொழிற்கல்வி, ஆராய்ச்சி மற்றும் புத்தாக்க இராஜாங்க அமைச்சின் கீழ் செயல்படும் இலங்கையின் ஒரு முன்னணி தொழிற் பயிற்சி மற்றும் பயிற்சிகளை வழங்குகின்ற மற்றும் தொலைத்தொடர்பு துறையில் இளைஞர்களுக்கு வன்பொருள் நிறுவல் தொடர்பான திறனை வழங்கும் அமைப்பாகும்.

புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடும் நிகழ்வில் திறன் அபிவிருத்தி, தொழிற்கல்வி, ஆராய்ச்சி மற்றும் புத்தாக்க இராஜாங்க அமைச்சர் வைத்தியர் சீதா அரம்பேபொல, அமைச்சின் செயலாளர் தீபா லியனகே, NAITA நிறுவனத்தின் தலைவர் தரங்க நலீன் கம்லத்,  Huawei Technologies Lanka நிறுவனத்தின் பிரதான நிறைவேற்று அதிகாரி Liang Yi ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்ச்சியில் உரையாற்றிய வைத்தியர் சீதா அரம்பொல, “உயர் தொழில்நுட்ப திறன்களை வளர்ப்பதன் மூலம் இலங்கையிலுள்ள இளைஞர்களின் வேலைவாய்ப்பை அதிகரிக்க அரசாங்கம் திட்டமிட்டு முயற்சி செய்து வரும் நிலையில், Huawei ICT Academy ஆனது, தொழிலை எதிர்பார்த்திருக்கும் இளைஞர்களுக்கு ICT தொழிற்பயிற்சியை மேலும் மேம்படுத்தி, மேம்பட்ட திறன்களுடன் டிஜிட்டல் மயமாக்கலின் சவால்களை எதிர்கொள்ள உதவும்” என்று வலியுறுத்தினார்.  எதிர்காலத்தில் Huawei ICT Academy ஆனது, இலங்கையிலுள்ள அனைத்து தூர பிரதேசங்களுக்கும் விரிவுபடுத்தப்படும் என்று அவர் மேலும் குறிப்பிட்டார்.

NAITA நிறுவனத்தின் தலைவர் தரங்க நலீன் கம்லத் தெரிவிக்கையில், “Wireless மற்றும் Datacom வன்பொருள் நிறுவல், சுற்றுச்சூழல் சுகாதாரம் மற்றும் பாதுகாப்பு (EHS) மற்றும் தர மேம்பாடு உள்ளிட்ட, களத்தில் பணியாற்றும் தொலைத்தொடர்பு பொறியியலாளர்கள் போன்றோர் கொண்டுள்ள கொள்கை அறிவு மற்றும் நடைமுறையுடன், வருடாந்தம் 300 இற்கும் மேற்பட்ட ஆர்வமுள்ள இளைஞர்களை உருவாக்குவதை இது இலக்காகக் கொள்ளும் என்று நாம் எதிர்பார்க்கிறோம். அத்துடன் இந்த திட்டத்தில் Huawei நிறுவனத்துடன் இணைந்து கொள்வதில் நாம் பெரு மகிழ்ச்சியடைகிறோம்” என்றார்.

Huawei Sri Lanka வின் பிரதான நிறைவேற்று அதிகாரி லியாங் யி (Liang Yi) தெரிவிக்கையில் “திறமையாளர்களின் வெளிப்படுத்தல் மற்றும் அவர்களுக்கான கேள்வி ஆகியவற்றிற்கிடையில் ஒரு குறிப்பிட்ட இடைவெளி காணப்படுகின்றது. அத்துடன் தற்போது காணப்படும் நிலைமையானது தொழில்துறையின் வளர்ச்சிக்கு உதவுவதில் ஒரு போராட்ட நிலையை எதிர்கொண்டுள்ளது. இந்த சூழலில், திறமையாளர்களின் வழங்கல் மற்றும் அவர்களுக்கான கேள்வி ஆகியவற்றிற்கிடையிலான விகிதத்தை பேணுவதற்கு, வளங்களின் பகிர்வு, நன்மைகளின் பகிர்வு மற்றும் பல்கலைக்கழகங்கள், தொழிற்பயிற்சி நிறுவனங்கள் மற்றும் ஏனைய நிறுவனங்களுக்கிடையேயான ஒன்றிணைந்த மேம்பாடு ஆகியவற்றை உள்ளடக்கிய ஒரு நீண்டகால மூலோபாயம் அவசியமாகிறது” என்றார்.  அத்துடன் இப்புரிந்துணர்வு ஒப்பந்தம், இலங்கையில் ICT திறமையாளர்களின் கூட்டமொன்றை உருவாக்க, Huawei யினால் எடுக்கப்பட்ட மற்றுமொரு படிக்கல் என்பதுடன் அதன் முன்முயற்சியுமாகும் என அவர் சுட்டிக்காட்டினார்.

“இந்த அழகிய ஆசிய தேசத்தில் டிஜிட்டல் பொருளாதார திறமைகளை வளர்ப்பதற்கான ஒரு அடித்தளமாக மாறுவதை நாம் நோக்கமாகக் கொண்டுள்ளோம். ICT வளர்ச்சியின் புதிய சகாப்தத்தில், Huawei விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப கண்டுபிடிப்புகளை துரிதப்படுத்தும் என்பதுடன், இலங்கையில் டிஜிட்டல் தொழில்நுட்பம் தொடர்பில் தொழில்வாண்மை கொண்ட திறமையாளர்களை வளர்ப்பதற்கும், ஊக்குவிப்பதற்கும் உதவுவதற்காக கல்வி அமைச்சு மற்றும் திறன் அபிவிருத்தி, தொழிற்கல்வி, ஆராய்ச்சி மற்றும் புத்தாக்க இராஜாங்க அமைச்சு உள்ளிட்ட இலங்கை அரசாங்கம் மற்றும் அதனுடன் தொடர்புடைய அமைப்புகளுக்கு இடையேயான ஒத்துழைப்பை மேம்படுத்துவதன் மூலம் அறிவு புத்தாக்கம் மற்றும் திறமையாளர்களை மேம்படுத்துதலில் நாம் தொடர்ந்தும் முதலீடு செய்வோம்.” என லியாங் யி சுட்டிக் காட்டினார்.

NAITA-Huawei ICT Academy இன் உருவாக்கத்தின் மூலம், இலங்கையிலுள்ள திறமையாளர்கள் டிஜிட்டல் தொழில்நுட்பங்கள் மற்றும் வன்பொருள் துறையில் தொழிற்பயிற்சி பெறுவதற்கான மகத்தான சாத்தியக்கூறுகள் ஏற்படுத்தப்பட்டுள்ள நிலையில், ICT நிறுவனத் துறையின் தேவைக்கும் தொழில் பயிற்சி நிறுவனங்களின் திறமையாளர்களின் வெளிப்படுத்தலுக்கும் இடையிலான இடைவெளியைக் குறைக்க Huawei மேலும் முன்னிற்கும். அத்துடன் தொழிற்பயிற்சி நிறுவனங்களினால் மேலும் அதிகமான ஆக்கபூர்வமான திறமை, மேம்பட்ட தொழில்நுட்ப அறிவு, அத்துடன் புத்தாக்கத்திற்கான ஒத்துழைப்பு என்பவற்றுடன் தொழில்முனைவோருக்கு மேலதிக உதவிகளும் வழங்க முடியும். லியாங் யி இனது கூற்றுப்படி, இது ஒரு சீரிய பாதையை உருவாக்கும் என்பதுடன், இலங்கையின் தகவல் தொழில்நுட்பத் துறையின் நிலைபேறான வளர்ச்சிக்கும் உதவும்.

NAITA-Huawei ICT Academy ஆனது, தொலைத்தொடர்பு துறையில் உள்ள இளைஞர்களுக்கு வன்பொருள் நிறுவல் திறன்களுடன் தொழிற்கல்வி மற்றும் பயிற்சியினை மேம்படுத்துவதற்கு மேலதிக பங்களிப்பை வழங்கும் என்பதுடன், இன்று உலகில் உள்ள அனைத்து ICT தொழில்நுட்பங்களையும் உள்ளடக்கிய ஒரே சான்றிதழளிக்கும் திட்டமான, Huawei சான்றிதழளிக்கும் திட்டத்துடன் ஒருங்கிணைக்கப்படும்.

Huawei நிறுவனம், வாடிக்கையாளர்களின் தேவைகளில் புத்தாக்கம் தொடர்பில் கவனம் செலுத்தும் அதே நேரத்தில், அடிப்படை ஆராய்ச்சிகளில் அதிக முதலீடு செய்கிறது. தொழில்நுட்ப முன்னேற்றங்களில் கவனம் செலுத்தி, உலகத்தை முன்னோக்கி செலுத்துவது தொடர்பில் Huawei நம்பிக்கை கொண்டுள்ளது. கடந்த ஆண்டில், Huawei Sri Lanka மற்றும் மொரட்டுவை பல்கலைக்கழகம் (UOM) ஆகியன, இலங்கையிலுள்ள படித்த மற்றும் திறமையான இளைஞர்களை மேலும் செயலாற்றற்படுத்துவதற்கும், வளர்ந்து வரும் ICT களத்தில் அவர்களின் திறமைகளை மேம்படுத்துவதற்குமான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டன. இந்த சமீபத்திய முயற்சிகள் அனைத்தும் Huawei நிறுவனத்தின் நீண்டகால டிஜிட்டல் சேர்க்கைகளின் முன் முயற்சியான, இலங்கை “ஸ்மார்ட் தேசம்” எனும் நோக்கை நிறைவேற்றுவதற்கான TECH4ALL, இனது ஒரு பகுதியாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

Share

You may also like...